Snapjudge

Posts Tagged ‘Questions’

Bala’s Paradesi: How he should have taken the movie?

In Movies, Tamilnadu on மார்ச் 23, 2013 at 4:02 முப

பரதேசி திரைப்படம் எடுத்த இயக்குநர் பாலா, இப்படி செய்திருக்க வேண்டும், அப்படி உருவாக்கியிருக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளும் ஆலோசனைகளும் இணையத்தில் வெளியாகிறது. நானும் உள்ளேன் அய்யா…

  1. இடைவேளைக்குப் பிந்திய இரண்டாவது பகுதியில் குத்தாட்டம் இல்லாதது மிகப் பெரிய குறை. ’காளை’ படத்தில் குட்டிப் பிசாசே என்று குத்தாட்டம் போட்ட மாதிரி அதர்வா கதாபாத்திரத்தின் கற்பனையோடு வேதிகாவின் கிளப் டான்ஸ் வைத்திருக்க வேண்டும்.
  2. தன்னுடைய நிறுவனத்திற்கு ‘B Studios’ என்று ஆங்கிலத்தில் வைத்ததற்கு பதிலாக ‘பா கலைக்கூடம்’ என தமிழ்ப்பறோடு பெயர் சூட்டியிருக்க வேண்டும்.
  3. இரு பெண்களுக்கு நடுவில் சண்டை வருவது போல் காட்சி அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதுவும் தேய்வழக்காக மணப்பெண்ணின் அம்மாவிற்கும் மாப்பிள்ளையின் பாட்டிக்கும் பிணக்கு வருமாறு அமைத்திருப்பதற்கு பதில் ஆங்கிலேயரை அடித்துத் துவைப்பது போல் காட்சி வைத்து, பார்வையாளருக்கு திருப்தி கொடுத்திருக்க வேண்டும்.
  4. தமிழகத்தில் 1939ல் ரொட்டி இருந்திருக்க வாய்ப்பேயில்லை. பொறையும் பன்னும் மட்டுமே கிடைக்கும் நாயர் கடை அமைத்திருக்க வேண்டும்.
  5. தெலுங்குப் படத்தில் இரண்டு ஹீரோயின் சர்வ சகஜம். அது போல் தன்ஷிகாவையும் அதர்வா உடன் சேர்த்து நினைக்க வைத்திருக்க வேண்டும்.
  6. படத்தின் துவக்கத்தில் டைட்டில் வருகிறது. இப்பொழுதெல்லாம் சடாரென்று படத்தை ஆரம்பிப்பதுதானே வழக்கம்?! கட்டாங்கடைசியில் மட்டுமே தலைப்பும் இன்ன பிற எழுத்துகளும் வந்திருக்க வேண்டும்.
  7. முன் பின்னாக காட்சியைக் கலைத்துப் போட்டு திரைக்கதை பின்னுவது இன்றைய சினிமா ஃபேஷன். அதன்படி, கொஞ்சம் தேயிலைத் தோட்டம், கொஞ்சம் மூங்கில் தோட்டம், கொஞ்சம் மாந்தோப்பு எல்லாம் அறுவடை செய்திருக்க வேண்டும்.
  8. தேயிலையை விட காபி இன்னும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. காபியை விட புகையிலை இன்னும் நோய் தரக் கூடியது. புகையிலையை விட கஞ்சா இன்னும் அடிமையாக்கி அழிக்கும் ஆபத்து நிறைந்தது. எனவே, அவற்றின் அட்டை போல் உறிஞ்சும் தன்மைகளைத்தான் திரைக்கதை ஆக்கியிருக்க வேண்டும்.
  9. ஓட்டுச் சுவடிகளில் எழுத்தே தெரியாமல் காட்சியாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். அந்தக் கால எழுத்தாணிகளைக் கொண்டு ஓலைச்சுவடி எழுத்துகளைத் தெளிவாக திரையில் காண்பித்திருக்க வேண்டும்.
  10. இந்தியில் ஷாரூக் கான் நடித்த படமான ‘பர்தேஸ்’ படம் என்று தமிழரை ஏமாற்றும் விதமான தலைப்பை மாற்ற வேண்டும்.

நிறைவேற்றுவதற்கு பெட்டிஷன் போட்டிருக்கிறேன்.

Book Quiz on Modern Tamil Lit: புத்தகப் புதிர் – 10

In Books, Literature, Magazines, Tamilnadu on ஜூலை 7, 2011 at 1:34 பிப

1. ‘பெரிய மரமும் சிறிய மரமும்’ உலக நாடோடிக்கதைகளை தமிழில் வழங்கியவர் யார்?

2. கமலாதாஸ் வழங்கும் மாதவிக் குட்டியின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்தவர்?

3. ‘முள்ளி வாளிணிக்காலுக்குப்பின்’- ஈழத்தமிழ்க் கவிதைத் தொகுதியின் தொகுப்பாசிரியர் யார்?

4. கூத்துக் கலைஞர்கள் பற்றிய ‘அருங்கூத்து’ நூலின் ஆசிரியர் யார்?

5. ‘ஆமென்’ தன் வரலாற்று நூலின் மூலஆசிரியர் சிஸ்டர்ஜெஸ்மி. இதைத் தமிழில் தந்தவர் யார்?

6. ‘கருப்பாளிணி சில ஆப்பிரிக்க மேகங்கள்’ கருப்பின கவிதை நூலின் தொகுப்பு ஆசிரியர் யார்?

7. ‘தமிழ்த் திரைப்படமும் பண்பாட்டு அரசியலும்’ – நூலின் ஆசிரியர் யார்?

8. ‘அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது’- குறுநாவல் யாருடையது?

9. விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ எனும் ராஜீவ் சர்மாவின் ஆங்கில நூலைத் தமிழில் தந்தவர் யார்?

10. ‘யாருமற்ற நிழல்’ யாருடைய கவிதைத் தொகுதி?

Source: Puthagam Pesuthu

விடைகள்

1. யூமா வாசுகி
2. உதயசங்கர்
3. குட்டிரேவதி
4. தவசிக்கருப்பசாமி
5. குளச்சல் மு. யூசுப்
6. மதியழகன் சுப்பையா
7. மா. சின்னப்பொண்μ
8. வ.ஐ.ச. ஜெயபாலன்
9. ஆனந்தராஜ்
10. தேவதச்சன்

வலைப்பதிவரிடம் பத்து வினாக்கள்

In Blogs, Life, Lists on ஒக்ரோபர் 21, 2010 at 7:02 பிப

சென்னைக்குப் போகிறேன். வலைப்பதிவரை சந்திக்கலாம். என்ன கேள்வி கேட்கலாம்? எதற்கு விடை அறிய ஆவல்?

  1. ஏன் வலைப்பதிகிறீர்கள்?
  2. உங்களுக்கு மணமாகிவிட்டதா? குழந்தை உள்ளதா?
  3. வேலை? ஊதியத்துக்கேற்ற உழைப்பைத் தருவதாக நினைக்கிறீர்களா?
  4. கடைசியாக பதவி மாறியது எப்போது?
  5. ட்விட்டர், ஃபேஸ்புக் பிடித்திருக்கிறதா? பதிவு அதிகம் பிடிச்சிருக்கா?
  6. குமுதம், விகடனில் எழுத ஆசையா?
  7. தமிழ்ப்பேப்பர், திண்ணை, சொல்வனம் குறித்த உங்கள் எண்ணம்.
  8. உங்கள் பதிவு எந்த இடங்களில் கவனிக்கப்பட்டிருக்கிறது?
  9. வலைப்பதிவு அறிமுகம் இல்லாதவர்களால், உங்கள் பதிவு எவ்வாறு நோக்கப்படுகிறது?
  10. பைசா பிரயோசனம் உண்டா?

Why do we read Fiction?

In Books, Literature on செப்ரெம்பர் 30, 2009 at 1:52 பிப

உதவி: புள்ளி – சித்ரன்

கதைகளோ, நாவல்களோ படிப்பது என்பது

  1. சும்மா பொழுதுபோக்கிற்காகவா?
  2. குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கான ஆராதனை?
  3. மனதைக் கொள்ளைகொண்ட படைப்பாளியின் நடை மேல் எழும் கவர்ச்சி கலந்த ஆர்வமா?
  4. இலக்கிய தாகமா?
  5. கமர்ஷியல் ஆசையா?
  6. கதையில் வரும் சம்பவங்களோடு தன் வாழ்வில் எதையாவது பொருத்திப் பார்த்து மகிழ்ச்சி அல்லது துக்கப்படுவதற்கா?
  7. தன் வாழ்வுக்கெட்டாத, கற்பனை செய்து பார்க்க இயலாத நிகழ்வுகளை கதைகளில் படித்துக் களிக்கிற திருப்தியா?
  8. பொது அறிவு வளர்ப்பதற்கா?

போப் பத்து

In Religions, Science on மார்ச் 30, 2009 at 11:48 பிப

செய்தி:

ஹெச்.ஐ.வி நோய் பரவுவதை தடுக்க ஆணுறை பயன்படுத்துவதில் பயனில்லை என்றும், இது பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் என்றும் எய்ட்ஸ் பிரச்சினையை ஆணுறைகள்தான் அதிகமாக்குகின்றன என்று சென்ற வாரம் கத்தோலிக்க மதகுரு போப்பாண்டவர் 16வது பெனடிக்ட் கூறியிருந்தார்.

ஆன்மிக மற்றும் விழிப்புணர்வு தான் இதற்கு தீர்வு என்றும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே மனிதாபிமானம் மற்றும் நட்புடன் பழகுவதே தீர்வாக இருக்கும் என்றும் போப் கூறியிருந்தார்.

போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் அங்கோலா தலைநகர் லுவாண்டாவில் பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான அரங்கில் 30 ஆயிரம் பேர் சென்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் இறந்தனர்.

ஏன் சொன்னார்?

  1. போகிற போக்கில் பெட்ரோல் தீர்ந்துடும் போலிருக்கு. போப் மொபைலை இழுக்க ஆள் தேவை. மதகுருவை தேர் கட்டி இழுத்தால் எயிட்ஸ் போயிரும்னு சொன்னால் போகிற வழிக்கு பாதகமில்லே.
  2. டாக்டர். கஸ்தூரிரங்கன் ஆராய்ச்சி அப்படித்தான் சொல்லிச்சு. தமிழன் சொன்னதை தரணிக்கு சொன்னார்.
  3. ‘முகமது நபியவர்கள் இவ்வுலகத்துக்கு கொண்டுவந்தது தீமை தான்’ என்று சொன்னதைப் போல் பரபரப்பு கொண்டு வரத்தான். இப்படி கவன ஈர்ப்பு செய்யாவிட்டால் எவர் சீந்துவார்?
  4. மக்கள் தொகை எக்க்ச்சக்கம் ஆகிவிட்டது. பிறகு எப்படிக் குறைப்பது!
  5. அமெரிக்க மதகுருமார் – தேவாலயத்தில் தொண்டாற்ற வந்த பச்சிளம் பாலகர்களுடன் உறவு கொண்டபோது போட்டுக் கொள்ளாத ஆணுறை இப்போது மட்டும் எதற்கு?
  6. பெண்ணுக்கு பெண்ணுறை இல்லாத சமச்சீர் கிடைக்காத சமூக அறச்சீற்றம்.
  7. இந்தப் பற்றற்ற லோகத்தில் அனைத்தையும் துறப்பதே கிறித்துவ மதத் தலைவரின் குறிக்கோள். பட்டாடையும் வண்ணமயமான இருப்பிடமும் விட்டபிறகு, காண்டத்திற்கு ஏது இடம்?
  8. இளைஞர்களிடம் ‘செய்யாதே’ என்று சொன்னால் செய்வார்கள். எனவே, எதிர்மறை உபயோகம்.
  9. Average breakage rate of all condoms: 1,168/25,184 = 4.64%
    Average slippage rate of all condoms: 636/18,495 = 3.44%
    Total failure rate of all condoms: 8.08%
  10. இன்னும் போப் சொல்வதையெல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொண்டிருக்கீங்க?!

