Snapjudge

Posts Tagged ‘Kavinjar’

Jeyamohan: Best Tamil Kavidhai Collections: Notable Poems & Poet Books

In Books, Literature on செப்ரெம்பர் 1, 2009 at 5:50 பிப

Source: சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல் :: ஜெயமோகன் (March 29, 2003)

கவிதைகள்

1] முகவீதி – ராஜசுந்தரராஜன் [தமிழினி பதிப்பகம்]

[எண்பதுகளில் முக்கிய கவனம் பெற்ற கவிஞர்களில் ஒருவரான ராஜசுந்தரராஜன் அதிகமாக எழுதவில்லை. செவ்வியல்கவிதைகளின் மொழியழகும் நவீனக்கவிதைகளின் வடிவமும் கொண்ட அவரது கவிதைகள் பரவலாக விரும்பப்பட்டவை. இது அவர்து முழுத்தொகுப்பு]

2] கலாப்ரியா கவிதைகள் [தமிழினி பதிப்பகம்]

[காட்சிச்சித்தரிப்பின் நுட்பம்மூலம் கவிதையில்புதிய எல்லைகளைஉருவாக்கிய கலாப்ரியாவின் அத்தனை கவிதைகளும் அடங்கிய தொகுப்பு]

3] விண்ணளவு பூமி — தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]

4]விரும்புவதெல்லாம் – தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]

[தேவதேவனின் கவிதைகள் வாழ்வின் சாரமாக உள்ள அழகையும் அன்பையும் மொழியை நெகிழவைத்து தொட்டுக்காட்டும் தமிழ் சாதனைகள்]

5]  மேய்வதும் மேய்க்கப்படுவதும் யாது – வி அமலன் ஸ்டேன்லி

[உணர்வுகளைஅடக்கமானமொழியில் கூறும் ஸ்டேன்லியின் கவிதைகள் பரவலாக கவனிக்கப்பட்டவை. இது மூன்றாவது தொகுப்பு. ஆனால் முழுகவிதைகளையும் உள்ளடக்கியது ]

6] இரவுகளின் நிழற்படம் — யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]

7] அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு — யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]

[யூமாவின் கவிதைகள் கட்டற்ற பரவசநிலையை மொழியில் அள்ள முயலும் அழகிய சொல்வடிவங்கள்]

8]  முலைகள் – குட்டிரேவதி [தமிழினி பதிப்பகம்]

[தற்போது அதிகமாக கவனிக்கப்படும் கவிஞர். உணர்வுகளை உருவகங்களாக தீவிரமாக வெளிப்படுத்தமுனைபவர்]

9] யாரோ ஒருத்தியின் நடனம் . மகுடேஸ்வரன் [காவ்யா பதிப்பகம்]

[நவீனக்கவிதையில் அருகிவரும் நகைச்சுவை அம்சம் உடைய கவிதைகளை எழுதுவதனால் மகுடேஸ்வரன் கவனத்துக்குரிய கவிஞர்]

10] வெறும் பொழுது . உமா மகேஸ்வரி தமிழினி பிரசுரம்

[சமீப காலத்தில் வந்த கவிதை தொகுப்புகளில் மிக அழகான தயாரிப்பு உள்ள நூல் இதுவே. கவிதைகள் அழகிய சொல்லாட்சிகள் நிரம்பியவை, நேர்மையான உக்கிரம் கொண்டவை. பெண் கவிஞர்கள் அதிர்ச்சிகள் மூலம் கவனம் கோரும் இந்தக் காலகட்டத்தில் கவனத்துக்குரிய அழகான கவிதைகளின் தொகுப்பு]

10 Illogical Lyrics: Unpoetical analysis of Tamil Film Songs

In Lists, Movies, Music on ஓகஸ்ட் 23, 2009 at 4:07 பிப

1. பாடல்: எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
திரைப்படம்: கந்தசாமி
எழுதியவர்: இளங்கோ – விவேகா
வரி: எம்ப்டி ஐபாடே — உன்னை ஸ்விட்ச் ஆன் பண்றது வேஸ்ட்டு
ஏன்: ஐ-பாட் காலியாக இருக்கும்போது உயிர் கொடுக்காவிட்டால், எப்படி அந்த ஐ – பாடில் பாடல்களை ஏற்றுவது? மேலும், வாங்கும்போது எல்லா எம்பி3 ப்ளேயர்களும் எந்தவித ஒலிப்பேழையும் இல்லாமல்தான் இருக்கும்.

2. பாடல்: தாய் சொல்லும் உறவை வைத்தே
திரைப்படம்: கனாக் கண்டேன்
எழுதியவர்: வைரமுத்து
வரி: 17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கைதானே பாலூத்தும் காலம் வரைக்கும் கூட வரும்!
ஏன்: +2 மதிப்பெண் வைத்தே அண்ணா பொறியியலும், மெட்ராஸ் மெடிகலும் கிடைக்கும் என்றாலும், சட்டம் பயில்வது, தொழில் முனைவது, கலைகளில் சிறந்தோங்குவது என்று தமிழகம் அமெரிக்காவாகும் காலம் இது.

3. பாடல்: பூமாலையே தோள் சேரவா
திரைப்படம்: பகல் நிலவு
எழுதியவர்: ?
வரி: தேனினை தீண்டாத பூ இல்லையே
ஏன்: வண்டுகளை ஏமாற்ற தேன் தயாரித்துத் தராத பூக்களின் செய்கையை இந்த வரிகள் தவிர்த்துவிடுகிறது. Nectarless flowers: ecological correlates and evolutionary stability : Flowers may cheat by not producing nectar

4. பாடல்: போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
திரைப்படம்: சிங்காரவேலன்
எழுதியவர்: ?
வரி: காவேரி அல்ல… அணைபோட்டுக் கொள்ள
ஏன்: இன்றைய காவிரியில் தண்ணீர் எங்கே இருக்கிறது? கர்நாடக டி.எம்.சி. வந்தாலும், பாசன ஏரிகள் எல்லாம் ஃப்ளாட் அகி விட்டனவே!

5. பாடல்: ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
திரைப்படம்: மீரா
எழுதியவர்: ?
வரி: எனையும்தான் உன்னைப் போலே… படைத்தானே… இறைவன் எனும் ஓர் தலைவன்
ஏன்: பகுத்தறிவிற்கும் (கடவுள்?) அறிவியலுக்கும் (வளர் உருமாற்றம்) இலக்கியத்திற்கும் (Franz Kafka: Metamorphosis) பெண்ணியத்துக்கும் (ஆண் இறை) எதிரான கொள்கையை விரிக்கும் கவிதை.

6. பாடல்: வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
திரைப்படம்: மெல்லத் திறந்தது கதவு
எழுதியவர்: ?
வரி: உனைச்சேர எதிர்பார்த்தேன்; முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
ஏன்: இது போலி சாமியார் வகையறா. ஏழு ஜனனமும் தெரிவதெல்லாம் அக்மார்க் கப்சா.

7. பாடல்: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
திரைப்படம்: பொல்லாதவன்
எழுதியவர்: ?
வரி: வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே
ஏன்: வௌவாலுக்கு உலகம் நேராகத்தான் இருக்கும். நமக்குத்தான் அது upside down.

8. பாடல்: காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
திரைப்படம்: சின்ன மாப்பிள்ளை
எழுதியவர்: ?
வரி: கந்தன் தேடி வந்த வள்ளி
ஏன்: வள்ளியை நினைத்து, ஏங்கி, காதல் கொண்டு, இன்றைய தினத்தில் பிறந்த நாள் கொண்டாடும் கணேசரின் உதவியோடு, வசியமாக்கி, மணம் புரிந்தது சரித்திரம் (அல்லது ஆன்மிக புராணம் [அல்லது தலவரலாறு])

9. பாடல்: சின்னத் தாயவள் தந்த ராசாவே
திரைப்படம்: தளபதி
எழுதியவர்:
வரி: தேய்பிறை காணும் வெண்ணிலா
ஏன்: ‘வளர்பிறை என்பதும் தேய்பிறையென்பதும் நிலவுக்குக் கிடையாது!’ (அப்படியே இருந்தாலும், வெண்ணிலவே தேய்பிறையைக் காண முடியுமா?)

10. பாடல்: ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
திரைப்படம்: தாய் மூகாம்பிகை
எழுதியவர்: வாலி
வரி: ஜகன் மோஹினி நீ
ஏன்: ஜெயமாலினிதான் ஜெகன்மோகினி என்பது ஊரறிந்த தகவலாச்சே!

100 Best Translations from World Literature in Tamil

In Books, India, Literature on ஜூலை 10, 2009 at 6:47 பிப

Source: நூறு சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள் :: எஸ் ராமகிருஷ்ணன்

1) அன்னா கரீனனா – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

2) போரும்வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

3) புத்துயிர்ப்பு – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

4) கசாக்குகள் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

5) குற்றமும் தண்டனையும் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா

6) சூதாடி – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா

7) மரணவீட்டின் குறிப்புகள் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா

8) யாமா -குப்ரின் ரஷ்யா

9) அர்தமனேவ் – கார்க்கி – ரஷ்யா

10) நம் காலத்து நாயகன் -லெர்மன்தேவ் – ரஷ்யா

11) தந்தையும் தனையர்களும் -துர்கனேவ் – ரஷ்யா

12) மண்கட்டியை காற்று அடித்து போகாது – பாஸி அசியோவா – ரஷ்யா

13) தாரஸ்புல்பா- கோகல் – ரஷ்யா

14) டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது- ஷேலகோவ் –ரஷ்யா

15) சக்ரவர்த்தி பீட்டர் -அலெக்ஸி தல்ஸ்தோய்.- ரஷ்யா

16) குல்சாரி – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா

17) அன்னைவயல் – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா

18) ஜமீலா – சிங்கிஸ் ஐத்மேதவ் ரஷ்யா

19) கண்தெரியாத இசைஞன் -கொரலன்கோ ரஷ்யா

20) தேவமலர் -செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்

21) தாசியும் தபசியும் -அனதோலியா பிரான்ஸ் – பிரான்சு

22) திமிங்கல வேட்டை- ஹெர்மன் மெல்வில் அமெரிக்கா

23) சித்தார்த்தா – ஹெர்மன் ஹெஸ்ஸே – ஜெர்மனி

24) யூஜினி – பால்சாக் – பிரான்சு

25) மாறியதலைகள் – நட் ஹாம்சன் நார்வே

26) நிலவளம் – நட் ஹாம்சன் நார்வே

27) மங்கையர்கூடம் – பியர்ள் எஸ் பக் –அமெரிக்கா

28) கடற்புறா – ரிச்சர்ட் பாஷ் அமெரிக்கா

29) மதகுரு- செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்

30) இரட்டை மனிதன் -ஆர்.எல். ஸ்டீவன்சன் ஸ்காட்லாந்து

31) ஏழைபடும்பாடு – விக்டர் க்யூகோ – பிரான்சு

32) இரு நகரங்களின் கதை – சார்லஸ் டிக்கன்ஸ் இங்கிலாந்து

33) போரே நீ போ – ஹெமிங்வே அமெரிக்கா

34) கடலும் கிழவனும் – ஹெமிங்வே அமெரிக்கா

35) யாருக்காக மணி ஒலிக்கிறது – ஹெமிங்வே அமெரிக்கா

36) டிராகுலா – பிராம் ஸ்டாக்டர் – அயர்லாந்து

37) அன்புவழி – பெர் லாகர்குவிஸ்ட் ஸ்வீடன்

38) மந்திரமலை – தாமஸ்மான் ஜெர்மனி

39) கடல்முத்து – ஸ்டீன்பெக் அமெரிக்கா

40) துன்பக்கேணி – எரிக் மரியா ரிமார்க் ஜெர்மனி

41) பசி – நட்ஹாம்சன் ஜெர்மனி

42) பிரேத மனிதன் -மேரி ஷெல்லி இங்கிலாந்து

43) பிளாடெரோவும் நானும் – ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் ஸ்பானிஷ்

44) குறுகிய வழி – ஆந்த்ரே ழீடு – பிரெஞ்சு

45) குட்டி இளவசரன் -அந்துவாந்த் சந்த் எக்ஸ்பரி – பிராஞ்சு

46) அந்நியன் – ஆல்பெர் காம்யூ பிரான்சு

47) கொள்ளை நோய் – ஆல்பெர் காம்யூ – பிரான்ஸ்

48) விசாரணை -காப்கா ஜெர்மனி

49) வீழ்ச்சி – சினுவா அச்சுபி – தென்னாப்ரிக்கா

50) பீட்டர்ஸ்பெர்க் நாயகன் கூட்ஸி – தென்னாப்ரிக்கா

51) புலப்படாத நகரங்கள் -இதாலோ கால்வினோ – இத்தாலி

52) ஒன்றுகலந்திடும் விதிகளின் கோட்டை -இதாலோ கால்வினோ இத்தாலி

53) தூங்கும் அழகிகளின் இல்லம் -யாசுனாரி கவாபடா – ஜப்பான்

54) தாத்தாவும் பேரனும் – ராபர்ட் டி ரூவாக் அமெரிக்கா

55) நாநா – எமிலி ஜோலா –பிரான்சு

56) டாம் ஷாயர் – மார்க் ட்வெயின் அமெரிக்கா

57) ஆலீஸின் அற்புத உலகம் – லூயிகரோல் இங்கிலாந்து

58) காதலின் துயரம் கதே – ஜெர்மன்.

59) அவமான சின்னம் -நதானியேல் ஹதார்ன் – அமெரிக்கா

60) கானகத்தின் குரல் – ஜாக் லண்டன் அமெரிக்கா

61) சிலுவையில் தொங்கும் சாத்தான் – நுகூகி – கென்யா.

62) அபாயம் -ஜோஷ் வண்டேலு – பிளமிஷ்.

63) கால இயந்திரம் – வெல்ஸ் இங்கிலாந்து

64) விலங்குபண்ணை – ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்து

65) ரசவாதி – பாவ்லோகொய்லோ பிரேசில்.

66) கோதானம் – பிரேம்சந்த் – ஹிந்தி

67) சமஸ்காரா – யூ. ஆர். அனந்த மூர்த்தி – கன்னடம்

68) நமக்கு நாமே அந்நியர்கள- அக்நேயா – ஹிந்தி

69) செம்மீன- தகழிசிவங்கரன் பிள்ளை – மலையாளம்

70) கயிறு – தகழி சிவங்கரன் பிள்ளை – மலையாளம்

71) அழிந்தபிறகு – சிவராமகாரந்த் –கன்னடம்

72) மண்ணும் மனிதர்களும் – சிவராம கராந்த் கன்னடம்

73) நீலகண்ட பறவையை தேடி – அதின்பந்தோபாத்யாயா வங்காளம்

74) அக்னிநதி – குல்அதுல்துன் ஹைதர் உருது

75) ஆரோக்கிய நி்கேதனம் -தாராசங்கர் பானர்ஜி – வங்காளம்

76) கரையான் – சீர்சேந்து முங்கோபாத்யாய- வங்காளம்

77) பதேர்பாஞ்சாலி – விபூதி பூஷஐ பந்தோபாத்யாய வங்காளம்

78) பொம்மலாட்டம் மாணிக்பந்தோபாத்யாய வங்காளம்

79) பொலிவு இழந்த போர்வை ராஜேந்தர்சிங் பேதி – ராஜஸ்தான்

80) இரண்டாம் இடம் எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாளம்

81) பாண்டவபுரம் சேது – மலையாளம்

82) தமஸ் பீஷ்ம சஹானி – உருது

83) பர்வா – எஸ்.எல். பைரப்பா கன்னடம்

84) நிழல்கோடுகள் – அமிதாவ் கோஸ் ஆங்கிலம்

85) சிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா வங்காளம்

86) எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது – வைக்கம் முகமது பஷீர்- மலையாளம்

87) பாத்துமாவுடைய ஆடு – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்

88) சப்தங்கள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்

89) மதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்

90) விடியுமா – சதுர்நாத் பாதுரி – ஹிந்தி

91) மய்யழிகரையோரம் – முகுந்தன் மலையாளம்

92) பன்கர்வாடி – வெங்கடேஷ் மால்கூட்கர்.- மராத்தி

93) சோரட் உனது பெருகும் வெள்ளம் – ஐவேர்சந்த் மேகானீ. ராஜஸ்தான்.

