Snapjudge

Posts Tagged ‘Theatres’

10 Illogical Lyrics: Unpoetical analysis of Tamil Film Songs

In Lists, Movies, Music on ஓகஸ்ட் 23, 2009 at 4:07 பிப

1. பாடல்: எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
திரைப்படம்: கந்தசாமி
எழுதியவர்: இளங்கோ – விவேகா
வரி: எம்ப்டி ஐபாடே — உன்னை ஸ்விட்ச் ஆன் பண்றது வேஸ்ட்டு
ஏன்: ஐ-பாட் காலியாக இருக்கும்போது உயிர் கொடுக்காவிட்டால், எப்படி அந்த ஐ – பாடில் பாடல்களை ஏற்றுவது? மேலும், வாங்கும்போது எல்லா எம்பி3 ப்ளேயர்களும் எந்தவித ஒலிப்பேழையும் இல்லாமல்தான் இருக்கும்.

2. பாடல்: தாய் சொல்லும் உறவை வைத்தே
திரைப்படம்: கனாக் கண்டேன்
எழுதியவர்: வைரமுத்து
வரி: 17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கைதானே பாலூத்தும் காலம் வரைக்கும் கூட வரும்!
ஏன்: +2 மதிப்பெண் வைத்தே அண்ணா பொறியியலும், மெட்ராஸ் மெடிகலும் கிடைக்கும் என்றாலும், சட்டம் பயில்வது, தொழில் முனைவது, கலைகளில் சிறந்தோங்குவது என்று தமிழகம் அமெரிக்காவாகும் காலம் இது.

3. பாடல்: பூமாலையே தோள் சேரவா
திரைப்படம்: பகல் நிலவு
எழுதியவர்: ?
வரி: தேனினை தீண்டாத பூ இல்லையே
ஏன்: வண்டுகளை ஏமாற்ற தேன் தயாரித்துத் தராத பூக்களின் செய்கையை இந்த வரிகள் தவிர்த்துவிடுகிறது. Nectarless flowers: ecological correlates and evolutionary stability : Flowers may cheat by not producing nectar

4. பாடல்: போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
திரைப்படம்: சிங்காரவேலன்
எழுதியவர்: ?
வரி: காவேரி அல்ல… அணைபோட்டுக் கொள்ள
ஏன்: இன்றைய காவிரியில் தண்ணீர் எங்கே இருக்கிறது? கர்நாடக டி.எம்.சி. வந்தாலும், பாசன ஏரிகள் எல்லாம் ஃப்ளாட் அகி விட்டனவே!

5. பாடல்: ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
திரைப்படம்: மீரா
எழுதியவர்: ?
வரி: எனையும்தான் உன்னைப் போலே… படைத்தானே… இறைவன் எனும் ஓர் தலைவன்
ஏன்: பகுத்தறிவிற்கும் (கடவுள்?) அறிவியலுக்கும் (வளர் உருமாற்றம்) இலக்கியத்திற்கும் (Franz Kafka: Metamorphosis) பெண்ணியத்துக்கும் (ஆண் இறை) எதிரான கொள்கையை விரிக்கும் கவிதை.

6. பாடல்: வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
திரைப்படம்: மெல்லத் திறந்தது கதவு
எழுதியவர்: ?
வரி: உனைச்சேர எதிர்பார்த்தேன்; முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
ஏன்: இது போலி சாமியார் வகையறா. ஏழு ஜனனமும் தெரிவதெல்லாம் அக்மார்க் கப்சா.

7. பாடல்: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
திரைப்படம்: பொல்லாதவன்
எழுதியவர்: ?
வரி: வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே
ஏன்: வௌவாலுக்கு உலகம் நேராகத்தான் இருக்கும். நமக்குத்தான் அது upside down.

8. பாடல்: காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
திரைப்படம்: சின்ன மாப்பிள்ளை
எழுதியவர்: ?
வரி: கந்தன் தேடி வந்த வள்ளி
ஏன்: வள்ளியை நினைத்து, ஏங்கி, காதல் கொண்டு, இன்றைய தினத்தில் பிறந்த நாள் கொண்டாடும் கணேசரின் உதவியோடு, வசியமாக்கி, மணம் புரிந்தது சரித்திரம் (அல்லது ஆன்மிக புராணம் [அல்லது தலவரலாறு])

9. பாடல்: சின்னத் தாயவள் தந்த ராசாவே
திரைப்படம்: தளபதி
எழுதியவர்:
வரி: தேய்பிறை காணும் வெண்ணிலா
ஏன்: ‘வளர்பிறை என்பதும் தேய்பிறையென்பதும் நிலவுக்குக் கிடையாது!’ (அப்படியே இருந்தாலும், வெண்ணிலவே தேய்பிறையைக் காண முடியுமா?)

10. பாடல்: ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
திரைப்படம்: தாய் மூகாம்பிகை
எழுதியவர்: வாலி
வரி: ஜகன் மோஹினி நீ
ஏன்: ஜெயமாலினிதான் ஜெகன்மோகினி என்பது ஊரறிந்த தகவலாச்சே!