தமிழ்ப் படத்தில் வந்த உயிர்ப்பலிகளில் எது உடனே நினைவிற்கு வருகிறது? அது காண்பிக்கப்பட்ட கொலையாக இருக்கலாம். அல்லது கொல்லுவதற்கான திட்டமிடலாக இருக்கலாம். காட்சியமைப்பாக இருக்கலாம். எதனாலோ, நினைவில் நின்று பாதித்த பலிகளின் பட்டியல்:
வாராய் நீ வாராய் – மந்திரி குமாரி படத்தில் பாடலின் முடிவில் (மு. கருணாநிதி)
நூறாவது நாள் – மொட்டை சத்யராஜ் (மணிவண்ணன்)
விடியும் வரை காத்திரு – க்ளைமாக்ஸ் நோக்கிய பயணம் (பாக்யராஜ்)
முதல் மரியாதை – ராதா (பாரதிராஜா)
ஒரு கைதியின் டைரி – பாரதிராஜா + பாக்கியராஜ்
கல்லூரி (தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம்) – பாலாஜி சக்திவேல்
தளபதி – நடு ரோட்டில் எரியூட்டும் சம்பவம் – ரஜினி + மணி ரத்னம்
ஜெண்டில்மேன் – துவக்கத்தில் வரும் சகட்டுமேனியான கொலைகள் – ஷங்கர்
நந்தா (பாடல் கூட நன்றாக இருக்கும் – ஓராயிரம் யானை கொன்றால்… பரணி) – இயக்குனர் பாலா
நான் சிகப்பு மனிதன் – ரஜினி + எஸ்.ஏ. சந்திரசேகர்
கொசுறு:
அ) நாயகன் படத்தின் கொலைகளைப் பற்றிப் பேசாமல் இந்தப் பதிவு முழுமையாகாது
ஆ) அன்னியன் படமும் தொடர்கொலைகள், வித விதமாக அரங்கேறும் சித்திரைவதை பலிகள்.
இ) கடைசியாக, சமீபத்திய சுப்பிரமணியபுரம் (சசிகுமார்)
ஈ) மூன்று முடிச்சு – பாலச்சந்தரும் ரஜினிகாந்த்தும் கமலைக் காப்பாற்றாமல் கைவிடுவது கொலையா?
உ) யார்
ஊ) சிகப்பு ரோஜாக்கள் – பாரதிராஜா + பாக்யராஜ்
எ) விடிஞ்சா கல்யாணம் – மணிவண்ணன்
ஏ) பூவிழி வாசலிலே – ஃபாசில்
ஐ) மௌனம் சம்மதம் (மம்முட்டி + அமலா)
ஒ) கலைஞன் – கமல்
ஓ) சாவி
ஔ) ஆயிரத்தில் ஒருவன்: ஒருவரை “அரவான்’ போல பட்டினி நிமித்தமோ/ போரின் நிமித்தமோ பலியிடுவதாக ஒரு காட்சி இத்திரைப்படத்தில் இருக்கும். பலியிடல்கள்.
ஃ) மதுரை வீரன்: மாறுகால் மாறுகை என்று என் மாணவ பருவத்தில் பார்த்த படம். மனம் பதைபதைத்து போய்விடும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தியாகங்கள் புரிந்த தமிழ்நாட்டுத் தியாகிகளின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த தமிழக தியாகிகள் வெளியான தமிழ்நாட்டுத் தியாகிகள் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சுனாமி மாதிரி பேண்டமிக் ( பாண்டமிக் எது சரி ? ) தமிழ் வார்த்தையாகி இரண்டு வாரம் ஆகிறது. இந்த கொரோனா உலகத்தையே ஒரு புதிய ரீசெட் பட்டன் கொண்டு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இனி வரும் காலங்களில் உலகம் எப்படி மாறப் போகிறது என்று தெரியவில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது போன்ற கிளிஷேவை கடந்து கொஞ்சம் யோசித்தால் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
2. வெங்கடேஷ்:புரட்டிப் போடும் கரோனா – நேசமுடன்: கரோனா கொள்ளைநோயில் இருந்து தப்பிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் ஐந்தாவது நாள் இன்று. இதற்குள் எதிர்பாராத இரண்டு மூன்று விஷயங்கள் நடந்துவிட்டன. ஒரு சின்ன நகர்வு தான். வீட்டுக்குள் அனைவரும் பத்…
3. ஜெயமோகன்:
கொரோனோ: ஒரு சினிமாச் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. மலையாளம். அங்கிருந்து அழைத்தார்கள்.
வைரஸ் அரசியல்: கொரோனோ வைரஸ், அதன் பாதிப்புகள் அதன் மீதான நடவடிக்கைகள் பற்றி கேரள ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்…
வைரஸ் அரசியல்-3: அன்புள்ள ஜெ, வைரஸ் அரசியல் படித்தேன். என் பார்வையில் கேரளம் செய்வதுதான் சரியெனப்படுகிறது.
கொரோனா – அன்றாடங்களைப் புரட்டிப் போடுதல் | Pa Raghavan: இதற்கு முன்பும் இத்தகைய வைரஸ்கள் சில அச்சமூட்டியிருக்கின்றன. அவற்றைக் குறித்தும் நாம் நிறையப் பேசி அஞ்சியிருக்கிறோம். ஆனால் இந்தளவு அல்ல. இவ்வளவு உக்கிரமாக அல்ல. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, மதுச்சாலைகளுக்கு விடுமுறை, வழிபாட்டுத் தலங்கள், கூட்டம் சேரும் திருமணம் போன்ற சம்பவங்களின் நிகழிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு, தொடர் சுகாதாரப் பிரசாரங்கள், தொலைபேசி வழி எச்சரிக்கை – இம்முறை சந்தேகமின்றி அச்சமூட்டுவதாகவே உள்ளது. வீட்டில் …
கொரோனாவால் உலகம் அழியப் போவதில்லை: டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப் பார்த்தேன் – “ நாளைக்கே உலகம் அழிஞ்ச…