Snapjudge

Archive for the ‘Guest’ Category

Writer, Filmmaker & the Argumentative Tamilan Gnani in New York/NJ

In Guest, Magazines, USA on ஜூலை 8, 2010 at 3:50 முப

Thanks: Elavasam

பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன்

In Blogs, Guest, USA on ஓகஸ்ட் 1, 2009 at 9:36 பிப

புகைப்படங்கள் எடுத்தவர்: வெட்டிப்பயல் | vettipaiyal (vettipaiyal) on Twitter

தொடர்புள்ள பதிவு: jeyamohan.in » வாக்களிக்கும் பூமி- 3, பாஸ்டன் நகரம்

முந்தைய பதிவு: 11 Jeyamohan photos from a Wednesday « 10 Hot

11 Jeyamohan photos from a Wednesday

In Guest, Life, Misc, USA on ஜூலை 20, 2009 at 4:02 பிப

ஒளிப்படங்கள் எடுத்தவர்: வேல்முருகன்

Takeaways from Sannasi blog on Charu, Jeyamohan & their Eezham opinions

In Blogs, Guest, Misc, Politics, Questions, Srilanka on ஜூன் 11, 2009 at 6:07 பிப

முழுவதும் வாசிக்க: வேதம் ஓதும் சாத்தான்கள்

1. புஷ்ஷின் கோவேறுகழுதைத்தனமான பிடிவாதத்தை, முட்டாள்தனத்தைத் தாண்டி இதுபோன்ற தருணங்களில் புஷ்ஷின் வினோதமான/பிரத்யேகமான ‘அற’வுணர்வு இத்தருணத்தில் சரியாக இயங்கியிருக்கக் கூடும் என்று பாமரத்தனமாக நினைக்க வைப்பதுதான் ஒருவிதத்தில் அந்த நபரின் வெற்றி போல.

2. மனித உரிமைகள் குறித்த அக்கறைதான் கிடையாது என்பது ஒருபுறம் இருக்க, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ராஜதந்திர வெற்றி என்றுகொண்டு, அண்டை நாடுகளை இலங்கையில் அழுத்தமாகக் கால் பதிக்க வழிகோலிக் கொடுத்துவிட்டு தெற்கு ஆசியாவின் மத்தியில் காயடிக்கப்பட்ட மாடு மாதிரி நிற்கிறது இந்தியா – அதன் வீச்சு அவ்வளவு தான்.

3. ஊடகப் பொறுக்கிகள் கருணாநிதி போன்றவர்களை உள்ளூர் அரசியல் பொறுக்கிகள் மாதிரிச் சித்தரிப்பதைப் பார்க்கும்/கேட்கும்போது கொதித்திருக்கிறது – கருணாநிதி என்ற தனி நபர் மீதுள்ள ஆதுரத்தால் அல்ல – விரும்பியோ விரும்பாமலோ எனது அடையாளங்களிலொன்றை முன்னிறுத்தும் கருவிகளிலொன்றாக இந்த கருணாநிதி என்ற நபர் இருப்பதான தருணத்தின் மீதுள்ள ஒட்டுறவால். குறிப்பாக வட இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு கருணாநிதியின் வாரிசு அரசியல் குறித்த கிண்டல்களும், மத்திய அமைச்சரவையில் பங்குக்கு அடிக்கும் குரங்கு பல்டிகள் குறித்த கிண்டல்களும் கருணாநிதி-தி.மு.க என்ற எல்லை தாண்டி, ஜெயின் கமிஷன் மொத்தத் தமிழர்களையும் காட்டுமிராண்டிகள் என்று சித்தரித்தது போன்ற ஒரு ஒட்டுமொத்தச் சாணியடிப்பு உத்தி. இது அனைத்துக்கும் உருண்டையை உருட்டிக் கொடுப்பது கருணாநிதி என்றிருக்கும்போது யாரை நோக.

4. சாரு நிவேதிதா மாதிரியான eurosnobகளை/oreo cookie/தேங்காய்களை (உள்ளே வெளுப்பு வெளியே கறுப்பு) அமெரிக்காவில் பல்வேறு தளங்களில் பார்க்கலாம் – இந்தியாவிலிருந்து வந்த இந்தியர்கள், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சுத்த அமெரிக்கர்கள். பாலாடைக்கட்டி சரியில்லை, மார்ஜரின் சரியில்லை, ஒயின் சரியில்லை, கலாச்சார சுரணையேதுமற்ற அமெரிக்கக் குய்யான்கள் ஒற்றைக்கையால் ஃபோர்க்கால் வெட்டித் தின்கிறார்கள் என்பது மாதிரி.

