Posts Tagged ‘arts’
21 Literary Alternate Magazines in Tamil for Arts, Culture and Opinion
In Magazines, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 3, 2015 at 2:13 முபBala’s Paradesi: How he should have taken the movie?
In Movies, Tamilnadu on மார்ச் 23, 2013 at 4:02 முபபரதேசி திரைப்படம் எடுத்த இயக்குநர் பாலா, இப்படி செய்திருக்க வேண்டும், அப்படி உருவாக்கியிருக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளும் ஆலோசனைகளும் இணையத்தில் வெளியாகிறது. நானும் உள்ளேன் அய்யா…
- இடைவேளைக்குப் பிந்திய இரண்டாவது பகுதியில் குத்தாட்டம் இல்லாதது மிகப் பெரிய குறை. ’காளை’ படத்தில் குட்டிப் பிசாசே என்று குத்தாட்டம் போட்ட மாதிரி அதர்வா கதாபாத்திரத்தின் கற்பனையோடு வேதிகாவின் கிளப் டான்ஸ் வைத்திருக்க வேண்டும்.
- தன்னுடைய நிறுவனத்திற்கு ‘B Studios’ என்று ஆங்கிலத்தில் வைத்ததற்கு பதிலாக ‘பா கலைக்கூடம்’ என தமிழ்ப்பறோடு பெயர் சூட்டியிருக்க வேண்டும்.
- இரு பெண்களுக்கு நடுவில் சண்டை வருவது போல் காட்சி அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதுவும் தேய்வழக்காக மணப்பெண்ணின் அம்மாவிற்கும் மாப்பிள்ளையின் பாட்டிக்கும் பிணக்கு வருமாறு அமைத்திருப்பதற்கு பதில் ஆங்கிலேயரை அடித்துத் துவைப்பது போல் காட்சி வைத்து, பார்வையாளருக்கு திருப்தி கொடுத்திருக்க வேண்டும்.
- தமிழகத்தில் 1939ல் ரொட்டி இருந்திருக்க வாய்ப்பேயில்லை. பொறையும் பன்னும் மட்டுமே கிடைக்கும் நாயர் கடை அமைத்திருக்க வேண்டும்.
- தெலுங்குப் படத்தில் இரண்டு ஹீரோயின் சர்வ சகஜம். அது போல் தன்ஷிகாவையும் அதர்வா உடன் சேர்த்து நினைக்க வைத்திருக்க வேண்டும்.
- படத்தின் துவக்கத்தில் டைட்டில் வருகிறது. இப்பொழுதெல்லாம் சடாரென்று படத்தை ஆரம்பிப்பதுதானே வழக்கம்?! கட்டாங்கடைசியில் மட்டுமே தலைப்பும் இன்ன பிற எழுத்துகளும் வந்திருக்க வேண்டும்.
- முன் பின்னாக காட்சியைக் கலைத்துப் போட்டு திரைக்கதை பின்னுவது இன்றைய சினிமா ஃபேஷன். அதன்படி, கொஞ்சம் தேயிலைத் தோட்டம், கொஞ்சம் மூங்கில் தோட்டம், கொஞ்சம் மாந்தோப்பு எல்லாம் அறுவடை செய்திருக்க வேண்டும்.
- தேயிலையை விட காபி இன்னும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. காபியை விட புகையிலை இன்னும் நோய் தரக் கூடியது. புகையிலையை விட கஞ்சா இன்னும் அடிமையாக்கி அழிக்கும் ஆபத்து நிறைந்தது. எனவே, அவற்றின் அட்டை போல் உறிஞ்சும் தன்மைகளைத்தான் திரைக்கதை ஆக்கியிருக்க வேண்டும்.
- ஓட்டுச் சுவடிகளில் எழுத்தே தெரியாமல் காட்சியாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். அந்தக் கால எழுத்தாணிகளைக் கொண்டு ஓலைச்சுவடி எழுத்துகளைத் தெளிவாக திரையில் காண்பித்திருக்க வேண்டும்.
- இந்தியில் ஷாரூக் கான் நடித்த படமான ‘பர்தேஸ்’ படம் என்று தமிழரை ஏமாற்றும் விதமான தலைப்பை மாற்ற வேண்டும்.
நிறைவேற்றுவதற்கு பெட்டிஷன் போட்டிருக்கிறேன்.
Mani Ratnam and Jeyamohan’s Kadal Movie – Review and Viewer Questions
In Movies, Tamilnadu on பிப்ரவரி 1, 2013 at 7:36 பிபகடல் படம் பார்த்தவர்களுக்கான வினாக்கள்:
1. மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சாத்தான் சொல்லிவிடுகிறது. இதற்கும் ‘நேர்மையான கொம்பன்’ வசனத்திற்கும் என்ன சம்பந்தம்?
