நூறு புத்தகங்களாவது ஜெயமோகன் எழுதியிருப்பார். அதில் எனக்குப் பிடித்த தலை பத்து (சரி… பன்னிரெண்டு ஆகிவிட்டது; அதற்கே தாவு தீர்கிறது! ஈராறு கால்கொண்டெழும் புரவி எல்லாம் சேர்க்க முடியவில்லை) நூல்கள் கீழே காணலாம். இதில் மஹாபாரதம் கிடையாது (இன்னும் வாசிக்கவில்லை); சிறுகதைத் தொகுப்புகளுக்கு ஒன்று உண்டு; நாவல்களும் உண்டு; கட்டுரைகள் எனக்கு உவப்பானவை – எனவே அவை நிறைய உண்டு:
- இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
- ஏழாம் உலகம்
- இலக்கிய முன்னோடிகள்
- புறப்பாடு
- காடு
- அபிப்பிராய சிந்தாமணி
- ஜெயமோகன் குறுநாவல்கள்
- பின் தொடரும் நிழலின் குரல்
- சங்கச்சித்திரங்கள்
- விஷ்ணுபுரம்
- சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்
- ஜெயமோகன் சிறுகதைகள்

உதவி: