Snapjudge

Posts Tagged ‘Teachers’

பயிலும் அரங்கம்: சென்னை இலக்கிய திருவிழா 2023

In Lists, Tamilnadu on ஏப்ரல் 12, 2023 at 11:14 பிப

  1. 06.01.2023: முற்பகல் 12.00 – 1.00 நாளேடுகளும் மாணவர்களும்: திரு. சமஸ்
  2. பிற்பகல் 2.00 – 3.00: அறிவியல் பார்வை திரு. அமலன் ஸ்டான்லி
  3. பிற்பகல் 3.00 – 4.00: மக்களுக்கான சினிமா – ஒரு புரிதல் திரு. வெற்றிமாறன், திரைக்குப் பின்னால் இலக்கியம் திரு.மிஷ்கின்
  4. பிற்பகல் 4.00 – 5.00: காலநிலை மாற்றமும் தமிழ்நாடும் திரு.சுந்தர்ராஜன்
  5. 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: பாலின சமுத்துவம்: திருமிகு நர்த்தகி நட்ராஜ்
  6. முற்பகல் 11.00 – 12.00: நவீனக் கோடுகள்: திரு.அ. விஸ்வம்
  7. பிற்பகல் 12.00-1.00: வரலாறு ஏன் படிக்க வேண்டும் ? திருமிகு அ. வெண்ணிலா
  8. பிற்பகல் 2.00 – 3.00: வட சென்னை மண்ணும் மனிதர்களும் திரு. பாக்கியம் சங்கர்
  9. பிற்பகல் 3.00 – 4.00: இலக்கியமும் சினிமாவும்: திரு.யுகபாரதி திரு. கபிலன்
  10. பிற்பகல் 4.00 – 5.00: திரைப்படமும் இசையும்: திரு. ஷாஜி
  11. * தமிழ்த் திரையும் தமிழக வரலாறும்: திரு.கடற்கரய்
  12. 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: சூழலியல் – ஒரு புரிதல் திருமிகு லோகமாதேவி
  13. முற்பகல் 11.00-12.00: கல்வியும் வாழ்க்கையும்: திரு. ராமு மணிவண்ணன்
  14. பிற்பகல் 12.00 – 1.00: சமூகம் பழகு: திரு. கரு.பழனியப்பன்
  15. பிற்பகல் 2.00 3.00: இலக்கியங்களை கண்டடைவது எப்படி? திரு. முருகேச பாண்டியன் திரு.செல்வேந்திரன்
  16. பிற்பகல் 3.00 – 4.00: காலனிய காலத்து இந்தியா திரு. சிறில் அலெக்ஸ்
  17. பிற்பகல் 4.00 – 5.00: வாசிப்பே வெல்லும் திரு. ஆயிஷா நடராஜன்

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

குழந்தைகள் இலக்கிய அரங்கம்: சென்னை இலக்கிய திருவிழா 2023

In Books, Events, India, Lists, Magazines, Tamilnadu on மார்ச் 5, 2023 at 3:12 பிப

  1. 06.01.2023: பிற்பகல் 12.00-1.00: அன்றாட அறிவியல்: திருமிகு அ. ஹேமாவதி
  2. பிற்பகல் 2.00 – 2.45: சுவையான கதைகள் திருமிகு வனிதாமணி
  3. பிற்பகல் 2.45 – 3.30: இயற்கையிடம் கற்போம் திரு.நக்கீரன்
  4. பிற்பகல் 4.00 – 4.30: பலூன் தாத்தாவின் பாடல்கள் திரு.நீதிமணி
  5. பிற்பகல் 4.45 – 6.00: அப்புசாமியும் அகல்விளக்கும் – சூழலியல் விழிப்புணர்வு பொம்மலாட்டம் கலைவாணன் குழுவினர்
  6. 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: நம்மைச் சுற்றி உயிர் உலகம் திரு.ஆதி. வள்ளியப்பன்
  7. பிற்பகல் 11.15 – 12.15: காடு எனும் அற்புத உலகம் திரு. கோவை சதாசிவம்
  8. பிற்பகல் 12.15 – 1.15: நரிக்கதையும் காக்காப் பாட்டும் திருமிகு ஷர்மிளா தேசிங்கு
  9. பிற்பகல் 2.00 3.00: மந்திரமா? தந்திரமா ? திரு.சேதுராமன்
  10. பிற்பகல் 3.00 – 3.30: பொம்மை சொல்லும் கதைகள்: திரு.பிரியசகி
  11. பிற்பகல் 4.00 – 4.30: சுட்டிக் கதைகள்: குழந்தைகள் ரமணி & மீனா
  12. பிற்பகல் 4.45 – 6.00: மாணவர் கலைத் திருவிழா
  13. 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: கோமாளியின் ஆஹா கதைகள் திரு. கதை சொல்லி சதீஷ்
  14. முற்பகல் 11.15 – 12.15: மேஜிக் இல்லை… அறிவியல்தான்: திரு. அறிவரசன்
  15. முற்பகல் 12.15 – 1.15: கூத்துக் கலைஞரின் கதைகள்! திரு. ‘தெருவிளக்கு’ கோபிநாத்
  16. முற்பகல் 2.00-3.00: உடலை உறுதியாக்கும் விளையாட்டுகள் : திரு. இனியன்
  17. பிற்பகல் 3.00 -3.30: ஆடிப்பாட வைக்கும் வி அக்கா கதைகள் திருமிகு வி அக்கா வித்யா
  18. பிற்பகல் 4.00 – 4.30: முக ஓவிய கதை சொல்லல் திருமிகு அனிதா மணிகண்டன்
  19. பிற்பகல் 5.00 6.00: கொஞ்சிப் பேசலாம் குழந்தைகளே திரு. இரா. காளீஸ்வரன்
  20. நெறியாளர்கள்:
    • திரு. விழியன்,
    • திரு. எஸ் பாலபாரதி,
    • திரு. விஷ்ணுபுரம் சரவணன்

