The Cleveland Clinic, which emphasizes empathy training of doctors and all employees to improve patient outcomes and lower medical costs.
The U.S. Army, which has revolutionized its training to focus on human interaction, leading to stronger teams and greater success in real-world missions.
Stanford Business School, which has overhauled its curriculum to teach interpersonal skills through human-to-human experiences.
1. பட்டியல் போடுவதில் தமிழுக்கு ஓரளவு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. க.நா.சு. தொடங்கி வைத்தார். சமீப காலத்திற்கேற்ப அதை இரா. முருகன் மாற்றினார். இந்தப் பட்டியல்களில் உள்ள எழுத்தாளர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கதைகளை ஆங்காங்கே மாற்றிக் கொள்ளுங்கள். இது முதல் படி.
2. அடுத்த படியில் உங்கள் நண்பர்களை உள்ளேக் கொணர வேண்டும். அப்பொழுதுதான் “உங்களின் சிறந்த கதை”க்கு தனித்துவம் கிடைக்கும். உதாரணத்திற்கு அருண் எழுதிய வக்ர துண்டம் மகா காயம் போன்ற அதிகம் படிக்காத ஆனால் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை சேர்க்க வேண்டும்.
3. ஆம்னிபஸ், அழியாச் சுடர்கள் போன்ற புத்தகமும் புனைவும் சார்ந்த இடங்களை படிக்க வேண்டாம். அவர்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயர்களை மட்டும் உருவினால் போதுமானது. இப்பொழுது உங்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயார்.
4. பட்டியல் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு விளம்பரம் வேண்டும். அராத்து முறையில் எதிர்மறை சந்தையாக்கத்தில் விருப்பம் என்றால் லக்கிலுக்கை தொடர்பு கொள்ளலாம். இல்லையென்றால் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனைக் கேட்கலாம்.
5. நான் கணினியில் நிரலி எழுதுபவன். நான் எழுதும் நிரலியை மைக்ரோசாஃப்ட் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளின் மூலமாகவோ, ஸ்டாக் ஓவர்ஃப்ளோ போன்ற விடையளிக்கும் வலையகங்கள் மூலமாகவோ கண்ட்ரோல்+சி, கண்ட்ரோல்+வி வகையில் எழுதுவேன். அதே போல் நீங்களும் இப்பொழுது உங்கள் தேர்வுகளை எடுத்தாளவும்.
6. ஒழுங்காக பக்கம் பிரித்து, தலைப்பாகத்தில் உங்கள் பெயரும், வால் பாகத்தில் உங்களின் பதிவு முகவரியும், நடுநடுவே காப்புரிமைக் கையெழுத்தும் போடுங்கள். ஆங்காங்கே, உங்கள் ரசனைக்கேற்ப படங்களை கூகுள் படத்தேடல் மூலமாகவோ, ஃப்ளிக்கர் மூலமாகவோ திருடிப் போடுங்கள். இப்பொழுது, இதை பிடிஎஃப் ஆக்கி விடலாம்.
7. நான் கணினில் நிரலி எழுதினாலும், அதை சந்தையில் சரி பார்த்து விற்பவர் வேறொருவர். அது போல் பதிப்பகம் மூலமாக உங்கள் தொகுப்பைக் கொணரலாம். சொந்தமாக அச்சிடுவது ஒரு வழி. அது ஆபத்தானது. இணையத்தில் வேறு உலாவுபவர் என்பதால் கூகுள்+/ஃபேஸ்புக் போன்ற சமூகக் கூட்டங்களில் தலையைக் காட்ட முடியாது. இதுவோ, வாசகரே தயாரித்த புத்தகம். எனவே, மூன்றாம் மனிதர் மூலமே பதிப்பிக்கவும்.
8. இப்பொழுது சர்ச்சை உண்டாக்கும் தருணம். நூறு கதைகளில் இடம்பெறாதவை ஏன் என்று பதிவிடலாம். அசல் கதை எழுதியவர்களுக்கு கார்டு கூட போடமல் இராயல்டி வழங்காமல் “நெஞ்சில் நிற்கும் நெடுங்கதைகள்” வெளியாகின்றன என்னும் உண்மையை உலவ விடலாம். ரஜினி இதில் இருந்து குட்டிக்கதையை துக்ளக் மீட்டிங்கில் சொல்லப் போகிறார் எனலாம்.
9. ஆங்கிலத்தில் வருடாவருடம் இந்த மாதிரி தொகுப்புகள் வருகின்றன. வெளியான பத்திரிகையில் அனுமதி பெறுகிறார்கள். எழுதியவரிடம் காசு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக இளரத்தங்களை, அதிகம் அறிமுகமாகாத ஆனால் உருப்படியாக எழுதுபவர்களை அறிமுகம் செய்கிறார்கள். அப்படி எல்லாம் உருப்படியாக செய்து விட வேண்டாம். பரபரப்பு கிடைக்காது.
