தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்குப் படங்களில் எந்தத் திரைப்படங்கள் கர்னாடக இசையையோ சாஸ்திரீய சங்கீதத்தையோ அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கின்றன? அவற்றில் எந்த சினிமாக்கள் இன்றும் உங்களின் மனதில் நிலைத்திருக்கின்றன? ஹிந்துஸ்தானி என்றோ ராப் பாடல் என்றோ மியூசிகல் என்றோ எதைச் சொல்வீர்கள்?
எந்த வரிசையிலும் இல்லை.
தில்லானா மோகனாம்பாள் (1968)
தியாகய்யா (1946) – தெலுங்கு
சர்வம் தாள மயம்
சங்கராபரணம் (శంకరాభరణం) – தெலுங்கு
Rock On!! (2008) – ஹிந்தி
Gully Boy (2019) – ஹிந்தி
சுவாதித் திருநாள் (1987) – மலையாளம்
கொஞ்சும் சலங்கை (1962)
அருணகிரிநாதர் (1964)
நந்தனார் (1942, 1935)
மீரா (1945, 1979)
Baiju Bawra (1952)
இசையை சும்மா ஊறுகாய் மாதிரி வைத்துக் கொண்டு தமிழ்ப்பட மசாலா ஆன காதல், அம்மா செண்டிமெண்ட், சண்டை எல்லாம் வைத்து எடுக்கப்பட்ட ஜனரஞ்சகப் படங்கள்:
எலந்தப் பழம், செக்கச் சிவந்த பழம், தேனாட்டம் இனிக்கும் பழம் – கண்ணதாசன்
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டுமென்றார் – வாலி
மல மல மல மருத மல மல்லே மருத மலை – வாலி
வாடி என் கப்பக்கிழங்கே… எங்க அக்கா பெத்த முக்காத்துட்டே – கங்கை அமரன்
“இந்த விளையாட்டுக்கு நான் வரல்லே” என்று கவி காமு ஷெரீப்பை திரையுலகத்தை விட்டே துரத்திய பெருமை #8 பாடலைச் சேரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடலிது. “ஒழுக்கக்கேட்டைப் பறைசாற்றி, சமுதாயத்தை சீர்கெடுக்கும் பாடல்” என்று தன் முழு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து “இனி திரைப்படத்திற்கே பாடல் எழுதவதில்லை” என்ற சபதத்தை மேற்கொண்டார் கவி கா.மு.ஷெரீப்.
இது ஸ்னோ கொட்டும் குளிர்காலம். தமிழருக்கும் பனிக்கும் ஸ்னாந ப்ராப்தி கிடையாது. இருந்தாலும் இமயவரம்பன் என்று பெயரிலும் கரிகால் சோழன் என்று விசிட்டரிலும் ஹிமாச்சல் பிரதேசம் சென்றவர்கள். சிம்லா ஸ்பெஷல் போல் காதல் மன்னர்களும் கால் பதித்த பூமி.
என்னைப் பொருத்தவரை தமிழ் சினிமாவில் இருந்து பனிக்காலத்திற்கு பொருத்தமான திரைப்பட பாடல்கள்:
1. பாடல்: எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி திரைப்படம்: கந்தசாமி எழுதியவர்: இளங்கோ – விவேகா வரி: எம்ப்டி ஐபாடே — உன்னை ஸ்விட்ச் ஆன் பண்றது வேஸ்ட்டு ஏன்: ஐ-பாட் காலியாக இருக்கும்போது உயிர் கொடுக்காவிட்டால், எப்படி அந்த ஐ – பாடில் பாடல்களை ஏற்றுவது? மேலும், வாங்கும்போது எல்லா எம்பி3 ப்ளேயர்களும் எந்தவித ஒலிப்பேழையும் இல்லாமல்தான் இருக்கும்.
2. பாடல்: தாய் சொல்லும் உறவை வைத்தே திரைப்படம்: கனாக் கண்டேன் எழுதியவர்: வைரமுத்து வரி: 17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கைதானே பாலூத்தும் காலம் வரைக்கும் கூட வரும்! ஏன்: +2 மதிப்பெண் வைத்தே அண்ணா பொறியியலும், மெட்ராஸ் மெடிகலும் கிடைக்கும் என்றாலும், சட்டம் பயில்வது, தொழில் முனைவது, கலைகளில் சிறந்தோங்குவது என்று தமிழகம் அமெரிக்காவாகும் காலம் இது.