வாக்குமூலம்: நகுலன் – வினா வரிசை: எனக்குப் பிடித்த பத்து வினா

In Books, Life, Questions on மார்ச் 12, 2009 at 4:40 முப

  1. நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள்?
  2. நீங்கள் உங்களுடேனேயே பேசிக் கொள்வதுண்டா?
  3. நீங்கள் முன்கோபியரா அல்லது எதையும் சகித்துக் கொள்ளும் இயல்புடையவரா?
  4. உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு ஆட்கள் உங்களைச் சாமர்த்தியமாக ஏமாற்றியிருக்கிறார்கள்? நீங்கள் அவர்கள் மீது சட்டபூர்வமாக ஏதாவது நடவடிக்கை எடுத்ததுண்டா?
  5. ஊழலை அறவே ஒழிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
  6. உங்கள் பிள்ளை மருமகன்மார் இவர்களில் சிலர் உங்களை விடப் பதவியில் பொருளாதார வகையில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதால் அவர்களைக் காணும் போது தாழ்வுநிலை மனப்பானமை அடைகிறீர்களா?
  7. நீங்கள் எல்லோரரையும் நம்பி எளிதில் ஏமாந்திருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரையும் சந்தேகக் கண்கள் கொண்டே பார்க்கிறீர்களா? உலகில் நல்லவர்களே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?
  8. நீங்கள் எப்பொழுதாவது ஒரு சிநேகபாவமான உறவு வைத்துக் கொள்ள முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றிருக்கிறீர்களா?
  9. வாழ்க்கையில் உங்களுக்கு மிகக் கசப்பான அனுபவம் எது?
  10. உங்களுக்கு உங்கள் தொழில், பணம் சம்பாதிப்பது இவைகளைத் தாண்டி ஏதாவது லஷியம் உண்டா?

நகுலன் எழுதிய ‘வாக்குமூலம்‘ நாவலில் இருந்து; தொடரும்

சுஜாதா கேள்விகள்: கற்றதும் பெற்றதும் (ஆனந்த விகடன்)

In Life, Questions on பிப்ரவரி 23, 2009 at 6:32 பிப

இன்றைய தினங்களில் எல்லாமே விழுக்காடு அல்லது எண்ணிக்கைதான். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து ஐ.ஐ.டி. அனுமதித் தேர்வு வரை வாழ்வில் உள்ள இலக்கங்களும் விழுக்காடுகளும் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கேள்விகளின் அருகில் ஒரு பென்சிலால் விடை எழுதிப் பாருங்கள் (பேனாவால் எழுதினால், அப்புறம் மாற்ற முடியாது).

நீங்கள் எத்தனை விழுக்காடு?

1. சம்பளத்தில் தர்ம காரியங்களுக்காக எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?

2. எத்தனைக் கடிதங்களுக்குப் பதில் எழுதுகிறீர்கள்?

3. எத்தனை மணி நேரம் வீட்டை ஒழித்து, சுத்தப்படுத்துகிறீர்கள்?

4. எத்தனை மணி நேரம் குடும்பத்துடன் செலவிடுகிறீர்கள்?

5. எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?

6. எத்தனை முறை ஓட்டுப் போட்டிருக்கிறீர்கள்?

7. அரட்டை அடிக்காமல் எத்தனை மணி நேரம் நிஜமாக வேலை செய்கிறீர்கள்?

8. உங்களுக்கு எத்தனை ஆப்த நண்பர்கள்?

9. தினம் எத்தனை மணி நேரம் வேண்டாத வேலைகளைச் செய்கிறீர்கள்?

10. எத்தனை மணி நேரம் புத்தகம் படிக்கிறீர்கள்?

11. எவ்வளவு நேரம் டி.வி. பார்க்கிறீர்கள்? என்ன பார்க்கிறீர்கள்?

12. பாட்டு மட்டும் எவ்வளவு நேரம் கேட்கிறீர்கள்?

13. போன வருஷம் எத்தனை பேருக்குப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அனுப்பினீர்கள்?

14. தினம் எத்தனை மணி நேரம் செய்திப் பத்திரிகை படிக்கிறீர்கள்?

15. எத்தனை மணி நேரம் ஜஸ்ட் சும்மா இருக்கிறீர்கள்?

16. தினம் எத்தனை மணி நேரம் பஸ், ஸ்கூட்டர் அல்லது காரில் பயணிக்கிறீர்கள்?

17. பள்ளியில் உங்களுக்குப் பிடித்திருந்த பாடம் எது?

18. இப்போது பிடித்த நடிகர், நடிகை யார், யார்?

இந்த 18 கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டு… எனக்கு அனுப்பாதீர்கள்! ஒரு வாரம் கழித்து அவற்றைப் பாருங்கள். உங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள். கீழ்க்கண்டவற்றில் ஒன்றை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.

நான் ஒரு…

1. சோம்பேறி

2. சாதாரண மனிதன்

3. நல்ல குடிமகன்

4. அறிவு ஜீவி