Snapjudge

Posts Tagged ‘DMK’

Nine Dynasties in new Parliament: Family Pairs

In India, Politics on ஜூன் 5, 2009 at 2:04 முப

Source: Family pride in Lok Sabha – India – The Times of India

  1. Congress: Sonia and Rahul Gandhi – Rae Bareli and Amethi
  2. Samajwadi Party: Mulayam Singh Yadav and son Akhilesh – Mainpuri and Kannauj constituencies in UP
  3. BJP: Maneka Gandhi & Varun Gandi: Uttar Pradesh – Aonla & Pilibhit
  4. Ajit Singh (Baghpat) and Jayant Choudhury (Mathura)
  5. Sharad Pawar & daughter Supriya Sule – Baramati (Maharashtra)
  6. Trinamool Congress: Sisir and Subhendu Adhikary – West Bengal (Kanthi in East Midnapur, his son won the Tamluk seat where Nandigram is situated)
  7. Karnataka – H D Devegowda and his son H D Kumaraswamy

Missed:

  1. Prospective mother-son pair missed out with former Punjab CM Amarinder Singh‘s son Raninder losing from Bhatinda. Amarinder’s wife Preneet Kaur won from Patiala.
  2. BJP: “Gorkha” face Jaswant Singh and son Manvendra could have been another but for the latter’s defeat in Barmer.

The top ten tainted MPs in 15th Lok Sabha

In India, Politics on மே 17, 2009 at 7:36 பிப

Source: 17.2 per cent rise in criminal turned MPs: Report: “The Bharatiya Janata Party tops the list of criminal candidates with 42. The Congress is a close second with 41 tainted candidates. Among the states Uttar Pradesh tops the list with 31 criminal candidates of which 22 have serious charges. Maharashtra comes second among the states with 23 candidtates with criminal charges.”

Note: Affidavits of 8 new MPs (all from Tamil Nadu) are not available on Election commission’s website.

1. Jagadish Sharma of Janata Dal- United elected from the Jahanabad constituency tops the list. He is an accused in 6 cases and there are 17 serious counts under the Indian Penal Code booked against him.

2. Bal Kumar Patel of the Samajwadi Party from the Mirzapur constituency in Uttar Pradesh is an accused in 10 cases and has 13 serious counts under the IPC.

3. Prabhath Singh Pratap Singh Chauvan of the Bharatiya Janata Party elected from Pachamal, Gujarat has three cases and 10 serious counts under the IPC.

4. Kapil Muni Karwariya of Bahujan Samaj Party elected from Phulpur, UP has 4 cases and 8 serious counts under the IPC.

5. P Karunakaran of Communist Party of India-Marxist from Kasargod, Kerala has 12 cases and 6 serious counts under the IPC.

6. Lalu Prasad Yadav of the Rashtriya Janata Dal from Bihar, Saran has 2 cases and 6 serious counts under the IPC.

7. Kunwarjibhai Mohanbhai Bavaliya of Congress from Rajkot, Gujarat has 2 cases with 6 serious counts under the IPC.

8. Vittalrao Hansrajbhai Radadiya of the Congress from Porbandar, Gujarat has 16 cases with 5 serious IPC counts.

9. Feroze Varun Gandhi of BJP from Pilibhit, UP has 6 cases and 5 cases with serious IPC counts.

10. Chandrakanth Raghunath Patil of BJP from Navsari has 6 cases and 5 cases with serious IPC counts.

Notable Omission: DMK‘s Madurai MP M.K. Alagiri with 19+ Crore assets

Election Posters: India Poll Advertising

In Lists on மே 5, 2009 at 6:35 பிப

Madurai Lok Sabha Constituency: Complaints given by the CPI(M)

In Politics, Tamilnadu on ஏப்ரல் 29, 2009 at 5:04 பிப

CPI(M) candidate P. Mohan is pitted against the DMK candidate and Chief Minister M Karunanidhi’s son M K Azaghiri in Madurai.

