Snapjudge

Posts Tagged ‘கொரொனா’

கொரொனா வைரஸ் – 10 பதிவுகள்

In Blogs, Life, Lists, Literature, Tamilnadu on மார்ச் 29, 2020 at 5:15 பிப

  1. தேசிகன்: நாளைய கொ. உலகம் சுனாமி மாதிரி பேண்டமிக் (… – Desikan Narayanan

சுனாமி மாதிரி பேண்டமிக் ( பாண்டமிக் எது சரி ? ) தமிழ் வார்த்தையாகி இரண்டு வாரம் ஆகிறது. இந்த கொரோனா உலகத்தையே ஒரு புதிய ரீசெட் பட்டன் கொண்டு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இனி வரும் காலங்களில் உலகம் எப்படி மாறப் போகிறது என்று தெரியவில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது போன்ற கிளிஷேவை கடந்து கொஞ்சம் யோசித்தால் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

2. வெங்கடேஷ்: புரட்டிப் போடும் கரோனா – நேசமுடன்: கரோனா கொள்ளைநோயில் இருந்து தப்பிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் ஐந்தாவது நாள் இன்று. இதற்குள் எதிர்பாராத இரண்டு மூன்று விஷயங்கள் நடந்துவிட்டன. ஒரு சின்ன நகர்வு தான். வீட்டுக்குள் அனைவரும் பத்…

3. ஜெயமோகன்:

  • கொரோனோ: ஒரு சினிமாச் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. மலையாளம். அங்கிருந்து அழைத்தார்கள்.
  • வைரஸ் அரசியல்: கொரோனோ வைரஸ், அதன் பாதிப்புகள் அதன் மீதான நடவடிக்கைகள் பற்றி கேரள ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்…
  • வைரஸ் அரசியல்-3: அன்புள்ள ஜெ, வைரஸ் அரசியல் படித்தேன். என் பார்வையில் கேரளம் செய்வதுதான் சரியெனப்படுகிறது.
  • வைரஸ்,யுவால் நோவா ஹராரி -கடிதம்
  • கொரோனோவும் இலக்கியமும்: அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,   நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

4. சாரு நிவேதிதா:

5. பாரா:

கொரோனா – அன்றாடங்களைப் புரட்டிப் போடுதல் | Pa Raghavan: இதற்கு முன்பும் இத்தகைய வைரஸ்கள் சில அச்சமூட்டியிருக்கின்றன. அவற்றைக் குறித்தும் நாம் நிறையப் பேசி அஞ்சியிருக்கிறோம். ஆனால் இந்தளவு அல்ல. இவ்வளவு உக்கிரமாக அல்ல. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, மதுச்சாலைகளுக்கு விடுமுறை, வழிபாட்டுத் தலங்கள், கூட்டம் சேரும் திருமணம் போன்ற சம்பவங்களின் நிகழிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு, தொடர் சுகாதாரப் பிரசாரங்கள், தொலைபேசி வழி எச்சரிக்கை – இம்முறை சந்தேகமின்றி அச்சமூட்டுவதாகவே உள்ளது. வீட்டில் …

7. ஆர். அபிலாஷ்

8. சித்தார்த் வெங்கடேசன்

9. உண்மைத்தமிழன்:

10. கோவை எம் தங்கவேல்

கொரோனா வைரஸ் – 9 செய்திகள்

In Lists, Misc, Politics, USA, World on மார்ச் 28, 2020 at 6:18 பிப

இட்ட உறவு ஏனாதிக்கூட்டம்; வார்த்த உறவு வண்ணாரக் கூட்டம். கொத்து எதிர்ப்புத்திறன் கொரொனாவைத் தடுக்குமா? கொஞ்சம் கொஞ்சமாக நோய்த் தடுப்பாற்றலைக் கொண்டு வருவது ஒரு வழி. மொத்தமாக எல்லோரையும் பழக விட்டு அனைவரையும் நோய்க்குட்படாமல் வைப்பது இன்னொரு வழி:

  1. What is herd immunity and can it stop the coronavirus? – MIT Technology Review: Once enough people get Covid-19, it will stop spreading on its own. But the costs will be devastating.

விளையாட்டு வினையில் முடியும். இங்கொருவர் சும்மானாச்சிக்கும் காய்கறிகள் மீது தும்மி இருக்கிறார். அவருக்கு கொரோனா இருக்கிறதா/இல்லையா என்று சோதித்து, அந்த முடிவுகள் வர குறைந்தது 10/12 நாள்களாவது ஆகி விடும். அது வரை காய்கறிகளை சாப்பிடுவோரை ஆபத்துக்குள்ளாக்கலாமா? பழமுதிர்ச்சோலை அங்காடியில் இருந்து அனைத்தும காய்கனிகளும் தூக்கி எறியப்பட்டது. பகிடியாகத் தும்மியவர் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

2. Woman who coughed on $35K worth of grocery store food charged with four felonies: Gerrity’s grocery store in Hanover Township, Pennsylvania, said it had to throw out about $35,000 worth of food that a woman coughed on in a “twisted prank.”

