Snapjudge

Posts Tagged ‘Jemo’

Top 12 Tamil Books of Writer Jeyamohan

In Books, Literature, Tamilnadu on திசெம்பர் 15, 2018 at 11:54 பிப

நூறு புத்தகங்களாவது ஜெயமோகன் எழுதியிருப்பார். அதில் எனக்குப் பிடித்த தலை பத்து (சரி… பன்னிரெண்டு ஆகிவிட்டது; அதற்கே தாவு தீர்கிறது! ஈராறு கால்கொண்டெழும் புரவி எல்லாம் சேர்க்க முடியவில்லை)  நூல்கள் கீழே காணலாம். இதில் மஹாபாரதம் கிடையாது (இன்னும் வாசிக்கவில்லை); சிறுகதைத் தொகுப்புகளுக்கு ஒன்று உண்டு; நாவல்களும் உண்டு; கட்டுரைகள் எனக்கு உவப்பானவை – எனவே அவை நிறைய உண்டு:

  1.  இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
  2.  ஏழாம் உலகம்
  3.  இலக்கிய முன்னோடிகள்
  4.  புறப்பாடு
  5.  காடு
  6.  அபிப்பிராய சிந்தாமணி
  7. ஜெயமோகன் குறுநாவல்கள்
  8.  பின் தொடரும் நிழலின் குரல்
  9.  சங்கச்சித்திரங்கள்
  10.  விஷ்ணுபுரம்
  11.  சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்
  12.  ஜெயமோகன் சிறுகதைகள்

உதவி:

கன்னியாகுமரி – ஜெயமோகன்

In Books on ஓகஸ்ட் 28, 2009 at 3:48 முப

நாவலில் என்னைக் கவர்ந்த சில இடங்கள், வரிகள், நிகழ்வுகள், கருத்துகள்:

  1. அவனது முதிரா இளமைக் கனவுகளில் பளிங்கு நிறமுள்ள, உருண்டு பெருகி ஒன்றோடொன்று நெருங்கி நிறைந்த பெரும் மார்பகங்கள் நிரம்பியிருந்தன. அவை இருதசை குமிழ்களன்றி வேறல்ல என்ற உண்மையை அவன் கற்பனை ஏற்க மறுத்தது.
  2. kanniyakumariசானலை மாற்றி மாற்றிச் சென்று ஃபாஷன் டிவியை அடைந்தான். தொலைக்காட்சித் திரையின் வெண்திரவ ஆழத்திலிருந்து வண்ணக்குமிழிகள் போலப் பெண்ணுருவங்கள் எழுந்து வந்து வெடித்தபடியே இருந்தன.
  3. நாராயணன் பேசாத நேரங்களில் தூங்கிக் கொண்டிருப்பார். ஒருமுறை வேடிக்கை பேச்சினூடாக பார்கவிச்சேச்சி “நானும் பார்த்திருக்கேன். அந்த சமயத்திலும் பேசிகிட்டிருக்கிற ஒரே ஆள் இவர்தான்”
  4. கோபக்கார புருஷனுக்கு சமையல் பண்ற பொண்டாட்டியோட மனநிலை
  5. ரொம்ப அந்தரங்கமான விஷயத்த வெளியே சொல்றப்ப எப்பவுமே ஒரு செயற்கைத் தன்மை வந்துடும்.
  6. விசித்திரமான ஓர் ஒலி கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். பலநூறு பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது போன்ற ஒலி எதிர்ப்பக்க முட்கம்பி வேலியிலிருந்து கேட்டது. நெருங்கி உற்றுப் பார்த்தான். வேலியெங்கும் பாலிதீன் உறைக்கிழிசல்கள் காற்றில் வந்து சிக்கியிருந்து அதிர்ந்து படபடத்துக் கொண்டிருந்தன.
  7. அப்போதுதான் கொள்ளையடித்த கிராமத்துவீடு போலிருந்தாள் ஷைலஜா. எங்கே தொட்டாலும் பவுடரோ கிரீமோ கண்மையோ ஒட்டியது.
  8. அந்தச் செயல் போல அவனை இம்சை செய்வது வேறு ஏதுமில்லை.கல்லறை மீது பூக்களையும் சொற்களையும் வைப்பது போல.
  9. பெரிய அவமானம்னு ஒரு பிராயத்தில தோண்றது பிறகு ரொம்ப சாதாரணமா ஆகிடும். போய்ப் பேசுங்க. அவங்க சிரிப்பாங்க
  10. நடிப்புக்காகவென்றாலும் – கூட வருவதன் மூலம் உருவாகும் நிறைவு அது என்று புரிந்து கொண்டான். நம்பிக்கையூட்டக் கூடிய வலுவான ஆளுமை ஒன்றின் துணையைப் பெற்றுக் கொண்ட உணர்வா அது?
  11. அவள் மயிர்ச்சுருள்கள் ஆடின. பிணத்தின் மயிர்கள் காற்றிலாடுவது போல.
  12. சேற்றுப் பாதையில் இதமான வெப்பம் இருந்தது. தன் உடல் அச்சுவர்களில் உரசிய போதுதான் அவை வியர்த்த ஈரச் சருமப் பரப்புகள் என்று தெரிந்தது. நிர்வாணமான பெண்ணுடல்களினாலான சுவர். மென்முலைகள், வயிறுகள், தொடைகள்…
  13. சன்னலோரம் சென்று நின்று கடலைப் பார்த்தான். இருட்டில் மிதக்கும் படகு விளக்குகளே கடலாக மனதில் விரிந்து கொண்ட விந்தையை எண்ணிக் கொண்டான்.
  14. அவள் நடந்துபோய் சரக்கொன்றை மரத்தின் அடியில் அமர்ந்தாள். செம்மஞ்சள் மலர்கள் பூத்து நிரம்பிய, முதலைத் தோல் கொண்ட மரம்.
  15. ஒரு குறிப்பிட்டத் தோற்றத்தில் காட்சியளிக்க ஆரம்பித்தால் அதை நம்பும் பிறர் அத்தோற்றத்தை தன்மீது பதியவைத்து பிறகு அதிலிருந்து நினைத்தாலும் தப்ப முடியாத நிலையை உருவாக்கி விடுவார்கள் என்று அறிந்தான்.
  16. பெண் விரோதிகளில் ஒரு கணிசமான பங்கினர் மிகத் தீவிரமான பெண்பித்தர்கள்.
  17. எல்லா ஒழுக்கவிதிகளும் மத்தவங்களை சுரண்டக்கூடாதுங்கிற நீதியோட அடிப்படையில் உருவான விஷயங்கள்தான்னு எனக்குப் படுது. மத்தவங்களைப் பொருள் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ ஏமாற்றாம இருந்தா எல்லாமே ஒழுக்கம்தான்
  18. மானுடக் கற்பனையின் அதிகபட்ச எல்லை மனக்கனவுகளில் உலவுகையில்தான் தெரிகிறது. அல்லது அது அகங்காரத்தின் எல்லையா? மனிதனுக்குத்தான் எத்தனை குறைவாகத் தேவைப்படுகிறது வாழ்க்கை! அகங்கார சமனத்தின் சில கணங்கள். அதை முடிவற்ற கண்ணாடிப் பரப்புகளில் பிரதிபலித்துப் பிரதிபலித்து பிரம்மாண்டமான வெளியாக மாற்றிக் கொள்கிறான்.
  19. பெண் என்றால் உடம்பு மட்டுமல்ல; தன்னிலையும் அகங்காரமும் கூட. அதை உடலால் தொட முடியாது. அதை அகங்காரத்தால் மட்டும்தான் தொட முடியும்.