1. Complaint against distribution of consumer goods to voters by the DMK (dated 03.03.2009)

2. Complaint against conducting Medical camp in the name of birthday celebration of the DMK candidate (03.03.2009)

3. Complaint against the District Election Officer for not taking action against violation of model code of conduct (05.03.2009)

4. Complaint against bulk applications for inclusion in the voters list (20.03.2009)

5. Complaint against distribution of cash, sarees etc to the voters by the DMK and distribution of cash to self help groups (28.03.2009)

6. Complaint against distribution of money to the voters by the DMK (31.03.2009)

7. Complaint against using the marriage halls for preparing pockets of cash by the DMK (03.04.2009)

8. Complaint on utilising places of worship for electoral campaign by DMK candidate (08.04.2009)

9. Complaint by Nanmaran MLA (Communist Party of India (Marxist)) for changing the District Collector of Madurai for his partisan behaviour (15.04.2009)

10. Complaint of inaction by the police against the murderous attack on Mr.Vijaya Rajan party member (15.04.2009)

11. Complaint against disruption of CPI (M) election meeting by DMK men (16.04.2009)

12. Complaint against misuse of police machinery to arrest our cadres on false complaints by the ruling party (16.04.2009)

13. Complaint against inaction by the police against the murderous attack on Mr.Nanmaran MLA (17.04.2009)

14. Complaint against misuse of office by the Public Relations Officer for electoral campaigns of the DMK candidate (18.04.2009)

15. Complaint against distribution of ‘tokens’ to the voters by the DMK men in Madurai Lok Sabha constituency (22.04.2009).

தேர்தல் 2009: கருத்துக் கணிப்பு 10

In Magazines, Politics, Tamilnadu on ஏப்ரல் 27, 2009 at 10:02 முப

தேர்தலின் திசைகளில் இடம்பெற்ற மாலனின் பத்து தேர்தல்:

1. அடுத்த பிரதமரைத் தமிழகம் தீர்மானிக்கும் என்பது

மிகையான கற்பனை
30 (19%)
நிச்சியம் நடக்கும்
29 (18%)
வாய்ப்புக்கள் உண்டு
87 (55%)
No Chance!
10 (6%)

2. இளைஞர்களுக்கு காங்கிரஸ் வாய்ப்பளிக்காதது

ஏமாற்றமளிக்கிறது
18 (10%)
எதிர்பார்த்ததுதான்
58 (34%)
இருந்தால்தானே கொடுக்க முடியும்?
94 (55%)

3. திருமாவளவனின் பேச்சு உணர்த்துவது

யதார்த்த நிலைமை
36 (20%)
இரண்டு சீட்டுக்காகப் போடும் ஜால்ரா
111 (62%)
இலங்கைப் பிரசினையில் இனித் திமுக எதுவும் செய்யாது
31 (17%)

4. லாலுவின் பாப்ரி மஸ்ஜித் பேச்சு

பிளாக் மெயில்
43 (38%)
ரி.ஆனால் Too Late
43 (38%)
பாஜகவிற்கு சாதகம்
25 (22%)

5. வெளிநாட்டிலுள்ள கறுப்புப் பணத்தைக்

கட்டாய்ம் கொண்டு வந்தே ஆக வேண்டும்
79 (45%)
கொண்டுவருவது நடைமுறையில் சாத்தியமில்லை
7 (4%)
கொண்டு வர முயற்சித்துப் பார்க்கலாமே?
35 (20%)
முதல்ல இங்க உள்ளதைக் கொண்டாங்கய்யா!
51 (29%)

6. இலங்கைத் தமிழர்களின் இன்றைய இன்னலுக்குப் பெரிதும் காரணம்

மத்திய அரசின் மெத்தனம்
65 (31%)
பிரசினையை சரியான முறையில் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லாத கருணாநிதி
69 (33%)
விடுதலைப் புலிகளின் அணுகுமுறை
71 (34%)

7. திமுக அறிவித்துள்ள வேலை நிறுத்தம்

இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவிததிலும் உதவாது
76 (44%)
தேர்தல் நேரத்து வீரம்
75 (43%)
இதைக் கூட செய்யவில்லை என்றால் எப்படி?
20 (11%)

8. ஜெயலலிதா கூறும் ஊழல் புகார்

உண்மையாக இருக்கலாம்
82 (53%)
உள்நோககம் கொண்டது
16 (10%)
விரிவான விசாரணை தேவை
40 (26%)
பொருட்படுத்தத் தக்கதல்ல
14 (9%)

9. ஜெயலலிதாவின் மனமாற்றம்

வரவேற்கத் தக்கது
42 (50%)
ந்ம்புவதற்கில்லை
16 (19%)
தேர்தல் தந்திரம்
24 (28%)
புரியமாட்டேங்குதே!
2 (2%)

10. காலணி வீசும் கலாசாரத்திற்கு

தொலைக்காட்சிகள் காரணம்
4 (15%)
அடக்குமுறை காரணம்
10 (38%)
விளம்பர ஆசை காரண்ம்
12 (46%)

தமிழகத் தொலைக்காட்சி பட்டியல்

In Lists, Magazines, Movies, Music, Tamilnadu, TV on ஏப்ரல் 24, 2009 at 3:33 பிப

செய்தி: “தமிழகத்தில் 24 தொலைக்காட்சிகள் இருக்கின்றன. – இயக்குநர் தங்கர் பச்சான்

  1. தூர்தர்ஷன் பொதிகை
  2. சன் தமிழ் மாலை
  3. ஸ்டார் விஜய் டிவி
  4. ஜீ தமிழ்
  5. ராஜ் டிவி
  6. ஜெயா டிவி
  7. கலைஞர் டெலிவிஷன்
  8. சுட்டித் தொலைக்காட்சி (சன் நெட்வொர்க்)
  9. இமையம் டெலிவிசன்
  10. மக்கள் தொலைக்காட்சி
  11. தமிழன் தொலைக்காட்சி
  12. மெகா டிவி
  13. வசந்த் டிவி
  14. வின் (Win) TV
  15. கரன் டிவி
  16. கே டிவி
  17. ராஜ் டிஜிட்டல் பிளஸ்
  18. சன் ம்யூசிக்
  19. ராஜ் மியூஸிக்
  20. கலைஞர் இசை அருவி
  21. எஸ் எஸ் மியூசிக்
  22. வசந்தம் சென்ட்ரல்
  23. ஜெயா மேக்ஸ்
  24. ஜெயா ப்ளஸ்
  25. சன் ஆதித்யா
  26. கலைஞர் சிரிப்பொலி
  27. சன் நியூஸ்
  28. கலைஞர் செய்திகள்
  29. ராஜ் நியுஸ் 24×7
  30. குறள் தொலைக்காட்சி
  31. பாலிமர் டிவி

நன்றி: List of Tamil language television channels – Wikipedia

சொன்னார்கள்! மறந்தார்கள் – அரசியல் பேச்சு

In Politics on ஏப்ரல் 22, 2009 at 2:59 பிப

முந்தைய மேற்கோள் 10:
தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி

1. லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் தலைமையிலான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் :

“எங்களுக்கு காங்கிரசுடன் தகராறு எதுவும் கிடையாது. மன்மோகன்சிங்கையே மீண்டும் பிரதமர் ஆக்க விரும்புகிறோம்.”

2. ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் :

“மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு அமைப்பான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, காங்கிரசுக்கு மட்டும் சொந்தம் அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக, மன்மோகன்சிங்கை ஏற்க முடியாது.”

3. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிடிக்கப்பட்டு இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டால், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கேள்விக்கு அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது அண்ணன் ராகுல் காந்திக்காக பிரசாரம் செய்யும் பிரியங்கா வாத்ராவின் பதில் :

“இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை அரசியல் ரீதியாக என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம், ஒரு நாடு என்ற முறையில் அவரை (விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்) இந்தியா மன்னிக்கவே கூடாது.”

4. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி:

“தமிழ்நாட்டிலும் சரி, இந்திய துணைக்கண்டத்திலும் சரி. இப்போது வருகின்ற செய்திகளை பார்த்தபோதும், எங்கெங்கே எத்தனை இடங்களை காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இன்றைக்கு பிடிக்கின்றன என்பதை உற்று நோக்கும் நேரத்தில், தேர்தல் ஜாதகத்தை கணிப்பவர்கள், அடுத்து வரும் ஆட்சியும் இந்திய துணைக்கண்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் என்று முடிவுகளை சொல்லியிருக்கிறார்கள்.”

5. திராவிட முன்னேற்ற கழக அமைச்சர் அன்பழகன் :

“டெல்லியில் மீண்டும் சமய சார்பற்ற, மசூதிகளை இடிக்காத, மசூதிகளை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டுவோம் என்ற சொல்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும்.”

6. காங்கிரஸ் தலைவர் தங்கபாலு :

“காங்கிரஸ் கட்சியும், அன்னை சோனியாகாந்தியும் இருக்கும்வரை தி.மு.க.வை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.”

7. திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காயத்ரி ஸ்ரீதரனை ஆதரித்து பூந்தமல்லியில் பிரசாரம் செய்த முக ஸ்டாலின் :

“பாமக தலைவர் ராமதாஸ், ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது தனது மகன் அன்புமணிக்கு மேல்சபை எம்பி சீட் என்ற நிபந்தனையுடன்தான் கூட்டணி வைக்கிறார்.

ராமதாசுக்கு தைரியம் இருந்தால், அவரது மகனை தேர்தலில் நிறுத்தி மக்களின் ஆதரவை பெற்று எம்பியாக்கட்டும். கொல்லைப்புறம் வழியாக எம்பியாக்கும் வழக்கத்தையே அவர் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்.”

8. மகன் அன்புமணியின் மாமனாரும் ஆரணி காங்கிரஸ் வேட்பாளருமான கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியனை ஆதரித்து ராமதாஸ் பேசுகையில் :

“நாங்கள் சொந்தம், பந்தம், பாசத்திற்கு எல்லாம் இடம் கொடுக்க மாட்டோம். அதைப்பற்றி யோசிக்கவும் மாட்டோம். பாவம், இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி, ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு பல முறை முயற்சி செய்தார். கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.”

9. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முத்துவேல்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்தபோது:

“அரசு அறிவத்த இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், கேஸ் அடுப்பு போன்றவற்றால் கட்சிகாரர்களின் பினாமிகளுக்கு தான் ஆதாயம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம்.”

10. சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செம்மலை அறிமுக நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் :

“எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். சுகாதார வசதி கிடைக்க வேண்டும். ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள்.

தமிழகம் டாஸ்மாக் மூலம் மதுபானம் விற்பனையில் மட்டும் வளர்ந்துள்ளது. வேறு எதிலும் வளர்ச்சி அடையவில்லை.”

கொசுறு: பாஜக தலைவர் இல.கணேசன் :

“தென் சென்னையில் உள்ள வாக்காளர்களில் படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவீதம் பேர் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை. தங்களது ஜனநாயக பொறுப்பை அவர்கள் உணர வேண்டும். கண்டிப்பாக வாக்களிக்க முன்வர வேண்டும்.

தமிழக தேர்தல்: நடிகர் பட்டியல்: வேட்பாளர் லிஸ்ட்

In Lists on ஏப்ரல் 20, 2009 at 7:52 பிப

  1. நடிகன் நெப்போலியன் – பெரம்பலூர் : திமுக
  2. காமெடியன் சிவக்குமார் என்கிற ஜே கே ரித்தீஷ் – ராமநாதபுரம் : திமுக
  3. இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் – கள்ளக்குறிச்சி : லட்சிய திமுக
  4. வில்லன் மன்சூர் அலிகான் – திருச்சி : லட்சிய திமுக
  5. வெளிவராத படத்தின் ஹீரோ திருமாவளவன் – சிதம்பரம் : விடுதலை சிறுத்தைகள்
  6. ஒரு பட கதாநயகன் திருநாவுக்கரசர் – ராமநாதபுரம் : பாஜக
  7. கார்த்திக் முத்துராமன் – விருதுநகர் : அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
  8. எஸ்.எஸ்.சந்திரன் மத்திய சென்னை : அதிமுக

தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி

In Politics, Tamilnadu on ஏப்ரல் 17, 2009 at 4:04 பிப

முந்தைய மேற்கோள் 10:
அ) Therthal 2009: Top 10 Quotes
ஆ) Tamil Nadu Quotes: Elections 2009

1. அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் :

“இன்னும் 2 ஆண்டு காலம் தமிழகத்தில் இந்த திமுக ஆட்சியை நீடிக்கவிட்டால் தமிழ்நாடும், பிகார் போன்ற மாநிலமாக மாறிவிடும்.”

