- Gandhi Jeyanthi – Subramaniya Samy – RSS Sonia – Georgia – US Tamilan
- Jolie Movie – Campaign Trail – Tonsure – Nuclear – Movie Marxist
- Vijayganth Dialogues – Cricket Betting – MP Gas Leak – Tourist Election Observers
- Creamy Layer – AK Antony – Drunkard MLA – Bank Strike
- Netha Pensions – Internal Affairs – VHP – Chikun Kunya
- Govt Holidays – ADMK Heart Attack – Brahmaputra Dam by China
Archive for the ‘Misc’ Category
அந்தக் கால பேசும் செய்திகள்
In Lists, Misc on ஓகஸ்ட் 13, 2020 at 2:50 முபகொரோனா வைரஸ் – 9 செய்திகள்
In Lists, Misc, Politics, USA, World on மார்ச் 28, 2020 at 6:18 பிபஇட்ட உறவு ஏனாதிக்கூட்டம்; வார்த்த உறவு வண்ணாரக் கூட்டம். கொத்து எதிர்ப்புத்திறன் கொரொனாவைத் தடுக்குமா? கொஞ்சம் கொஞ்சமாக நோய்த் தடுப்பாற்றலைக் கொண்டு வருவது ஒரு வழி. மொத்தமாக எல்லோரையும் பழக விட்டு அனைவரையும் நோய்க்குட்படாமல் வைப்பது இன்னொரு வழி:
- What is herd immunity and can it stop the coronavirus? – MIT Technology Review: Once enough people get Covid-19, it will stop spreading on its own. But the costs will be devastating.
விளையாட்டு வினையில் முடியும். இங்கொருவர் சும்மானாச்சிக்கும் காய்கறிகள் மீது தும்மி இருக்கிறார். அவருக்கு கொரோனா இருக்கிறதா/இல்லையா என்று சோதித்து, அந்த முடிவுகள் வர குறைந்தது 10/12 நாள்களாவது ஆகி விடும். அது வரை காய்கறிகளை சாப்பிடுவோரை ஆபத்துக்குள்ளாக்கலாமா? பழமுதிர்ச்சோலை அங்காடியில் இருந்து அனைத்தும காய்கனிகளும் தூக்கி எறியப்பட்டது. பகிடியாகத் தும்மியவர் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
2. Woman who coughed on $35K worth of grocery store food charged with four felonies: Gerrity’s grocery store in Hanover Township, Pennsylvania, said it had to throw out about $35,000 worth of food that a woman coughed on in a “twisted prank.”
மீண்டும் மீண்டும் வா… ஒரு முறை வந்தவருக்கு மீண்டும் கொரொனாவைரஸ் வராது என்று சொன்னார்கள். இப்பொழுது முதல் முறை வந்து குணமாக்கப்பட்டவருக்கு மீண்டும் கொரோனாவைரஸ் வந்திருக்கிறது. இது இன்னொரு தோற்றமா என்பதை ஆராய வேண்டும். அப்படி மற்றுமொரு திரிபு என்றால் மீண்டும் தனித்திருக்கச் சொல்வார்களோ?
Some Recovered Coronavirus Patients In Wuhan Are Testing Positive Again : Goats and Soda : NPR: NPR interviewed four residents of Wuhan who contracted the virus, recovered — but then had a retest that turned positive. What does that mean for China’s recovery from COVID-19?
என்ன கொடுமை இது சார் தருணம். அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவிற்கு வருபவர்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள். மெக்சிகோவில் இருந்து கள்ளத்தனமாக அமெரிக்காவிற்குள் வருபவர்களைத் தடுப்பதற்காக பெரிய சுவரை அமெரிக்க எல்லையில் கட்டினார் டொனால்ட் டிரம்ப். இப்பொழுது கொரோனாவைரஸ் தலைவிரித்தாடும் அண்டை நாட்டில் இருந்து எங்களுக்கும் தொற்று வியாதியைப் பரப்பாதீர்கள் என்கிறது மெக்சிகோ.
4. Coronavirus: Mexicans demand crackdown on Americans crossing the border – BBC News: Wearing face masks, protesters blocked the US southern border, telling Americans to ‘stay home’
இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு. காய்கறிகளை நன்றாக அலம்பி உண்ணுங்கள் என்கிறார். எந்தப் பொருளை வெளியில் இருந்து வாங்கி வந்தாலும் எவ்வாறு தொற்றுயிரி இடமிருந்து பாதுகாப்பது என்பதையும் சொல்கிறார். கொரொனோவைரஸ் காற்றில் மூன்று மணி நேரம் தன்னைத் தொடுவோரை பீடிக்க தயாராக இருக்கும். அட்டைப்பெட்டிகளில் ஒரு மணி நேரம் உயிர்ப்போடு இருக்கும். பிளாஸ்டிக் பொருள்களிலும் உலோகத்திலும் மூன்று நாள் வரை நச்சுயிர் தாக்குப் பிடிக்கும். எப்படி விரட்டுவது? பாருங்கள்:
5. PSA Safe Grocery Shopping in COVID-19 Pandemic – www.DrJeffVW.com – YouTube: video for New CDC data, safe takeout food practices, and an updated practice for safe grocery shopping/handling.
டிம் அர்பன் நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டியவர். விஷயத்தை எடுத்தால் எளிமையாகவும் ஆழமாகவும் அருமையாகவும் விளக்குபவர். மனதில் பதியும்படி எண்ணங்களை முன்வைக்கிறார்.
SARS-CoV-2 : grain of sand :: grain of sand : house
6. You Won’t Believe My Morning — Wait But Why: A highly unexpected turn of events.
ஐயருக்கு அரை வார்த்தை சொல்; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே. கஜக்ஸ்தான் நாட்டில் கோதுமையைப் பதுக்குகிறார்கள். செர்பியா சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினார்கள்.

7. Countries are starting to hoard food, threatening global trade: It’s not just grocery shoppers who are hoarding pantry staples. Some governments are moving to secure domestic food supplies during the conoravirus pandemic.
இட்ட குடியும் கெட்டது; ஏற்ற குடியும் கெட்டது. லண்டனில் இருக்கும் வீடற்றோருக்கு ஹோட்டல்களில் அறை ஒதுக்கப்பட்டது. இல்லமற்ற அனாதரவோர் சாலைகளிலும் பூங்காக்களிலும் இருப்பதால் கொரொனோவைரஸ் பரவும் அபாயம் அதிகம் ஆகிறது. அதைத் தடுப்பதற்காக அவர்களுக்கு விடுதிகளில் இடம் கொடுத்திருக்கிறது இங்கிலாந்து.
8. Coronavirus: Rough sleepers in London given hotel rooms – BBC News: About 300 rooms are secured to help protect rough sleepers as Londoners heed advice to stay indoors.

ஏகாதசி என்றைக்கு என்றால் அகமுடையாள் புடைவையைப் பார்த்துச் சொல்கிறேன் என்றாளாம். ஒரு தடவை அடங்கிய நோய் மீண்டும் திரும்ப வருமா? சரித்திரம் என்ன சொல்கிறது? 1918ல் அமெரிக்காவைத் தாக்கிய ஃப்ளூ ஜுரத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எப்பொழுது எந்த நகரங்களில் நுண்ணுயிரி அதிரடியாகத் திரும்பத் தாக்கியது என்பதை விவரிக்கும் நேஷனல் ஜியாகிரபி பதிவு
9. How they flattened the curve during the 1918 Spanish Flu: Social distancing isn’t a new idea—it saved thousands of American lives during the last great pandemic. Here’s how it worked.
ஆ – 10+1 பழமொழிகள்
In Life, Misc, Tamilnadu on திசெம்பர் 29, 2018 at 5:57 பிபமுந்தைய பதிவு: அ – பத்து பழமொழிகள்

- ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.
- ஆயிரம் அரைக்காசு
- ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக் கொண்டால் நஷ்டமா?
- ஆயிரம் பொன் பெற்ற குதிரையானாலும் சவுக்கடி வேண்டும்.
- ஆயிரம் வித்தை கற்றாலும் உலகத்தில் ஆடம்பரம் வேண்டும்.
- ஆழ அமுக்கினாலும் நாழி நானாழி கொள்ளாது.
- ஆளைக் கண்டு ஏமாற்றுமாம் ஆலங்காட்டுப் பேய்.
- ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; அருச்சுனன் மனைவியரை எண்ண முடியாது.
- ஆற்றோடே போனாலும் போவேன்; தெப்பக்காரனுக்குக் கூலி கொடுக்க மாட்டேன் என்றானாம்.
- ஆறு நாள் நூறு உழவிலும் நூறு நாள் ஆறு உழவு மேல்.
- ஆனையைத் தண்ணீரில் இழுக்கிற முதலை பூனையைத் தரையில் இழுக்குமா?
நவக்கிரகம் – உறவுமுறை
In Life, Misc, Religions, Tamilnadu on ஒக்ரோபர் 21, 2018 at 3:48 முபதொடர்புடைய பதிவு: ஜோசியம் – ஜோலி – சீலம்
- சூரியன் – பிதா, மாமனாா், மகன்
- சந்திரன் – அம்மா, மாமியார், அத்தை
- செவ்வாய் & ராகு – சகோதரர்கள், கணவர்
- புதன் – தாய் மாமா, இளைய சகோதரி, மனைவியின்தங்கை
- வியாழன் – குழந்தை, ஆசிரியர், நாம்
- சுக்கிரன் – மனைவி, மகள், மூத்த சகோதாி, மருமகள், சின்னம்மா
- சனி – சித்தப்பா
- ராகு – தந்தை வழி பாட்டனாா்
- கேது – தாய் வழி பாட்டி
சூர்யேந்து பௌம புத வாக்பதி காவ்ய சௌரி
ஸ்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா:
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்.
14 New Words in Dictionary: Do you know what is gochujang, portmanteau words?
In Life, Lists, Misc, World on செப்ரெம்பர் 8, 2018 at 2:44 பிபNew Dictionary Words | September 2018 | Merriam-Webster: M-W added 841 new words to the dictionary in September 2018
- TL;DR
- biohacking
- gochujang
- hophead
- bingeable
- Latinx
- flight
- marg
- hangry
- bougie
- ribbie
- airplane mode
- force quit
- fintech
16 Mag Ads for Royal Enfield Bullet: Copywriting to create passion among followers
In India, Lists, Magazines, Misc on ஜனவரி 21, 2013 at 7:07 பிபகிறித்துவம் என்றவுடன்?
In Life, Misc on ஜூலை 20, 2011 at 3:13 முபஉங்களுக்கு கிறிஸ்துவம் என்ற சொல்லைக் கேட்டவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?
அப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:
- போப்பாண்டவர் (பாப் பாடகர் போல்)
- டி.ஜி.எஸ். தினகரன் (நித்தியானந்தா போல்)
- அஞ்சலை (கேளுங்கள்; மெயிலப்படும் போல்)
- பாவி (அறிவியல் விஞ்ஞானி போல்)
- சகோதரர் (முஸ்தபா முஸ்தஃபா போல்)
- பரலோகமும் பரமபிதாவும் (பரோட்டாவும் சால்னாவும் போல்)
- வீரமாமுனிவரும் தேம்பாவணியும் (ஜெயமோகனும் விஷ்ணுபுரமும் போல்)
- ஆ சிவசுப்ரமணியன் (?)
- நக்மா (சூப்பர் ஸ்டார் போல்)
- மதகுருமார்களின் பாலியல் கொடுமைகள் (நரகம் போல்)
முந்தைய இடுகை: ஜெயமோகன் என்றவுடன்?
List of cool thinkers in Tamil
In Internet, Lists, Misc, Tamilnadu on ஜூலை 12, 2010 at 4:15 முப“தமிழகத்தில் பொதுவெளி அறிவுஜீவி என்று யாரும் இல்லை. அப்படி ஒரு இடமே இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு அருந்ததி ராய் உருவாகி வருவார் என்று நாம் கற்பனை பண்ண முடியுமா?”
– இந்திரா பார்த்தசாரதி 80
இந்த சமயத்தில், தமிழகத்தில் யார் இன்ஃப்ளூயன்ஷியல்? எவர் அடுத்தவர் சிந்தனையை சுட்டாலும், பரவலாக்குகிறார்? யார் சொன்னால் பேச்சு எடுபடும்? எம் எஸ் உதயமூர்த்தி போல்வுட் ஆஃப் போகஸ் ஆகாமல், கல்வியாளர் கி.வேங்கடசுப்ரமணியன் போல் அவுட் ஆஃப் தி வோர்ல்ட் ஆகாமல், அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசிப்பதாக சொல்லிக்கொள்பவர் பட்டியல்:
- சுகி சிவம் (சமயச் சொற்பொழிவாளர்)
- ஜெயமோகன் (இலக்கிய எழுத்தாளர் – வசனகர்த்தா)
- கமல் (சினிமா நடிகர்)
- மனுஷ்யபுத்திரன் (பத்திரிகையாளர் + பாடலாசிரியர் & உயிர்மை)
- ரவிக்குமார் எம்.எல்.ஏ. (அரசியல்வாதி – விடுதலை சிறுத்தைகள்)
- சோ (ஆங்கில ஊடகப் பேட்டியாளர் + துக்ளக்)
- தமிழருவி மணியன் (கட்சி சார்பற்ற பத்தி ஆசிரியர்)
- ஜக்கி வாசுதேவ் (மதகுரு)
- கோபிநாத் (ஸ்டார் விஜய் – நீயா நானா)
- பைத்தியக்காரன் (வலைப்பதிவர்)
முந்தைய பதிவு: Top 10 Influential Tamils from TN: India Today « 10 Hot
Ravan Special – 10 Proverbs for Ramayanam
In Literature, Misc, Movies, Religions on ஜூன் 20, 2010 at 4:25 முபஇராமாயணத்தை வைத்து புகழ்பெற்ற பத்து பழமொழிகள்:
- ‘கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.’
- படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்.
- விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பன் என்று சொன்னால் எப்படி?
- ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை
- வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
- குரங்கு பிடிக்க போய் பிள்ளையார் ஆன கதை
- கெட்ட பிள்ளை இருப்பான், கெட்ட தாய் ஒரு நாளும் இருக்க மாட்டாள்.
- பிச்சை எடுத்தாரம் ராமர், பிடுங்கி திண்டாராம் அனுமார்
- அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்
- Caesar’s wife must be above suspicion