94) தர்பாரி ராகம் – ஸ்ரீராம் சுக்லா – ஹிந்தி

95) இலட்சிய ஹிந்து ஹோட்டல் – விபூதி பூஷன் பந்தோபாத்யாய வங்காளம்

96) கங்கை பருந்தின் சிறகுகள் – லட்சுமி நந்தன் போரா – ஹிந்தி

97) அவன் காட்டை வென்றான் – கேசவரெட்டி – தெலுங்கு

98) அரைநாழிகை நேரம் – பாறபுறத்து மலையாளம்.

99) சிக்கவீர ராஜேந்திரா – மாஸ்தி – கன்னடம்

100) எரியும் பனிக்காடு – டேனியல் ஆங்கிலம்

Venkat picks his Top 10 in Tamil Fiction

In Books, Literature, Tamilnadu on ஜூலை 9, 2009 at 11:30 பிப

Source: வெங்கட் (ஜூன் 2000)

என்முதல் பத்து (குறிப்பிட்ட முக்கியத்துவ வரிசையில் இல்லை) புனைகதைகள்

  1. சுந்தரராமசாமி ஜே.ஜே. சிலகுறிப்புகள்
  2. அசோகமித்திரன் – 18வது அட்சக்கோடு
  3. நீல.பத்மனாபன் பள்ளிகொண்டபுரம்
  4. ஜி.நாகராஜன் – நாளை மற்றுமொரு நாளே,
  5. நாஞ்சில்நாடன் என்பிலதனை வெயில்காயும்
  6. தி.ஜானகிராமன் – மோகமுள்
  7. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  8. கி.ராஜநாராயணன் – கோபல்லபுரத்து மக்கள்
  9. இந்திரா பார்த்தசாரதி குருதிப்புனல்
  10. ஜெயகாந்தன் – சிலநேரங்களில் சிலமனிதர்கள்

Ramani’s Top Tamil Novels (based on India)

In Lists on ஜூலை 9, 2009 at 11:29 பிப

Source: இரமணி (ஜூன் 2000)

அண்மைக்காலங்களில் (என்பது முழுப்பொய்; கடந்த பத்து வருடங்களாக) புதினங்கள், சிறுகதைத்தொகுதிகள் படிக்கும் வாய்ப்பு பெருமளவிலே கைவசமாகக் காணேன்.

ஆகையினால், என்து பட்டியல் முன்னைப் பழமையின் புதினத்தொகுப்பே 😦 (இந்தியாவினைக் களமாகக் கொண்ட எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே இங்கே தந்துள்ளேன்) (முதலாவதினைத் தவிர்த்து மிகுதி விருப்பின் ஒழுங்கிலே இல்லை)

1. காகிதமலர்கள் :- ஆதவன்

2. குருதிப்புனல்:- இந்திரா பார்த்தசாரதி

3. உயிர்த்தேன்:- தி. ஜானகிராமன்

4. நாளை மற்றுமொரு நாளே:- ஜி. நாகராஜன்*

5. தலைமுறைகள்: நீல பத்மநாபன்

6. புத்தம் வீடு: ஹெப்சிபா ஜேசுதாசன்.