பரதேசி திரைப்படம் எடுத்த இயக்குநர் பாலா, இப்படி செய்திருக்க வேண்டும், அப்படி உருவாக்கியிருக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளும் ஆலோசனைகளும் இணையத்தில் வெளியாகிறது. நானும் உள்ளேன் அய்யா…
இடைவேளைக்குப் பிந்திய இரண்டாவது பகுதியில் குத்தாட்டம் இல்லாதது மிகப் பெரிய குறை. ’காளை’ படத்தில் குட்டிப் பிசாசே என்று குத்தாட்டம் போட்ட மாதிரி அதர்வா கதாபாத்திரத்தின் கற்பனையோடு வேதிகாவின் கிளப் டான்ஸ் வைத்திருக்க வேண்டும்.
தன்னுடைய நிறுவனத்திற்கு ‘B Studios’ என்று ஆங்கிலத்தில் வைத்ததற்கு பதிலாக ‘பா கலைக்கூடம்’ என தமிழ்ப்பறோடு பெயர் சூட்டியிருக்க வேண்டும்.
இரு பெண்களுக்கு நடுவில் சண்டை வருவது போல் காட்சி அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதுவும் தேய்வழக்காக மணப்பெண்ணின் அம்மாவிற்கும் மாப்பிள்ளையின் பாட்டிக்கும் பிணக்கு வருமாறு அமைத்திருப்பதற்கு பதில் ஆங்கிலேயரை அடித்துத் துவைப்பது போல் காட்சி வைத்து, பார்வையாளருக்கு திருப்தி கொடுத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் 1939ல் ரொட்டி இருந்திருக்க வாய்ப்பேயில்லை. பொறையும் பன்னும் மட்டுமே கிடைக்கும் நாயர் கடை அமைத்திருக்க வேண்டும்.
தெலுங்குப் படத்தில் இரண்டு ஹீரோயின் சர்வ சகஜம். அது போல் தன்ஷிகாவையும் அதர்வா உடன் சேர்த்து நினைக்க வைத்திருக்க வேண்டும்.
படத்தின் துவக்கத்தில் டைட்டில் வருகிறது. இப்பொழுதெல்லாம் சடாரென்று படத்தை ஆரம்பிப்பதுதானே வழக்கம்?! கட்டாங்கடைசியில் மட்டுமே தலைப்பும் இன்ன பிற எழுத்துகளும் வந்திருக்க வேண்டும்.
முன் பின்னாக காட்சியைக் கலைத்துப் போட்டு திரைக்கதை பின்னுவது இன்றைய சினிமா ஃபேஷன். அதன்படி, கொஞ்சம் தேயிலைத் தோட்டம், கொஞ்சம் மூங்கில் தோட்டம், கொஞ்சம் மாந்தோப்பு எல்லாம் அறுவடை செய்திருக்க வேண்டும்.
தேயிலையை விட காபி இன்னும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. காபியை விட புகையிலை இன்னும் நோய் தரக் கூடியது. புகையிலையை விட கஞ்சா இன்னும் அடிமையாக்கி அழிக்கும் ஆபத்து நிறைந்தது. எனவே, அவற்றின் அட்டை போல் உறிஞ்சும் தன்மைகளைத்தான் திரைக்கதை ஆக்கியிருக்க வேண்டும்.
ஓட்டுச் சுவடிகளில் எழுத்தே தெரியாமல் காட்சியாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். அந்தக் கால எழுத்தாணிகளைக் கொண்டு ஓலைச்சுவடி எழுத்துகளைத் தெளிவாக திரையில் காண்பித்திருக்க வேண்டும்.
இந்தியில் ஷாரூக் கான் நடித்த படமான ‘பர்தேஸ்’ படம் என்று தமிழரை ஏமாற்றும் விதமான தலைப்பை மாற்ற வேண்டும்.
1. பைபிள் கதைகள்
2. பஞ்சதந்திரக் கதைகள்
3. ஈசாப் கதைகள்
4. அக்பர் – பீர்பால் கதைகள்
5. விகடகவி தெனாலிராமன் கதைகள்
6. பட்டி – விக்கிரமாதித்தன் கதைகள்
7. பரமார்த்த குரு கதைகள்
8. முல்லாவின் நகைச்சுவைக் கதைகள்
9. 1001 (அராபிய) இரவுகள்
10. பௌத்த ஜாதகக் கதைகள்: சிறுவர்க்கான பிறமொழிக் கதைகள்
11. குறள்நெறிக் கதைகள்
12. பொன்மொழிக் கதைகள்
13. கிராமியக் கதைகள்
14. நாட்டுப்புற மகாபாரதக் கதைகள்
15. மரியாதைராமன் கதைகள்
16. இராயர் அப்பாஜி யுக்திக் கதைகள்
17. அயல்நாட்டு நகைச்சுவைக் கதைகள்
18. பழமொழி விளக்கக் கதைகள்
19. பாரத தேசத்தின் தியாகச் சுடர்கள்: இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள்
20. நல்லறிவு புகட்டும் உலகின் சிறந்த நாடோடிக் கதைகள்