- நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள்?
- நீங்கள் உங்களுடேனேயே பேசிக் கொள்வதுண்டா?
- நீங்கள் முன்கோபியரா அல்லது எதையும் சகித்துக் கொள்ளும் இயல்புடையவரா?
- உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு ஆட்கள் உங்களைச் சாமர்த்தியமாக ஏமாற்றியிருக்கிறார்கள்? நீங்கள் அவர்கள் மீது சட்டபூர்வமாக ஏதாவது நடவடிக்கை எடுத்ததுண்டா?
- ஊழலை அறவே ஒழிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
- உங்கள் பிள்ளை மருமகன்மார் இவர்களில் சிலர் உங்களை விடப் பதவியில் பொருளாதார வகையில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதால் அவர்களைக் காணும் போது தாழ்வுநிலை மனப்பானமை அடைகிறீர்களா?
- நீங்கள் எல்லோரரையும் நம்பி எளிதில் ஏமாந்திருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரையும் சந்தேகக் கண்கள் கொண்டே பார்க்கிறீர்களா? உலகில் நல்லவர்களே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?
- நீங்கள் எப்பொழுதாவது ஒரு சிநேகபாவமான உறவு வைத்துக் கொள்ள முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றிருக்கிறீர்களா?
- வாழ்க்கையில் உங்களுக்கு மிகக் கசப்பான அனுபவம் எது?
- உங்களுக்கு உங்கள் தொழில், பணம் சம்பாதிப்பது இவைகளைத் தாண்டி ஏதாவது லஷியம் உண்டா?
நகுலன் எழுதிய ‘வாக்குமூலம்‘ நாவலில் இருந்து; தொடரும்