Snapjudge

Posts Tagged ‘Quotes’

10 Labour disputes cited in Patriots Quarterback Tom Brady Deflategate

In Business, Sports, USA on செப்ரெம்பர் 4, 2015 at 2:05 முப

Collective Bargaining cases that helped New England Pats QB who was accused of ball tampering in NFL

  1. Abu Dhabi Inv. Auth. v. Citigroup. Inc.
  2. Lehman Brothers
  3. Postlewaite v. McGraw-Hill. Inc
  4. Giddens v. Barclays Capital Inc.
  5. John Hancock Mutual Life Insurance Co. v. Carolina Power & Light Co.
  6. Bell Aerospace Co. Div. of Textron v. Local516
  7. Chevron Transp. Com. v. Astro Vencedor Compania Naviera. S.A.
  8. United Steelworkers of Am. v. Enterprise Wheel and Car Corporation
  9. Shearson/American Express Inc. v. McMahon
  10. United States v. International Brotherhood of Teamsters

Sourceinvestigation concerning allegedly deflated footballs used during the AFC Championship Game on January 18,2015

Teachers to Students: Top 10 Quotes heard in Classrooms

In Lists on ஜூன் 20, 2012 at 1:00 பிப


*If you’re not interested then u may leave the class.

* If you want to talk please get out of the class nd talk.

* This class is worst than a fish market.

* Are you here to waste your parents money?

* Tell me when you all have finished talking.

* Why you are laughing? Come here n tell us all, we’ll also laugh.

* Do you think teachers are fool…!!

* Why do you come to school/coaching when u don’t want to study

* Don’t try to act oversmart with me!

* You yes you! I’m talking to you only don’t look back.

Anna Hazare and Harry Potter: Quotes from the Movie & Real Life Magic

In Lists on ஓகஸ்ட் 25, 2011 at 8:34 பிப

 
1.  [to James, Lily, Sirus and Remus] I never wanted any of you to die for me.  [கிரண் பேடி, அரவிந்த், பிரசாந்த் பூஷன்] என்னுடன் போராட வாருங்கள்.
2. Ron Weasley: We can end this.  பிரனாப் முகர்ஜி:அண்ணாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க என்னால் முடியும்
3. Lily Potter: Harry, you are so loved. Mama loves you. Dada loves you. Harry, be safe. Be strong. பொதுமக்கள்: நீங்க நல்லா இருக்கணும்
4. Minerva McGonagall: Hogwarts is threatened! Man the boundaries. Protect us! ஊடகம்: இந்தியாவில் எங்கும் ஊழல்; எதிலும் ஊழல்! காப்பாத்துங்க…
5. Lord Voldemort: [to Snape] Only I can live forever. நாடாளுமன்றம்: சட்டத்தை நாங்கள் மட்டுமே போடுவோம்.
6. Harry Potter: He knows if we find them, and destroy all the horcruxes we’ll be able to kill him. I reckon he’ll stop at nothing to make sure we don’t find the rest. அன்னா அசாரே: ஊழலின் மூலத்தைக் கண்டுபிடிக்க அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எப்பொழுதுமே ஒத்துக்கொள்ளப் போவதில்லை.
7. Draco Malfoy: [Wand pointed at Harry] Well, well what brings you here Potter?
Harry Potter: Could ask you the same.
Draco Malfoy: You have something of mine, I’d like it back.
Harry Potter: [Nudging to his wand] What’s wrong with the one you have?
Draco Malfoy: It’s my mother’s, it’s powerful but it’s… not the same. It doesn’t quite… understand me, know what I mean?
ப சிதம்பரம்: அதுதான் சர்வசக்தி வாய்ந்த சிபிஐ இருக்கிறதே?

 

அன்னா ஹஜாரே: அப்படி இருந்தும் லஞ்சம் இருக்கிறதே!

8. Professor Severus Snape: [to Dumbledore about Harry] You’ve kept him alive so that he can die at the proper moment. அறிவுஜீவி: அன்னாவும் சோனியாவும் கைகோர்த்துக் கொண்டு விடுவார்கள்
9. Flitwick: You do realize we can’t keep out You-Know-Who indefinitely.
Minerva McGonagall: That doesn’t mean we can’t delay him. And his name is Voldemort, so you might as well use it, he’s going to try and kill you either way.
பத்தி எழுத்தாளர்: அரசியலை இவ்வளவு எளிமையாக தூய்மையாக்க இயலாது.

