ஜெயமோகனின் அறம் சிறுகதை புனைவு; இது எழுத்தாளர்கள் படும் நிஜ சிரமங்கள்; அசல் கஷ்டங்கள்; கொஞ்சம் கூட கற்பனை கலக்காமல் படைப்பாளியின் பிரச்சினைகளும் புத்தக ஆசிரியரின் அசௌகரியங்களும்:
- ‘உரிமை பதிப்பகத்தாருக்கே’ என்று போட்டுக் கொள்வது
- கதையோ, புனைவோ கொடுத்தால், அதைத் தங்களின் ஸ்டார் எழுத்தாளரிடம் கொடுத்து, ரெண்டு ‘மானே/தேனே’ சேர்த்து, திருடி, அவர் பெயரில் வெளியிடுவது
- எழுதியவரின் பெயருக்கு பதில் விற்கக்கூடியவரின் பெயரை மாற்றிப் போட்டு பெஸ்ட்செல்லர் ஆக்கிக் கொள்வது (போன புல்லட்டில் பணம் கிடைக்காது; இதில் தொகை உண்டு)
- எழுத்துப் பிரதி பத்திரமாக பீரோவில் இருந்தாலும் ‘தொலைந்து போனது’ என்று சால்ஜாப்பு சொல்லிவிடுவது
- வெளியாகிய புத்தகத்திற்குரிய சன்மானம் கேட்டால், ‘விற்ற பின் தருவதாக’ பணம் தராமல் டபாய்ப்பது
- ‘எட்டாம் பதிப்பு’ வெளியாகி இருக்கிறதே என்று கொஞ்ச தசாப்தம் கழித்து கேட்டால், ‘சில்லறைப் பற்றாக்குறை’ என்று காரணம் உண்டாக்கித் தள்ளிப் போடுவது
- வீட்டிலோ, தெருமுக்குகளின் பிசிஓ போன் இல்லாத காலத்தில் அலைய விடுவது
- கிடுக்கிப் பிடியாக சத்தியாகிரகம் செய்தால், ‘உங்ககிட்ட இந்தப் பெரிய ப்ராஜெக்ட் கொடுக்கலாம்னு இருந்தேன்’னு தூண்டில் போட்டு உக்கிரத்தை இளக்குவது
- மெய்ப்பு (ப்ரூஃப்) பார்க்க செய்வது; (நீங்க சரி பார்த்தால்தான் ஒழுங்கா இருக்கு’ என்பது சங்கேத மொழி)
- இப்படி வெறும் எழுத்தை அச்சில் பார்க்குயம் மகிழ்ச்சியில் மட்டும் இருப்பவர்களை, Vanity publishing மூலமும் படைப்பாளியின் முன்னுரை முடக்கம், ஆசிரியரின் சிறுகுறிப்பு இருட்டடிப்பு மூலமும் கன்ட்ரோலில் வைத்திருப்பது