நன்றி: marabilakkiyam : Message: sitrilakkiyangaL 1-3 (was) [Marabilakkiyam] Re: pirabandham
பிரபந்தம் என்றால் என்ன
96 வகைச் செய்யுள் வகைப் பாடல்களின் தொகுப்பு
96 வகைச் சிற்றிலக்கியங்களுக்குப் பிரபந்தம் என்று பெயர். பிரபந்தம் என்றால் பொதுவாக ‘இசையோடு கூடியது’ என்று பொருள்.
‘சந்த பந்த முந்து விஞ்சை செஞ்சொலிற் பிரபந்த நந்து சங்க மங்கலம் பொருந்து தமிழ் பாடியே’
– அருணகிரி
1) சாதகம்
2) பிள்ளைக்கவி
3) பரணி
4) கலம்பகம்
5) அகப்பொருள் கோவை
6) ஐந்திணைச் செய்யுள்
7) வருக்கக் கோவை
8) மும்மணிக் கோவை
9) அங்க மாலை
10) அத்தமங்கலம்: அட்டமங்கலம்
11) அணுராக மாலை: அநுராக மாலை
12) இரட்டை மணிமாலை
13) இணைமணி மாலை
14) நவமணி மாலை
15) நான்மணி மாலை: பாரதியின் விநாயக நான்மணிமாலை எடுத்துக்காட்டு.
16) நாம மாலை
17) பல்சந்த மாலை
18) பன்மணி மாலை
19) மணி மாலை
20) புகழ்ச்சி மாலை
21) பெருமகிழ்ச்சி மாலை
22) வருக்க மாலை
23) மெய்கீர்த்தி மாலை: மெய்க்கீர்த்தி மாலை
24) காப்பு மாலை
25) வேணிண் மாலை: வேனின் மாலை (வேனில் மாலை)
26) வசந்த மாலை
27) தாரகை மாலை
28) உற்பவ மாலை
29) தாணை மாலை
30) மும்மணி மாலை: வள்ளுவ மும்மணி மாலை தெரியுமா?
31) தந்தக மாலை: தண்டக மாலை
32) வீரவெற்சி மாலை: வீர வெட்சி மாலை
33) வெற்றிக் கரந்தை மஞ்சரி
34) போர்க்கெழு வஞ்சி: போர்க்கு எழு வஞ்சி என்று பிரித்தால் சட்டுன்னு புரியும்.
35) வரலாற்று வஞ்சி
36) செருக்கள வஞ்சி
37) காஞ்சி மாலை: காஞ்சி என்பது காஞ்சிப் பூவைக் குறிக்கும்
38) நொச்சி மாலை
39) உள்ளிணை மாலை: உழிஞை மாலை.
40) தும்பை மாலை
41) வாகை மாலை
42) ஆடோரண மஞ்சரி: வரதோரண மஞ்சரி
43) எண் செய்யுள்
44) தொகை நிலைச் செய்யுள்
45) ஒலியல் அந்தாதி
46) பதிற்றந்தாதி
47) நூற்றந்தாதி
48) உலா
49) உலாமடல்
50) வளமடல்
51) ஒரு பா ஒரு பக்து: ஒரு பா ஒரு ப·து.
52) இரு பா இரு பக்து: இருபா இரு ப·து. ஒருபது, இருபது என்றும் சொல்லலாம்.
53) ஆற்றுப் படை: திருமுருகாற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்று சங்க காலத்தில் தொடங்கி எங்க காலம் வரை ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.
54) கண்படை நிலை
55) துயில் எடை நிலை: துயிலெடை நிலை என்று சேர்த்து எழுதுவாங்க.
56) பெயர் இன்னிசை
57) ஊர் இன்னிசை
58) பெயர் நேரிசை
59) ஊர் நேரிசை
60) ஊர் வெண்பா
61) விளக்கு நிலை: லைட்டுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. விளக்குகிற நிலை.
62) புற நிலை
63) கடை நிலை
64) கையறு நிலை
65) தசாங்கப் பத்து
66) தசாங்கட்டியல்: தசாங்கத்தியல். தச அங்கத்து இயல்.
67) அரசன் விருத்தம்
68) நயனப் பாட்டு: நயனப் பத்து.
69) பயோதரப் பாட்டு: பயோதரப் பத்து
70) பாதாதி கேசம்
71) கேச, கேசாதி பாதம்: கேசாதி பாதம் (மனோன்மணீயத்துல ஒரு கேசாதி பாதம் வருது. எட்பூ ஏசிய நாசியாய் என்று ஓரிடம் வரும்.)
72) அலங்கார பணிசகம்: அலங்கார பஞ்சகம்
73) கைக்கிளை
74) மங்கல வெள்ளை
75) தூது
76) நாற்பது
77) குலமகன்: குழமகன்
78) தாண்டகம்: திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம் எல்லாம் எதில வருது?
79) பதிகம்
80) சதகம்
81) செவியறிவிரூ: செவியறிஉறூஉ
82) வாயுறை வாழ்த்து
83) புற நிலை வாழ்த்து
84) பவணிக் காதல்: பவனிக் காதல்
85) குறத்திப் பாட்டு
86) உளத்திப் பாட்டு: உழத்திப் பாட்டு
87) ஊசல்
88) எழு, கூற்றிருக்கை: எழுகூற்றிருக்கை. திருவெழுகூற்றிருக்கை தெரியுமா?
89) கடிகை வெண்பா
90) சிண்ணப்பூ: சின்னப் பூ (சின்னங்களைக் குறித்தது. சின்னது இல்லை.)
91) விருத்த இலக்கணம்
92) முது காஞ்சி
93) இயன்மொழி வாழ்த்து
94) பெருமங்கலம்
95) பெருங்காப்பியம்
96) சிறுகாப்பியம்: பெருங்காப்பியம், காப்பியம் என்றுதான் சொல்லுவாங்க.
‘பிரபந்தங்கள்‘ என்று பொதுவாகச் சொன்னாலும், சிற்றிலக்கியங்கள் என்றும் இவற்றைச் சொல்வதுண்டு. பத்தே பத்து பாடல்கள் முதல் ஒரு நானூறு, ஐநூறு, ஆயிரம் பாடல்கள் வரை அது பாட்டுக்குப் போகும். பல சமயங்களில் இந்தப் பிரபந்தங்களின் பெயர்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன்.
வச்சணந்தி மாலை இந்தப் பிரபந்தங்களுக்கான இலக்கணத்தைச் சொல்கிறது. ஆனாலும் ஒரு சில பிரபந்தங்களை வச்சணந்தி மாலையில் காண முடிவதில்லை.
1) சாதகம்:
ஜாதகம். திதி, வார, நட்சத்திர, யோக, கரண, ஓரை, கிரக நிலைகளை ஆராய்ந்து தலைவனுக்குச் சொல்லுதல் என்று அபிதான சிந்தாமணி சொல்கிறது.
2) பிள்ளைக் கவி:
3. பரணி :
போர் முறை மற்றும் பெரும்போர் செய்து வென்ற வீரன் பற்றிய பாடல் வகை என்றும் கூறுவர். ஆனால் பாட்டுடைத்தலைவன் தோல்வியுற்றவனாகவும் இருக்கலாம்.
பெயர்க்காரணம்:
காடு கிழவோள் பூத மடுப்பே தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப்
பாகு பட்டது பரணி நாட்பெயரே(திவாகரம்)
அதாவது யமனையும் காளியையும் தெய்வமாகப் பெற்ற நாள் மீன் பரணி. இப்பரணி நாளில் கூளிகள் (பேய்?!) கூழ் சமைத்து காளிக்கு படைப்பார்கள்.
உறுப்புகள்:
கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு ,காடு பாடியது, பேய்முறைப்பாடு போன்றவை பொதுவாக கலித்தாழிசைகளால் அமையும்,
உதாரணங்கள்:
- கலிங்கத்துப்பரணி
- தக்கயாகப்பரணி
- இரணியவதைப்பரணி
- கஞ்சவதைப்பரணி
- அஞ்ஞவதப்பரணி
- மோகவதைப்பரணி
- திருச்செந்திற்பரணி
- பாசவதைப்பரணி
தக்கயாகப்பரணிமூலமும் உரை விளக்கம்
பதிகம்
பரணி