Posts Tagged ‘Wishes’
விருப்பப் பட்டியல் – வைரமுத்து
In Books, Life, Literature, Movies, Music on மார்ச் 13, 2009 at 10:10 பிபஅமர்க்களம் திரைப்படத்தில் அஜீத் ஷாலினியிடம் பாடும் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்‘ பாடலில் பிடித்த பத்து:
- மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
- தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
- இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
- ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
- முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
- பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்
- போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்
- மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
- மின்சாரம் போகாத இரவு கேட்பேன்
- உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்