Snapjudge

Jeyamohan: Best Tamil Kavidhai Collections: Notable Poems & Poet Books

In Books, Literature on செப்ரெம்பர் 1, 2009 at 5:50 பிப

Source: சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல் :: ஜெயமோகன் (March 29, 2003)

கவிதைகள்

1] முகவீதி – ராஜசுந்தரராஜன் [தமிழினி பதிப்பகம்]

[எண்பதுகளில் முக்கிய கவனம் பெற்ற கவிஞர்களில் ஒருவரான ராஜசுந்தரராஜன் அதிகமாக எழுதவில்லை. செவ்வியல்கவிதைகளின் மொழியழகும் நவீனக்கவிதைகளின் வடிவமும் கொண்ட அவரது கவிதைகள் பரவலாக விரும்பப்பட்டவை. இது அவர்து முழுத்தொகுப்பு]

2] கலாப்ரியா கவிதைகள் [தமிழினி பதிப்பகம்]

[காட்சிச்சித்தரிப்பின் நுட்பம்மூலம் கவிதையில்புதிய எல்லைகளைஉருவாக்கிய கலாப்ரியாவின் அத்தனை கவிதைகளும் அடங்கிய தொகுப்பு]

3] விண்ணளவு பூமி — தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]

4]விரும்புவதெல்லாம் – தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]

[தேவதேவனின் கவிதைகள் வாழ்வின் சாரமாக உள்ள அழகையும் அன்பையும் மொழியை நெகிழவைத்து தொட்டுக்காட்டும் தமிழ் சாதனைகள்]

5]  மேய்வதும் மேய்க்கப்படுவதும் யாது – வி அமலன் ஸ்டேன்லி

[உணர்வுகளைஅடக்கமானமொழியில் கூறும் ஸ்டேன்லியின் கவிதைகள் பரவலாக கவனிக்கப்பட்டவை. இது மூன்றாவது தொகுப்பு. ஆனால் முழுகவிதைகளையும் உள்ளடக்கியது ]

6] இரவுகளின் நிழற்படம் — யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]

7] அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு — யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]

[யூமாவின் கவிதைகள் கட்டற்ற பரவசநிலையை மொழியில் அள்ள முயலும் அழகிய சொல்வடிவங்கள்]

8]  முலைகள் – குட்டிரேவதி [தமிழினி பதிப்பகம்]

[தற்போது அதிகமாக கவனிக்கப்படும் கவிஞர். உணர்வுகளை உருவகங்களாக தீவிரமாக வெளிப்படுத்தமுனைபவர்]

9] யாரோ ஒருத்தியின் நடனம் . மகுடேஸ்வரன் [காவ்யா பதிப்பகம்]

[நவீனக்கவிதையில் அருகிவரும் நகைச்சுவை அம்சம் உடைய கவிதைகளை எழுதுவதனால் மகுடேஸ்வரன் கவனத்துக்குரிய கவிஞர்]

10] வெறும் பொழுது . உமா மகேஸ்வரி தமிழினி பிரசுரம்

[சமீப காலத்தில் வந்த கவிதை தொகுப்புகளில் மிக அழகான தயாரிப்பு உள்ள நூல் இதுவே. கவிதைகள் அழகிய சொல்லாட்சிகள் நிரம்பியவை, நேர்மையான உக்கிரம் கொண்டவை. பெண் கவிஞர்கள் அதிர்ச்சிகள் மூலம் கவனம் கோரும் இந்தக் காலகட்டத்தில் கவனத்துக்குரிய அழகான கவிதைகளின் தொகுப்பு]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: