Snapjudge

Posts Tagged ‘Rap’

நிகழ்த்துக் கலைகள்: சென்னை இலக்கிய திருவிழா 2023

In Events, Lists, Literature, Magazines, Tamilnadu on மார்ச் 4, 2023 at 5:10 பிப

  1. 06.01.2023: பிற்பகல் 5.15 – 6.00: மக்களிசைப் பாடல்கள்: தண்டரை சகோதரிகள் உமா & ராஜேஸ்வரி
  2. பிற்பகல் 6.00 – 7.15: மாற்று ஊடக மையம் வழங்கும் மண்ணின் கலைகள்: திரு.இரா. காளீஸ்வரன்
  3. பிற்பகல் 7.30 – 9.00: பிரசன்னா ராமசாமியின் “68,85,45 + 12 லட்சம்’: திரு. பிரசன்னா ராமசாமி
  4. 07.01.2023: பிற்பகல் 5.15 – 6.00: ராப் இசை: திரு. தெருக்குரல் அறிவு
  5. பிற்பகல் 6.15 – 7.15: மரப்பாச்சி குழு வழங்கும் ‘உள்ளுரம்’: திருமிகு அ. மங்கை
  6. பிற்பகல் 7.30 – 9.00: சென்னை கலைக் குழு வழங்கும் மகேந்திரவர்ம பல்லவனின் ‘மத்த விலாசப் பிரகசனம்’: திரு.பிரளயன்
  7. 08.01.2023: பிற்பகல் 5.15 6.00: மக்களிசை: திரு. கரிசல் கிருஷ்ணசாமி திரு. கரிசல் கருணாநிதி திருமிகு வசந்தி திரு. உடுமலை துரையரசன்
  8. பிற்பகல் 6.30-8.00: வெளிப்படை அரங்க இயக்கம் வழங்கும் அல்லது இணையற்ற வீரன்’

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பத்துப் பாட்டு

In Movies, Tamilnadu on ஓகஸ்ட் 28, 2009 at 2:51 முப

தமிழ் சினிமாவில் எழுதப்படும் திரைப்பாடல்கள் எத்தனை வகைப்படும்?

  1. கிராமிய, நாட்டுப்புற, தெம்மாங்குப் பாடல்
  2. கொச்சை மொழி, கிளுகிளுப்பு, பேரரசு வகையறா, குத்தாட்டப் பாடல்
  3. ஆங்கிலப் பாடல்களின் தமிழாக்கம்; ஆங்கில வரிகள் அப்படியே வரும் ராப்
  4. பட்டியல் பாடல்கள்; பெயர்ச்சொல்லும் அதற்கு உரித்தான வினைகளும் என்று pattern பாட்டு
  5. அதீத கற்பனை; உயர்வு நவிற்சி கவிதை
  6. நாயக பாவம்; பரணி; ஹீரோ அறிமுகப் பாடல்; இசையமைப்பாளர் துதி; ஸ்தோத்திர வகை.
  7. புரியாத சொற்றொடர்கள்; அன்னிய மொழிப் பதங்களை மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடும் வரிகள் கொண்ட விளங்காப் பாடல்
  8. ரீ-மிக்ஸ்; புகழ் பெற்ற பழைய பாடல்கள தேய்ந்த vinylல் கொடுக்கும் மறு-வாந்திப் பாடல்
  9. Ctrl+C; அராபிய, ஸ்பானிஷ், உருது, உலக இசையை அப்படியே பிரதியெடுக்கும் இசைப் பாட்டு
  10. இதெல்லாம் இல்லாத பாக்கி பாடல்கள்: சாஸ்திரீய கச்சேரி; சாமி பாட்டு; கானா.