7. சாய்வு நாற்காலி:- தோப்பில் மீரான்

8. கடலுக்கப்பால்:- ப. சிங்காரம்

9. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்:- ஜெயகாந்தன்#

10. கோபல்லபுரத்து மக்கள்:- கி. ராஜநாராயணன்

RV’s Top 11 Literary Tamil Books: Best of Fiction

In Books, Literature, Tamilnadu on ஜூலை 9, 2009 at 11:29 பிப

Source: தமிழில் டாப் டென் புத்தகங்கள், சிறந்த புத்தகங்கள் போல ரீடிங் லிஸ்ட்

நான் சிபாரிசு செய்யும் டாப் டென் நாவல்கள்: (வரிசைப்படி அல்ல)

1. பின் தொடரும் நிழலின் குரல்
2. விஷ்ணுபுரம்
3. பொன்னியின் செல்வன்
4. என் பெயர் ராமசேஷன்
5. கரைந்த நிழல்கள்
6. சாயாவனம்
7. கோபல்ல கிராமம்
8. பாற்கடல் (இதை நாவல் என்று சொல்வதுதான் சரி)
9. வெக்கை
10. ஜே ஜே சில குறிப்புகள்
11. மோக முள்

Gopal Rajaram: Best of Tamil Literature: Top Books

In Lists on ஜூலை 9, 2009 at 4:37 முப

Source: தமிழ் நாவல் பட்டியல் :: கோபால் ராஜாராம்

வரிசை முக்கியத்துவத்தைக் கொண்டு வரிசைப் படுத்தப் படவில்லை.

1. ஜெயகாந்தன் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

2. தி ஜானகிராமன் : அம்மா வந்தாள்.

3. லா ச ராமாமிர்தம் : புத்ர

4. பொன்னீலன் : ‘ புதிய தரிசனங்கள் ‘

5. ஆ மாதவன் : ‘கிருஷ்ணப் பருந்து ‘

6. தமிழவன் : ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் ‘

7. கிருத்திகா : ‘வாசவேஸ்வரம் ‘

8. பிரபஞ்சன் : ‘மானுடம் வெல்லும் ‘

9. வண்ண நிலவன் : ‘கடல் புரத்தில் ‘

10. அசோக மித்திரன் : ‘கரைந்த நிழல்கள் ‘

11. இந்திரா பார்த்தசாரதி : ‘கால வெள்ளம் ‘

12. நீல பத்ம நாபன் தலைமுறைகள் ‘

13. சுஜாதா : ‘என் இனிய இயந்திரா ‘

தொடர்வினை: சி மோகனின் பட்டியல்கள் – கோபால் ராஜாராம்

Era Murugan picks his Top 81 works in Tamil: Authors & Writers – Fiction & Poems

In Books, Literature, Tamilnadu on ஜூலை 8, 2009 at 6:53 பிப

Source: இரா முருகன் – அகத்தியர் யாஹு குழுமம் (ஜூலை 2001)

Related: S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff « 10 Hot & Jeyamohan picks Top Tamil Novels: Best of Fiction Writing « 10 Hot

