1. Use the time of a total stranger in such a way that he or she will not feel the time was wasted.
2. Give the reader at least one character he or she can root for.
3. Every character should want something, even if it is only a glass of water.
4. Every sentence must do one of two things — reveal character or advance the action.
5. Start as close to the end as possible.
6. Be a sadist. Now matter how sweet and innocent your leading characters, make awful things happen to them — in order that the reader may see what they are made of.
7. Write to please just one person. If you open a window and make love to the world, so to speak, your story will get pneumonia.
8. Give your readers as much information as possible as soon as possible. To heck with suspense. Readers should have such complete understanding of what is going on, where and why, that they could finish the story themselves, should cockroaches eat the last few pages.
– Vonnegut, Bagombo Snuff Box: Uncollected Short Fiction (New York: G.P. Putnam’s Sons 1999), 9-10.
தமிழில் வாசிக்க: சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்) – சேதுபதி அருணாசலம்
சிறுகதைப் படைப்பின் ரகசியங்களைச் சொல்லப் போகிறேன். உங்கள் காதுகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்:
1) உங்களைப் படிக்கப்போகும் அந்த முகம் தெரியாத அந்நியர், உங்களைப் படித்ததால் நேரம் வீணாகிவிட்டதாக வருத்தப்படாத அளவிற்கு எழுதுங்கள். வாசகரின் நேரத்தை நீங்கள் மதிப்பது மிக முக்கியம்!
2) கதையின் ஒரு பாத்திரத்துடனாவது வாசகர் தன்னைத் தொடர்பு படுத்திக்கொள்ள முடிவதாக இருக்க வேண்டும்.
3) ஒவ்வொரு கதாபாத்திரமும் எதையாவது ஒன்றை விரும்ப வேண்டும் – குறைந்தபட்சம் ஒரு கோப்பைத் தண்ணீரையாவது!
4) ஒவ்வொரு வாக்கியமும் பின்வரும் இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் – பாத்திரத்தை வெளிப்படுத்துதல், கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துதல்!
5) முடிவிற்கு எவ்வளவு அருகில் முடியுமோ அவ்வளவு அருகில் கதையை ஆரம்பியுங்கள்!
6) குரூர மனப்பான்மை கொண்டவராக இருங்கள். உங்கள் கதாபாத்திரங்கள் எவ்வளவு இனிமையான அப்பாவிகளாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்கு வாழ்வில் மிக மோசமான விஷயங்கள் நடைபெறட்டும்!
7) ஒருவரை மட்டுமே மகிழ்விப்பதற்காக எழுதுங்கள். உலகத்திலிருக்கும் அத்தனை பேரையும் திருப்திப் படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் உங்கள் கதைக்கும் விஷக்காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது!
8) உங்கள் வாசகர்களுக்கு எவ்வளவு விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுங்கள். சஸ்பென்ஸைத் தூக்கிக் குப்பையில் போடவும்! கதையைத் தாங்களே முடிக்குமளவிற்கு வாசகர்களுக்கு என்ன, எங்கே, எப்படி நடந்ததென்று கதை புரிந்திருக்க வேண்டும். கடைசிப் பக்கங்களை கரையான்கள் தின்னட்டும்!
என் தலைமுறையின் அமெரிக்காவின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஃப்ளானெரி ஓ-கானர் (Flannery O ‘Connor 1925-1964) என்னுடைய முதல் விதியைத் தவிர்த்து மற்ற அத்தனை விதிகளையும் உடைத்தெறிந்தார். மிகச்சிறந்த எழுத்தாளர்கள் அத்தனை பேருமே அப்படிச் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
ஒருவருக்காக எழுதப்படும் கதை, வாசகரைக் கதையில் நடைபெறுவதில் பங்குள்ள ஒருவராக நினைக்க வைக்கிறது. இது வாசகரைத் தனக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, ஹோட்டலில் அடுத்த மேசையில் இருவருக்கிடையே நடைபெறும் சுவாரசியமான உரையாடலை ஒட்டுக்கேட்பதுபோல் நினைக்க வைக்கிறது.
ஒருவருக்காக எழுதப்பட்ட கதை பல வாசகர்களை மகிழ்விப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஒருவருக்காக எழுதப்பட்ட கதைக்கென்று விளையாட்டு மைதானம் போல சில எல்லைக்கோடுகள் இருக்கின்றன. கதை தன் இஷ்டத்திற்கு எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியாது.
இது வாசகருக்கு எழுத்தாளரின் விளையாட்டை பக்கவாட்டிலிருந்து பார்ப்பது போல ஒரு உணர்வைத் தருகிறது. அடுத்து கதை எங்கே செல்லப் போகிறது ? எங்கே செல்ல வேண்டும் ? ஐயோ… அது நடக்கக் கூடாது! என்றெல்லாம் ஒரு விளையாட்டைப் பார்ப்பது போல வாசகரை நினைக்க வைக்கிறது!
[…] post: 8 rules for writing fiction: Kurt […]