5. Thriller
MTV வீடியோக்களிலேயே மிகப் புகழ்பெற்றது. ஜாக்ஸனின் ஆட்டம், பேய்களின் ஆட்டம், மேலாக ஆட்டத்துடன் பின்னிப் பிணைத்திருக்கும் மகிழ்ச்சி, நகைச்சுவை – இவை அனைத்தும் இந்தப் பிணங்களின் பாடலை மரணமற்றதாக ஆக்குகின்றன.
6. Beat it
ஆட்டத்திற்காகப் பிறந்த பாடல் இது. எட்டி வான் ஹாலனின் கிதார் இசை வேறு உலகத்தைச் சார்ந்தது.
7. Wanna Be Startin’ Somethin’
திரில்லர் ஆல்பத்தின் முதல் பாடல். வேகமான பாடல். மமஸே, மமஸாமமா!
8. We are the world:
மேற்கத்திய இசையின் புகழ்பெற்ற அனைவரும் பாடிய பாடல் இது. ஜாக்ஸன் அவர்தான் அரசன் என்பதைக் கோடிட்டுக் காட்டும் பாடல்.
9. Black or white:
இந்த வீடியோவைப் பார்க்காதவர்களே இருக்க முடியாது என்று நினைக்கிறேன். திகட்டாத பாடல். முகம் மாறிக்கொண்டே வருவது திகட்டத் திகட்ட நகலெடுக்கப்பட்டாலும்.
10. Jam
இது மற்றொரு மைக்கேலுக்காக-மைக்கேல் ஜோர்டன் -பார்க்க வேண்டியது. ஜோர்டனுக்கு ஜாக்ஸன் ‘மதிநடை’ நடக்கச் சொல்லிக் கொடுக்கிறார். அவர் இவருக்குக் கூடைப்பந்து விளையாடச் சொல்லிக் கொடுக்கிறார்.
விகடனில் சுஜாதா தேர்ந்தெடுத்த பத்துப் புத்தகங்கள் (மார்ச் 26, 2006 தேதியிட்ட ஆனந்த விகடனில் இருந்து):
1. புறநானூறு
2. பைபிள்
3. பகவத் கீதை
4. பாரதியார் கவிதைகள்
5. புதுமைப்பித்தன் கதைகள்
6. திருக்குறள்
7. சிவப்புப் புத்தகம் (மா சே துங்)
8. தமிழ்ப் பேரகராதி (சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு)
9. நாலாயிர திவ்யப் பிரபந்தம்
10. Why I Write? – ஜார்ஜ் ஆர்வெல் கட்டுரைகள்
`பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா, பன்ச் வெச்சா இட்லி தாண்டா’ என பன்ச் டயலாக்குடன் அறிமுகமாகும் இந்த பிளாக்குக்கு சொந்தக்காரர் யார் என்பது தெரியவில்லை. ஆனால், அதுதான் இதன் பலமும்கூட. முகம் தெரியாததால் தைரியமாக கருத்துச் சொல்கிறார்கள்.
சிறுபத்திரிகை எழுத்தாளர், ஆம்னஸ்டிக் இண்டர்நேஷனல் மனித உரிமை ஆர்வலர் என பன்முகம் கொண்ட நாகார்ஜுனின் பிளாக். இந்த பரந்த அனுபவம் இவரது பலம். அதிகம் சீரியஸான விஷயங்களைத்தான் எழுதுகிறார்.
அமெரிக்கா சாஃப்ட்வேர்காரரான பி.கே.சிவகுமாரின் பிளாக். பிரசித்திப் பெற்ற அலெக்ஸா டாட் காம் சர்வேயில் நிறைய பேர் படிக்கும் தமிழ் பிளாக்காக தேர்வு செய்திருந்தார்கள். பொது அறிவு விஷயங்களைத் தேடித்தேடித் தந்திருக்கிறார்.
பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியின் பிளாக். எல்லாவற்றைப் பற்றியும் தன் எண்ணங்களை எழுதியுள்ளார். எப்படி தமிழிலேயே டைப் செய்வது, ஃபாண்டுகளை மாற்றுவது என்பது உட்பட தமிழ் மென்பொருள்கள் பற்றியும் அறிவியல் விஷயங்களையும் எளிமையாக எழுதியுள்ளார்.
5. யுவகிருஷ்ணா www.luckylookonline.com
தி.மு.க.வின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத்தான் பிளாக் தொடங்கியுள்ளதாக சொல்கிறார் இவர். படுசீரியஸாகவும் இல்லாமல் மொக்கையாகவும் இல்லாமல் நடுவாந்திரமாக எழுதுவதால் அனைத்து தரப்பினராலும் படிக்கப்படுகிறார்.
6. பரிசல்காரன் www.parisalkaaran.com
திருப்பூரைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணகுமார் பிளாக். மே 2008ல்தான் தொடங்கியிருக்கிறார். நிறைய எழுதுவதால் குறுகிய காலத்திலேயே ஹிட் ஆகிவிட்டார். யூத் பிளாக்கர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு.
7. அதிஷாவின் எண்ண அலைகள் www.athishaonline.com
பிளாக்கர்களின் பலமான மொக்கைத்தனமும், சகட்டுமேனிக்கு அடிக்கும் கிண்டலும்தான் இவரது பலமும். எந்த புது சினிமா வெளியானாலும் முதல் காட்சி முடிந்து இரண்டாவது காட்சி ஆரம்பிப்பதற்குள் இவர் விமர்சனம் வெளியாகிவிடும்.
சென்னையைச் சேர்ந்த ஜ்யோவ்ராம் சுந்தர் பிளாக். சிறுபத்திரிகை வட்டாரத்தில் பின்நவீனத்துவம் பேசுபவர்கள் குறைந்துவிட்டாலும், பிளாக்கில் ஒரு பெரிய அணியே இருக்கிறது. அவர்களில் இந்த பிளாக் பிரசித்தமானது.
9. சத்தியக்கடுதாசி www.satiyakadatasi.com
ஈழத்து எழுத்தாளரான ஷோபாசக்தியின் பிளாக். இலங்கைப் பிரச்னை பற்றி இவர் அபிப்ராயத்தைத் தெரிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அ.மார்க்ஸ், ராஜன்குறை போன்ற சிறுபத்திரிகை பிரபலங்களும் எழுதுகிறார்கள்.
10. ஸ்மைல் பக்கம் www.livingsmile.blogspot.com
திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் பிளாக். இலக்கியமும் சினிமா-வும் அதிகம். சினிமாகாரர்கள் திருநங்கைகளை சித்திரிக்கும் விதம் பற்றி காட்டமாக விமர்சித்திருக்கிறார்.