Snapjudge

Top 10 Tamil Blogs

In Blogs, Lists on ஓகஸ்ட் 10, 2009 at 7:10 பிப

இப்பொழுது போட்டி முடிவில் வென்றால் கூட ‘நான் ஏன் வென்றேன்?’ என்று காரணம் விசாரிக்கிறார்கள். எனவே, தமிழ்ப்பதிவுகளில் டாப் 10 சொல்லுமுன், அதற்கான நியாயங்கற்பித்தல் பட்டியல்:

  1. இன்றைய தேதியில் யாருடைய பதிவு அனேக இணைய வாசகர்களால் மொயக்கப்படுகிறது?
  2. எவர் எழுதினால் தமிழ்மணம் துவங்கி ட்விட்டர் வரை இரத்த பீஜனாக ரணகளமாகும்?
  3. உயிர்மை போன்ற இலக்கிய குறு பத்திரிகை அளவிலும் சரி; குமுதம் போன்ற பெரு சஞ்சிகை வாசகர் ரேஞ்சிலும் சரி… ரீச் உண்டா?
  4. அலெக்ஸா தர வரிசை எண் கணிதம்.
  5. கூகிள் பேஜ் ரேங்க் என்ன?
  6. பத்ரியின் பக்கவாட்டு பட்டியலில் பெயர் பெற்றிருக்கிறாரா?
  7. கூகிள் ரீடரில் எவ்வளவு பேர் சந்தாதாரர் ஆகியிருக்கிறார்? செய்தியோடையை ப்ளாக்லைன்ஸ் மூலம் வாசிக்கும் எண்ணிக்கை எவ்வளவு?
  8. ‘புதுசு… கண்ணா… புதுசு’ மட்டுமில்லாமல், பச்பச்சென்று பார்த்ததும் கொள்ளை கொள்வதில் மேகன் ஃபாக்சாக எவர் உள்ளார்?
  9. போன புல்லட் பாய்ன்ட்டிற்கு நேர் எதிராக கே பாலச்சந்தர் போல் வயசான காலத்திலும் சின்னத்திரை, மேடை நாடகம் என்று பழைய காவேரியை பாடில்ட் வாட்டர் ஆக்குபவரா?
  10. என்னுடைய இதயத்தில் இடம் உண்டா?

இப்பொழுது ஆகஸ்ட் பத்து. தமிழ் வலைப்பதிவுகளின் தலை 10: (எந்தத் தரக் கட்டுப்பாடு வரிசையிலும் இல்லை)

  1. http://ariviyal.infoஅறிவியல்
  2. என். சொக்கன் மனம் போன போக்கில்
  3. twitter prakashicarusprakash
  4. Charu Nivedita charuonline.com
  5. ஜெயமோகன் jeyamohan.in
  6. எஸ். ராமகிருஷ்ணன் :: RAMAKRISHNAN ::
  7. லக்கிலுக் யுவகிருஷ்ணா
  8. ரவிசங்கர் –ரவி
  9. writerpara பா. ராகவன்
  10. இட்லிவடை IdlyVadai

முந்தைய பதிவுகள்:

1. March 10: Top 10 Tamil Blogs

2. Top Tamil Blogger Templates

இந்த இடுகைக்கு ஊக்கமூட்டிய பட்டியல்: Surveysan -ஆக்கியவன் அல்ல அளப்பவன்: பதிவுலகில், இந்த ஃபாலோயர்ஸ் கணக்கில், நல்ல மகசூல் பெற்றிருப்பவர்கள் சிலர்

  1. அவர்களின் http://www.indiblogger.in ரேன்கையும் கொடுங்களேன் + கொசுறு அலெக்சா.

  2. 🙂

    காரணங்கற்பித்தல்கள் அழகுடன் சுவாரசியம் சேர்க்கிறது!

  3. முத்தான 10 இணைய தளங்களை காணத்தந்ததற்கு தங்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!
    https://www.scientificjudgment.com/

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.