1.கு.ப.ராவின் ‘விடியுமா’,

2.அண்ணாவின் ‘ஓர் யிரவு’,

3.புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’,

4.தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’,

5.சுந்தரராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’,

6.விந்தனின்’பாலும் பாவையும்’,

7.கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கார்’,

8.கிருஷ்ணன் நம்பியின் ‘மாமியார் வாக்கு’,

9.ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’,

10.கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’,

11.க.நா.சுவின் ‘பொய்த்தேவு’,

12.கல்கியின் ‘தியாகபூமி’,

13.பா.ஜெயப்பிரகாசத்தின் ‘யின்னொரு ஜெருசலேம்’,

14.ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’,

15.நீல.பத்மனாமனின் ‘பள்ளி கொண்டபுரம்’,

16. மாதவனின் ‘சாலைக்கடைத் தெருக் கதைகள்’,

17.பொன்னீலனின் ‘உறவுகள்’,

18.கு.சின்னப்பபாரதியின் ‘தாகம்’,

19.சுஜாதாவின் ‘ஊஞ்சல்’,

20.சோ.தர்மனின் ‘நசுக்கம்’,

21. இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’,

22.பா.செல்வராஜின் ‘தேனீர்’,

23.பாமாவின் ‘கருக்கு’,

24.ராஜம் கிருஷ்ணனின் ‘அமுதமாகி வருக’,

25.கிருத்திகாவின் ‘வாசவேச்வரம்’,

26.அம்பையின் ‘சிறகுகள் முறியும்’,

27.பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’,

28.தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’,

29.சே.யோகநாதனின் ‘மீண்டும் வந்த சோளகம்’,

30.பெ.கருணாகரமூர்த்தியின் ‘அகதி உருவாகும் நேரம்’,

31.நகுலனின் ‘நிழல்கள்’,

32.அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’,

33. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப் புனல்’,

34.ஜெயமோகனின் ‘ரப்பர்’,

35.மா.அரங்கநாதனின் ‘காடன் மலை’,

36.பாவண்ணனின் ‘பாய்மரக் கப்பல்’,

37.வண்ண நிலவனின் ‘எஸ்தர்’,

38.வண்ணதாசனின் ‘தனுமை’,

39.திலீப் குமாரின் ‘மூங்கில் குருத்து’,

40.எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’,

41.தஞ்சை பிரகாஷின் ‘கள்ளம்’,

42.குமார செல்வாவின் ‘உக்கிலு’,

43.பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’,

44.நரசய்யாவின் ‘கடலோடி’,

45.தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள்’,

46.லா.ச.ராவின் ‘அபிதா’,

47.சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’,.

48.நாகூர் ரூமியின் ‘குட்டியாப்பா’,

49.சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்’,

50.பா.விசாலத்தின் ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’,

51.பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’,

52.ஜெயந்தனின் ‘நினைக்கப்படும்’,

53.கோமல் சாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’,

54.எஸ்.பொவின் ‘நனவிடைத் தோய்தல்’,

55.வல்லிக்கண்ணனின் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’,

56.ந.பிச்சமூர்த்தியின் ‘காட்டு வாத்து’,

57.சி.மணியின் ‘வரும்,போகும்’,

58.கலாப்ரியாவின் ‘எட்டயபுரம்’,

59.ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’,

60.மனுஷ்யபுத்திரனின் ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’,

61.மீராவின் ‘ஊசிகள்’,

62.சுதேசமித்திரனின் ‘அப்பா’,

63.யுகபாரதியின் ‘மனப்பத்தாயம்’,

64.சோ.வைத்தீசுவரனின் ‘நகரத்துச் சுவர்கள்’,

65.பிரம்மராஜனின் ‘கடல் பற்றிய கவிதைகள்’,

66.மஹாகவியின் ‘குறும்பா’,

67.மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’,

68.காமராசனின் கறுப்பு மலர்கள்’,

69.அ.சீனிவாசராகவனின் (’நாணல்’) ‘வெள்ளைப் பறவை’,

70.சுகுமாரனின் ‘பயணத்தின் சங்கீதம்’,

71.அப்துல் ரகுமானின் ‘பால்வீதி’,

72.அபியின் ‘மவுனத்தின் நாவுகள்’,

73.கல்யாண்ஜியின் ‘புலரி’,

74.பழமலயின் ‘சனங்களின் கதை’,

75.கலாந்தி கைலாசபதியின் ‘ஒப்பியல் யிலக்கியம்’,

76.எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கற்பின் கனலி’,

77.ஆர்.கே.கண்ணனின் ‘புதுயுகம் காட்டிய பாரதி’,

78. ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’,

79.காஞ்சனா தாமோதரனின் ‘வரம்’,

80.கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு

81. சிட்டி

S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff

In Books, Literature, Tamilnadu on ஜூலை 7, 2009 at 9:35 பிப

Source: நூறு சிறந்த புத்தகங்கள்

1) அபிதாம சிந்தாமணி சிங்காரவேலு முதலியார்

2) மகாபாரதம் கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்

3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு

4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்

5) கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பு

6) திருக்குறள் மூலமும் உரையும்

7) திருஅருட்பா மூலமும் உரையும்.

8) சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு

9) மணிமேகலை மூலமும் உரையும்

10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்

11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள்

12) தமிழக வரலாறு தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்

13) பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு

14) பாரதிதாசன் கவிதைகள்.

15) ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு 12 தொகுதிகள்

16) பெரியார் சிந்தனைகள் ஆனைமுத்து தொகுத்தவை.

17) திருப்பாவை மூலமும் உரையும்

18) திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும்

19) சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்

20) தனிப்பாடல் திரட்டு.

21) பௌத்தமும் தமிழும் மயிலை சீனி வெங்கடசாமி

22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு

23) கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு

24) மௌனி கதைகள்

25) சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு

26) ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு

27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு

28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு

29) வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு

30) பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு

31) அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு

32) ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு

33) லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு

34) தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு

35) ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி

36) விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள்

37) ராஜேந்திரசோழன் சிறுகதைகள்

38) நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்

39) சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்

40) பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு

41) சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு

42) பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்

43) முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு

44) கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு

45) சுயம்புலிங்கம் சிறுகதைகள்

46) மதினிமார்கள் கதை கோணங்கி

47) வெயிலோடு போயி தமிழ்செல்வன்

48) இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம்

49) கடவு திலீப்குமார் சிறுகதைகள்

50) நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு

51) புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம்

52) புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி

53) கரைந்த நிழல்கள் அசோகமித்ரன்

54) மோகமுள் தி.ஜானகிராமன்

55) பிறகு .பூமணி

56) நாய்கள் நகுலன்

57) நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்

58) இடைவெளி – சம்பத்

59) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்

60) வாசவேஸ்வரம் – கிருத்திகா

61) பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு

62) கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன்

63) தலைமுறைகள் – நீல பத்மநாபன்

64) பொன்னியின் செல்வன் கல்கி

65) கடல்புரத்தில் வண்ணநிலவன்

66) நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்

67) சாயாவனம் சா.கந்தசாமி

68) கிருஷ்ணபருந்து ஆ.மாதவன்

69) காகித மலர்கள் ஆதவன்

70) புத்தம்வீடு. ஹெப்சிபா யேசுநாதன்

71) வாடிவாசல் –சி.சு.செல்லப்பா

72) விஷ்ணுபுரம் ஜெயமோகன்

73) உபபாண்டவம் எஸ்.ராமகிருஷ்ணன்

74) கூகை சோ.தர்மன்

75) ஆழிசூழ்உலகு ஜோசப் டி குரூஸ்

76) ம் ஷோபாசக்தி

77) கூளமாதாரி பெருமாள் முருகன்

78) சமகால உலகக் கவிதைகள் தொகுப்பு பிரம்மராஜன்

79) ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு

80) பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு

81) கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு

82) கல்யாண்ஜி கவிதைகள்

83) விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு

84) நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு

85) ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு

86) தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு

87) தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு

88) ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு

89) பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு

90) சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு

91) கோடைகால குறிப்புகள் சுகுமாரன்

92) என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் மனுஷ்யபுத்திரன்

93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு –சேரன் கவிதைகள்

94) ரத்த உறவு. யூமா வாசுகி

95) மரணத்துள் வாழ்வோம் கவிதை தொகுப்பு

96) சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.

97) தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு. கி.ராஜநாராயணன்

98) தமிழக நாட்டுபுறபாடலகள் நா.வானமாமலை

99) பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவம் கட்டுரைகள்

100) கண்மணி கமலாவிற்கு புதுமைபித்தன் கடிதங்கள்

விருப்பப் பட்டியல் – வைரமுத்து

In Books, Life, Literature, Movies, Music on மார்ச் 13, 2009 at 10:10 பிப

அமர்க்களம் திரைப்படத்தில் அஜீத் ஷாலினியிடம் பாடும் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்‘ பாடலில் பிடித்த பத்து:

  1. மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
  2. தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
  3. இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
  4. ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
  5. முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
  6. பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்
  7. போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்
  8. மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
  9. மின்சாரம் போகாத இரவு கேட்பேன்
  10. உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்