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

List of Cloud-based tools for research: Internet sites for Academic Science and Technology

In Internet, Science, Technology on ஓகஸ்ட் 6, 2014 at 10:55 முப

Sourceavailable for free until Sept 14th 2014
Paywall access here: Science Direct

 

Connecting researchers
Academia LinkedIn for researchers http://www.academia.edu
Addgene Share and order plasmids http://www.addgene.org
Bitbucket Share code https://bitbucket.org
FigShare Share files and figures http://figshare.com
GitHub Share and collaborate to write code https://github.com
LabRoots Research social network http://labroots.com
MyScienceWork Research social network available in eight languages https://mysciencework.com
PlasmID Harvard’s plasmid-sharing platform http://plasmid.med.harvard.edu
Protocols.io Share scientific protocols http://www.protocols.io
ResearchGate Research social network with over 3 million registered users http://www.researchgate.com
SlideShare Share presentation slides http://www.slideshare.net
Collaborative writing
Authorea Web-based LaTeX collaborative writing https://www.authorea.com
Google Docs Google’s online word processor https://docs.google.com
Office Online Microsoft’s online word processor https://office.com
Paperpile Reference manager for Google Docs https://paperpile.com
PubChase Literature search on the go https://www.pubchase.com
SciGit Collaborative writing tool for researchers https://www.scigit.com
ShareLaTeX Web-based LaTeX collaborative writing http://www.sharelatex.com
WriteLaTeX Web-based LaTeX collaborative writing http://www.writelatex.com
Cloud-based electronic laboratory notebooks
CellKulture Laboratory notebook for cell culture http://cellkulture.com
Hivebench Includes inventory and protocol management http://www.hivebench.com
LabArchives Connected with Prism scientific-graphing software http://labarchives.com
Labfolder Simple and effective laboratory notebook https://www.labfolder.com
Labguru All-in-one solution for research groups http://www.labguru.com
Docollab Includes protocol management http://www.docollab.com
Other cloud-based tools
Benchling Web-based suite of bioinformatic tools https://benchling.com
Plotly Web-based plotting software https://plot.ly
RunMyCode Share and run code on the cloud http://www.runmycode.org

 

Top countries with the most competitive educational systems: Best Schools and Colleges

In World on ஒக்ரோபர் 1, 2012 at 8:09 பிப

Source: Can U.S. Universities Stay on Top? – WSJ.com

Education Strength

The Boston Consulting Group’s new E4 index assigns points in four categories, each equally weighted in the final score. Of the 20 countries ranked, here are the top 10.

Country Total points Enrollment points Expenditure points Engineering grads points Elite university points
U.S. 237 25 73 48 91
U.K. 125 4 26 46 48
China 115 86 17 4 8
Germany 104 5 25 37 38
India 104 90 4 3 6
France 87 4 24 41 18
Canada 85 2 25 39 18
Japan 72 7 31 19 16
Brazil 38 17 16 2 3
Russia 32 9 10 10 3

Source: Boston Consulting Group analysis

Top 10 Colleges: Arts: Rankings

In India, Lists on மே 11, 2009 at 4:04 முப

கலை – டாப் 10 கல்லூரிகள்: தரப்பட்டியல் (இந்தியா டுடே)

  1. லயோலா கல்லூரி, சென்னை
  2. செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி, கொல்கத்தா
  3. செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி, மும்பை
  4. செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, தில்லி
  5. மாநிலக் கல்லூரி, கொல்கத்தா
  6. லேடி ஸ்ரீராம் கல்லூரி, தில்லி
  7. மாநிலக் கல்லூரி, சென்னை
  8. இந்துக் கல்லூரி, தில்லி
  9. மிராண்டா ஹவுஸ், தில்லி
  10. சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை

கொசுறு முக்கிய பத்து

  • எஸ்.ஆர்.சி.சி., தில்லி
  • ஸ்டெல்லா மேரீஸ், சென்னை
  • லோரெட்டோ, கல்கத்தா
  • ஜாதவ்பூர், கொல்கதா
  • எல்பின்ஸ்டன், மும்பை
  • சோபியாஸ், மும்பை
  • வில்ஸன், பம்பாய்
  • கிரைஸ்ட் கல்லூரி, பெங்களூரு
  • மௌன்ட் கார்மெல், பங்களூர்
  • செயின்ட் ஜோசப்ஸ், பெங்களூர்

14 தமிழறிஞர் பட்டியல்

In Books, Lists, Literature, Tamilnadu on ஏப்ரல் 9, 2009 at 3:23 முப

  • டாக்டர் மு வரதராசனார்
  • கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை
  • சொல்லின் செல்வர் டாக்டர் ரா பி சேதுப்பிள்ளை
  • தமிழ்த்தென்றல் திரு வி கல்யாணசுந்தரனார்
  • ரசிகமணி டி கே சிதம்பரநாத முதலியார்
  • வித்துவான் தியாகராச செட்டியார்
  • நற்றமிழ் உரை செய்த நல்லூர் ஆறுமுக நாவலர்
  • நாவலர் சோமசுந்தர பாரதியார்
  • பேரறிஞர் பரிதிமாற் கலைஞர் (வி கோ சூரியநாராயண சாஸ்திரியார்)
  • தமிழ்த் தாத்தா டாக்டர் உ வே சாமிநாதையர்
  • பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
  • தமிழ்க்கடல் மறைமலையடிகள்
  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • பைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரைத் தேவர்

அவள் விகடன் :: என்ன படிக்கலாம்? – டாப் 10 படிப்புகள்!

In India, Life, Lists, Magazines on ஜனவரி 27, 2009 at 4:31 முப

ஏப்ரல் 2008

“ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?” என்கிற கேள்வி எழும்போதே “எந்தப் படிப்பு ‘மோஸ்ட் வான்டட்’?” என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது.

உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்-படுத்தியுள்ளது.

என்ஜினீயரிங் துவங்கி பி.பி.ஏ-வில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்-து-வத்தையும் பற்றி இங்கே விளக்கமாகச் சொல்-கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாளரான ஜெயபிரகாஷ் காந்தி.


”பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது.. என்றெல்லாம் முடிவெடுக்கவே கூடாது.

எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்து விடுமா.. என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

காரணம்.. படித்து முடிக்கும்போதே.. பல நேரங்களிலும் ‘கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால் முடிக்கும் முன்னரே.. பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை.. சில வருடங்களிலேயே லட்சத்தை தொடும் அளவுக்கு சம்பள உயர்வு.. வெளிநாட்டு வேலை வாய்ப்பு.. என இத்துறையில் பெருகிக் கொண்டே இருக்கும் தேவைகள்தான்!

பி.இ படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆஃப் மார்க் 180-க்கு மேலே இருந்தால், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்ஸை தேர்ந்தெடுங்கள். அதற்குக் கீழ் என்றால், கோர்ஸூக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியை தேர்ந்தெடுங்கள்.

காலத்துக்கேற்ப அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல் கல்வியில், இப்போது இன்னும் புதுப் புதுத் துறைகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் துறைகளை விட, இன்று இவைதான் ‘மோஸ்ட் வான்ட்டட்’ ஆக உள்ளன.

அவை என்னென்ன என்று பார்க்கலாம்..

இதன் காரணமாக கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என எந்தத் துறைக்கான உற்பத்தியாக இருந்தாலும், அதில் இந்தப் பொறியாளர்களுக்கான வேலை உறுதியாக இருக்கிறது. பொறியியல் படிப்புகளிலேயே எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடிகிற ஒரே படிப்பு இதுதான்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இந்தப் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

என்.ஐ.எஸ்.ஈ.ஆர்., தன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரத்தை ஸ்காலர்ஷிப்-பாக வழங்கி ஊக்குவிக்கிறது.

கிட்டத்தட்ட இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் யுகத்தின் அத்தனை புதிய அம்சங்களையும் பயிலக் கொடுக்கும் இந்த கோர்ஸில், முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு அடிப்படை பாடங்களும், மூன்றாவது செமஸ்டரில் இருந்து ஸ்பெஷலைஸ்டு பாடங்களும் கற்பிக்கப்படும். அடாமிக் எனர்ஜி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் இதற்கான வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன.

இந்தப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான ‘நெஸ்ட்’, ‘ஹோமி பாபா சென்டர் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன்’-ன் மேற்பார்வையில் இந்தியாவின் பல நகரங்களிலும் நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு, பொதுப் பிரிவு, மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி என ஐந்து பாகங்களாக பிரித்து நடத்தப்படும்! வினாக்கள் ‘அப்ஜக்டிவ்’ முறையில் அமைந்திருக்கும்.

விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படித்தவர் களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.

இது சென்னை ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி, கோவை, அமிர்தா யூனி வர்சிட்டி மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.

பயோ சென்ஸார்ஸ், எலெக்ட்ரோ கெமிக்கல் சென்ஸார்ஸ், எரிபொருட்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற சிறப்பு மிக்க துறைகளில் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயர்களுக்-கான வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்தக் கல்வி காரைக்குடியில் உள்ள ‘சிக்ரி’ (சி.இ.சி.ஆர்.ஐ – சென்ரல் எலெக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்)-ல் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இதற்கு மாணவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தும் உயிர்வேதிப் பொருட்களைப் பற்றி படிக்கும் இந்த பார்மாஸ¨ட்டிகல் என்ஜினீயரிங், ஒரு தனித்துவமான பாடப்பிரிவாகவே கருதப்படு-கிறது.

புதிய புதிய மருந்துகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும், அவற்றுக்கான தேவை அதை விட அதிகமாகவே இருப்பது நிதர்சனம். எனவேதான் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் நிறைய இருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்தப் பாடப்பிரிவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி, அண்ணா யூனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன.

வேதியியல் தொழிற்சாலைகள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் இதற்கான வேலை வாய்ப்பு நிறையவே உள்ளது. ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் இப்போது இந்தத் துறையில் கால் பதித்திருப்பது, இதற்கான எதிர்கால தேவையை உறுதி செய்கிறது.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை, திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இதற்கான கோர்ஸ்கள் உள்ளன. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படு-வார்கள்.

இப்போது மருத்துவமனைகளில் நாம் பார்க்கிற எம்.ஆர்.ஐ. மற்றும் ஈ.சி.ஜி. உபகரணங்கள், நோய் கண்டறியும் மருத்துவ மெஷின்கள் முதலியவை இந்தத் தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையே.

இப்படியான கருவிகளை கட்டமைப்பது, அவற்றை மருத்துவமனைகளில் நிறுவுவது, அதன் கட்டுப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகள் அடங்கியது இதற்கான வேலைவாய்ப்பு. நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் புகுத்தப்படும் மருத்துவத் துறையில் இந்தப் படிப்பை முடித்த வர்களுக்கான தேவையும் பெருகிக் கொண்டே செல்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் பதினான்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு பொது கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

என்ஜினீயரிங் மேத்ஸ், மெக்கானிக்ஸ், மெஷின் காம்போனென்ட் டிசைன், தெர்மோ டைனமிக்ஸ், பவர் என்ஜினீயரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கிய இந்தப் படிப்பு, கோவையில் உள்ள குமரகுரு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் அவினாசி-யிலுள்ள மஹாராஜா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.

அண்ணா யூனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலமும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஆண், பெண் என இரு பாலருக்குமான இந்தப் படிப்பு, கேரளாவில் உள்ள கொச்சின் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்-னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்லூரி-களில் உள்ளது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்-கான நுழைவுத் தேர்வினை நடத்து-கின்றன.

இதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்-கும் ஆய்வாளர்களின் தேடல்களுக்கும் தீர்வு எடுக்க திட்டங்கள் முடுக்கப்படும். மாணவர்-களை இதற்காக தயார்படுத்தும் படிப்புதான் ‘பி.டெக். அக்ரிகல்ச்சர் இன்ஃபர்மேஷன் டெக்னா-லஜி’. நாட்டில் எழுபது சதவிகிதம் வரை உள்ள விவசாய சமுதாயத்துக்கு இனி வரும் நாட்களில் இன்னும் தனி கவனம் தரப்படும் என்பதால், இதற்கான வேலை வாய்ப்புக்கும் அதிக நம்பிக்கை உள்ளது.

அக்ரிகல்ச்சுரல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், டெவலப்மென்ட்டல் எகனாமிக்ஸ், மல்டிமீடியா டெக்னாலஜி, ஃபார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற பாடப் பிரிவுகள் உள்ளடங்கிய இந்தப் படிப்பை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்ற வருடத்தில் இருந்து கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அளிக்கிறது. இதற்காக தனியாக இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நன்றி : அவள் விகடன்