Snapjudge

Posts Tagged ‘Why’

எழுத்தாளர்களை நேரில் சந்திக்க ஏழு காரணங்கள்

In Blogs, Life, Literature on பிப்ரவரி 26, 2014 at 1:32 முப

எழுத்தாளர்களை நான் ஏன் பார்க்கப் போகிறோம்?

மாநாட்டிற்கு சென்றால் பேச்சைக் கேட்கலாம். புத்தகத்தை வாங்கினால் எண்ணத்தைப் படிக்கலாம். படத்தைப் பார்த்தால் ஆவணமாகப் பார்க்கலாம். ஆனால், எழுத்தாளரை எதற்குப் பார்க்கப் போகிறோம்?

நான் பார்க்கப் போவதற்கான காரணங்கள் இவை

1. வம்பு: எழுத்தில் எழுதாத விஷயத்தை நேரில் சொல்வார் என்னும் நம்பிக்கை. இதைத் தகவலறிதல் என்றும் சொல்லலாம்.

2. கேள்வி: இது வம்பின் அடுத்தகட்டம். வம்பு என்பது பொதுவெளி. இது தனிமனித அத்துமீறல். “அந்தக் கதை நிஜமா! இதில் நீங்கள் சொல்பவர் எங்கே கிடைப்பார்?” என்று திட்டவட்டமாக நெருக்கி விளக்கம் அறியும் அவா.

3. சோம்பேறித்தனம்: புத்தகத்தைப் படிக்க நேரம் ஒதுக்காமல், அவர் வாயாலேயே, அவரின் கருத்துக்களை சொற்பொழிவாகக் கேட்டல்.

4. கம்பெனி: மதுவருந்த, புகை பிடிக்க நண்பர்களை அழைத்துச் செல்லுவது போல், அரட்டை அடிக்க சகா தேடுவது.

5. படேல் மதிப்பு: பாரீசுக்குப் போனால் ஈஃபில் கோபுரத்துடன் படம் எடுத்துக் கொள்வது போல், எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கினால், அவரின் கையெழுத்தைப் போட்டு வாங்கிக் கொள்வதில் விருப்பம். இதை நடிகர் சந்திப்பாகவும் கொள்ளலாம்.

6. சாதனை: அந்த எழுத்தாளரைப் போல் எழுதத்தான் முடிவதில்லை. அவரைப் பார்த்துப் பழகி விடுவதாலேயே அவருக்கு சரிநிகர் சமானமாகி விடுவது. விளையாட்டில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது கிடைக்கும் நிறைவுணர்ச்சியை வாழ்க்கையில் கொணரும் முயற்சி.

7. தொடர்பு: எழுத்தாளரின் அறிமுகம் கிடைப்பதால் வேறு எங்காவது வாய்ப்பு ஏற்படலாம். இதை இப்பொழுது “நெட்வொர்கிங்” என்கிறார்கள்.

வலைப்பதிவரிடம் பத்து வினாக்கள்

In Blogs, Life, Lists on ஒக்ரோபர் 21, 2010 at 7:02 பிப

சென்னைக்குப் போகிறேன். வலைப்பதிவரை சந்திக்கலாம். என்ன கேள்வி கேட்கலாம்? எதற்கு விடை அறிய ஆவல்?

  1. ஏன் வலைப்பதிகிறீர்கள்?
  2. உங்களுக்கு மணமாகிவிட்டதா? குழந்தை உள்ளதா?
  3. வேலை? ஊதியத்துக்கேற்ற உழைப்பைத் தருவதாக நினைக்கிறீர்களா?
  4. கடைசியாக பதவி மாறியது எப்போது?
  5. ட்விட்டர், ஃபேஸ்புக் பிடித்திருக்கிறதா? பதிவு அதிகம் பிடிச்சிருக்கா?
  6. குமுதம், விகடனில் எழுத ஆசையா?
  7. தமிழ்ப்பேப்பர், திண்ணை, சொல்வனம் குறித்த உங்கள் எண்ணம்.
  8. உங்கள் பதிவு எந்த இடங்களில் கவனிக்கப்பட்டிருக்கிறது?
  9. வலைப்பதிவு அறிமுகம் இல்லாதவர்களால், உங்கள் பதிவு எவ்வாறு நோக்கப்படுகிறது?
  10. பைசா பிரயோசனம் உண்டா?

Why do we read Fiction?

In Books, Literature on செப்ரெம்பர் 30, 2009 at 1:52 பிப

உதவி: புள்ளி – சித்ரன்

கதைகளோ, நாவல்களோ படிப்பது என்பது

  1. சும்மா பொழுதுபோக்கிற்காகவா?
  2. குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கான ஆராதனை?
  3. மனதைக் கொள்ளைகொண்ட படைப்பாளியின் நடை மேல் எழும் கவர்ச்சி கலந்த ஆர்வமா?
  4. இலக்கிய தாகமா?
  5. கமர்ஷியல் ஆசையா?
  6. கதையில் வரும் சம்பவங்களோடு தன் வாழ்வில் எதையாவது பொருத்திப் பார்த்து மகிழ்ச்சி அல்லது துக்கப்படுவதற்கா?
  7. தன் வாழ்வுக்கெட்டாத, கற்பனை செய்து பார்க்க இயலாத நிகழ்வுகளை கதைகளில் படித்துக் களிக்கிற திருப்தியா?
  8. பொது அறிவு வளர்ப்பதற்கா?