Snapjudge

Posts Tagged ‘Madurai’

காவல் கோட்டம்: எஸ் ராமகிருஷ்ணன் விமர்சனப் பத்து

In Books, Literature on ஜூலை 5, 2012 at 9:18 பிப

நன்றி: காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் | பகுதி இரண்டு

1. வாசிப்பு சுவாரசியமோ கதைக்குள் புகவோ முடியாத நாவல்.

2. வெறும் ஒப்பனை மட்டுமே நிறைந்துள்ள புனைவு. கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் தந்து குணச்சித்திரங்கள் மனதில் நிலைக்குமாறு வடிவமைக்கவில்லை.

3. ஒரே புத்தகமாக இருந்தாலும் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் எந்தத் தொடர்ச்சியும் கிடைக்கவில்லை. கூடு விட்டு கூடு பாய்கிறது.

4. டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, “An Ode to an Engineer” in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.

வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருக்கிறது.

5. லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont – A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலை கள்ளர்களை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் இருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.

6. புத்தம்புதுசும் இல்லை; முதல் படைப்பு என்னும் புதிய பார்வையும் இல்லை: குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக எழுதப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, எஸ் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் எழுதிய கதைக் களம்.

7. மாலிக் கபூர் போன்ற பள்ளிக்கூட புத்தக நாயகர்களுக்கு தேவையான கற்பனை விவரிப்பும் கொடுக்கவில்லை; பள்ளியின் பாடப் புத்தக சித்தரிப்பை எள்ளளவும் தாண்டியும் செல்லவில்லை. ஒன்று வரலாற்று பாடப் புத்தகத்தில் சொன்னதை அப்படியே வழிமொழிந்தால், அதில் வாசகரை ஒன்றச் செய்யும் விலாவாரியான ரசனை மிகுந்த பரபரப்பான காட்சிப்புலம் கண் முன்னே தோன்ற வைக்க வேண்டும்.

இல்லை… நம்மால் சுருக்கமாகத்தான் கற்பனை செய்ய இயலும் என்றால், அன்றைய வரலாற்று நாயகர்களின் துணை இயக்குநர்களையும், இணை கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து, சரித்திரத்தின் நிர்ப்பந்தங்களை வெளிச்சத்திற்கு வரவழைக்க வேண்டும்.

கற்பனையும் கிட்டவில்லை; உள்ளொளியும் கொடுக்கவில்லை.

8. பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றார் போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

9.
அ) Edgar Thurston, ” The castes and Tribes of south India ,
ஆ) The Madura Country -A manual – J..H..Nelson .Asian Educational Services New Delhi, Madras.
இ) History Of The Nayaks Of Madura- R Sathianathaier,
உ) The History of Tinnevelly by Rev R Caldwell,
ஊ) History of Military transactions – R Orme

இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.

கொசுறு:
கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கர தாஸ் நாட்குறிப்பிலும் மதுரையை பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை.

10. இவ்வளவு புத்தகங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறதே… எதோ ஆய்வாளர், கியூரேட்டர் போல் தகவல் தொகுப்பாளராக செயல்பட்டிருக்கிறாரா?

அதுவும் இல்லை. திருமலை நாயக்கர் மகாலை கட்டினவன் இத்தாலியன் என்று ஒற்றை வரியில் நாயக்கர் வரலாறு முடிகிறது. ஏன், எதற்கு, எப்படி எல்லாம் ஸ்வாஹா.

10 Pandiyans from Tamil Nadu: Names & Famous Folks

In Lists, Tamilnadu on ஜனவரி 11, 2012 at 7:25 பிப

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…

1. அட்டாக் பாண்டி
2. DMK ex-Minister வீரபாண்டி ஆறுமுகம்
3. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன்
4. தமிழச்சி தங்கபாண்டியன்
5. பசுபதி பாண்டியன்
6. சவுந்திர பாண்டியன்
7. ’மண்வாசனை’ பாண்டியன்
8. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்
9. பொற்கை பாண்டியர்
10. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்

பலே பாண்டியா!

Top 10 Hindu Temples by Revenue in Tamil Nadu

In Religions, Tamilnadu on ஜனவரி 3, 2012 at 10:08 பிப

முந்தைய பதிவு: 10 Richest Temples in India: Ten Wealthiest Gods

டாப் 10 கோவில்கள்

ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் கடந்த ஆண்டு வருவாய், 506 கோடி ரூபாய். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவைகளில் நான்கு, முருகன் கோவில்கள். முதல் 10 இடங்களை பிடித்துள்ள கோவில்கள்:

எண் – கோவில் – ரூ/கோடி

1. தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி 72.12
2. மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் 33.51
3. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருச்செந்தூர் 19.80
4. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருத்தணி 16.09
5. அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை 13.54
6. அரங்கநாதர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் 12.21
7. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை 11.65
8. ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் 9.89
9. தாணுமாலய பெருமாள் கோவில், சுசீந்திரம் 5.87
10. தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு 5.62.

ஆதாரம்/நன்றி: தினமலர்

Election Posters: India Poll Advertising

In Lists on மே 5, 2009 at 6:35 பிப

Madurai Lok Sabha Constituency: Complaints given by the CPI(M)

In Politics, Tamilnadu on ஏப்ரல் 29, 2009 at 5:04 பிப

CPI(M) candidate P. Mohan is pitted against the DMK candidate and Chief Minister M Karunanidhi’s son M K Azaghiri in Madurai.

1. Complaint against distribution of consumer goods to voters by the DMK (dated 03.03.2009)

2. Complaint against conducting Medical camp in the name of birthday celebration of the DMK candidate (03.03.2009)

3. Complaint against the District Election Officer for not taking action against violation of model code of conduct (05.03.2009)

4. Complaint against bulk applications for inclusion in the voters list (20.03.2009)

5. Complaint against distribution of cash, sarees etc to the voters by the DMK and distribution of cash to self help groups (28.03.2009)

6. Complaint against distribution of money to the voters by the DMK (31.03.2009)

7. Complaint against using the marriage halls for preparing pockets of cash by the DMK (03.04.2009)

8. Complaint on utilising places of worship for electoral campaign by DMK candidate (08.04.2009)

9. Complaint by Nanmaran MLA (Communist Party of India (Marxist)) for changing the District Collector of Madurai for his partisan behaviour (15.04.2009)

10. Complaint of inaction by the police against the murderous attack on Mr.Vijaya Rajan party member (15.04.2009)

11. Complaint against disruption of CPI (M) election meeting by DMK men (16.04.2009)

12. Complaint against misuse of police machinery to arrest our cadres on false complaints by the ruling party (16.04.2009)

13. Complaint against inaction by the police against the murderous attack on Mr.Nanmaran MLA (17.04.2009)

14. Complaint against misuse of office by the Public Relations Officer for electoral campaigns of the DMK candidate (18.04.2009)

15. Complaint against distribution of ‘tokens’ to the voters by the DMK men in Madurai Lok Sabha constituency (22.04.2009).