9 more Meet the Author Jeyamohan Events: Listings

In Lists on ஓகஸ்ட் 3, 2009 at 6:39 பிப

Writer-Jeyamogan-Tamilஅமெரிக்காவில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு

  1. Los AngelesAug 6th: Los Angeles Ram :: ramnrom@yahoo.com
  2. St.Paul, Minneapolis – Aug 21st: Venugopal :: venu.biology@gmail.com
  3. Chicago, Illinois – Aug 22nd:Chandrasekar :: mcsekar@gmail.com
  4. Bloomington, Illinois – Aug 23rd: Kalaimani :: kalaimani1@yahoo.com
  5. Detroit, Michigan – Aug 24th: Arul Prasad :: arul_prasad@hotmail.com
  6. Houston, Texas – Sep 3rd: Shanmugam :: sammuvam@yahoo.com
  7. Sacramento, CA – Aug 16th: Sundar :: sundar23@yahoo.com
  8. Fremont, CA – Aug 30th: Rajan :: strajan123@gmail.com (510.825.2971) – Readers Meet at Indian Harvest, 4181 Cushing Pkwy, Fremont, CA 3 PM – 7 PM
  9. Bay Area ,CA – Sep 5th: Rajan :: strajan123@gmail.com (510.825.2971) – Speech by Jeyamohan at Milpitas Library Hall, Milpitas 2 – 5 PM

Please contact the organizers to know the exact date, time and venue of the meetings

ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்

In Lists on ஓகஸ்ட் 1, 2009 at 9:46 பிப

புகைப்படங்கள் எடுத்தவர்: வெட்டிப்பயல் | vettipaiyal (vettipaiyal) on Twitter

தொடர்புள்ள பதிவு:பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன்

Top 10 Twits about Jeyamohan & A Muttulingam Meet by Ilavasam

In Lists on ஜூலை 20, 2009 at 5:14 பிப

நன்றி: இலவசக்கொத்தனார்

1. தமிழில் நோபல் பரிசு வாங்கக் கூடிய தகுதி உள்ள எழுத்தாளர் ஜெயமோகன் – முத்துலிங்கம்.
http://twitter.com/elavasam/status/2726689710

2. தமிழ் கதைகளை பெரிய அளவில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் – அ. முத்துலிங்கம்
http://twitter.com/elavasam/status/2726734228

3. சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விடக் கடினம். ஒவ்வொரு எழுத்தையும் செதுக்க வேண்டியதாக இருக்கும்.- அ. முத்துலிங்கம்
http://twitter.com/elavasam/status/2726919632

4. சுந்தர ராமசாமி satirist ஆக போய் இருக்க வேண்டிய தூரம் அதிகம். – ஜெயமோகன். ரொம்பவே சிலாகித்துப் பேசுகிறார்.
http://twitter.com/elavasam/status/2727145390

5. ஒரு காட்டை வருணிக்க 1 மரத்தைச் சொன்னால் போதும்.பெண்ணை வருணிக்கையில் அவள் கூந்தல் அசைவதில் அதனைச் சொல்ல வேண்டும்.முழு வர்ணனை தேவையில்லை –அ முத்துலிங்கம்
http://twitter.com/elavasam/status/2727388363

6. தமிழைக் காப்பாற்றப் போவது இந்திய அரசோ தமிழக அரசோ இல்லை கூகிள்தான் – துக்காராம்
http://twitter.com/elavasam/status/2727731826

7. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவு தந்ததுதான் தமிழ் பின்னடையக் காரணம் – ராஜாராம்
http://twitter.com/elavasam/status/2727877577

8. சிந்துவின் ஒரு புறம், ஹிமாலயத்தின் கீழ்புறம். காமரூபம், சேதுவின் மேல் இருப்பது பாரதம் என்று ரிக் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. கலாச்சாரப்படி இதுதான் பாரதம். ஆனால் பொருளாதாரப்படி பல தேசங்களாக இருந்தது. – ஜெமோ
http://twitter.com/elavasam/status/2728327180

9. அசோக வனம் என்ற தனது நாவலைப் பற்றி (எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்) முன்னோட்டம் தருகிறார் ஜெமோ. மூன்று பாகங்கள் – ஒவ்வொன்றும் மூன்று புத்தகங்கள் – ஒவ்வொரு புத்தகமும் கிட்டத்தட்ட 900 பக்கம். மொத்தமாக 8000 பக்கங்களுக்கும் மேல்!!!
http://twitter.com/elavasam/status/2728448554

10. ஜெமோ முன்பு பேசிய விவசாயம் பற்றிய கருத்துகள் மேல் விவாதம் நடக்கிறது. ரசாயன உரமின்றி விவசாயம் செய்திருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
http://twitter.com/elavasam/status/2728600648

Jeyamohan on Evaluating Philosophy: Top 10 Criteria

In Life, Misc on ஜூலை 10, 2009 at 8:28 பிப

Source: தத்துவத்தைக் கண்காணித்தல் :: ஜெயமோகன்

என் நோக்கில் தத்துவக் கருத்துக்களின் பெறுமதியை அறியும் மதிப்பீடுகள் சில உள்ளன. அவற்றை பத்து விதிகளாகவே சொல்கிறேன்.

1. தர்க்கபூர்வமாக சரியாக இருப்பதனாலேயே ஒரு கருத்து உண்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை. அது தருக்கபூர்வமான உண்மை மட்டுமே.

2 ஒரு சரியான கருத்து அதற்கு நேர் எதிரான கருத்தை தவறாக ஆக்க வேண்டும் என்பதில்லை. இரண்டுமே சரிகளாக இருக்கலாம். அவை வெவ்வேறு தளங்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்

3. இலக்கியம் ஒருபோதும் தத்துவத்தை முன்வைப்பதில்லை. தத்துவத்தின் சாயலையே அது முன்வைக்கிறது. தத்துவ சிந்தனையை உருவாக்கும் மனநிலைகளை வாசகனில் அது எழுப்புகிறது

4 ஓர் இலட்சியவாதக் கருத்து நடைமுறைத்தளத்தில் ஓரளவேனும் செல்லுபடியாகவேண்டும். முற்றிலும் இலட்சியவாதத்தனமாக உள்ள கருத்து என்பது பெரும்பாலும் பயனற்றதே

5 ஒரு திட்டவட்டமான கருத்தை அருவமாக்கியும் ஓர் அருவமான கருத்தை திட்டவட்டமாக ஆக்கியும் அதன் உண்மைமதிப்பை ஊணர முடியும்

6 ஓர் நடைமுறைக்கருத்து ஒருபோதும் திட்டவட்டமாக – முடிவானதாக இருக்கலாகாது. அது சற்றேனும் ஐயத்துக்கும் மாறுதலுக்கும் இடமளிக்கும்போது மட்டுமே அது நேர்மையானதாக இருக்க முடியும்

7 ஒரு மீபொருண்மைக் [மெட·பிஸிகல் ] கருத்து கவித்துவம் மூலம் நிலைநாட்டப்படாமல் அதிகாரம் அல்லது நம்பிக்கை மூலம் நிலைநாட்டப்படுமென்றால் அதை முற்றாக நிராகரிப்பதே முறை.

8 தத்துவத்துடன் எப்போதுமே நேரடியான அதிகாரம் தொடர்புகொண்டுள்ளது. பெரும்பாலும் தத்துவ விவாதங்கள் அதிகாரங்கள் நடுவே உள்ள விவாதங்களே. ஆகவே நட்பான தளம் இல்லாவிட்டால் ஒருபோதும் தத்துவ விவாதம்செய்யலாகாது. அது உடனடியாக தத்துவத்தின் தளத்தை விட்டு வெளியே சென்றுவிடும்

9 அன்றாடவாழ்க்கைக்கு எவ்வகையிலேனும் பயனளிக்குமா என்ற கேள்வி தத்துவத்தின் பெறுமதியை புரிந்துகொள்ள மிகமிக உதவியானது

Gopal Rajaram: Best of Tamil Literature: Top Books

In Lists on ஜூலை 9, 2009 at 4:37 முப

Source: தமிழ் நாவல் பட்டியல் :: கோபால் ராஜாராம்

வரிசை முக்கியத்துவத்தைக் கொண்டு வரிசைப் படுத்தப் படவில்லை.

1. ஜெயகாந்தன் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

2. தி ஜானகிராமன் : அம்மா வந்தாள்.

