Snapjudge

Top 10 Twits about Jeyamohan & A Muttulingam Meet by Ilavasam

In Lists on ஜூலை 20, 2009 at 5:14 பிப

நன்றி: இலவசக்கொத்தனார்

1. தமிழில் நோபல் பரிசு வாங்கக் கூடிய தகுதி உள்ள எழுத்தாளர் ஜெயமோகன் – முத்துலிங்கம்.
http://twitter.com/elavasam/status/2726689710

2. தமிழ் கதைகளை பெரிய அளவில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் – அ. முத்துலிங்கம்
http://twitter.com/elavasam/status/2726734228

3. சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விடக் கடினம். ஒவ்வொரு எழுத்தையும் செதுக்க வேண்டியதாக இருக்கும்.- அ. முத்துலிங்கம்
http://twitter.com/elavasam/status/2726919632

4. சுந்தர ராமசாமி satirist ஆக போய் இருக்க வேண்டிய தூரம் அதிகம். – ஜெயமோகன். ரொம்பவே சிலாகித்துப் பேசுகிறார்.
http://twitter.com/elavasam/status/2727145390

5. ஒரு காட்டை வருணிக்க 1 மரத்தைச் சொன்னால் போதும்.பெண்ணை வருணிக்கையில் அவள் கூந்தல் அசைவதில் அதனைச் சொல்ல வேண்டும்.முழு வர்ணனை தேவையில்லை –அ முத்துலிங்கம்
http://twitter.com/elavasam/status/2727388363

6. தமிழைக் காப்பாற்றப் போவது இந்திய அரசோ தமிழக அரசோ இல்லை கூகிள்தான் – துக்காராம்
http://twitter.com/elavasam/status/2727731826

7. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவு தந்ததுதான் தமிழ் பின்னடையக் காரணம் – ராஜாராம்
http://twitter.com/elavasam/status/2727877577

8. சிந்துவின் ஒரு புறம், ஹிமாலயத்தின் கீழ்புறம். காமரூபம், சேதுவின் மேல் இருப்பது பாரதம் என்று ரிக் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. கலாச்சாரப்படி இதுதான் பாரதம். ஆனால் பொருளாதாரப்படி பல தேசங்களாக இருந்தது. – ஜெமோ
http://twitter.com/elavasam/status/2728327180

9. அசோக வனம் என்ற தனது நாவலைப் பற்றி (எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்) முன்னோட்டம் தருகிறார் ஜெமோ. மூன்று பாகங்கள் – ஒவ்வொன்றும் மூன்று புத்தகங்கள் – ஒவ்வொரு புத்தகமும் கிட்டத்தட்ட 900 பக்கம். மொத்தமாக 8000 பக்கங்களுக்கும் மேல்!!!
http://twitter.com/elavasam/status/2728448554

10. ஜெமோ முன்பு பேசிய விவசாயம் பற்றிய கருத்துகள் மேல் விவாதம் நடக்கிறது. ரசாயன உரமின்றி விவசாயம் செய்திருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
http://twitter.com/elavasam/status/2728600648

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.