Archive for ஓகஸ்ட், 2009|Monthly archive page
Biography, Books, Coetzee, Cool, English, Ess Ramakrishnan, EssRaa, Fiction, Hot, Lib, Library, Lists, New, Non-Fiction, Novels, Ramakrishnan, Reader, SR, Story, Suggestions
In Books, Lists, Literature on ஓகஸ்ட் 30, 2009 at 4:53 பிப
Source: எஸ். ராமகிருஷ்ணன்: பார்க்க- படிக்க-இணையதளங்கள்
தீவிர வாசகர்களுக்காக நான் சிபாரிசு புதிய புத்தகங்கள்
1. Diary of a Bad Year by J. M. Coetzee – novel
2. Chicken with Plums – Marjane Satrapi – Graphic novel
3. 2666- Roberto Bolano -novel
4. The Poetry of Arab Women – Anthology – Nathalie Handal
5. The Sea by John Banville- Booker Prize Novel
6. Satyajit Ray : Essays (1970-2005)- Author: Gaston Roberge
7. E.E. CUMMINGS – A Biography By Christopher Sawyer-Laucanno.
8. THE BROTHERS KARAMAZOV Fyodor Dostoevsky. New Translation- by Richard Pevear and Larissa Volokhonsky. .2007
9. A Drifting Boat: An Anthology of Chinese Zen Poetry. Translated by Jerome P. Seaton
10. Cosmos – Witold Gombrowicz – novel
1995, Authors, இலக்கியம், எழுத்தாளர், கதை, சஞ்சிகை, சிறுகதை, சிறுபத்திரிகை, தொகுப்பு, நாவல், படைப்பு, பட்டியல், புனைவு, Best, Books, Collections, Cool, Faces, Fiction, Hot, Lib, Library, Lit, Literary, Literature, Must, Names, New, Non-Fiction, Notable, Notables, Paavannan, Pavannan, People, Picks, Poems, Read, Refer, Referrals, Shorts, Story, Suggestions, Tamil, Top, Writers
In Books, Lists, Literature on ஓகஸ்ட் 30, 2009 at 4:49 பிப
- யூமா.வாசுகி – வேட்டை, ரத்த ஒளி
- சூத்ரதாரி – தேர், வலியின் நிறம்
- மனோஜ்குமார் – பால்
- பா.வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை
- தளவாய்சுந்தரம் – ஹிம்சை
- கோகுலகண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்
- பவாசெல்லத்துரை – வேட்டை
- லட்சுமிமணிவண்ணன் – பூனை
- குமாரசெல்வா – உக்கிலு
- பாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி
- க.சீ.சிவக்குமார் – நாற்று
- சோ.தருமன் – வலைகள்
மிகச்சிறந்த தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பு என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிடுவது முடிவெடுப்பதில் சில நடைமுறைச் சிக்கல்களைத் தரும். மறைந்த மூத்த எழுத்தாளர்களை வைத்துக் கொள்வதா விட்டுவிடுவதா, வாழும் மூத்த எழுத்தாளர்களில் யார் யாரை எடுத்துக் கொள்வது என நிறைய பிரச்சனைகளில் அகப்பட்டுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
1995க்குப் பின் எழுதப்பட்ட இளம் எழுத்தாளர்கள் கதைகளில் முக்கியமானவர்களாகச் சிலரை நான் மனத்தில் வைத்திருக்கிறேன். இவர்கள் பெயர்களை மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
இவர்களில் பாதிப்பேருக்கு இன்னும் முதல்தொகுப்பே வரவில்லை. மீதிப்பேர் சமீபத்தில்தான் தம் முதல் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். மிகவும் புதியதான மொழி ஆளுமையும் படைப்புலகும் கொண்டவர்களாக இவர்கள் உள்ளார்கள். இந்த அடையாளத்தைத் தற்காலத்திய தமிழ்ப்படைப்புலகின் அடையாளமாகப் பார்க்கத் தடையில்லை.