3. லா ச ராமாமிர்தம் : புத்ர

4. பொன்னீலன் : ‘ புதிய தரிசனங்கள் ‘

5. ஆ மாதவன் : ‘கிருஷ்ணப் பருந்து ‘

6. தமிழவன் : ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் ‘

7. கிருத்திகா : ‘வாசவேஸ்வரம் ‘

8. பிரபஞ்சன் : ‘மானுடம் வெல்லும் ‘

9. வண்ண நிலவன் : ‘கடல் புரத்தில் ‘

10. அசோக மித்திரன் : ‘கரைந்த நிழல்கள் ‘

11. இந்திரா பார்த்தசாரதி : ‘கால வெள்ளம் ‘

12. நீல பத்ம நாபன் தலைமுறைகள் ‘

13. சுஜாதா : ‘என் இனிய இயந்திரா ‘

தொடர்வினை: சி மோகனின் பட்டியல்கள் – கோபால் ராஜாராம்

Jeyamohan picks Top Tamil Novels: Best of Fiction Writing

In Books, Literature, Tamilnadu on ஜூலை 8, 2009 at 5:24 பிப

Source: தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு

Related: 258 Top Shorts: Fiction picks by Jeyamohan & S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff

தர அடிப்படையில்

1) விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

2) பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்.

3) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்.

4) ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி

5) மோகமுள் – தி.ஜானகிராமன்.

6) பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்.

7) ஜெ.ஜெ. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி.

8. தலைமுறைகள் – நீல பத்மநாபன்.

9) கிருஷ்ணப் பருந்து – ஆ.மாதவன்.

10) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்.

விமரிசகனின் சிபாரிசு.

சிறந்த தமிழ் நாவல்கள்

1.) பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

2.) கமலாம்பாள் சரித்திரம் — ராஜம் அய்யர்.

3.) பத்மாவதி சரித்திரம் —– மாதவையா.

4.) பொய்த்தேவு —— க. நா. சுப்பிரமணியம்.

5.) ஒரு நாள் ——- க.நா. சுப்பிரமணியம்.

6.) வாடிவாசல் ——- சி.சு. செல்லப்பா.

7.) மோகமுள் ——- தி.ஜானகிராமன்.

8.) அம்மா வந்தாள். —- தி. ஜானகிராமன்.

9.) ஒரு புளிய மரத்தின் கதை ——- சுந்தரராமசாமி.

10.) ஜெ.ஜெ. சில குறிப்புகள். —— சுந்தரராமசாமி.

11.) கோபல்ல கிராமம் ——- கி.ராஜநாராயணன்.

12.) நாகம்மாள் —– ஆர். ஷண்முகசுந்தரம்

13. பிறகு —— பூமணி

14.) நாளை மற்றுமொரு நாளே —— ஜி.நாகராஜன்.

15.) புத்தம் வீடு —— ஹெப்சிபா ஜேசுதாசன்.

16.) தலைமுறைகள் —– நீல. பத்மநாபன்.

17.) பள்ளி கொண்டபுரம். —– நீல. பத்மநாபன்.

18.) கிருஷ்ணப் பருந்து. —— ஆ. மாதவன்.

19. பதினெட்டாவது அட்சக் கோடு —– அசோகமித்திரன்.

20.) தண்ணீர் —- அசோகமித்திரனின்

21.) தலைகீழ் விகிதங்கள் —— நாஞ்சில்நாடன்.

22.) ஒரு கடலோர கிராமத்தின் கதை —- தோப்பில் முகமது மீரான்.

23.) மானுடம் வெல்லும் —– பிரபஞ்சன்.

24.) காகித மலர்கள் —— ஆதவன்

25.) ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன —- இந்திரா பார்த்தசாரதி.

26.) அபிதா —- லா.ச.ரா.

27.) ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் —- ஜெயகாந்தன்.

28.) சில நேரங்களில் சில மனிதர்கள் —- ஜெயகாந்தன்.

29.) தாகம் —– கு. சின்னப்ப பாரதி.

30.) சாயாவனம் —- சா. கந்தசாமி.

31.) சூரிய வம்சம் —- சா. கந்தசாமி.

32.) வாசவேஸ்வரம் —- கிருத்திகா.

33.) புயலிலே ஒரு தோணி —- ப.சிங்காரம்.

34.) கடலுக்கு அப்பால் —- ப.சிங்காரம்.

35.) நினைவுப்பாதை — நகுலன்.

36. ) பாதையில் படிந்த அடிகள் —- ராஜம் கிருஷ்ணன்.

37.) சிதறல்கள் —- பாவண்ணன்.

38.) மற்றும் சிலர் —- சுப்ரபாரதி மணியன்.

39.) தூர்வை —– சோ. தருமன்.

40.) கோவேறு கழுதைகள் —– இமையம்.

41.) கள்ளம் —– தஞ்சை பிரகாஷ்.

42.) ரப்பர் —– ஜெயமோகன்

43.) விஷ்ணுபுரம் —–ஜெயமோகன்

44.) பின்தொடரும் நிழலின் குரல் —– ஜெயமோகன்.

45.) உபபாண்டவம் ——எஸ். ராமகிருஷ்ணன்.

258 Top Shorts: Fiction picks by Jeyamohan

In Books, Literature, Srilanka, Tamilnadu on ஜூலை 7, 2009 at 9:17 பிப

Source: http://jeyamohan.in/?p=214

1. அ. மாதவையா

கண்ணன் பெருந்தூது [தமிழின் முதல் சிறுகதை]

2. சுப்ரமணிய பாரதி

ரயில்வே ஸ்தானம்

3. புதுமைப்பித்தன் [புதுமைப்பித்தன் கதைகள். காலச்சுவடு]

1. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்,
2. கயிற்றரவு
3. செல்லம்மாள்
4. சிற்பியின்நரகம்
5. கபாடபுரம்
6. ஒருநாள்கழிந்தது
7. அன்றிரவு
8. சாமியாரும் குழந்தையும் சீடையும்
9. காலனும் கிழவியும்
10. சாபவிமோசனம்
11. வேதாளம் சொன்ன கதை
12 பால்வண்ணம் பிள்ளை

4. மௌனி [மௌனியின் கதைகள் ]

1.அழியாச்சுடர்
2.பிரபஞ்ச கானம்
3.மாறுதல்

5. கு.ப.ராஜகோபாலன் [கு.ப.ராஜகோபாலன் கதைகள் ]

1.சிறிதுவெளிச்சம்
2.விடியுமா
3.ஆற்றாமை
4.பண்னைச்செங்கான்

6. ந.பிச்சமூர்த்தி [ந பிச்சமூர்த்தி படைப்புகள். மருதா பதிப்பகம்]

1. காவல்
2. அடகு
3. விதைநெல்
4. ஒருநாள்
5. தாய்
6. ஞானப்பால்

7. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் [பொன்மணல். தமிழினி]

1. மீன்சாமியார்
2. பொன்மணல்

8. சி.சு.செல்லப்பா

1. சரசாவின் பொம்மை
2. வெள்ளை

9. க.நா.சுப்ரமணியம் [கநாசு படைப்புகள். காவ்யா]

தெய்வ ஜனனம்

10. லா.ச.ராமாமிருதம் [ லா.ச.ரா கதைகள். வானதி ]

1. பாற்கடல்
2. பச்சைக்கனவு
3. ஜனனி
4. புற்று
5. ராஜகுமாரி
6. அபூர்வராகம்

11. தெளிவத்தை ஜோசப்*

மீன்கள்

12. வ.அ.ராசரத்தினம்*

தோணி

13. எஸ்.பொன்னுத்துரை [ஆண்மை எஸ்பொ மித்ர வெளியீடு ]*

1. அணி
2. ஆண்மை 13

14. கு.அழகிரிசாமி [கு.அழகிரிசாமி கதைகள். சாகித்ய அகாதமி வெளியீடு ]

1. அன்பளிப்பு
2. ராஜாவந்திருக்கிறார்
3. அழகம்மாள்
4. இருவர்கண்டஒரே கனவு
5. பெரிய மனுஷி
6. பாலம்மாள் கதை
7. சிரிக்கவில்லை
8. தரிசனம்

15. தி ஜானகிராமன் [தி.ஜானகிராமன் படைப்புகள். ஐந்திணை]

1. தீர்மானம்
2. சிலிர்ப்பு
3. பாயசம்
4. பரதேசிவந்தான்
5. கடன் தீர்ந்தது
6. கோதாவரிக்குண்டு
7. தாத்தாவும் பேரனும்
8. மாப்பிள்ளைத்தோழன்

16. கி.ராஜநாராயணன் [கி.ராஜநாராயணன் கதைகள். அகரம்]

1. கன்னிமை
2. பேதை
3. கோமதி
4. கறிவேப்பிலைகள்
5. நாற்காலி
6. புவனம்
7. அரும்பு
8. நிலைநிறுத்தல்

17. மு.தளையசிங்கம் *

1.தொழுகை
2. ரத்தம்
3. கோட்டை

18 .சுந்தர ராமசாமி [காகங்கள். சுராகதைகள். காலச்சுவடு]

1. ஜன்னல்
2. வாழ்வும்வசந்தமும்
3. பிரசாதம்
4. பல்லக்குதூக்கிகள்
5. ரத்னாபாயின் ஆங்கிலம்
6. கோயில்காளையும் உழவுமாடும்
7. காகங்கள்
8. கொந்தளிப்பு

19. அசோகமித்திரன் [அசோகமித்திரன் கதைகள். கவிதா ]

1. விமோசனம்
2. காத்திருத்தல்
3. காட்சி
4. பறவை வேட்டை
5. குழந்தைகள்
6. காலமும் ஐந்து குழந்தைகளும்
7. புலிக்கலைஞன்
8. காந்தி
9. பிரயாணம்
10. பார்வை
11. மாறுதல்
12. குகை ஓவியங்கள்

20. பிரமிள் * [பிரமிள் படைப்புகள். அடையாளம் வெளியீடு ]

1. காடன் கண்டது
2. நீலம்

21. சார்வாகன் [எதுக்குச் சொல்றேன்னா… க்ரியா]

யானையின் சாவு

22. வல்லிகண்ணன்

சிவப்புக்கல் மூக்குத்தி

23. எம்.வி.வெங்கட் ராம்

பைத்தியக்காரப் பிள்ளை

24. ந.முத்துசாமி

1. நீர்மை
2. செம்பொனார்கோயிலுக்கு போவது எப்படி
3. படுகளம்
4. பிற்பகல்

25. அ.முத்துலிங்கம்* [அ.முத்துலிங்கம் கதைகள். தமிழினி]

1. கறுப்பு அணில்
2. ரி
3. கொழுத்தாடு பிடிப்பேன்
4. ஒட்டகம்
5. ராகு காலம்
6. பூமாதேவி

26. சா.கந்தசாமி [சா.கந்தசாமி கதைகள். கவிதா]

1. தக்கையின்மீது நான்கு கண்கள்
2. ஹிரண்யவதம்
3. சாந்தகுமாரி

27. ஆதவன்

1. ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்
2. முதலில் இரவு வரும்
3. சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்…
4. லேடி

28. ஜி.நாகராஜன் [ஜி.நாகராஜன் படைப்புகள். காலச்சுவடு]