5. சாரு நிவேதிதாவின் கலாச்சார மீறல்கள் பெரும்பாலும் இந்த ரகமானவை. வாழைப்பழக் குடியரசு டி-ஷர்ட் போடுவதையும் டீசல் ஜீன்ஸ் போடுவதையும் டாமி ஹில்ஃபிகர் ஜட்டி போடுவதையும் ஆட்டைச் சுட்டுத் தின்பதையும் சாராய பாட்டில்கள் முன்பு திரும்பி போஸ் கொடுப்பதை தனது வலைத்தளத்தில் போடுவதையும் அயர்ன் மெய்டன் மாதிரி கி.மு.267களின் ராக் குழுக்களை வைத்து தனது ‘*த்’ (யூத்)தை அளந்துகொள்வதையும் ஒரு ‘அ-தயிர்வடைக் கலாச்சாரமாகக்’ காட்ட முயல்வது மாதிரி. லீ, லீவைஸ் போன்றவற்றின் விற்பனைக்கடைகள் சென்னையில் வந்தபோது சம்பளத்தில் நாலில் ஒரு பங்கைக் கொடுத்தாவது ஒரு லீவைஸ் லீ ஜீன்ஸ் வாங்கி விடவேண்டுமென்று திரிந்துகொண்டிருந்த கும்பல் இருந்தது – சாருவைப் படிக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.

6. ஜெயமோகனை விட சாரு மேல் ஏன் இவ்வளவு ஆத்திரம்? சாரு நிவேதிதாவுடையது முட்டாள்தனம் – முட்டாள்களுக்குத் திட்டினால் பெரும்பாலான நேரங்களில் உறைக்கும், திருத்திக் கொள்வார்கள்.

7. இயலாதவன் வலியை மற்றொரு இயலாதவனை முன்வைத்து இயன்றவன் தப்பித்துக்கொள்ளும் உத்தி எப்படிப்பட்டது?

8. ஆஷ்விட்ஸ், பெயௌஷெட்ஸ் (Belzec) நாஸி வதைமுகாம்களை/நினைவிடங்கள் சிலவற்றை நேரில் பார்த்திருக்கிறேன். இதுவரை இலங்கை போனதில்லை, ஊடகங்களில் படித்தவை சிலரிடம் உரையாடியது தவிர எதையும் நேரில் கண்டதில்லை – இதுதான் என்னைப் போன்றவர்களின் வாழ்வின் அவமானகரமான, குரூர நகைமுரண். அழிவுக்குப் பின்னான பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பார்ப்பது எப்படிப்பட்ட மனச்சிக்கலையளிக்கும் விஷயமென்பதை எளிதில் விளக்கிவிட முடியாது – கண்டதைப் பிறருக்கு விளக்கும் முனைப்பைவிட, கண்டது தன்னைநோக்கி தனக்குள் திரும்புகையில் நிகழும் சுயவதையைக் கையாள்வது சிக்கலான ஒன்று.

9. இன்னும் எனக்கு பதில் புரியாத கேள்வி:

நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒருபங்கு இதேபோன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப்போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என பேசுவதில்லை. அந்த போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டிவளர்கக் முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கே அறியப்படுகிறார்கள்.
Jayamohan » வெறுப்புடன் உரையாடுதல்

Cry: 10 Questions by Njaani (Anandha Vikadan)

In Guest, Life, Questions on பிப்ரவரி 21, 2009 at 5:07 முப

அறிந்தும் அறியாமலும் :: ஞாநி

சில கேள்விகளுக்குப் பதில்களை எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

1. நினைவு தெரிந்து, என் முதல் அழுகை எப்போது?

2. அப்போது எதற்காக அழுதேன்?

3. இப்போதும் அதே காரணங்களுக்கு அழுவேனா?

4. மாட்டேன் என்றால், வேறு என்ன செய்வேன்?

5. இப்போதும் அழுவேன் என்றால், ஏன் அப்படி?

6. கடைசியாக நான் அழுதது எப்போது? எதற்காக?

7. நான் அழ விரும்பி, அழாமல் அடக்கிக் கொண்டது எப்போது?

8. இனி அழ நேரும் சந்தர்ப்பங்களில், நான் என்ன செய்ய விரும்புகிறேன்?

9. அழுகிற ஒருவரைப் பார்த்தால், நான் என்ன செய்கிறேன்? என்ன செய்ய விரும்புவேன்?

10. யாருடைய அழுகை என்னை பயப்படுத்துகிறது?

நன்றி: ஆனந்தவிகடன்

பிடித்த பத்துப் புத்தகங்கள்: பிகே சிவகுமார்

In Books, Guest, Lists on ஜனவரி 27, 2009 at 9:58 பிப

எனக்குப் பிடித்த பத்துப் புத்தகங்கள் என்று யோசிக்க ஆரம்பித்ததில் உடனடியாகத் தோன்றியது இந்தப் பட்டியல்.

1. பைபிள் புதிய ஏற்பாடு
2. கம்பராமாயணம் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யர் உரையுடன்)
3. மஹாகவி பாரதியார் கவிதைகள்
4. மஹாத்மா காந்தியின் சத்திய சோதனை
5. ஜவஹர்லால் நேருவின் The discovery of India
6. திருவாசகம்
7. ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
8. ஜெயமோகனின் தமிழின் குறிப்பிடத்தக்கப் படைப்பாளிகளின் எழுத்துகளைப் பற்றிய
கட்டுரைகளின் தொகுப்பு(கள்)
9. Francis Wheen எழுதிய “Karl Marx – A Life.”
10. Richard Dawkins எழுதிய “The Selfish Gene”.

சுஜாதாவின் பத்து கட்டளைகள்

In Guest, Life, Misc on ஜனவரி 26, 2009 at 7:40 பிப

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.