– Dec 11, 2004
கதை, கன்னியாகுமரி, குமரி, ஜெமோ, ஜெயமோகன், நாவல், புனைவு, Jayamogan, Jayamohan, Jemo, Jeyamogan, Jeyamohan, JM
In Books on ஓகஸ்ட் 28, 2009 at 3:48 முப
நாவலில் என்னைக் கவர்ந்த சில இடங்கள், வரிகள், நிகழ்வுகள், கருத்துகள்:
- அவனது முதிரா இளமைக் கனவுகளில் பளிங்கு நிறமுள்ள, உருண்டு பெருகி ஒன்றோடொன்று நெருங்கி நிறைந்த பெரும் மார்பகங்கள் நிரம்பியிருந்தன. அவை இருதசை குமிழ்களன்றி வேறல்ல என்ற உண்மையை அவன் கற்பனை ஏற்க மறுத்தது.
சானலை மாற்றி மாற்றிச் சென்று ஃபாஷன் டிவியை அடைந்தான். தொலைக்காட்சித் திரையின் வெண்திரவ ஆழத்திலிருந்து வண்ணக்குமிழிகள் போலப் பெண்ணுருவங்கள் எழுந்து வந்து வெடித்தபடியே இருந்தன.
- நாராயணன் பேசாத நேரங்களில் தூங்கிக் கொண்டிருப்பார். ஒருமுறை வேடிக்கை பேச்சினூடாக பார்கவிச்சேச்சி “நானும் பார்த்திருக்கேன். அந்த சமயத்திலும் பேசிகிட்டிருக்கிற ஒரே ஆள் இவர்தான்”
- கோபக்கார புருஷனுக்கு சமையல் பண்ற பொண்டாட்டியோட மனநிலை
- ரொம்ப அந்தரங்கமான விஷயத்த வெளியே சொல்றப்ப எப்பவுமே ஒரு செயற்கைத் தன்மை வந்துடும்.
- விசித்திரமான ஓர் ஒலி கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். பலநூறு பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது போன்ற ஒலி எதிர்ப்பக்க முட்கம்பி வேலியிலிருந்து கேட்டது. நெருங்கி உற்றுப் பார்த்தான். வேலியெங்கும் பாலிதீன் உறைக்கிழிசல்கள் காற்றில் வந்து சிக்கியிருந்து அதிர்ந்து படபடத்துக் கொண்டிருந்தன.
- அப்போதுதான் கொள்ளையடித்த கிராமத்துவீடு போலிருந்தாள் ஷைலஜா. எங்கே தொட்டாலும் பவுடரோ கிரீமோ கண்மையோ ஒட்டியது.
- அந்தச் செயல் போல அவனை இம்சை செய்வது வேறு ஏதுமில்லை.கல்லறை மீது பூக்களையும் சொற்களையும் வைப்பது போல.
- பெரிய அவமானம்னு ஒரு பிராயத்தில தோண்றது பிறகு ரொம்ப சாதாரணமா ஆகிடும். போய்ப் பேசுங்க. அவங்க சிரிப்பாங்க
- நடிப்புக்காகவென்றாலும் – கூட வருவதன் மூலம் உருவாகும் நிறைவு அது என்று புரிந்து கொண்டான். நம்பிக்கையூட்டக் கூடிய வலுவான ஆளுமை ஒன்றின் துணையைப் பெற்றுக் கொண்ட உணர்வா அது?
- அவள் மயிர்ச்சுருள்கள் ஆடின. பிணத்தின் மயிர்கள் காற்றிலாடுவது போல.
- சேற்றுப் பாதையில் இதமான வெப்பம் இருந்தது. தன் உடல் அச்சுவர்களில் உரசிய போதுதான் அவை வியர்த்த ஈரச் சருமப் பரப்புகள் என்று தெரிந்தது. நிர்வாணமான பெண்ணுடல்களினாலான சுவர். மென்முலைகள், வயிறுகள், தொடைகள்…
- சன்னலோரம் சென்று நின்று கடலைப் பார்த்தான். இருட்டில் மிதக்கும் படகு விளக்குகளே கடலாக மனதில் விரிந்து கொண்ட விந்தையை எண்ணிக் கொண்டான்.