1. டெரிலின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
2. யாரோ முட்டாள் சொன்ன கதை

29.கிருஷ்ணன் நம்பி [ கிருஷ்ணன்நம்பி கதைகள். ]

1. மருமகள் வாக்கு
2. தங்க ஒரு…
3. சத்திரத்து வாசலில்

30. ஆர்.சூடாமணி

டாக்ரம்மா அறை

31. இந்திரா பார்த்தசாரதி

1. குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்
2. இளஞ்செழியன் கொடுத்த பேட்டி
3. ஒரு கப் காபி

32 . ஆ.மாதவன் [ஆ.மாதவன் கதைகள் தமிழினி]

1. நாயனம்
2. பூனை
3. பதினாலுமுறி
4. புறாமுட்டை
5. தண்ணீர்
6. அன்னக்கிளி

33. சுஜாதா [தேர்ந்தெடுத்த சிறுகதைகல். சுஜாதா.. உயிர்மை]

1. நகரம்
2. குதிரை
3. மாஞ்சு
4. ஓர் உத்தம தினம்
5. நிபந்தனை
6. விலை
7. எல்டொரோடா

34. ஜெயகாந்தன் [ஜெயகாந்தன் சிறுகதைகள். கவிதா]

1. யாருக்காக அழுதான்?
2. குருபீடம்
3. எங்கோ யாரோ யாருக்காகவோ
4. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
5. நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
6. முன்நிலவும் பின்பனியும்
7. அக்கினிப்பிரவேசம்
8. இறந்தகாலங்கள்

35. சு.சமுத்திரம்

1. திரிசங்குநரகம்
2. மானுடத்தின்நாணயங்கள்
3. பனையேறி குடும்பத்தில் பிறந்தவள்

36. தோப்பில் முகம்மது மீரான்

1. வட்டக்கண்ணாடி
2. சுருட்டுப்பா
3. அனந்தசயனம் காலனி

37. மா. அரங்கநாதன்

1. சித்தி
2. மெய்கண்டார் நிலையம்

38. வண்ணதாசன் [ வண்ணதாசன் கதைகள். ]

1. தனுமை
2. நிலை
3. சமவெளி
4. தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள்
5. போய்க்கொண்டிருப்பவள்
6. வடிகால்

39. வண்ணநிலவன் [வண்னநிலவன் கதைகள்]

1. எஸ்தர்
2. பலாப்பழம்
3. துன்பக்கேணி
4. மிருகம்

40. நாஞ்சில்நாடன் [நாஞ்சில்நாடன்கதைகள். தமிழி¢னி]

1. பாம்பு
2. வனம்
3. மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்
4. பாலம்
5. சாலப்பரிந்து

41. அ.யேசுராஜா * [தொலைவும் இருப்பும். அலை வெளியீடு]

ஓர் இதயம் வெறுமைகொள்கிறது

42 பூமணி [பூமணிகதைகள். ராஜராஜன் பதிப்பகம்]

1. நொறுங்கல்
2. தகனம்
3. கரு

43 பிரபஞ்சன் [பிரபஞ்சன் கதைகள். கவிதா]

1. மனசு
2. கருணையினால்தான்
3. அப்பாவின் வேட்டி

44. ராஜேந்திர சோழன் [ராஜேந்திரசோழன் கதைகள் தமிழினி ]

1 பாசிகள்
2 புற்றில் உறையும் பாம்புகள்
3 வெளிப்பாடுகள்

45 திலீப்குமார் [வயல். திலீப்குமார் கதைகள். க்ரியா ]

1 தீர்வு
2 மூங்கில் குருத்து
3 கடிதம்
4 அக்ரஹாரத்தில்பூனை

46 சுரேஷ் குமார இந்திரஜித் [சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள். காலச்சுவடு]

1 விரித்த கூந்தல்
2 பிம்பங்கள்

47 விமலாதித்த மாமல்லன்

சிறுமி கொண்டுவந்த மலர்

48. அம்பை [வீட்டின் மூலையில் ஓர் அமையலறை. க்ரியா]

1 அம்மா ஒருகொலைசெய்தாள்
2 வீட்டின்மூலையில் ஒரு சமையலறை
3 கறுப்புக் குதிரைச்சதுக்கம்

49 கந்தர்வன் [கந்தர்வன் கதைகள். வம்சி புக்ஸ்]

1 சாசனம்
2 காளிப்புள்ளே
3 கதைதேசம்
4 பத்தினி
5 உயிர்
6 மங்களநாதர்

50. கோபிகிருஷ்ணன்

1 மொழி அதிர்ச்சி
2 காணிநிலம் வேண்டும்

51. ச.தமிழ்ச்செல்வன் [ச தமிழ்ச்செல்வன் கதைகள். கலைஞன்]

1 வெயிலொடு போய்
2 வாளின் தனிமை

52 ரஞ்சகுமார் * [மோகவாசல்- யதார்த்தா, யாழ்ப்பாணம்]

1 கவரக்கொயாக்கள்
2 கோளறுபதிகம்
3 கோசலை

53 சட்டநாதன்* [ சட்டநாதன் கதைகள்- சவுத் ஏசியன் புக்ஸ் ]

1 மாற்றம்
2 நகர்வு

54 திசேரா*

நோகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும்

55 உமாவரதராஜன்*

அரசனின் வருகை

56. விக்ரமாதித்யன் [ திரிபு . வஉசி நூலகம்]