 

அர்விந்த் கேஜ்ரிவால்: அதற்காக செம்மையாக்கும் முயற்சியில் கால்கோள் கூட வைக்கக் கூடாதா?

10. Professor Albus Dumbledore: Do not pity the dead, Harry. Pity the living and above all, those who live without love. அண்ணா ஆதரவாளர்: ஊழல் கொடுக்க முடிகிறவர்களைப் பற்றிக் கவலை கொள்ளாதே! அன்றாடங்காய்ச்சியாக பைசாவை பார்த்து பார்த்து செலவு செய்பவர்களிடம் கையூட்டு பிடுங்கப்படுகிறதே… அதற்காக குரல் கொடு.
11. Harry Potter: We have to go there, now.
Hermione Granger: What? We can’t do that! We’ve got to plan! We’ve got to figure it out…
Harry Potter: Hermione! When have any of our plans ever actually worked? We plan, we get there, all hell breaks loose!
ஞானி: திட்டம் தீட்டணும்.

 

ஜன் லோக்பால் விரும்பி: ஐந்தாண்டா? பத்தாண்டா?

12. Remus Lupin: It is the quality of ones convictions that determines success, not the number of followers. எத்தனை பேரு கூடறாங்கங்கிறத விட, கூடறவங்களோட மனவுறுதிதான் முக்கியம்.
13. Professor Albus Dumbledore: Words are, in my not-so-humble opinion, our most inexhaustible source of magic. Capable of both inflicting injury, and remedying it. ஜெயமோகன்: வெளியே விடும் ஒவ்வொரு வார்த்தையின் கவனம் தேவை. கொஞ்சம் இம்மி பிசகினால் கூட காரியம் கெட்டு விடும். ’அன்னா தான் இந்தியா. இந்தியா தான் அன்னா’ என்று கிரண் பேடி உணர்ச்சி வசப்பட்டுச் சொன்ன ஒரே ஒரு வாக்கியத்தை வைத்து என்னென்னவெல்லாம் காங்கிரஸ்காரர்களும், மீடியா ஆசாமிகளும் சொன்னார்கள்!
14. Harry Potter: Is this real? Or has this been happening inside my head?
Professor Albus Dumbledore: Of course it is happening inside your head, Harry, but why on earth should that mean that it is not real?
நம்ப மறுக்கும் நடுத்தரவர்க்கம்: இதெல்லாம் நடக்கிற காரியமா? மாமூல் கொடுக்காமல் அரசாங்கத்திடம் வேலையாகுமா?
15. Helena Ravenclaw: If you have to ask, you’ll never know. If you know, you need only ask. ஆதாரமில்லாமல் சந்தேகப்பட்டால், எதையும் ‘why’ போடலாம்; அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தால், கேள்விக்கு விடை கிடைக்கலாம்.

Ravan Special – 10 Proverbs for Ramayanam

In Literature, Misc, Movies, Religions on ஜூன் 20, 2010 at 4:25 முப

இராமாயணத்தை வைத்து புகழ்பெற்ற பத்து பழமொழிகள்:

  1. ‘கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.’
  2. படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்.
  3. விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பன் என்று சொன்னால் எப்படி?
  4. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை
  5. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
  6. குரங்கு பிடிக்க போய் பிள்ளையார் ஆன கதை
  7. கெட்ட பிள்ளை இருப்பான், கெட்ட தாய் ஒரு நாளும் இருக்க மாட்டாள்.
  8. பிச்சை எடுத்தாரம் ராமர், பிடுங்கி திண்டாராம் அனுமார்
  9. அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்
  10. Caesar’s wife must be above suspicion

20 Recent Twits

In Blogs, Life, Lists, Misc, USA on ஓகஸ்ட் 20, 2009 at 3:38 பிப

1. கோடையில் பெண் அழகாய் இருக்கிறாளா? தெரிகிறாளா? விடை நள்ளிரவில் வேகமாய் இயங்கும் வலையில் இருக்கும். சொற்ப பயனர்களா? பார்க்கும் தளங்ளா? #Summer

2. என் வீடு அமெரிக்கா; கீழே குப்பை போட்டால் அபராதம் உண்டு. அலுவல் இந்தியா; பருக்கை சிந்தினால் பெருக்குவாள் மெக்ஸிக்கோகாரி.

