Snapjudge

தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி

In Politics, Tamilnadu on ஏப்ரல் 17, 2009 at 4:04 பிப

முந்தைய மேற்கோள் 10:
அ) Therthal 2009: Top 10 Quotes
ஆ) Tamil Nadu Quotes: Elections 2009

1. அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் :

“இன்னும் 2 ஆண்டு காலம் தமிழகத்தில் இந்த திமுக ஆட்சியை நீடிக்கவிட்டால் தமிழ்நாடும், பிகார் போன்ற மாநிலமாக மாறிவிடும்.”

2. நடிகர் மன்சூரலிகான்:

“அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்.”

3. கலைஞர் கருணாநிதி:

“எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது!”

4. டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி.

“மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சி மாறும் என்று நான் கூறியதை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும், காமராஜரின் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது தமிழகத்தில் பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அவர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்றுதான் கூறினேன்.”

5. முதல்வர் கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கை:

“அதிமுக கூட்டணியின் தலைவர் ஜெயா தமிழகத்திலே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அந்தக் கட்சிக்கு தற்போது போயிருக்கின்ற டாக்டர் ராமதாஸ், அந்த அம்மையாருக்கும் துரோகம் இழைக்கும் வகையிலும், அந்தக் கூட்டணியிலே இருக்கிற இரண்டு கம்ïனிஸ்ட் கட்சிகளுக்கும் “பெப்பே” காட்டுகின்ற வகையிலும் – அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டே, காங்கிரசாரின் கனவு நிறைவேறி தமிழகத்திலே காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்கிறார்!

அவர் எங்கே போனாலும், இருக்கும் இடத்திற்கு குழி பறிக்கத்தான் பார்ப்பார்!

6. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் அளித்த பேட்டி:

“இஸ்ரேலில் இருந்து ஏவுகணை வாங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாக இடதுசாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. எனது மந்திரி சபையில் யாருமே ஊழல்வாதிகள் கிடையாது.

7. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்:

“அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எடுத்த முயற்சியில் 10-ல் ஒரு பங்கு முயற்சியை இலங்கை தமிழர் பிரச்னையில் எடுத்திருந்தால், இலங்கை தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்.”

8. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்:

“ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்குகிறோம் என்று மேடைதோறும் முதலமைச்சர் கருணாநிதி பேசி வருகிறார். நீங்கள் கொடுக்கக்கூடிய அரிசி நியாயவிலை கடைகளுக்குப் போவதற்குப் பதிலாக லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இதுவரை இந்த அரிசி கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா? மணல் கடத்தலை தடுத்து இருக்கிறீர்களா?”

9. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா:

“ஐந்தாண்டு கால, மத்திய காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நாட்டின் பொருளாதாரம், மோசமான நிலைக்கு சென்றுள்ளதையும், தீவிரவாதம் அதிகரித்துள்ளதையும், நீங்கள் நன்கு அறிவீர்கள். ஐந்து ஆண்டு கால மத்திய காங்கிரஸ் ஆட்சியில், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.”

10. ஆந்திர மாநில விஜயவாடாவில் பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் நடிகர் சிரஞ்சீவி:

“சந்திரபாபு நாயுடு ஏழைகளின் பசி, மற்றும் அவர்களது வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் கலர் டிவி வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு சொந்தமாக எதுவும் சிந்திக்காமல் தமிழ்நாட்டில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகளை காப்பியடித்து வருகிறார். ஐடெக் முறையில் சிந்திக்கும் சந்திரபாபு நாயுடு ஏழைகளுக்காக செய்யப்போவது எதுவும் இல்லை.”

கொசுறு: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி:

“தேர்தலுக்கு பிறகு 4 வது அணி கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெறுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் கூற முடியாது. அது எண்ணிக்கையை பொறுத்தது. ஜனநாயகம் என்றாலே எண்ணிக்கை விளையாட்டு என்றே பொருள்.”

  1. […] சொன்னார்கள்! மறந்தார்கள் – அரசியல் பேச்சு In Politics on ஏப்ரல் 22, 2009 at 2:59 பிற்பகல் முந்தைய மேற்கோள் 10: தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு -… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: