இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.
வாணிதாசன்
முடியரசன்
ஜெகசிற்பியன்
தமிழவேள் உமாமகேசுவரனார்
கா. அப்துல்கபூர்
தி.கோ.சீனிவாசன்
கா. சுப்பிரமணிய பிள்ளை
கெ.என். சிவராஜ பிள்ளை
உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை
ஆனந்தரங்கப்பிள்ளை
புலவர் குழந்தை
பா. வே. மாணிக்க நாயக்கர்
ஆர். சண்முகசுந்தரம்
சி. இலக்குவனார்
கா. அப்பாத்துரை
மா. இராசமாணிக்கனார்
அ.சிதம்பரநாதச் செட்டியார்
வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
டி.எஸ். சொக்கலிங்கம்
சதாசிவ பண்டாரத்தார்
சே.ப.நரசிம்மலு நாயுடு
வ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)
த.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
பி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)
கி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)
வெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)
தொல்காப்பியர்
ஒளவையார்
கம்பன் (தமிழ் மகாகவி)
மாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)
பெரியாழ்வார் (ஆழ்வார்களில் ஒருவர்)
புதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
ரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)
வேதநாயகம் பிள்ளை
கு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
ஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
மறைமலை அடிகள்
திரு.வி.க. (தமிழ் அறிஞர்)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)
அ. மாதவையா
ச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)
நாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)
நா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)
க.நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்.)
ம.ப. பெரியசாமித் தூரன்
அகிலன் (சிறந்த நாவலாசிரியர்)
வ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)
பாரதியார்
தமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)
அறிஞர் அண்ணா
கல்கி
மு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)
விந்தன்
நா.வானமாமலை
சோமலெ
உமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)
1. வாசிப்பு சுவாரசியமோ கதைக்குள் புகவோ முடியாத நாவல்.
2. வெறும் ஒப்பனை மட்டுமே நிறைந்துள்ள புனைவு. கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் தந்து குணச்சித்திரங்கள் மனதில் நிலைக்குமாறு வடிவமைக்கவில்லை.
3. ஒரே புத்தகமாக இருந்தாலும் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் எந்தத் தொடர்ச்சியும் கிடைக்கவில்லை. கூடு விட்டு கூடு பாய்கிறது.
4. டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, “An Ode to an Engineer” in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.
வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருக்கிறது.
5. லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont – A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலை கள்ளர்களை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் இருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.
6. புத்தம்புதுசும் இல்லை; முதல் படைப்பு என்னும் புதிய பார்வையும் இல்லை: குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக எழுதப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, எஸ் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் எழுதிய கதைக் களம்.
7. மாலிக் கபூர் போன்ற பள்ளிக்கூட புத்தக நாயகர்களுக்கு தேவையான கற்பனை விவரிப்பும் கொடுக்கவில்லை; பள்ளியின் பாடப் புத்தக சித்தரிப்பை எள்ளளவும் தாண்டியும் செல்லவில்லை. ஒன்று வரலாற்று பாடப் புத்தகத்தில் சொன்னதை அப்படியே வழிமொழிந்தால், அதில் வாசகரை ஒன்றச் செய்யும் விலாவாரியான ரசனை மிகுந்த பரபரப்பான காட்சிப்புலம் கண் முன்னே தோன்ற வைக்க வேண்டும்.
இல்லை… நம்மால் சுருக்கமாகத்தான் கற்பனை செய்ய இயலும் என்றால், அன்றைய வரலாற்று நாயகர்களின் துணை இயக்குநர்களையும், இணை கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து, சரித்திரத்தின் நிர்ப்பந்தங்களை வெளிச்சத்திற்கு வரவழைக்க வேண்டும்.
8. பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றார் போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
9.
அ) Edgar Thurston, ” The castes and Tribes of south India ,
ஆ) The Madura Country -A manual – J..H..Nelson .Asian Educational Services New Delhi, Madras.
இ) History Of The Nayaks Of Madura- R Sathianathaier,
உ) The History of Tinnevelly by Rev R Caldwell,
ஊ) History of Military transactions – R Orme
இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.
கொசுறு: கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கர தாஸ் நாட்குறிப்பிலும் மதுரையை பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை.
10. இவ்வளவு புத்தகங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறதே… எதோ ஆய்வாளர், கியூரேட்டர் போல் தகவல் தொகுப்பாளராக செயல்பட்டிருக்கிறாரா?
அதுவும் இல்லை. திருமலை நாயக்கர் மகாலை கட்டினவன் இத்தாலியன் என்று ஒற்றை வரியில் நாயக்கர் வரலாறு முடிகிறது. ஏன், எதற்கு, எப்படி எல்லாம் ஸ்வாஹா.
அயல்நாடுகளில் எழுத்தாளர்களுடன் உரையாட நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. சமீபத்தில் கட்டுரையாளரும் நாவலாசிரியருமான பி ஏ கிருஷ்ணன் லண்டனுக்கும் பே ஏரியாவிலும் வாசகர்களை சந்தித்தார். நாஞ்சில் நாடனும் அமெரிக்கா முழுக்க உலாவி வருகிறார். வெகு விரைவில் எஸ் ராமகிருஷ்ணனும் வட அமெரிக்காவை வலம் வரப் போகிறார்.
இந்த மாதிரி சந்திப்புகளுக்கும் இலக்கிய கூட்டங்களுக்கும் செல்லாமல் இருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு பார்க்கிறேன்.
1. எனக்கு அங்கே யாரையும் தெரியாது; அதனால் கூச்சமாகவோ அச்சமாகவோ இருக்கிறது.
2. கார் ஓட்டத் தெரியாது; அவ்வளவு தூரம் ஓட்ட முடியாது.
5. ஏற்கனவே சென்ற கூட்டங்கள் சிலாகிக்கவில்லை; வந்தவர் பேசாமல் வேறு ஒருவர் ஆக்கிரமிப்பார்; நெறியாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதால், இதுவும் ஒழுங்கற்று இருக்கலாம்.
6. சோம்பேறித்தனம் + போரடிக்கும்.
7. நான் அவரை முன்பே சில முறை சந்தித்து உரையாடிருக்கிறேன்.
கொசுறு: நான் அவரை வாசித்ததில்லை; என் கவிதைத் தொகுப்பை தரட்டுமா?
Extremely Loud and Incredibly Close | Jonathan Safran Foer
Moneyball by Michael Lewis
War Horse by Michael Morpurgo and Nick Stafford
Tinker Tailor Soldier Spy: A George Smiley Novel by John Le Carré
Stieg Larsson’s Millennium Trilogy Bundle: The Girl with the Dragon Tattoo, The Girl Who Played with Fire, The Girl Who Kicked the Hornet’s Nest by Stieg Larsson
The Iron Lady: Margaret Thatcher, from Grocer’s Daughter to Prime Minister by John Campbell
My Week with Marilyn by Colin Clark
The Adventures of Tintin: A Novel by Alexander Irvine
We Need to Talk About Kevin tie-in: A Novel by Lionel Shriver