திரிபு

57 எக்பர்ட் சச்சிதானந்தம்

1 நுகம்
2 பிலிப்பு

58. பாவண்ணன்

1 பேசுதல்
2 முள்

59 சுப்ரபாரதிமணியன்

1 ஒவ்வொருராஜகுமாரிக்குள்ளும்
2 உறைவிடங்கள்

60. கோணங்கி [மதினிமார்கள் கதை- அகரம், கொல்லனின் ஆறு பெண்மக்கள்- வம்சி புக்ஸ்]

1 மதினிமார்கள் கதை
2 கோப்பம்மாள்
3 கம்மங்கருது
4 கருப்பன்போனபாதை
5 கறுத்தபசு
6 தாத்தாவின் பேனா
7 மலையின் நிழல்
8 கருப்புரயில்

61 ஜெயமோகன் [ ஜெயமோகன் கதைகள் உயிர்மை]

1 திசைகளின் நடுவே
2 போதி
3 படுகை
4 மாடன் மோட்சம்
5 கடைசிமுகம்
6 முடிவின்மைக்கு அப்பால்

62 .எஸ்.ராமகிருஷ்ணன் [ எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள். கிழக்கு]

1 தாவரங்களின் உரையாடல்
2 வேனில்தெரு
3 பறவைகளின் சாலை

63. எம்.யுவன் [ ஒளிவிலகல் – காலச்ச்சுவடு , ஏற்கனவே – உயிர்மை பதிப்பகம் ]

1 தாயம்மாபாட்டி சொன்ன நாற்பத்தொரு கதைகள்
2 ஒளிவிலகல்
3 ஊர்சுற்றிக் கலைஞன்
4 அவரவர் கதை
5 நார்ட்டன் துரையின் மாற்றம்
6 கடல்கொண்டநிலம்

64 பிரேம் – ரமேஷ்

1 கனவில் பெய்த மழையைப்பற்றிய இசைக்குறிப்புகள்
2 மூன்று பெர்நார்கள்

65 பொ.கருணாகரமூர்த்தி * [கிழக்குநோக்கிய சில மேகங்கள் -ஸ்நேகா / பொ கருணாகரமூர்த்தி கதைகள் உயிர்மை]

1 கிழக்குநோக்கிய சில மேகங்கள்
2 கலைஞன்

66 பவா செல்லத்துரை [ சத்ரு – வம்சி புக்ஸ்]

1 ஏழுமலைஜமா
2 ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

67 சு.வேணுகோபால் [ கூந்தப்பனை, களவுபோகும் புரவிகள் தமிழினி]

1 மறைந்த சுவடுகள்
2 மீதமிருக்கும் கோதும் காற்று
3 களவுபோகும் புரவிகள்
4 தங்கமணல்

68 உமா மாகேஸ்வரி [மரப்பாச்சி தமிழினி . தொலைகடல் தமிழினி]

1 மரணத்தடம்
2 மரப்பாச்சி

69. யூமா வாசுகி [தமிழினி]

1 வேட்டை
2 உயிர்த்திருத்தல்
3 ஜனனம்

70. வேல ராமமூர்த்தி [ இருளப்பசாமியும் இருபத்தொரு கிடாய்களும் – அகரம்]

1. அன்னமயில்
2. இருளப்பசாமியிரும் இருபத்தொரு கிடாய்களும்

71 பெருமாள் முருகன்

1. நீர்விளையாட்டு
2. திருச்செங்கோடு

72. எம்.கோபாலகிருஷ்ணன் {சூத்ரதாரி} [ பிறிதொரு நதிக்கரை. வைகறை ]

1 ஒற்றைச்சிறகு
2 வலியின் நிறம்

73. கண்மணி குணசேகரன்[ ஆதண்டார் கோயில் குதிரை. தமிழினி பதிப்பகம்]

1 வண்ணம்
2 ஆதண்டார் கோயில் குதிரை

74 அழகியபெரியவன் [ தீட்டு . தமிழினி பதிப்பகம்]

1 விலங்கு
2 வனம்மாள்

75. லட்சுமணப்பெருமாள் [பாலகாண்டம். தமிழினி பதிப்பகம்]

1 கதைசொல்லியின்கதை
2 நீதம்

Takeaways from Sannasi blog on Charu, Jeyamohan & their Eezham opinions

In Blogs, Guest, Misc, Politics, Questions, Srilanka on ஜூன் 11, 2009 at 6:07 பிப

முழுவதும் வாசிக்க: வேதம் ஓதும் சாத்தான்கள்

1. புஷ்ஷின் கோவேறுகழுதைத்தனமான பிடிவாதத்தை, முட்டாள்தனத்தைத் தாண்டி இதுபோன்ற தருணங்களில் புஷ்ஷின் வினோதமான/பிரத்யேகமான ‘அற’வுணர்வு இத்தருணத்தில் சரியாக இயங்கியிருக்கக் கூடும் என்று பாமரத்தனமாக நினைக்க வைப்பதுதான் ஒருவிதத்தில் அந்த நபரின் வெற்றி போல.

2. மனித உரிமைகள் குறித்த அக்கறைதான் கிடையாது என்பது ஒருபுறம் இருக்க, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ராஜதந்திர வெற்றி என்றுகொண்டு, அண்டை நாடுகளை இலங்கையில் அழுத்தமாகக் கால் பதிக்க வழிகோலிக் கொடுத்துவிட்டு தெற்கு ஆசியாவின் மத்தியில் காயடிக்கப்பட்ட மாடு மாதிரி நிற்கிறது இந்தியா – அதன் வீச்சு அவ்வளவு தான்.