- அவள் நடந்துபோய் சரக்கொன்றை மரத்தின் அடியில் அமர்ந்தாள். செம்மஞ்சள் மலர்கள் பூத்து நிரம்பிய, முதலைத் தோல் கொண்ட மரம்.
- ஒரு குறிப்பிட்டத் தோற்றத்தில் காட்சியளிக்க ஆரம்பித்தால் அதை நம்பும் பிறர் அத்தோற்றத்தை தன்மீது பதியவைத்து பிறகு அதிலிருந்து நினைத்தாலும் தப்ப முடியாத நிலையை உருவாக்கி விடுவார்கள் என்று அறிந்தான்.
- பெண் விரோதிகளில் ஒரு கணிசமான பங்கினர் மிகத் தீவிரமான பெண்பித்தர்கள்.
- எல்லா ஒழுக்கவிதிகளும் மத்தவங்களை சுரண்டக்கூடாதுங்கிற நீதியோட அடிப்படையில் உருவான விஷயங்கள்தான்னு எனக்குப் படுது. மத்தவங்களைப் பொருள் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ ஏமாற்றாம இருந்தா எல்லாமே ஒழுக்கம்தான்
- மானுடக் கற்பனையின் அதிகபட்ச எல்லை மனக்கனவுகளில் உலவுகையில்தான் தெரிகிறது. அல்லது அது அகங்காரத்தின் எல்லையா? மனிதனுக்குத்தான் எத்தனை குறைவாகத் தேவைப்படுகிறது வாழ்க்கை! அகங்கார சமனத்தின் சில கணங்கள். அதை முடிவற்ற கண்ணாடிப் பரப்புகளில் பிரதிபலித்துப் பிரதிபலித்து பிரம்மாண்டமான வெளியாக மாற்றிக் கொள்கிறான்.
- பெண் என்றால் உடம்பு மட்டுமல்ல; தன்னிலையும் அகங்காரமும் கூட. அதை உடலால் தொட முடியாது. அதை அகங்காரத்தால் மட்டும்தான் தொட முடியும்.
10, ARR, audio, இசை, எழுத்து, கவிதை, கானா, குரல், சினிமா, தேவா, பாடலாசிரியர், பாடல், பாட்டு, ராகம், ராஜா, ரெஹ்மான், Background, BGM, Catchy, Cinema, Films, HJ, IR, Lyrics, MD, MP3, MSV, Music, Musicians, Na Muthukkumar, Paa Vijay, Perarasu, Poems, Poets, Pop, Raja, Rap, Rehman, Rock, Singers, Songs, Tunes, Vaali, Vairamuthu, Vijay Antony, Writers
In Movies, Tamilnadu on ஓகஸ்ட் 28, 2009 at 2:51 முப
தமிழ் சினிமாவில் எழுதப்படும் திரைப்பாடல்கள் எத்தனை வகைப்படும்?
- கிராமிய, நாட்டுப்புற, தெம்மாங்குப் பாடல்
- கொச்சை மொழி, கிளுகிளுப்பு, பேரரசு வகையறா, குத்தாட்டப் பாடல்
- ஆங்கிலப் பாடல்களின் தமிழாக்கம்; ஆங்கில வரிகள் அப்படியே வரும் ராப்
- பட்டியல் பாடல்கள்; பெயர்ச்சொல்லும் அதற்கு உரித்தான வினைகளும் என்று pattern பாட்டு
- அதீத கற்பனை; உயர்வு நவிற்சி கவிதை
- நாயக பாவம்; பரணி; ஹீரோ அறிமுகப் பாடல்; இசையமைப்பாளர் துதி; ஸ்தோத்திர வகை.
