Posts Tagged ‘Uyirmmai’
21 Literary Alternate Magazines in Tamil for Arts, Culture and Opinion
In Magazines, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 3, 2015 at 2:13 முபTop 10 Influential Tamils from TN: India Today
In India, Lists, Tamilnadu on மார்ச் 18, 2010 at 3:24 முப 1. வேணு ஸ்ரீனிவாசன்( தலைவர், டி.வி.எஸ்.மோட்டார் கம்பெனி)
2. என்.ஸ்ரீனிவாசன்(எம்.டி, இந்தியா சிமெண்ட்ஸ்)
3. ஏ.சக்திவேல்(தலைவர், பாப்ப்பீஸ் குழுமம்)
4. ப்ரீத்தா ரெட்டி( நிர்வாக இயக்குனர், அப்போலோ குழுமம்)
5. உதய நிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதி அழகிரி( ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் க்ளவுட் நைன் ஃபிலிம்ஸ்)
6. கமல் ஹாசன் ( நடிகர், இயக்குனர்)
7. கே.டி. ஸ்ரீநிவாச ராஜா(எம்.டி. அடையாறு ஆனந்த பவன்)
8. மயில்சாமி அண்ணாதுரை( தலைவர், சந்திராயன்)
9. ஆர்.ஆர்.கோபால்(ஆசிரியர், பதிப்பாளர், நக்கீரன்
10. மனுஷ்ய புத்திரன்: கவிஞர்களின் கவிஞன் – (41. கவிஞர், ஆசிரியர், பதிப்பாளர், உயிர்மை)
10 Uyirmmai Cover Pages: Little Magazine Wrappers
In Magazines, Tamilnadu on ஜூலை 16, 2009 at 10:15 பிபSujatha Story Analysis in Numbers by Jeyamohan
In Books, Literature on மார்ச் 13, 2009 at 9:44 பிபஜெயமோகன் :: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா :: உயிர்மை பதிப்பகம்
சுஜாதாவின் நடை சிறுகதைக்கு உரியது. காரணம்:
- சுருக்கம்
- நேர்கோட்டில் வேகமாகத் தாவிச்செல்லும் இயல்பு
சிறுகதையின் செவ்வியல் [ஓ ஹென்றி பாணி] வடிவில் நம்பிக்கை கொண்டவர் சுஜாதா. இயல்புகள:
- சம்பவங்களை நம்பியே கதையை அமைத்தல்
- குறைவான கதைமாந்தர்
- சிறிய கால அளவு
- மையமுடிச்சு இறுதித் திருப்பத்தால் அவிழ்க்கப்படுதல்
அவரது கதைகளின் பலம்:
- வலுவான வடிவ உணர்வு
- நேர்த்தியான மொழியுடன் அமைக்கப்பட்டவை.
சுஜாதாவின் கதைகளின் பலவீனம்:
- பெரும்பாலான கதைகளில் அவரது கதைமுடிவுகள் இதழியல் எழுத்துக்கு உரிய எளிய உத்திவிளையாட்டாக உள்ளன. உதாரணமாக
- ஒரே ஒரு மாலை
- வழி தெரியவில்லை
- சென்ற வாரம்
- பொதுவான நியாயம் சார்ந்த முடிவுகூறலாக உள்ளன. முதலிய கதைகளைச் சொல்லலாம். உதாரணமாக
- அம்மா மண்டபம்
- கள்ளுண்ணாமை
- கால்கள்
- கரைகண்ட ராமன்
சுஜாதாவின் தொடக்கம்
- ஆங்கிலத்தில் ஹெமிங்வே முதல் ரே பிராட்பரி வரை பலர்.
- ஜானகிராமனில் இருந்து அவர் பெற்றுக் கொண்டது நுட்பமான தகவல்களை அடுக்கி கதை சொல்லும் முறை.
- அசோகமித்திரனில் இருந்து கறாரான விலகலை.
அவரது கதைகளின் வகை.
- நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை. உதாரணம் :
- மகன் தந்தைக்கு
- வீடு
- சிலவித்தியாசங்கள்
- செல்வம்
- எல்டொராடோ
- ரேணுகா
- . நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல் சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம். உதாரணமாக
- பார்வை
- ரஞ்சனி
- நீர்
- நிபந்தனை
- நிதர்சனம்
- சாரங்கன்.
- உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள். உதாரணமாக
- சுஜாதாவின் தலைசிறந்த கதையாக நான் எண்ணும் ‘குதிரை ‘ இவ்வகையை சார்ந்தது.
- மாமாவிஜயம்
- சார் இந்த அக்கிரமத்தை
- ஒரு வகையான பகீரிடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை. உதாரணமாக
- நகரம்
- முரண்
- நிலம்
- நொ ப்ரொப்ளாம்
- எப்படியும் வாழலாம்
- பாரீஸ் தமிழ்ப்பெண்
சுஜாதாவின் இக்கதைகளை விட மேலாக நான் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் ஆகியோரின் ஆகங்களை முன்வைக்க காரணங்கள்
- சுஜாதா சிறுகதைக்குள் கவித்துவத்தை அடைவதே இல்லை . மேலான சிறுகதை ஒருவகை கவிதை – சுந்தர ராமசாமியின் பல்லக்குதூக்கிகள் போல.
- சுஜாதா தீவிரமான அறஎழுச்சியை அடைவதில்லை, உருவாக்குவதில்லை. மேலான கதைகள் காலத்தால் பழமைகொள்ளாத அறவேகம் கோண்டவை– அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் போல.
- சுஜாதா கதையில் ஒருபோதும் அவரை விலக்கிக் கொள்வதில்லை. மேலான கதைகள் எழுத்தாளனைவிட பெரியவை. அவனது அறிவையும் மனதையும் மீறி ஆழ்மனம் வெளிப்படுபவை. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் போல.
- சுஜாதாவிடம் நம் மரபின் நேர் அல்லது எதிர் விளைவுகள் இல்லை. மேலான ஆக்கங்கள் மரபின் நீட்சியாக நின்று மரபை மறு ஆக்கம் செய்கின்றான. கி ராஜநாராயணனின் பேதை போல.