3. ஊடகப் பொறுக்கிகள் கருணாநிதி போன்றவர்களை உள்ளூர் அரசியல் பொறுக்கிகள் மாதிரிச் சித்தரிப்பதைப் பார்க்கும்/கேட்கும்போது கொதித்திருக்கிறது – கருணாநிதி என்ற தனி நபர் மீதுள்ள ஆதுரத்தால் அல்ல – விரும்பியோ விரும்பாமலோ எனது அடையாளங்களிலொன்றை முன்னிறுத்தும் கருவிகளிலொன்றாக இந்த கருணாநிதி என்ற நபர் இருப்பதான தருணத்தின் மீதுள்ள ஒட்டுறவால். குறிப்பாக வட இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு கருணாநிதியின் வாரிசு அரசியல் குறித்த கிண்டல்களும், மத்திய அமைச்சரவையில் பங்குக்கு அடிக்கும் குரங்கு பல்டிகள் குறித்த கிண்டல்களும் கருணாநிதி-தி.மு.க என்ற எல்லை தாண்டி, ஜெயின் கமிஷன் மொத்தத் தமிழர்களையும் காட்டுமிராண்டிகள் என்று சித்தரித்தது போன்ற ஒரு ஒட்டுமொத்தச் சாணியடிப்பு உத்தி. இது அனைத்துக்கும் உருண்டையை உருட்டிக் கொடுப்பது கருணாநிதி என்றிருக்கும்போது யாரை நோக.

4. சாரு நிவேதிதா மாதிரியான eurosnobகளை/oreo cookie/தேங்காய்களை (உள்ளே வெளுப்பு வெளியே கறுப்பு) அமெரிக்காவில் பல்வேறு தளங்களில் பார்க்கலாம் – இந்தியாவிலிருந்து வந்த இந்தியர்கள், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சுத்த அமெரிக்கர்கள். பாலாடைக்கட்டி சரியில்லை, மார்ஜரின் சரியில்லை, ஒயின் சரியில்லை, கலாச்சார சுரணையேதுமற்ற அமெரிக்கக் குய்யான்கள் ஒற்றைக்கையால் ஃபோர்க்கால் வெட்டித் தின்கிறார்கள் என்பது மாதிரி.

5. சாரு நிவேதிதாவின் கலாச்சார மீறல்கள் பெரும்பாலும் இந்த ரகமானவை. வாழைப்பழக் குடியரசு டி-ஷர்ட் போடுவதையும் டீசல் ஜீன்ஸ் போடுவதையும் டாமி ஹில்ஃபிகர் ஜட்டி போடுவதையும் ஆட்டைச் சுட்டுத் தின்பதையும் சாராய பாட்டில்கள் முன்பு திரும்பி போஸ் கொடுப்பதை தனது வலைத்தளத்தில் போடுவதையும் அயர்ன் மெய்டன் மாதிரி கி.மு.267களின் ராக் குழுக்களை வைத்து தனது ‘*த்’ (யூத்)தை அளந்துகொள்வதையும் ஒரு ‘அ-தயிர்வடைக் கலாச்சாரமாகக்’ காட்ட முயல்வது மாதிரி. லீ, லீவைஸ் போன்றவற்றின் விற்பனைக்கடைகள் சென்னையில் வந்தபோது சம்பளத்தில் நாலில் ஒரு பங்கைக் கொடுத்தாவது ஒரு லீவைஸ் லீ ஜீன்ஸ் வாங்கி விடவேண்டுமென்று திரிந்துகொண்டிருந்த கும்பல் இருந்தது – சாருவைப் படிக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.

6. ஜெயமோகனை விட சாரு மேல் ஏன் இவ்வளவு ஆத்திரம்? சாரு நிவேதிதாவுடையது முட்டாள்தனம் – முட்டாள்களுக்குத் திட்டினால் பெரும்பாலான நேரங்களில் உறைக்கும், திருத்திக் கொள்வார்கள்.

7. இயலாதவன் வலியை மற்றொரு இயலாதவனை முன்வைத்து இயன்றவன் தப்பித்துக்கொள்ளும் உத்தி எப்படிப்பட்டது?

8. ஆஷ்விட்ஸ், பெயௌஷெட்ஸ் (Belzec) நாஸி வதைமுகாம்களை/நினைவிடங்கள் சிலவற்றை நேரில் பார்த்திருக்கிறேன். இதுவரை இலங்கை போனதில்லை, ஊடகங்களில் படித்தவை சிலரிடம் உரையாடியது தவிர எதையும் நேரில் கண்டதில்லை – இதுதான் என்னைப் போன்றவர்களின் வாழ்வின் அவமானகரமான, குரூர நகைமுரண். அழிவுக்குப் பின்னான பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பார்ப்பது எப்படிப்பட்ட மனச்சிக்கலையளிக்கும் விஷயமென்பதை எளிதில் விளக்கிவிட முடியாது – கண்டதைப் பிறருக்கு விளக்கும் முனைப்பைவிட, கண்டது தன்னைநோக்கி தனக்குள் திரும்புகையில் நிகழும் சுயவதையைக் கையாள்வது சிக்கலான ஒன்று.

9. இன்னும் எனக்கு பதில் புரியாத கேள்வி:

நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒருபங்கு இதேபோன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப்போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என பேசுவதில்லை. அந்த போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டிவளர்கக் முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கே அறியப்படுகிறார்கள்.
Jayamohan » வெறுப்புடன் உரையாடுதல்