Snapjudge

Posts Tagged ‘Topics’

Top 10 Tamil Twitter Discussion Topics

In Blogs on ஓகஸ்ட் 27, 2009 at 10:04 பிப

ட்விட்டரில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்புகள் என்ன? எவர் பெயர் வாரத்திற்கொருமுறையாவது உருளுகிறது? எதை இழுத்தால், அனைவரும் ஆஜராவார்கள்? முக்கியமான பத்து. எந்த வரிசையிலும் இல்லை.

 1. பெரிதிலும் பெரிய இசையமைப்பாளர் யார்? — இளையராஜாவா? ஏ ஆர் ரெஹ்மானா?
 2. கணினியில் தமிழில் தட்டச்ச சிறந்த முறை எது — தமிழ் 99? அஞ்சல் (ரோமன் – தங்கிலீஷ் ஒலி)
 3. தமிழீழ விடுதலைப் புலிகள் — இலங்கையில் தமிழருக்கு ஈழம் வாங்கித் தருவாரா? சுதந்திரம் தேவையா?
 4. வலைப்பதிவகம் எங்கே அமைப்பது? — இலவச ப்ளாகர், வார்ப்புரு மாற்றக்கூடிய ப்ளாக்ஸ்பாட் (அல்லது) தேடிகளின் நண்பி வோர்ட்பிரெஸ், எளிமையின் உருவம் வொர்ட்ப்ரஸ்.காம்
 5. செல்லத் தட்டல் கவனிப்பு மிரட்டல் @ பதில்கள் வெண்பாம் போட்டுத் தாக்குபவர்களுக்கா? நான்கைந்து பதிவாக இட வேண்டியதை நானூறு ட்விட்களாக்குபவர்களுக்கா?
 6. @ போட்டு உங்க கருத்து என்ன மடக்குவது — பிரபலங்களா? ஆறு வருடம் மும்பு யாருக்கோ அஞ்சலிட்டபோது மாற்றுக்கருத்து சொன்ன பழம்பதிவரா?
 7. தமிழ்: பயிற்றுமொழியா? தனிமொழியா? தானே வளர்ந்துக்குமா?
 8. அரசு ஊழியர் செயல்படுகிறார்களா? வேலை நிறுத்தம் மட்டும் செய்கிறார்களா?
 9. சினிமா: அக்ஷராவா/தமன்னாவா x எந்தப் பாடல்/இடம்பெற்ற படம்/நடிக, இயக்குநரின் துணுக்கு ட்ரிவியா
 10. ?

பத்து சம்ஸ்கிருத சினிமா கவர்ச்சி வாசகங்கள்

In Lists, Literature, Movies on மார்ச் 4, 2009 at 3:16 பிப

அதர்வ வேதாந்தமான் மாண்டூக்ய உபநிஷதத்தில் அயம் ஆத்மா பிரம்ம [இந்த ஆத்மாவே பிரம்மம்] ரிக்வேதாந்தமாகிய ஐதரேய உபநிடதத்தில் பிரக்ஞானம் பிரம்ம [பிரக்ஞையே பிரம்மம்] யஜுர்வேதாந்தமாகிய பிருஹதாரண்யக உபநிடதத்தில் அஹம்பிரம்மாஸ்மி [நானே பிரம்மம்] சாமவேதாந்தமான சாந்தோக்ய உபநிடதத்தில் ‘தத்வமஸி’ [அதுநீதான்] என்னும் மகாவாக்கியங்கள் – jeyamohan.in » கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் கருத்தரங்கில் ஆற்றிய உரை » மறைந்து கிடப்பது என்ன?

அஹம்ப்ரும்மாஸ்மி போல் பத்து உபதலைப்பு பரிந்துரை:

 1. தத்வமஸி
 2. அந்தர்யாமி (எப்ப வருவேன்! எப்படி வருவேன்னு தெரியாது!)
 3. ஸர்வ வ்யாபி (ஜித்தன் பட ரமேஷ் மாதிரி கதாபாத்திரம்)
 4. சர்வே ஜனா! லோகா ஸமஸ்தா!! சுகினோ பவந்து!!! (சுந்தர் சி படம்)
 5. சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து (காதல் கல்யாணம்)
 6. ஸித்தி புத்தி ப்ரதே தேவி (விஜயசாந்தி ரக ஹீரோயின் சப்ஜெக்ட்)
 7. தரித்ராய க்ருதம் தான்ம் (ராபின்ஹுட் ஹீரோ; ஷங்கர் படம்)
 8. சம்போ கதலீ பல ஸம்யுதம் (கிங் காங் தமிழ் டப்பிங்)
 9. ஸ்ரீமந் நாராயண / பரமேச்வர ப்ரீத்யர்த்தம் (எல்லாம் தல / தளபதிக்கு சமர்ப்பணம்)
 10. அனாத ப்ரேத ஸமஸ்காரம் (நான் கடவுள் பார்ட் டூ)