மீண்டும் மீண்டும் வா… ஒரு முறை வந்தவருக்கு மீண்டும் கொரொனாவைரஸ் வராது என்று சொன்னார்கள். இப்பொழுது முதல் முறை வந்து குணமாக்கப்பட்டவருக்கு மீண்டும் கொரோனாவைரஸ் வந்திருக்கிறது. இது இன்னொரு தோற்றமா என்பதை ஆராய வேண்டும். அப்படி மற்றுமொரு திரிபு என்றால் மீண்டும் தனித்திருக்கச் சொல்வார்களோ?

Some Recovered Coronavirus Patients In Wuhan Are Testing Positive Again : Goats and Soda : NPR: NPR interviewed four residents of Wuhan who contracted the virus, recovered — but then had a retest that turned positive. What does that mean for China’s recovery from COVID-19?

என்ன கொடுமை இது சார் தருணம். அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவிற்கு வருபவர்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள். மெக்சிகோவில் இருந்து கள்ளத்தனமாக அமெரிக்காவிற்குள் வருபவர்களைத் தடுப்பதற்காக பெரிய சுவரை அமெரிக்க எல்லையில் கட்டினார் டொனால்ட் டிரம்ப். இப்பொழுது கொரோனாவைரஸ் தலைவிரித்தாடும் அண்டை நாட்டில் இருந்து எங்களுக்கும் தொற்று வியாதியைப் பரப்பாதீர்கள் என்கிறது மெக்சிகோ.

4. Coronavirus: Mexicans demand crackdown on Americans crossing the border – BBC News: Wearing face masks, protesters blocked the US southern border, telling Americans to ‘stay home’

இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு. காய்கறிகளை நன்றாக அலம்பி உண்ணுங்கள் என்கிறார். எந்தப் பொருளை வெளியில் இருந்து வாங்கி வந்தாலும் எவ்வாறு தொற்றுயிரி இடமிருந்து பாதுகாப்பது என்பதையும் சொல்கிறார். கொரொனோவைரஸ் காற்றில் மூன்று மணி நேரம் தன்னைத் தொடுவோரை பீடிக்க தயாராக இருக்கும். அட்டைப்பெட்டிகளில் ஒரு மணி நேரம் உயிர்ப்போடு இருக்கும். பிளாஸ்டிக் பொருள்களிலும் உலோகத்திலும் மூன்று நாள் வரை நச்சுயிர் தாக்குப் பிடிக்கும். எப்படி விரட்டுவது? பாருங்கள்:

5. PSA Safe Grocery Shopping in COVID-19 Pandemic – www.DrJeffVW.com – YouTube: video for New CDC data, safe takeout food practices, and an updated practice for safe grocery shopping/handling.

டிம் அர்பன் நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டியவர். விஷயத்தை எடுத்தால் எளிமையாகவும் ஆழமாகவும் அருமையாகவும் விளக்குபவர். மனதில் பதியும்படி எண்ணங்களை முன்வைக்கிறார்.

SARS-CoV-2 : grain of sand :: grain of sand : house

6. You Won’t Believe My Morning — Wait But Why: A highly unexpected turn of events.

ஐயருக்கு அரை வார்த்தை சொல்; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே. கஜக்ஸ்தான் நாட்டில் கோதுமையைப் பதுக்குகிறார்கள். செர்பியா சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினார்கள்.

7. Countries are starting to hoard food, threatening global trade: It’s not just grocery shoppers who are hoarding pantry staples. Some governments are moving to secure domestic food supplies during the conoravirus pandemic.

இட்ட குடியும் கெட்டது; ஏற்ற குடியும் கெட்டது. லண்டனில் இருக்கும் வீடற்றோருக்கு ஹோட்டல்களில் அறை ஒதுக்கப்பட்டது. இல்லமற்ற அனாதரவோர் சாலைகளிலும் பூங்காக்களிலும் இருப்பதால் கொரொனோவைரஸ் பரவும் அபாயம் அதிகம் ஆகிறது. அதைத் தடுப்பதற்காக அவர்களுக்கு விடுதிகளில் இடம் கொடுத்திருக்கிறது இங்கிலாந்து.

8. Coronavirus: Rough sleepers in London given hotel rooms – BBC News: About 300 rooms are secured to help protect rough sleepers as Londoners heed advice to stay indoors.

ஏகாதசி என்றைக்கு என்றால் அகமுடையாள் புடைவையைப் பார்த்துச் சொல்கிறேன் என்றாளாம். ஒரு தடவை அடங்கிய நோய் மீண்டும் திரும்ப வருமா? சரித்திரம் என்ன சொல்கிறது? 1918ல் அமெரிக்காவைத் தாக்கிய ஃப்ளூ ஜுரத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எப்பொழுது எந்த நகரங்களில் நுண்ணுயிரி அதிரடியாகத் திரும்பத் தாக்கியது என்பதை விவரிக்கும் நேஷனல் ஜியாகிரபி பதிவு

9. How they flattened the curve during the 1918 Spanish Flu: Social distancing isn’t a new idea—it saved thousands of American lives during the last great pandemic. Here’s how it worked.