2. நித்தியானந்தா, தினகரன் மாதிரி இடைத்தரகர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதை சாமுவேல் கதாபாத்திரம் எப்படி விளக்குகிறது?
3. விலை மாந்தருக்கு தேவாலயத்தின் பொது கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யும் அனுமதி மறுப்பதை முன் வைப்பதன் மூலம் ஆ. சிவசுப்ரமணியன் எழுதிய காலச்சுவடு பதிப்பகத்தின் “கிறித்துவமும் சாதியும்” புத்தகத்தில் இருந்து அனுமதியின்றி ஜெயமோகன் திருடினாரா?
4. மீசைக்காரன் என்று குறிப்பிடுவது யாரை: அ) வீரப்பன் ஆ) பாரதியார் இ) சண்டியர் ஈ) மேசைக்காரன்
5. ’ஒரே கடல்’ படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். ஜெயமோகனின் முதல் படத்திலும் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். மணி ரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’விலும் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். இதனால் நீவிர் அறியும் நீதி யாது?
6. இந்தப் படத்திற்கு இன்ஸ்பிரேஷன் சிறில் அலெக்ஸ் என்பது உண்மையா?
7. தாந்தே எழுதிய Divine Comedy மூன்றாகப் பார்க்கிறார்கள்: நரகம் – செமினரி; ஆத்மா சுத்தீகரிக்கும் உலகம் – தேவாலயம்; சொர்க்கம் – சுதந்திரம். [பெர்க்மானும் சாமுவேலும் சந்திப்பது போதகாலயம்; ஃபாதர் பணியாற்றுவது சர்ச்; கடைசியில் சிறையில் இருந்து விடுதலை] – படம் கிறித்துவத்தை இழிக்கிறதா?
8. கிறித்துவப் பாதிரியார்களும் பிஷப்களும் அருட்தந்தைகளும் ஆயர்களும் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் கடத்தல்காரர்களிடமிருந்தும் காணிக்கை பெறும் காட்சி ஏன் இடம் பெற வேண்டும்?
9. தாமஸ் மைலாப்பூர் வந்ததை எந்த Doubting Thomasம் சந்தேகிக்க முடியாது. அப்படியானால் தாம்ஸ் என்பதை திருவள்ளுவர் என்று பெயர் மாற்றம் செய்தது யார்? [பார்க்க – வள்ளுவரின் தங்கை எழுதிய ஆத்திசூடி என்னும் கிறித்தவ ஆக்கம்]
10. தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் பற்றி ஜெயமோகனுக்கு காசு கொடுத்தவர் யார்?
Ford Foundation: Notable Indian Grants, Corporate NGO partnerships & Fellowships
In Business, India, USA on ஓகஸ்ட் 14, 2012 at 8:26 பிப- Amitabh Behar, Executive director, National Foundation for India Supports voluntary development $25,00,000
- Dr Gladwin Joseph, Director, ATREE Striving to conserve biodiversity through sustainable development $13,19,031
- Indira Jaising, Director, Lawyers’ CollectivePromotes human rights for marginalised people$12,40,000
- Mathew Titus, Executive Director, Sa-Dhan Association Umbrella body of MFIs $9,10,000
- Kinsuk Mitra, chairperson, Winrock Intl – Sustainable rural resource management$8,00,000
- Sandeep Dikshit, Governing body member,CBGA Promotes accountability & participatory governance $6,50,000
- J. Mohanty, Chairperson, Credibility Alliance Promoting norms of accountability among NGOs $6,00,000
- Akhila Sivadas, Executive Director, Centre for Advocacy & Research Rights of marginalised populations $5,00,000
- JNU, Leading liberal arts university; FF funds used to set up Centre for Law & Governance$4,00,000
- Manish Sisodia, Founder, Kabir – Promoting RTI for transparency & accountability; Anna Hazare supporter$3,97,000
- Yogendra Yadav, Fellow, Centre for Study of Developing Societies, A think-tank largely funded by ICSSR $3,50,000
- Parthiv Shah Founder Director, CMAC Promotes culture, design & focuses on governance $2,55,000
- Nandan M. Nilekani, President, NCAER, Influential think-tank on policy issues that have found application $2,30,000
- Pratap Bhanu Mehta Head, Centre for Policy Research Leading think-tank, provides advisory services to govt $687,000
12 Hot Books on Indian Culture & Arts in Tamil for the Chennai Book Fair
In Books, Religions, Tamilnadu on ஜனவரி 4, 2012 at 5:50 பிபதமிழ் ஹிந்து (TamilHindu.com) பரிந்துரைக்கும் புத்தகங்கள்:
- திராவிட மாயை: ஒரு பார்வை
ஆசிரியர்: சுப்பு
பதிப்பு: திரிசக்தி பதிப்பகம், அடையார், சென்னை-20 (2010)
பக்கங்கள்: 320
விலை: Rs.125
தொலைபேசி எண்: 044-42970800 - ஓடிப்போனானா? – ஹரி கிருஷ்ணன்
கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – திரிசக்தி - சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்
அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி
வெளியீடு: தமிழ்ஹிந்து.