- புரியாத சொற்றொடர்கள்; அன்னிய மொழிப் பதங்களை மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடும் வரிகள் கொண்ட விளங்காப் பாடல்
- ரீ-மிக்ஸ்; புகழ் பெற்ற பழைய பாடல்கள தேய்ந்த vinylல் கொடுக்கும் மறு-வாந்திப் பாடல்
- Ctrl+C; அராபிய, ஸ்பானிஷ், உருது, உலக இசையை அப்படியே பிரதியெடுக்கும் இசைப் பாட்டு
- இதெல்லாம் இல்லாத பாக்கி பாடல்கள்: சாஸ்திரீய கச்சேரி; சாமி பாட்டு; கானா.
Anandha Vikadan, Authors, AV, இலக்கியம், எழுத்தாளர், கதை, கற்றதும் பெற்றதும், சஞ்சிகை, சிறுகதை, சிறுபத்திரிகை, சுஜாதா, தொகுப்பு, நாவல், படைப்பு, பட்டியல், புனைவு, Best, Books, Collections, Cool, Faces, Fiction, Hot, Kathai, Lib, Library, Lit, Literary, Literature, Must, Names, Non-Fiction, Notable, Notables, People, Picks, Poems, Read, Refer, Referrals, Shorts, Story, Suggestions, Sujata, Sujatha, Tamil, Top, Vikadan, Vikatan, Writers
In Books, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 27, 2009 at 10:17 பிப
Courtesy: ForumHub
- புதுமைப் பித்தன் – மனித இயந்திரம்
- கு.ப.ராஜகோபலன் – விடியுமா
- தி.ஜா. – சிலிர்ப்பு
- லா.ச.ரா. – கொட்டு மேளம்
- கு ழகிரிசாமி – அன்பளிப்பு
- சுந்தர ராமசாமி – பிரசாதம்
- அ மாதவன் – நாயனம்
- ஜெயகாந்தன் – அக்னி பிரவேசம்
- ஜெயமொகன் – பல்லக்கு
- வண்னதாசன் – நிலை
- கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
- நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்
- அசோகமித்திரன் – புலிக் கலைஞன்
- கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
- இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
- இரா முருகன் – உத்தராயணம்
- சு சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
- ரா கி ர – செய்தி
- தங்கர்பச்சான் – குடி முந்திரி
- சிவசங்கரி – செப்டிக்
- ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
- பிரபஞ்சன் – மீன்
- கி.ரா. – கதவு
- வண்ணநிலவன் – எஸ்தர்
- திலீப் குமார் – கடிதம்
- சோ தருமன் – நசுக்கம்
- நாகூர் ரூமி – குட்டியாப்பா
- ராமசந்தர வைத்தியநாதன் – நாடக காரர்கள்
- பாமா – அண்ணாச்சி
- சுஜாதா – மகாபலி
10, கரு, ட்விட், பதிவு, பலர், பெரும்பான்மை, பேசுபொருள், விவாதம், Blogs, Discussions, Memes, Tamil, Top, Topics, Twits, Twitter
In Blogs on ஓகஸ்ட் 27, 2009 at 10:04 பிப
ட்விட்டரில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்புகள் என்ன? எவர் பெயர் வாரத்திற்கொருமுறையாவது உருளுகிறது? எதை இழுத்தால், அனைவரும் ஆஜராவார்கள்? முக்கியமான பத்து. எந்த வரிசையிலும் இல்லை.
- பெரிதிலும் பெரிய இசையமைப்பாளர் யார்? — இளையராஜாவா? ஏ ஆர் ரெஹ்மானா?
- கணினியில் தமிழில் தட்டச்ச சிறந்த முறை எது — தமிழ் 99? அஞ்சல் (ரோமன் – தங்கிலீஷ் ஒலி)
- தமிழீழ விடுதலைப் புலிகள் — இலங்கையில் தமிழருக்கு ஈழம் வாங்கித் தருவாரா? சுதந்திரம் தேவையா?
- வலைப்பதிவகம் எங்கே அமைப்பது? — இலவச ப்ளாகர், வார்ப்புரு மாற்றக்கூடிய ப்ளாக்ஸ்பாட் (அல்லது) தேடிகளின் நண்பி வோர்ட்பிரெஸ், எளிமையின் உருவம் வொர்ட்ப்ரஸ்.காம்
- செல்லத் தட்டல் கவனிப்பு மிரட்டல் @ பதில்கள் — வெண்பாம் போட்டுத் தாக்குபவர்களுக்கா? நான்கைந்து பதிவாக இட வேண்டியதை நானூறு ட்விட்களாக்குபவர்களுக்கா?
- @ போட்டு உங்க கருத்து என்ன மடக்குவது — பிரபலங்களா? ஆறு வருடம் மும்பு யாருக்கோ அஞ்சலிட்டபோது மாற்றுக்கருத்து சொன்ன பழம்பதிவரா?
- தமிழ்: பயிற்றுமொழியா? தனிமொழியா? தானே வளர்ந்துக்குமா?
- அரசு ஊழியர் செயல்படுகிறார்களா? வேலை நிறுத்தம் மட்டும் செய்கிறார்களா?
- சினிமா: அக்ஷராவா/தமன்னாவா x எந்தப் பாடல்/இடம்பெற்ற படம்/நடிக, இயக்குநரின் துணுக்கு ட்ரிவியா
- ?
3, சரிதம், ட்விட், தமிழ், மூணு, மூன்று, வார்த்தை, வாழ்க்கை, Cool, Life, Lists, Meme, Reddit, Shorts, Tamil, Three, Twits, Twitters
In Blogs, Life, Lists on ஓகஸ்ட் 27, 2009 at 9:09 பிப
- ஏதோ பொழப்பு ஓடுது –சத்யராஜ்குமார்
- நாட்டம், தேட்டம், (சரி) போட்டும்.. – ஹரிகிருஷ்ணன்
- மனம் போன போக்கில் – ஒருபக்கம் (சொக்கன் உதவி)
- மீண்டும் ஒரு முறை – யாத்ரீகன்
- எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் சமரசங்கள் – இலவசக்கொத்தனார்
- போனால் போகட்டும் போடா – நாகு
- ஒவ்வொரு தினமும் புதிது – சித்ரன்
Ads, Authors, கதிர் கே, கனகவேல் காக்க, கரண், கரன், கலை, சரவணா ஆர், சினிமா, சினேகன், சுரேஷ் அர்ஸ், திரைப்படம், படத்தொகுப்பு, பா ராகவன், பாரா, பேனர், போச்டர், விஜய் ஆண்டனி, விளம்பரம், ஷாஜி, ஹரிப்ரியா, Banners, Chumma, Cinema, Films, Fun, Haripriya, Kanagavel Kaakka, Kanagavel Kakka, karan, Movies, Pa Ragavan, Pa Rakavan, Paa Raagavan, Paa Raghavan, Para, Posters, writerpara, Writers
In Lists, Misc, Movies on ஓகஸ்ட் 23, 2009 at 6:14 பிப
போஸ்டர் பாரு… ஒன்பது போடு!

Karan's Kanagavel Kaakka: Tamil Films: Movie Posters: Cinema Ads
- அது என்ன! ஸ்கர்ட்டும் இல்லாமல், ஷார்ட்சும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவாந்தரமான ஆடை?
- கடற்கரையில் பச்சை புல்வெளி எப்படி சென்னையில் சாத்தியமில்லையோ… அது போல் பீச் வாலிபாலில் இந்தியா ஒலிம்பிக் பதக்கம் வாங்குவதும் சாத்தியமில்லை.
- மிஸ்டி மே & கெரி வால்ஷ் போல் இருவர் கொண்ட அணியில் ஏன் ஐவர்! ஒரு வேளை பஞ்ச பாண்டவர் கதையோ? பா ராகவனாருக்கே வெளிச்சம்.
- திருவளர் செல்வன் போல் வசனகர்த்தா பாராவும் வினைத் தொகை; காலங்காட்டும் இடைநிலை, விகுதி முதலியன மறைந்து நிற்றலால், இவை முக்காலத்திற்கும் விரிக்கப்படக் கூடியன. (வெண்)பா(ம்)கின்ற, பாடும், பாடிய என முக்காலத்திற்கும் விரிக்கக்கூடிய வகையில் இவை அமைந்துள்ளன.