3. எத்தனை தடவை அடித்தாலும் எடுத்துவிடுவார்கள்; நம்பிக்கை தரும் அந்தக்கால தொலைபேசி. இரண்டே ஒலியில் அஞ்சற்பெட்டிக்கு அனுப்பும் இக்கால தவிர்பேசி.

4. அல்பத்திற்கு பவிசு வந்தால் அர்த்தராத்திரி குடை பிடிக்கும்: xlate: When call center coy attains status, (s)he takes Traveler’s insurance.

5. பேன்ட்டில் பொத்தான் பிஞ்சா பெல்ட் போட்டுக்கலாம்; ஜிப் போச்சுனா? கோவில்ல தீபாரதனைய ஒத்திக்கும்போது அணைஞ்சா ஒகே! ஆரத்தியே மேல பத்திக்கிச்சுனா?

6. கீபோர்டில் எழுத்து உடைஞ்சா பரவாயில்லை; மானிட்டர்ல எழுத்து உடைஞ்சு தெரிஞ்சாத்தான் விலையுயர்ந்த பிரச்சினை. காபியில் சர்க்கரையும் சிக்கரியும்.

7. Pizzaவில் முடி இருந்தா எடுத்துட்டு சாப்பிடலாம்; முடியில் பீட்ஸா விழுந்துட்டா குளிச்சுட்டுத்தான் சாப்பிடணும்! சினிமாவும் கவர்ச்சியும் போல.

8. குப்பையிலிருந்து மீட்க சஞ்சய் (விஜய்) டிவி, அனௌஷ்கா (அஜீத்) தொலைக்காட்சி, தியா (சூர்யா) டெலிவிஷன் எல்லாம் சித்திக்கணும் #Kids

9. அங்காடி: பெண்ணியம்: பெயரில் மரியாதையின்றி ‘டி’ வருகிறதே! ஆங்கிலேயம்: காப்பர்-டி போல் இதுவும் கருத்தடை செய்யுமா! இணையம்: angadi.in available.

10. ஃபேஸ்புக்கே பழியாகக் கிடப்பவர்களையும் ட்விட்டுவதே தொழிலாகக் கொண்டவர்களையும் பார்த்தவுடன் வருவது கோபமா? வருத்தமா? இயலாமையா? பொறாமையா?

11. எல்லோரையும் சந்தித்துவிட்டால், சந்திப்பதற்கு எவர் இருப்பார்கள்?

12. Choose the best answer: How do U classify the NJTP drivers without EZ-Pass: 1. Lazy; 2. Privacy nuts; 3. Ignorant; 4. False lame fallen duck

13. When a waterfall supposed to represent #FDR presidency is not working, does it symbolize that the administration failed? #Memorials #DC

14. Google maps is an equal opportunity application. It doesn’t work well in both iPhone & Blackberry. Phone based GPS still has miles to evolve

15. New Jersey gas station fillups r like marriages. U & the significant other have to come together; Mass. is like masturabation. U R on ur own

16. Negotiation is not a win-win of buyer & seller; it is the art of risking everything to get an iota of advantage; சிறுதுளி பெருவெள்ளம் in biz

17. கதிரவனுக்கும் பூமிக்கும் நடுவில் நிலா வந்தால் சூரியக்கிரகணம்; சந்திரக்கிரகணமும் தெரிஞ்சிருக்கும். எது நடுவால வந்தா பாணிக்கிரகணம்? #Eclipses

18. காரல் மார்க்சு தமிழாக்கம் தெரியுமா? மீன் முத்திரை #Words #Karl #Marxism #Translations

19. All great writers are hungry tigers: careless, judgmental, opinionated, arrogant; critics r domesticated cats; both species are good actors.

20. It gives a confidence like 5 ft water in a swimming pool to be aware that the person you are writing about, will not read your tweets. #Blog

கனவுத் தொழிற்சாலை: சுஜாதா

In Lists, Literature, Magazines on ஏப்ரல் 27, 2009 at 10:36 முப

குமுதம் இதழில் தொடர்கதையாக வெளியான சினிமா குறித்த சுஜாதா நாவலின் அத்தியாயங்களுக்கு முன் இடம்பெற்றதில் காணக்கிடைத்த பத்து மேற்கோள்:

1. My days are darker than your nights.
ஹாஸன் பிரதர்ஸ் ராஜ பார்வை‘ அழைப்பிதழ்

2. All those books barely read, those friends barely loved, those cities barely visited, those women barely possessed…
Albert CamusThe Fall.

3. “படத்தைத் தாக்கு தாக்கு என்று தாக்கி எழுதினீர்கள். என்னவாயிற்று உங்கள் விமரிசனம்? உங்கள் எழுத்தால் அந்தப் படம் ஓடுவதைத் தடுத்து நிறுத்த முடிந்ததா? பிரமாதமாக ஓடியதே!”
எம். ஏ. காஜா: ‘குங்குமம்‘ இதழில்

4. The writers want to be directors. The producers want to be writers. The actors want to be producers. The wives want to be painters. Nobody is satisfied.
Gottfried Reinhardt

5. வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை. களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் வானகத் தந்தை அவறுக்கும் உணவளிக்கிறார்.
மத்தேயு ஆறாம் அதிகாரம். (6.26)

6. “Include me out.” – Sam Goldwyn

7. துத்திப்பூ மாலை – எனக்குத்
தோளிலிட்ட நாள் முதலா
தும்பம் ஒருபுறமே – இப்போ
துயரம் இருபுறமே
ஒப்பாரிப் பாடல், திருவாட்டி சின்னத்தாய் பாடியது

8. ‘No picture shall be certified for public exhibition which will lower the moral standards of those who see it.’
Ministry of I & B: Directions to the Board of Film Censors

9. பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடி இருக்கலாம். – ஔவையார்

10. இரத்தினங்கள் வைத்து இழைத்து
இராவைப் பகலாக்கும்
சித்திரங்கள் வகை வகையாய்
செய்வேன் மனோன்மணியே
குணங்குடி மஸ்தான் சாஹிப்

கொசுறு: “இதைத் தவிர ‘இந்தியர்கள் நம்மவர்களுள் வீண் சண்டை’, ‘ராட்டினமாம் காந்தி கை பாணம்’ என்ற பாட்டுக்களையும் இனிய குரலுடன் பாடுகிறாள். வார்த்தைகள் தெளிவாக இருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது. மிஸ் ஜான்ஸிபாயும் மிஸ்டர் ஆர்டியும் செய்த கொறத்தி நடனமும் இதில் அடங்கியிருக்கிறது. அவசியம் காணத் தகுந்தது.”
– 29-01-1931 சுதேசமித்திரனில் வெளியான ‘காளிதாஸ்‘ படத்தின் விமரிசனத்திலிருந்து பிலிம் நியூஸ் ஆனந்தன்

சொன்னார்கள்! மறந்தார்கள் – அரசியல் பேச்சு

In Politics on ஏப்ரல் 22, 2009 at 2:59 பிப

முந்தைய மேற்கோள் 10:
தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி

1. லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் தலைமையிலான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் :

“எங்களுக்கு காங்கிரசுடன் தகராறு எதுவும் கிடையாது. மன்மோகன்சிங்கையே மீண்டும் பிரதமர் ஆக்க விரும்புகிறோம்.”

2. ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் :

“மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு அமைப்பான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, காங்கிரசுக்கு மட்டும் சொந்தம் அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக, மன்மோகன்சிங்கை ஏற்க முடியாது.”

3. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிடிக்கப்பட்டு இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டால், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கேள்விக்கு அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது அண்ணன் ராகுல் காந்திக்காக பிரசாரம் செய்யும் பிரியங்கா வாத்ராவின் பதில் :

“இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை அரசியல் ரீதியாக என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம், ஒரு நாடு என்ற முறையில் அவரை (விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்) இந்தியா மன்னிக்கவே கூடாது.”

4. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி:

“தமிழ்நாட்டிலும் சரி, இந்திய துணைக்கண்டத்திலும் சரி. இப்போது வருகின்ற செய்திகளை பார்த்தபோதும், எங்கெங்கே எத்தனை இடங்களை காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இன்றைக்கு பிடிக்கின்றன என்பதை உற்று நோக்கும் நேரத்தில், தேர்தல் ஜாதகத்தை கணிப்பவர்கள், அடுத்து வரும் ஆட்சியும் இந்திய துணைக்கண்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் என்று முடிவுகளை சொல்லியிருக்கிறார்கள்.”

5. திராவிட முன்னேற்ற கழக அமைச்சர் அன்பழகன் :

“டெல்லியில் மீண்டும் சமய சார்பற்ற, மசூதிகளை இடிக்காத, மசூதிகளை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டுவோம் என்ற சொல்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும்.”

6. காங்கிரஸ் தலைவர் தங்கபாலு :

“காங்கிரஸ் கட்சியும், அன்னை சோனியாகாந்தியும் இருக்கும்வரை தி.மு.க.வை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.”

7. திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காயத்ரி ஸ்ரீதரனை ஆதரித்து பூந்தமல்லியில் பிரசாரம் செய்த முக ஸ்டாலின் :

“பாமக தலைவர் ராமதாஸ், ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது தனது மகன் அன்புமணிக்கு மேல்சபை எம்பி சீட் என்ற நிபந்தனையுடன்தான் கூட்டணி வைக்கிறார்.

ராமதாசுக்கு தைரியம் இருந்தால், அவரது மகனை தேர்தலில் நிறுத்தி மக்களின் ஆதரவை பெற்று எம்பியாக்கட்டும். கொல்லைப்புறம் வழியாக எம்பியாக்கும் வழக்கத்தையே அவர் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்.”

8. மகன் அன்புமணியின் மாமனாரும் ஆரணி காங்கிரஸ் வேட்பாளருமான கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியனை ஆதரித்து ராமதாஸ் பேசுகையில் :

“நாங்கள் சொந்தம், பந்தம், பாசத்திற்கு எல்லாம் இடம் கொடுக்க மாட்டோம். அதைப்பற்றி யோசிக்கவும் மாட்டோம். பாவம், இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி, ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு பல முறை முயற்சி செய்தார். கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.”

9. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முத்துவேல்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்தபோது:

“அரசு அறிவத்த இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், கேஸ் அடுப்பு போன்றவற்றால் கட்சிகாரர்களின் பினாமிகளுக்கு தான் ஆதாயம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம்.”

10. சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செம்மலை அறிமுக நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் :

“எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். சுகாதார வசதி கிடைக்க வேண்டும். ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள்.

தமிழகம் டாஸ்மாக் மூலம் மதுபானம் விற்பனையில் மட்டும் வளர்ந்துள்ளது. வேறு எதிலும் வளர்ச்சி அடையவில்லை.”

கொசுறு: பாஜக தலைவர் இல.கணேசன் :

“தென் சென்னையில் உள்ள வாக்காளர்களில் படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவீதம் பேர் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை. தங்களது ஜனநாயக பொறுப்பை அவர்கள் உணர வேண்டும். கண்டிப்பாக வாக்களிக்க முன்வர வேண்டும்.

தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி

In Politics, Tamilnadu on ஏப்ரல் 17, 2009 at 4:04 பிப

முந்தைய மேற்கோள் 10:
அ) Therthal 2009: Top 10 Quotes
ஆ) Tamil Nadu Quotes: Elections 2009

1. அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் :

“இன்னும் 2 ஆண்டு காலம் தமிழகத்தில் இந்த திமுக ஆட்சியை நீடிக்கவிட்டால் தமிழ்நாடும், பிகார் போன்ற மாநிலமாக மாறிவிடும்.”

2. நடிகர் மன்சூரலிகான்:

“அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்.”

3. கலைஞர் கருணாநிதி:

“எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது!”

4. டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி.

“மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சி மாறும் என்று நான் கூறியதை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும், காமராஜரின் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது தமிழகத்தில் பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அவர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்றுதான் கூறினேன்.”

5. முதல்வர் கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கை:

“அதிமுக கூட்டணியின் தலைவர் ஜெயா தமிழகத்திலே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அந்தக் கட்சிக்கு தற்போது போயிருக்கின்ற டாக்டர் ராமதாஸ், அந்த அம்மையாருக்கும் துரோகம் இழைக்கும் வகையிலும், அந்தக் கூட்டணியிலே இருக்கிற இரண்டு கம்ïனிஸ்ட் கட்சிகளுக்கும் “பெப்பே” காட்டுகின்ற வகையிலும் – அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டே, காங்கிரசாரின் கனவு நிறைவேறி தமிழகத்திலே காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்கிறார்!

அவர் எங்கே போனாலும், இருக்கும் இடத்திற்கு குழி பறிக்கத்தான் பார்ப்பார்!

6. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் அளித்த பேட்டி:

“இஸ்ரேலில் இருந்து ஏவுகணை வாங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாக இடதுசாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. எனது மந்திரி சபையில் யாருமே ஊழல்வாதிகள் கிடையாது.

7. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்:

“அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எடுத்த முயற்சியில் 10-ல் ஒரு பங்கு முயற்சியை இலங்கை தமிழர் பிரச்னையில் எடுத்திருந்தால், இலங்கை தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்.”

8. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்:

“ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்குகிறோம் என்று மேடைதோறும் முதலமைச்சர் கருணாநிதி பேசி வருகிறார். நீங்கள் கொடுக்கக்கூடிய அரிசி நியாயவிலை கடைகளுக்குப் போவதற்குப் பதிலாக லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இதுவரை இந்த அரிசி கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா? மணல் கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா?”

9. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா:

“ஐந்தாண்டு கால, மத்திய காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நாட்டின் பொருளாதாரம், மோசமான நிலைக்கு சென்றுள்ளதையும், தீவிரவாதம் அதிகரித்துள்ளதையும், நீங்கள் நன்கு அறிவீர்கள். ஐந்து ஆண்டு கால மத்திய காங்கிரஸ் ஆட்சியில், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.”

10. ஆந்திர மாநில விஜயவாடாவில் பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் நடிகர் சிரஞ்சீவி:

“சந்திரபாபு நாயுடு ஏழைகளின் பசி, மற்றும் அவர்களது வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் கலர் டிவி வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு சொந்தமாக எதுவும் சிந்திக்காமல் தமிழ்நாட்டில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகளை காப்பியடித்து வருகிறார். ஐடெக் முறையில் சிந்திக்கும் சந்திரபாபு நாயுடு ஏழைகளுக்காக செய்யப்போவது எதுவும் இல்லை.”

கொசுறு: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி:

“தேர்தலுக்கு பிறகு 4 வது அணி கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெறுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் கூற முடியாது. அது எண்ணிக்கையை பொறுத்தது. ஜனநாயகம் என்றாலே எண்ணிக்கை விளையாட்டு என்றே பொருள்.”

Tamil Nadu Quotes: Elections 2009

In India, Politics, Tamilnadu on ஏப்ரல் 13, 2009 at 9:36 பிப

Earlier Post: Therthal 2009: Top 10 Quotes

1. DMDK Vijaikanth: on PMK Ramadoss Alliance partnership with both ADMK & DMK

டாக்டரய்யா ஐந்து வருடங்கள் வேட்டி துவைப்பார், ஐந்து வருடங்கள் சேலை துவைப்பார்.”

2. AIADMK Ramarajan: on Infrastructure issues with power grids, energy generation, electricity distribution.

“‘தொட்டால் பூ மலரும்’ படத்தில் வடிவேலு என்னத்த கண்னையாவிடம் கார் வாடகைக்கு வருமா என கேட்பார். என்னத்த கண்னையா உடனே ‘வரும் … ஆனா… வராது’ என்பார்.

தமிழ்நாடும் இப்போ அப்படித்தான் இருக்கு.. ‘வரும்… ஆனா வராது’, எது வரும்..? கரண்டு பில் வரும். ஆனால் மின்சாரம் வராது.”

3. தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ்:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முகத்தைப் பார்த்தாலே, மக்கள் மிரண்டு போய், காங்கிரஸ் கட்சிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துவிடுவார்கள். ஜெயலலிதாவின் ஆதரவோடு பிரதமர் பதவியில் எவரும் நிம்மதியாக இருக்க முடியாது”

4. DMDK Vijaikanth: on Dravidian Politics

“கரையான் புற்று வைக்க கருநாகம் குடியிருந்தது என்பது போல அண்ணா, எம்.ஜி.ஆர். காமராஜர் போன்ற தலைவர்கள் உருவாக்கிய வீட்டில் கலைஞரும், ஜெயலலிதாவும் குடியிருந்து வருகின்றனர்.”

5. ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் பந்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

“ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கும் நாளில் ‘சூரியன்’ வெளியே தலை காட்டாமல் மப்பும் மந்தாரமாக இருப்பது, தேர்தலில் தி.மு.க. தோற்றுவிடும் என்பதையே காட்டுகிறது. ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைக்கும் பெரு‌ம்பேறு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.”