4. பாடல்: போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி திரைப்படம்: சிங்காரவேலன் எழுதியவர்: ? வரி: காவேரி அல்ல… அணைபோட்டுக் கொள்ள ஏன்: இன்றைய காவிரியில் தண்ணீர் எங்கே இருக்கிறது? கர்நாடக டி.எம்.சி. வந்தாலும், பாசன ஏரிகள் எல்லாம் ஃப்ளாட் அகி விட்டனவே!
5. பாடல்: ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை திரைப்படம்: மீரா எழுதியவர்: ? வரி: எனையும்தான் உன்னைப் போலே… படைத்தானே… இறைவன் எனும் ஓர் தலைவன் ஏன்: பகுத்தறிவிற்கும் (கடவுள்?) அறிவியலுக்கும் (வளர் உருமாற்றம்) இலக்கியத்திற்கும் (Franz Kafka: Metamorphosis) பெண்ணியத்துக்கும் (ஆண் இறை) எதிரான கொள்கையை விரிக்கும் கவிதை.
6. பாடல்: வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே திரைப்படம்: மெல்லத் திறந்தது கதவு எழுதியவர்: ? வரி: உனைச்சேர எதிர்பார்த்தேன்; முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன் ஏன்: இது போலி சாமியார் வகையறா. ஏழு ஜனனமும் தெரிவதெல்லாம் அக்மார்க் கப்சா.
7. பாடல்: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் திரைப்படம்: பொல்லாதவன் எழுதியவர்: ? வரி: வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே ஏன்: வௌவாலுக்கு உலகம் நேராகத்தான் இருக்கும். நமக்குத்தான் அது upside down.
8. பாடல்: காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா திரைப்படம்: சின்ன மாப்பிள்ளை எழுதியவர்: ? வரி: கந்தன் தேடி வந்த வள்ளி ஏன்: வள்ளியை நினைத்து, ஏங்கி, காதல் கொண்டு, இன்றைய தினத்தில் பிறந்த நாள் கொண்டாடும் கணேசரின் உதவியோடு, வசியமாக்கி, மணம் புரிந்தது சரித்திரம் (அல்லது ஆன்மிக புராணம் [அல்லது தலவரலாறு])
9. பாடல்: சின்னத் தாயவள் தந்த ராசாவே திரைப்படம்: தளபதி எழுதியவர்: வரி: தேய்பிறை காணும் வெண்ணிலா ஏன்: ‘வளர்பிறை என்பதும் தேய்பிறையென்பதும் நிலவுக்குக் கிடையாது!’ (அப்படியே இருந்தாலும், வெண்ணிலவே தேய்பிறையைக் காண முடியுமா?)
10. பாடல்: ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ! திரைப்படம்: தாய் மூகாம்பிகை எழுதியவர்: வாலி வரி: ஜகன் மோஹினி நீ ஏன்: ஜெயமாலினிதான் ஜெகன்மோகினி என்பது ஊரறிந்த தகவலாச்சே!
5. Thriller
MTV வீடியோக்களிலேயே மிகப் புகழ்பெற்றது. ஜாக்ஸனின் ஆட்டம், பேய்களின் ஆட்டம், மேலாக ஆட்டத்துடன் பின்னிப் பிணைத்திருக்கும் மகிழ்ச்சி, நகைச்சுவை – இவை அனைத்தும் இந்தப் பிணங்களின் பாடலை மரணமற்றதாக ஆக்குகின்றன.
6. Beat it
ஆட்டத்திற்காகப் பிறந்த பாடல் இது. எட்டி வான் ஹாலனின் கிதார் இசை வேறு உலகத்தைச் சார்ந்தது.
7. Wanna Be Startin’ Somethin’
திரில்லர் ஆல்பத்தின் முதல் பாடல். வேகமான பாடல். மமஸே, மமஸாமமா!
8. We are the world:
மேற்கத்திய இசையின் புகழ்பெற்ற அனைவரும் பாடிய பாடல் இது. ஜாக்ஸன் அவர்தான் அரசன் என்பதைக் கோடிட்டுக் காட்டும் பாடல்.
9. Black or white:
இந்த வீடியோவைப் பார்க்காதவர்களே இருக்க முடியாது என்று நினைக்கிறேன். திகட்டாத பாடல். முகம் மாறிக்கொண்டே வருவது திகட்டத் திகட்ட நகலெடுக்கப்பட்டாலும்.
10. Jam
இது மற்றொரு மைக்கேலுக்காக-மைக்கேல் ஜோர்டன் -பார்க்க வேண்டியது. ஜோர்டனுக்கு ஜாக்ஸன் ‘மதிநடை’ நடக்கச் சொல்லிக் கொடுக்கிறார். அவர் இவருக்குக் கூடைப்பந்து விளையாடச் சொல்லிக் கொடுக்கிறார்.