- பாராவின் ஒன்பது கட்டளைகள் பிரசித்தம். இது நாயகன் கரணின் சட்டையில் 99
- தன் தலையில் கைவைக்கக்கூடாது என்பார்கள். கன் வைக்கலாம்.
- அடைக்கப்பட்ட நூல்வேலி கம்பி கட்டத்திற்குள்ளிருந்து வெளியே குதிக்க பெண் கையை நீட்டுவது போஸ்டர் சங்கேதம்
- அதற்கும் ரகசிய வீடியோ கேமிரா வைத்து CCTV மூலம் கண்காணிப்பது கலிகாலம்
- வேல் எதைக் குறிக்கிறது என்று சொல்லவும் வேணுமோ?

Analysis, audio, Chumma, Cinema, Comedy, Culture, Facts, Fallcy, Films, Fun, History, Jolly, Kandasamy, Kavidhai, Kavinjar, Kindal, Logic, Lyrics, Movies, MP3, Nakkal, Poems, Poets, Pun, Reality, Satire, Songs, Sunday, Tamil, Theater, Theatres
In Lists, Movies, Music on ஓகஸ்ட் 23, 2009 at 4:07 பிப
1. பாடல்: எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
திரைப்படம்: கந்தசாமி
எழுதியவர்: இளங்கோ – விவேகா
வரி: எம்ப்டி ஐபாடே — உன்னை ஸ்விட்ச் ஆன் பண்றது வேஸ்ட்டு
ஏன்: ஐ-பாட் காலியாக இருக்கும்போது உயிர் கொடுக்காவிட்டால், எப்படி அந்த ஐ – பாடில் பாடல்களை ஏற்றுவது? மேலும், வாங்கும்போது எல்லா எம்பி3 ப்ளேயர்களும் எந்தவித ஒலிப்பேழையும் இல்லாமல்தான் இருக்கும்.
2. பாடல்: தாய் சொல்லும் உறவை வைத்தே
திரைப்படம்: கனாக் கண்டேன்
எழுதியவர்: வைரமுத்து
வரி: 17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கைதானே பாலூத்தும் காலம் வரைக்கும் கூட வரும்!
ஏன்: +2 மதிப்பெண் வைத்தே அண்ணா பொறியியலும், மெட்ராஸ் மெடிகலும் கிடைக்கும் என்றாலும், சட்டம் பயில்வது, தொழில் முனைவது, கலைகளில் சிறந்தோங்குவது என்று தமிழகம் அமெரிக்காவாகும் காலம் இது.
3. பாடல்: பூமாலையே தோள் சேரவா
திரைப்படம்: பகல் நிலவு
எழுதியவர்: ?
வரி: தேனினை தீண்டாத பூ இல்லையே
ஏன்: வண்டுகளை ஏமாற்ற தேன் தயாரித்துத் தராத பூக்களின் செய்கையை இந்த வரிகள் தவிர்த்துவிடுகிறது. Nectarless flowers: ecological correlates and evolutionary stability : Flowers may cheat by not producing nectar
4. பாடல்: போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
திரைப்படம்: சிங்காரவேலன்
எழுதியவர்: ?
வரி: காவேரி அல்ல… அணைபோட்டுக் கொள்ள
ஏன்: இன்றைய காவிரியில் தண்ணீர் எங்கே இருக்கிறது? கர்நாடக டி.எம்.சி. வந்தாலும், பாசன ஏரிகள் எல்லாம் ஃப்ளாட் அகி விட்டனவே!
5. பாடல்: ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
திரைப்படம்: மீரா
எழுதியவர்: ?
வரி: எனையும்தான் உன்னைப் போலே… படைத்தானே… இறைவன் எனும் ஓர் தலைவன்
ஏன்: பகுத்தறிவிற்கும் (கடவுள்?) அறிவியலுக்கும் (வளர் உருமாற்றம்) இலக்கியத்திற்கும் (Franz Kafka: Metamorphosis) பெண்ணியத்துக்கும் (ஆண் இறை) எதிரான கொள்கையை விரிக்கும் கவிதை.
6. பாடல்: வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
திரைப்படம்: மெல்லத் திறந்தது கதவு
எழுதியவர்: ?
வரி: உனைச்சேர எதிர்பார்த்தேன்; முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
ஏன்: இது போலி சாமியார் வகையறா. ஏழு ஜனனமும் தெரிவதெல்லாம் அக்மார்க் கப்சா.
7. பாடல்: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
திரைப்படம்: பொல்லாதவன்
எழுதியவர்: ?
வரி: வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே
ஏன்: வௌவாலுக்கு உலகம் நேராகத்தான் இருக்கும். நமக்குத்தான் அது upside down.
8. பாடல்: காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
திரைப்படம்: சின்ன மாப்பிள்ளை
எழுதியவர்: ?
வரி: கந்தன் தேடி வந்த வள்ளி
ஏன்: வள்ளியை நினைத்து, ஏங்கி, காதல் கொண்டு, இன்றைய தினத்தில் பிறந்த நாள் கொண்டாடும் கணேசரின் உதவியோடு, வசியமாக்கி, மணம் புரிந்தது சரித்திரம் (அல்லது ஆன்மிக புராணம் [அல்லது தலவரலாறு])
9. பாடல்: சின்னத் தாயவள் தந்த ராசாவே
திரைப்படம்: தளபதி
எழுதியவர்:
வரி: தேய்பிறை காணும் வெண்ணிலா
ஏன்: ‘வளர்பிறை என்பதும் தேய்பிறையென்பதும் நிலவுக்குக் கிடையாது!’ (அப்படியே இருந்தாலும், வெண்ணிலவே தேய்பிறையைக் காண முடியுமா?)
10. பாடல்: ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
திரைப்படம்: தாய் மூகாம்பிகை
எழுதியவர்: வாலி
வரி: ஜகன் மோஹினி நீ
ஏன்: ஜெயமாலினிதான் ஜெகன்மோகினி என்பது ஊரறிந்த தகவலாச்சே!
ஃபேஸ்புக், ஆக்கம், கதை, தமிழ்ப்பதிவுகள், நாவல், நூல், பதிவர், பதிவர்கள், பத்து, புத்தகம், புனைவு, பேஸ்புக், முபாரக், வாசிப்பு, வெளியீடுகள், Bloggers, Books, Fiction, Library, Lit, Mubarak, Novels, Picks, Read, Story, Tamil Blogs
In Books, Lists on ஓகஸ்ட் 21, 2009 at 4:08 பிப
by முபாரக்
1) மொழியும் நிலமும் : ஜமாலன்
2) இசையின் அரசியல் : வளர்மதி
3) பேச்சு – மறுபேச்சு : ரமேஷ்-பிரேம்
4) கடவுளோடு பிரார்த்தித்தல் : மனுஷ்ய புத்திரன்
5) குருவிக்காரச் சீமாட்டி : ரமேஷ்-பிரேம்
6) மண்ட்டோ கதைகள் : மொழிபெயர்ப்பு – ராமாநுஜம்
7) கடவு (சிறுகதைகள்) : திலீப்குமார்
8) ரத்த சந்தனப்பாவை : என். டி. ராஜ்குமார்
9) வலியோடு முறியும் மின்னல் : பிரான்சிஸ் கிருபா
10) ஆழ்நதியைத் தேடி : ஜெயமோகன்
11) அமைப்பியலும் அதன் பிறகும் : தமிழவன்
12) சொற்கள் உறங்கும் நூலகம் : யவனிகா சிரீராம்
13) வரம்பு மீறிய பிரதிகள் : சாரு நிவேதிதா
14) பூமியை வாசிக்கும் சிறுமி : சுகுமாரன்
15) சாய்வு நாற்காலி : தோப்பில் முகம்மது மீரான்