ISBN: 978-81-910509-1-2
பக்கங்கள்: 48
விலை: ரூ. 35 - பண்பாட்டைப் பேசுதல் – இந்து அறிவியக்கக் கட்டுரைகள்
Pages 256
Price: Rs 120.00 - ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்
Aravindan Neelakandan
Pages 80
கிழக்கு
Price: Rs 30.00 - உடையும் இந்தியா?
உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்
ராஜிவ் மல்ஹோத்ரா & அரவிந்தன் நீலகண்டன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
ISBN: 978-81-8493-310-9
பக்கங்கள் : 768
விலை: ரூ. 425.
இணையம் மூலம் வாங்கலாம். - எம். சி. ராஜா சிந்தனைகள்
பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்-
தொகுப்பாசிரியர் வே.அலெக்ஸ்.
எழுத்து பிரசுரம் ::Siron Cottage Jonespuram First street, Pasumalai, Madurai-625 004 - பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்
அரவிந்தன் நீலகண்டன்
கிழக்கு பதிப்பகம் - ஆரிய சமாஜம்
Malarmannan
Pages 112
Price: Rs 65.00 - தோள்சீலைக் கலகம் – தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்
ஆசிரியர்கள்: எஸ்.ராமச்சந்திரன் & அ.கணேசன்
வெளியிடுவோர்: தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்
விலை: ரூ. 100
பக்கங்கள்: 192 - மதச்சார்பின்மை
அடல் பிகாரி வாஜ்பாய் – ரூ. 10/- - நிகரில்லா நிவேதிதா :: (விலை ரூ 45/-)
நூல் வெளியிடுவோர்:
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவிகா சமிதி, லஷ்மி கிருபா, இ.ஜி.1/1 ஸ்டிரிங்கர்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ட்ரிங்கர்ஸ் சாலை, வேப்பேரி, சென்னை-3. தொலைபேசி: 9444915973ஜனவரி 2012 சென்னை புத்தகக் கண்காட்சியில் ராமகிருஷ்ண தபோவனம் அரங்கு (ஸ்டால் 192) மற்றும் விஜயபாரதம் அரங்குகளில் இந்த நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.
சென்னை புத்தகக் கண்காட்சி விவரங்கள்:
நாள்: ஜனவரி 5 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
இடம்: பச்சையப்பா கல்லூரி எதிரில் செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி
நேரம்: வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 8.30 வரை.
விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.
32 Tamil Movies – Best Arthouse films
In Lists, Movies, Tamilnadu on ஜூலை 27, 2010 at 3:09 பிப‘நல்ல படம்னா…’ என்று மேதாவிலாசத்துடன் படம் பார்ப்பவர்களுக்கென்று பட்டியல் இருக்கிறது. அப்படி தமிழ் இலக்கிய வாசகர்களால், சிறு பத்திரிகையாளர்களால், வலைப்பதிவு பேரறிஞர்களால், சினிமா சஞ்சிகையாளர்களால் முன்னிறுத்தப்படும் படங்களின் பட்டியல்:
- சந்தியா ராகம்
- வீடு
- உன்னைப் போல் ஒருவன்
- உதிரிப் பூக்கள்
- முள்ளும் மலரும்
- உச்சி வெயில்
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- அவள் அப்படித்தான்
- அழியாத கோலங்கள்
- கண் சிவந்தால் மண் சிவக்கும்
- மெட்டி
- ராஜ பார்வை
- மகா நதி
- குணா
- அந்த நாள்
- முதல் மரியாதை
- ஹே ராம்
- ஒருத்தி
- நாயகன்
- மொழி
- சுப்பிரமணியபுரம்
- சென்னை 28
- ஆயுத எழுத்து
- வெயில்
- புதுப்பேட்டை
- பருத்திவீரன்
- அஞ்சாதே
- நண்பா நண்பா
- இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்
- சங்க நாதம்
- அக்ரஹாரத்தில் கழுதை