6. மு. கண்ணப்பன் திமுகவில் இணைந்த விழாவில் கருணாநிதி:

“நாம் அனைவரும் இன்று அணி வகுத்து நிற்கிறோம்- நாடாளுமன்றத் தேர்தலுக்க்காக அல்ல. தேர்தல் இன்று வரும் நாளை போகும். ஆனால், பெரியாரிடம் கற்ற பகுத்தறிவு, அண்ணாவிடம் கற்ற மக்களாட்சி மாண்பு இந்த இரண்டையும் மக்களிடம் பரப்புவதற்காக நாம் நம்மை அர்பணித்துக் கொள்கிறோம். அதற்காகத்தான் இன்று அணி திரண்டிருக்கிறோம்.”

7. தமிழர்கள் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் என்.டி.ராமராவின் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா:

“இளமை பருவத்தில் நான் தமிழ் தண்ணீர் குடித்து வளர்ந்தவன். படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். பலமுறை தமிழர்களின் உபசரிப்பில் நனைந்திருக்கிறேன். தமிழ் தண்ணீர் குடித்து வளர்ந்ததால், தமிழர்களுக்கு நான் என்றும் நன்றி உடையவனாக இருப்பேன். தமிழர்கள் ஒற்றுமையாக, ஒருமித்த மனப்பான்மையுடன் இருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது.”

8. திமுக மாணவரணி மாநில செயலாளர் புகழேந்தி

“சமுதாயத்தில் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை என்றால் அவர்களை திருநங்கைகள் என்று அழைக்குமாறு நமது முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் மக்களோடு தான் கூட்டணி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறி வருகின்றார். அரசியல் கட்சிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருநங்கை போல் உள்ளார்.”

9. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாராயணப்ப தெருவில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

“இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும். அப்படி ஒரு நிலை வந்தால் இந்தியா என்ற தேசம், ஒரு தேசமாகவே இருக்கப் போவதில்லை.”

10. ஈழப் போரில் தமிழர்களை வீழ்த்த, அவர்களுக்கு துரோகம் செய்து வரும் இந்திய ‘அம்பி’ யார் என என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன் தெரிவித்ததற்கு முதல்வர் கருணாநிதி:

“ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கு துணை போய் இருப்பவர் தா.பாண்டியன். இப்போது கூட்டிக் கழித்துப் பாருங்கள். அந்த ‘அம்பி’ யார் என்பது தெளிவாகும்.”

Therthal 2009: Top 10 Quotes

In India, Politics on ஏப்ரல் 6, 2009 at 5:31 பிப

1. L.K. Advani: on Manmohan Singh

“The country’s most important address used to be 7 Race Course Road (PM’s official residence) but now it is 10 Janpath (Sonia’s residence). When he wants to take a decision he sends a minister to 10 Janpath to ask for Sonia’s clearance.”

2. Mamata Banerjee: on the Nano launch

“The launch of the Nano was timed keeping in view the approaching Lok Sabha polls. It was motivated. It is a conspiracy against me.”

3. Maneka Gandhi: on Pilibhit speech recording

“The Election Commission has also dismissed the tape as a fake one and it actually is a fake one because Varun has not spoken anything like that.”

4. Manmohan Singh: on Advani calling him the weakest PM

“What is his record? When he was home minister Parliament was attacked, Lal Quila was attacked, an Indian Airlines plane was hijacked and terrorists were rewarded.”

5. Congress chief Sonia Gandhi on the BJP for its oft-repeated description of Manmohan Singh as a weak Prime Minister

“The Prime Minister is a leader of the country and not of a party. So, if one disrespects the Prime Minister, he or she disrespects the entire nation”

6. Amar Singh: on CBI playing in the hands of Congress

“CBI is actually Congress Bureau of Investigation … When we were having seat sharing talks (with Congress) in UP, the system was listening to us. But as soon as the alliance broke down and we came closer to Lalu Prasad and Ram Vilas Paswan, the tone changed.”

7. George Fernandes: on the allegation of gang rape during Gujarat riots

“Is it the first time that someone has been gang raped in India?”

8. Narendra Modi

“UPA alliance is strange: Delhi mein dosti, gaon mein kushti” (They are friends in Delhi and fight in the states)

9. RJD chief Lalu Prasad Yadav on BJP candidate Varun Gandhi for his anti-Muslim speeches

“Had I been the country’s home minister, I would have crushed Varun Gandhi under a roller and destroyed him without caring for the consequences for his hate speech against Muslims”

10. Pranab Mukherjee on his perennial number 2 status to his inability to becoming Prime Minister

“To run this country coming from north India and not be fluent in Hindi is totally unacceptable…My total knowledge of Hindi is inadequate. That is number one”