ட்விட்டரில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்புகள் என்ன? எவர் பெயர் வாரத்திற்கொருமுறையாவது உருளுகிறது? எதை இழுத்தால், அனைவரும் ஆஜராவார்கள்? முக்கியமான பத்து. எந்த வரிசையிலும் இல்லை.
- பெரிதிலும் பெரிய இசையமைப்பாளர் யார்? — இளையராஜாவா? ஏ ஆர் ரெஹ்மானா?
- கணினியில் தமிழில் தட்டச்ச சிறந்த முறை எது — தமிழ் 99? அஞ்சல் (ரோமன் – தங்கிலீஷ் ஒலி)
- தமிழீழ விடுதலைப் புலிகள் — இலங்கையில் தமிழருக்கு ஈழம் வாங்கித் தருவாரா? சுதந்திரம் தேவையா?
- வலைப்பதிவகம் எங்கே அமைப்பது? — இலவச ப்ளாகர், வார்ப்புரு மாற்றக்கூடிய ப்ளாக்ஸ்பாட் (அல்லது) தேடிகளின் நண்பி வோர்ட்பிரெஸ், எளிமையின் உருவம் வொர்ட்ப்ரஸ்.காம்
- செல்லத் தட்டல் கவனிப்பு மிரட்டல் @ பதில்கள் — வெண்பாம் போட்டுத் தாக்குபவர்களுக்கா? நான்கைந்து பதிவாக இட வேண்டியதை நானூறு ட்விட்களாக்குபவர்களுக்கா?
- @ போட்டு உங்க கருத்து என்ன மடக்குவது — பிரபலங்களா? ஆறு வருடம் மும்பு யாருக்கோ அஞ்சலிட்டபோது மாற்றுக்கருத்து சொன்ன பழம்பதிவரா?
- தமிழ்: பயிற்றுமொழியா? தனிமொழியா? தானே வளர்ந்துக்குமா?
- அரசு ஊழியர் செயல்படுகிறார்களா? வேலை நிறுத்தம் மட்டும் செய்கிறார்களா?
- சினிமா: அக்ஷராவா/தமன்னாவா x எந்தப் பாடல்/இடம்பெற்ற படம்/நடிக, இயக்குநரின் துணுக்கு ட்ரிவியா
- ?