Snapjudge

Archive for பிப்ரவரி, 2014|Monthly archive page

Top 21 Songs from Gangai Amaran as a Lyricist

In Movies, Tamilnadu on பிப்ரவரி 26, 2014 at 2:52 முப

பாடலாசிரியராக கங்கை அமரன் மிளிர்ந்தவை:

1. சென்னை 600028 – ஜல்சா பண்ணிக்கடா

2. நிழல்கள் – பூங்கதவே… தாழ் திறவாய்!

3. மூடுபனி – என் இனிய பொன் நிலாவே

4. ஜானி – காற்றில் எந்தன் கீதம்

5. ஆவாரம்பூ – ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே

6. பதினாறு வயதினிலே – செந்தூரப் பூவே

7. நெஞ்சத்தைக் கிள்ளாதே – உறவெனும் புதிய வானில்

8. ரோசாப்பூ ரவிக்கைக்காரி – மாமன் ஒரு நாள் மல்லிகப்பூ கொடுத்தானாம்

9. கல்லுக்குள் ஈரம் – சிறு பொன்மணி

10. தூறல் நின்னு போச்சு – என் சோகக் கதயேக் கேளு… தாய்க்குலமே!

11. மௌனம் சம்மதம் – கல்யாணத் தேனிலா

12. பகல் நிலவு – பூமாலையே… தோள் சேரவா

13. முள்ளும் மலரும் – நித்தம் நித்தம் நெல்லிச்சோறு

14. பாசப் பறவைகள் – தென்பாண்டித் தமிழே

15. பன்னீர் புஷ்பங்கள் – கோடைக்கால காற்றே

16. கிழக்கே போகும் ரயில் – பூவரசம்பூ பூத்தாச்சு! பொண்ணுக்கு சேதி

17. ராஜ பார்வை – விழியோரத்துக் கனவு

18. அம்மன் கோவில் கிழக்காலே – கடவீதி கலகலக்கும்

19. சின்னத்தம்பி – போவோமா ஊர்கோலம்

20. பயணங்கள் முடிவதில்லை – ஏ… ஆத்தா! ஆத்தோரமா வாறியா…

21. அகல் விளக்கு – ஏதோ நினைவுகள்

தொடர்புள்ள பதிவு: ராஜா ஆண்டாலும்: Gangai Amaran Rocks!

எழுத்தாளர்களை நேரில் சந்திக்க ஏழு காரணங்கள்

In Blogs, Life, Literature on பிப்ரவரி 26, 2014 at 1:32 முப

எழுத்தாளர்களை நான் ஏன் பார்க்கப் போகிறோம்?

மாநாட்டிற்கு சென்றால் பேச்சைக் கேட்கலாம். புத்தகத்தை வாங்கினால் எண்ணத்தைப் படிக்கலாம். படத்தைப் பார்த்தால் ஆவணமாகப் பார்க்கலாம். ஆனால், எழுத்தாளரை எதற்குப் பார்க்கப் போகிறோம்?

நான் பார்க்கப் போவதற்கான காரணங்கள் இவை

1. வம்பு: எழுத்தில் எழுதாத விஷயத்தை நேரில் சொல்வார் என்னும் நம்பிக்கை. இதைத் தகவலறிதல் என்றும் சொல்லலாம்.

2. கேள்வி: இது வம்பின் அடுத்தகட்டம். வம்பு என்பது பொதுவெளி. இது தனிமனித அத்துமீறல். “அந்தக் கதை நிஜமா! இதில் நீங்கள் சொல்பவர் எங்கே கிடைப்பார்?” என்று திட்டவட்டமாக நெருக்கி விளக்கம் அறியும் அவா.

3. சோம்பேறித்தனம்: புத்தகத்தைப் படிக்க நேரம் ஒதுக்காமல், அவர் வாயாலேயே, அவரின் கருத்துக்களை சொற்பொழிவாகக் கேட்டல்.

4. கம்பெனி: மதுவருந்த, புகை பிடிக்க நண்பர்களை அழைத்துச் செல்லுவது போல், அரட்டை அடிக்க சகா தேடுவது.

5. படேல் மதிப்பு: பாரீசுக்குப் போனால் ஈஃபில் கோபுரத்துடன் படம் எடுத்துக் கொள்வது போல், எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கினால், அவரின் கையெழுத்தைப் போட்டு வாங்கிக் கொள்வதில் விருப்பம். இதை நடிகர் சந்திப்பாகவும் கொள்ளலாம்.

6. சாதனை: அந்த எழுத்தாளரைப் போல் எழுதத்தான் முடிவதில்லை. அவரைப் பார்த்துப் பழகி விடுவதாலேயே அவருக்கு சரிநிகர் சமானமாகி விடுவது. விளையாட்டில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது கிடைக்கும் நிறைவுணர்ச்சியை வாழ்க்கையில் கொணரும் முயற்சி.

7. தொடர்பு: எழுத்தாளரின் அறிமுகம் கிடைப்பதால் வேறு எங்காவது வாய்ப்பு ஏற்படலாம். இதை இப்பொழுது “நெட்வொர்கிங்” என்கிறார்கள்.