2. நடிகர் மன்சூரலிகான்:

“அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்.”

3. கலைஞர் கருணாநிதி:

“எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது!”

4. டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி.

“மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சி மாறும் என்று நான் கூறியதை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும், காமராஜரின் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது தமிழகத்தில் பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அவர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்றுதான் கூறினேன்.”

5. முதல்வர் கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கை:

“அதிமுக கூட்டணியின் தலைவர் ஜெயா தமிழகத்திலே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அந்தக் கட்சிக்கு தற்போது போயிருக்கின்ற டாக்டர் ராமதாஸ், அந்த அம்மையாருக்கும் துரோகம் இழைக்கும் வகையிலும், அந்தக் கூட்டணியிலே இருக்கிற இரண்டு கம்ïனிஸ்ட் கட்சிகளுக்கும் “பெப்பே” காட்டுகின்ற வகையிலும் – அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டே, காங்கிரசாரின் கனவு நிறைவேறி தமிழகத்திலே காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்கிறார்!

அவர் எங்கே போனாலும், இருக்கும் இடத்திற்கு குழி பறிக்கத்தான் பார்ப்பார்!

6. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் அளித்த பேட்டி:

“இஸ்ரேலில் இருந்து ஏவுகணை வாங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாக இடதுசாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. எனது மந்திரி சபையில் யாருமே ஊழல்வாதிகள் கிடையாது.

7. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்:

“அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எடுத்த முயற்சியில் 10-ல் ஒரு பங்கு முயற்சியை இலங்கை தமிழர் பிரச்னையில் எடுத்திருந்தால், இலங்கை தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்.”

8. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்:

“ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்குகிறோம் என்று மேடைதோறும் முதலமைச்சர் கருணாநிதி பேசி வருகிறார். நீங்கள் கொடுக்கக்கூடிய அரிசி நியாயவிலை கடைகளுக்குப் போவதற்குப் பதிலாக லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இதுவரை இந்த அரிசி கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா? மணல் கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா?”

9. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா:

“ஐந்தாண்டு கால, மத்திய காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நாட்டின் பொருளாதாரம், மோசமான நிலைக்கு சென்றுள்ளதையும், தீவிரவாதம் அதிகரித்துள்ளதையும், நீங்கள் நன்கு அறிவீர்கள். ஐந்து ஆண்டு கால மத்திய காங்கிரஸ் ஆட்சியில், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.”

10. ஆந்திர மாநில விஜயவாடாவில் பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் நடிகர் சிரஞ்சீவி:

“சந்திரபாபு நாயுடு ஏழைகளின் பசி, மற்றும் அவர்களது வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் கலர் டிவி வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு சொந்தமாக எதுவும் சிந்திக்காமல் தமிழ்நாட்டில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகளை காப்பியடித்து வருகிறார். ஐடெக் முறையில் சிந்திக்கும் சந்திரபாபு நாயுடு ஏழைகளுக்காக செய்யப்போவது எதுவும் இல்லை.”

கொசுறு: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி:

“தேர்தலுக்கு பிறகு 4 வது அணி கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெறுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் கூற முடியாது. அது எண்ணிக்கையை பொறுத்தது. ஜனநாயகம் என்றாலே எண்ணிக்கை விளையாட்டு என்றே பொருள்.”

Tamil Nadu Quotes: Elections 2009

In India, Politics, Tamilnadu on ஏப்ரல் 13, 2009 at 9:36 பிப

Earlier Post: Therthal 2009: Top 10 Quotes

1. DMDK Vijaikanth: on PMK Ramadoss Alliance partnership with both ADMK & DMK

டாக்டரய்யா ஐந்து வருடங்கள் வேட்டி துவைப்பார், ஐந்து வருடங்கள் சேலை துவைப்பார்.”

2. AIADMK Ramarajan: on Infrastructure issues with power grids, energy generation, electricity distribution.

“‘தொட்டால் பூ மலரும்’ படத்தில் வடிவேலு என்னத்த கண்னையாவிடம் கார் வாடகைக்கு வருமா என கேட்பார். என்னத்த கண்னையா உடனே ‘வரும் … ஆனா… வராது’ என்பார்.

தமிழ்நாடும் இப்போ அப்படித்தான் இருக்கு.. ‘வரும்… ஆனா வராது’, எது வரும்..? கரண்டு பில் வரும். ஆனால் மின்சாரம் வராது.”

3. தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ்:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முகத்தைப் பார்த்தாலே, மக்கள் மிரண்டு போய், காங்கிரஸ் கட்சிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துவிடுவார்கள். ஜெயலலிதாவின் ஆதரவோடு பிரதமர் பதவியில் எவரும் நிம்மதியாக இருக்க முடியாது”

4. DMDK Vijaikanth: on Dravidian Politics

“கரையான் புற்று வைக்க கருநாகம் குடியிருந்தது என்பது போல அண்ணா, எம்.ஜி.ஆர். காமராஜர் போன்ற தலைவர்கள் உருவாக்கிய வீட்டில் கலைஞரும், ஜெயலலிதாவும் குடியிருந்து வருகின்றனர்.”

5. ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் பந்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

“ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கும் நாளில் ‘சூரியன்’ வெளியே தலை காட்டாமல் மப்பும் மந்தாரமாக இருப்பது, தேர்தலில் தி.மு.க. தோற்றுவிடும் என்பதையே காட்டுகிறது. ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைக்கும் பெரு‌ம்பேறு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.”

6. மு. கண்ணப்பன் திமுகவில் இணைந்த விழாவில் கருணாநிதி:

“நாம் அனைவரும் இன்று அணி வகுத்து நிற்கிறோம்- நாடாளுமன்றத் தேர்தலுக்க்காக அல்ல. தேர்தல் இன்று வரும் நாளை போகும். ஆனால், பெரியாரிடம் கற்ற பகுத்தறிவு, அண்ணாவிடம் கற்ற மக்களாட்சி மாண்பு இந்த இரண்டையும் மக்களிடம் பரப்புவதற்காக நாம் நம்மை அர்பணித்துக் கொள்கிறோம். அதற்காகத்தான் இன்று அணி திரண்டிருக்கிறோம்.”

7. தமிழர்கள் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் என்.டி.ராமராவின் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா:

“இளமை பருவத்தில் நான் தமிழ் தண்ணீர் குடித்து வளர்ந்தவன். படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். பலமுறை தமிழர்களின் உபசரிப்பில் நனைந்திருக்கிறேன். தமிழ் தண்ணீர் குடித்து வளர்ந்ததால், தமிழர்களுக்கு நான் என்றும் நன்றி உடையவனாக இருப்பேன். தமிழர்கள் ஒற்றுமையாக, ஒருமித்த மனப்பான்மையுடன் இருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது.”

8. திமுக மாணவரணி மாநில செயலாளர் புகழேந்தி

“சமுதாயத்தில் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை என்றால் அவர்களை திருநங்கைகள் என்று அழைக்குமாறு நமது முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் மக்களோடு தான் கூட்டணி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறி வருகின்றார். அரசியல் கட்சிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருநங்கை போல் உள்ளார்.”

9. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாராயணப்ப தெருவில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

“இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும். அப்படி ஒரு நிலை வந்தால் இந்தியா என்ற தேசம், ஒரு தேசமாகவே இருக்கப் போவதில்லை.”

10. ஈழப் போரில் தமிழர்களை வீழ்த்த, அவர்களுக்கு துரோகம் செய்து வரும் இந்திய ‘அம்பி’ யார் என என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன் தெரிவித்ததற்கு முதல்வர் கருணாநிதி:

“ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கு துணை போய் இருப்பவர் தா.பாண்டியன். இப்போது கூட்டிக் கழித்துப் பாருங்கள். அந்த ‘அம்பி’ யார் என்பது தெளிவாகும்.”