1. விழித்திருப்பவனின் இரவு: உலக இலக்கியச்சிமிழ்
தமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப் பேசியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப் பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாக வேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கிய இதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்.
2.
3. இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்
அற்பமான, அன்றாட வாழ்வு சார்ந்த புற யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவு செய்வதிலேயே திருப்தி காண்கிற இலக்கியப் போக்கிலிருந்து விலகி இலக்கிய ஆக்கம் குறித்தான மகத்தான கனவுடன் ஆக்கப்பட்ட உண்மையான தீவிரமுயற்சி இப்படைப்பு. ஒரு நாவல் உருவாக்குவது ஒரு புனைவு வெளியைத்தான் என்ற நவீனப்பிரக்ஞை இதில் உள்ளது. இதனுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்க நவீன இலக்கிய ஆக்கம் என இடாலோ கால்வினோவின் ‘புலப்படா நகரங்கள்’ நாவலைச் சொல்லலாம்.
4. பாரதி மகாகவியே: விவாதம்- ஒரு கடிதம்
பாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன
எஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது.
எஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உலகம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.
6. யாமம் : எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு
7. காமத்துக்கு ஆயிரம் உடைகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’
8. ஜெய்? மோகன்?
ஜேம்ஸ்பாண்டு உடையில் தோன்றி ஜெய்சங்கர் பரிமளிக்கும் படங்களை பார்க்கும் இவர் என்னய்யா நம்ம ஜெயமோகன் மாதிரியே நடிக்கிறதும், சாடி குதிக்கிறதும், நகத்தை கடிக்கிறதும். உணர்ச்சிவசப்படுறதும், எதுக்குனு தெரியாம சண்டை போடுறதுமா செய்றாரே என்று பல முறை சிரிப்பை அடக்க முடியாமல் திணறியிருக்கிறேன். உண்மையில் இப்போது தான் அவருக்கு ஜெய் என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.
& எஸ்ரா : ஆளுமை, நகைச்சுவை & பகிடி
எங்களூரின் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்?” என்றார்.
”தெரியுமே”
”உங்ககூட பேசுவாரா?”
”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”
”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”
அந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.
9. எஸ்ராவுடன் ஒரு உரையாடல் – கெ.பி.வினோத்
’கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும் தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்’ என எஸ்.ராமகிருஷ்ணன் கரிசலை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார்.
கொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார் . [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் – — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது . நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் ]
– எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர்