Snapjudge

Posts Tagged ‘MP3’

பத்துப் பாட்டு

In Movies, Tamilnadu on ஓகஸ்ட் 28, 2009 at 2:51 முப

தமிழ் சினிமாவில் எழுதப்படும் திரைப்பாடல்கள் எத்தனை வகைப்படும்?

  1. கிராமிய, நாட்டுப்புற, தெம்மாங்குப் பாடல்
  2. கொச்சை மொழி, கிளுகிளுப்பு, பேரரசு வகையறா, குத்தாட்டப் பாடல்
  3. ஆங்கிலப் பாடல்களின் தமிழாக்கம்; ஆங்கில வரிகள் அப்படியே வரும் ராப்
  4. பட்டியல் பாடல்கள்; பெயர்ச்சொல்லும் அதற்கு உரித்தான வினைகளும் என்று pattern பாட்டு
  5. அதீத கற்பனை; உயர்வு நவிற்சி கவிதை
  6. நாயக பாவம்; பரணி; ஹீரோ அறிமுகப் பாடல்; இசையமைப்பாளர் துதி; ஸ்தோத்திர வகை.
  7. புரியாத சொற்றொடர்கள்; அன்னிய மொழிப் பதங்களை மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடும் வரிகள் கொண்ட விளங்காப் பாடல்
  8. ரீ-மிக்ஸ்; புகழ் பெற்ற பழைய பாடல்கள தேய்ந்த vinylல் கொடுக்கும் மறு-வாந்திப் பாடல்
  9. Ctrl+C; அராபிய, ஸ்பானிஷ், உருது, உலக இசையை அப்படியே பிரதியெடுக்கும் இசைப் பாட்டு
  10. இதெல்லாம் இல்லாத பாக்கி பாடல்கள்: சாஸ்திரீய கச்சேரி; சாமி பாட்டு; கானா.

10 Illogical Lyrics: Unpoetical analysis of Tamil Film Songs

In Lists, Movies, Music on ஓகஸ்ட் 23, 2009 at 4:07 பிப

1. பாடல்: எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
திரைப்படம்: கந்தசாமி
எழுதியவர்: இளங்கோ – விவேகா
வரி: எம்ப்டி ஐபாடே — உன்னை ஸ்விட்ச் ஆன் பண்றது வேஸ்ட்டு
ஏன்: ஐ-பாட் காலியாக இருக்கும்போது உயிர் கொடுக்காவிட்டால், எப்படி அந்த ஐ – பாடில் பாடல்களை ஏற்றுவது? மேலும், வாங்கும்போது எல்லா எம்பி3 ப்ளேயர்களும் எந்தவித ஒலிப்பேழையும் இல்லாமல்தான் இருக்கும்.

2. பாடல்: தாய் சொல்லும் உறவை வைத்தே
திரைப்படம்: கனாக் கண்டேன்
எழுதியவர்: வைரமுத்து
வரி: 17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கைதானே பாலூத்தும் காலம் வரைக்கும் கூட வரும்!
ஏன்: +2 மதிப்பெண் வைத்தே அண்ணா பொறியியலும், மெட்ராஸ் மெடிகலும் கிடைக்கும் என்றாலும், சட்டம் பயில்வது, தொழில் முனைவது, கலைகளில் சிறந்தோங்குவது என்று தமிழகம் அமெரிக்காவாகும் காலம் இது.

3. பாடல்: பூமாலையே தோள் சேரவா
திரைப்படம்: பகல் நிலவு
எழுதியவர்: ?
வரி: தேனினை தீண்டாத பூ இல்லையே
ஏன்: வண்டுகளை ஏமாற்ற தேன் தயாரித்துத் தராத பூக்களின் செய்கையை இந்த வரிகள் தவிர்த்துவிடுகிறது. Nectarless flowers: ecological correlates and evolutionary stability : Flowers may cheat by not producing nectar

4. பாடல்: போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
திரைப்படம்: சிங்காரவேலன்
எழுதியவர்: ?
வரி: காவேரி அல்ல… அணைபோட்டுக் கொள்ள
ஏன்: இன்றைய காவிரியில் தண்ணீர் எங்கே இருக்கிறது? கர்நாடக டி.எம்.சி. வந்தாலும், பாசன ஏரிகள் எல்லாம் ஃப்ளாட் அகி விட்டனவே!

5. பாடல்: ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
திரைப்படம்: மீரா
எழுதியவர்: ?
வரி: எனையும்தான் உன்னைப் போலே… படைத்தானே… இறைவன் எனும் ஓர் தலைவன்
ஏன்: பகுத்தறிவிற்கும் (கடவுள்?) அறிவியலுக்கும் (வளர் உருமாற்றம்) இலக்கியத்திற்கும் (Franz Kafka: Metamorphosis) பெண்ணியத்துக்கும் (ஆண் இறை) எதிரான கொள்கையை விரிக்கும் கவிதை.

6. பாடல்: வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
திரைப்படம்: மெல்லத் திறந்தது கதவு
எழுதியவர்: ?
வரி: உனைச்சேர எதிர்பார்த்தேன்; முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
ஏன்: இது போலி சாமியார் வகையறா. ஏழு ஜனனமும் தெரிவதெல்லாம் அக்மார்க் கப்சா.

7. பாடல்: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
திரைப்படம்: பொல்லாதவன்
எழுதியவர்: ?
வரி: வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே
ஏன்: வௌவாலுக்கு உலகம் நேராகத்தான் இருக்கும். நமக்குத்தான் அது upside down.

8. பாடல்: காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
திரைப்படம்: சின்ன மாப்பிள்ளை
எழுதியவர்: ?
வரி: கந்தன் தேடி வந்த வள்ளி
ஏன்: வள்ளியை நினைத்து, ஏங்கி, காதல் கொண்டு, இன்றைய தினத்தில் பிறந்த நாள் கொண்டாடும் கணேசரின் உதவியோடு, வசியமாக்கி, மணம் புரிந்தது சரித்திரம் (அல்லது ஆன்மிக புராணம் [அல்லது தலவரலாறு])

9. பாடல்: சின்னத் தாயவள் தந்த ராசாவே
திரைப்படம்: தளபதி
எழுதியவர்:
வரி: தேய்பிறை காணும் வெண்ணிலா
ஏன்: ‘வளர்பிறை என்பதும் தேய்பிறையென்பதும் நிலவுக்குக் கிடையாது!’ (அப்படியே இருந்தாலும், வெண்ணிலவே தேய்பிறையைக் காண முடியுமா?)

10. பாடல்: ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
திரைப்படம்: தாய் மூகாம்பிகை
எழுதியவர்: வாலி
வரி: ஜகன் மோஹினி நீ
ஏன்: ஜெயமாலினிதான் ஜெகன்மோகினி என்பது ஊரறிந்த தகவலாச்சே!

PA Krishnan: Top Ten Michael Jackson Songs

In Magazines, Music, USA on ஓகஸ்ட் 12, 2009 at 5:59 பிப

Source: எனக்குப் பிடித்த பத்து மைக்கேல் ஜாக்ஸன் பாடல்கள் :: அஞ்சலி: மைக்கேல் ஜாக்ஸன் (1958-2009) – ஒரு யுக நிகழ்வு :: பி.ஏ.கிருஷ்ணன்

1. I Want You Back

2. Don’t stop ‘til You Get Enough

3. Billie Jean

4. The girl is mine

5. Thriller
MTV வீடியோக்களிலேயே மிகப் புகழ்பெற்றது. ஜாக்ஸனின் ஆட்டம், பேய்களின் ஆட்டம், மேலாக ஆட்டத்துடன் பின்னிப் பிணைத்திருக்கும் மகிழ்ச்சி, நகைச்சுவை – இவை அனைத்தும் இந்தப் பிணங்களின் பாடலை மரணமற்றதாக ஆக்குகின்றன.

6. Beat it
ஆட்டத்திற்காகப் பிறந்த பாடல் இது. எட்டி வான் ஹாலனின் கிதார் இசை வேறு உலகத்தைச் சார்ந்தது.

7. Wanna Be Startin’ Somethin’
திரில்லர் ஆல்பத்தின் முதல் பாடல். வேகமான பாடல். மமஸே, மமஸாமமா!

8. We are the world:
மேற்கத்திய இசையின் புகழ்பெற்ற அனைவரும் பாடிய பாடல் இது. ஜாக்ஸன் அவர்தான் அரசன் என்பதைக் கோடிட்டுக் காட்டும் பாடல்.

9. Black or white:
இந்த வீடியோவைப் பார்க்காதவர்களே இருக்க முடியாது என்று நினைக்கிறேன். திகட்டாத பாடல். முகம் மாறிக்கொண்டே வருவது திகட்டத் திகட்ட நகலெடுக்கப்பட்டாலும்.

10. Jam
இது மற்றொரு மைக்கேலுக்காக-மைக்கேல் ஜோர்டன் -பார்க்க வேண்டியது. ஜோர்டனுக்கு ஜாக்ஸன் ‘மதிநடை’ நடக்கச் சொல்லிக் கொடுக்கிறார். அவர் இவருக்குக் கூடைப்பந்து விளையாடச் சொல்லிக் கொடுக்கிறார்.

சிவமணி கேட்டதிலே: பிடித்த 10

In Lists, Movies, Music on ஓகஸ்ட் 3, 2009 at 2:48 பிப

  1. டி எம் சௌந்தரராஜன் பக்திப் பாடல்கள்
  2. East Meets West :: எம் எஸ் விஸ்வநாதன் & ராமமூர்த்தி
  3. Shaathi :: John McLaughlin
  4. Maha Vishnu :: John McLaughlin
  5. How to Name it :: Ilaiyaraja
  6. வந்தே மாதரம் :: ஏ ஆர் ரெஹ்மான்
  7. காஷ் :: ஹரிஹரன்
  8. திருவாசகம் :: இளையராஜா
  9. Taal :: AR Rehman
  10. பிதாமகன் :: இளையராஜா
John Meclobilin

10 sites to help you find music

In Internet, Music on ஜூலை 23, 2009 at 7:58 பிப

Source: CNN
Subscription services

Free online streaming

Social music

Other takes

New England Tamil Sangam: Chithirai Vizha Drama Photos

In Misc, Music, USA on மே 4, 2009 at 2:28 முப

நன்றி: வெட்டிப்பயல்: Tenant Commandments – நான் பார்த்த நாடகம்: “ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் (Stage Friends) நடத்திய டெனண்ட் கமெண்ட்மெண்ட்”

ஹரிஹரன் கேட்டதிலே: பிடித்த பத்து

In Lists, Movies, Music on ஏப்ரல் 6, 2009 at 3:59 பிப

Top 10 Song & Album picks by Singer/Composer Hariharan (as appeared in Anandha Vikadan)

  1. 1st Album – Mehdi Hassan
  2. ரோஜா – ஏ ஆர் ரெஹ்மான்
  3. Thriller – Michael Jackson
  4. முதல் மரியாதை – இளையராஜா
  5. Colonial Cousins – Hariharan & Leslie Lewis
  6. காசி – இளையராஜா
  7. Square Circle – Stevie Wonder
  8. Unplugged – Mariah Carey
  9. Drums of Fire – Sivamani
  10. Come Away with Me – Norah Jones

Best of Ramarajan: Top Songs

In Movies, Music on ஏப்ரல் 2, 2009 at 3:37 பிப

  1. மதுர மரிக்கொழுந்து வாசம் – எங்க ஊரு பாட்டுக்காரன்
  2. நேத்து ஒருத்தர ஒருத்தர் பார்த்தோம் – புது பாட்டு
  3. சொர்க்கமே என்றாலும் – ஊரு விட்டு ஊரு வந்து
  4. மாங்குயிலே பூங்குயிலே – கரகாட்டக்காரன்
  5. பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா – என்னை பெத்த ராசா
  6. வெள்ளி கொலுசுமணி – பொங்கி வரும் காவேரி
  7. அரும்பாகி, மொட்டாகி, பூவாகி – எங்க ஊரு காவல்காரன்
  8. வாசலிலே பூசணிப்பூ – செண்பகமே… செண்பகமே!
  9. ராசாத்தி மனசிலே –ராசாவே உன்ன நம்பி
  10. ஊரெல்லாம் உன் பாட்டுதான் – ஊரெல்லாம் உன் பாட்டு

Top 10 Download sites: Torrents

In Internet, Technology on பிப்ரவரி 4, 2009 at 4:45 பிப

நன்றி: ஊரோடி :: 2008 இன் சிறந்த பத்து ரொறன்ற் இணையத்தளங்கள்

2008 ஆம் அண்டின் சிறந்த பத்து டொரென்ட் இணையத்தளங்களை TorrentFreak இணையத்தளம் வரிசைப்படுத்தி உள்ளது. ரொறன்ற் இணையத்தளங்களுடாக எமக்கு தேவையான மென்பொருள்கள், படங்கள் என எவற்றை வேண்டுமானாலும் தரவிறக்க முடியும். ஆனால் அண்மைக்காலங்களாக இவை சட்ட ரீதியான சிக்கல்களை சந்தித்து வருகின்றன.

1. The Pirate Bay
2. Mininova
3. IsoHunt
4. Torrentz
5. Torrent Reactor
6. Demonoid
7. BTJunkie
8. Sumo Torrent
9. BTMon
10. TorrentPortal

மேலும் விபரமான தகவல்களுக்கு இங்கு வாருங்கள்.

சுதா ரகுநாதன் கேட்டதிலே

In India, Lists, Movies, Music on ஜனவரி 26, 2009 at 3:29 முப

1. பாலாஜி பஞ்சரத்ன மாலா
– எம்.எஸ். சுப்புலட்சுமியின் ஐந்து சிடி தொகுப்பு

2. லெஜன்ட்ஸ்
– என் குரு எம்.எல். வசந்தகுமாரியின் ஐந்து சிடி தொகுப்பு

3. கிருஷ்ண பஜன்ஸ் – பண்டிட் ஜஸ்ராஜ்

4. பத்ராசல ராமதாஸ் – பாலமுரளி கிருஷ்ணா
(தெலுன்ஙு கீர்த்தனைகள்)

5. டேஞ்சரச்லி இன் லவ் – பெயான்சே
(ஐந்து கிராமி விருதுகள் வென்றது)

6. சாஃப்ட் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் – தபூன்
(பாடல் வரிகள் இல்லாத இளையராஜாவின் திரை இசை தொகுப்பு)

7. ஆந்த்தாலஜி – ப்ரையன் ஆடம்ஸ்

8. ஷ்ரத்தா – (பல இசை மேதைகளின் பாடல்கள் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் தொகுப்பு)

9. ஸ்வாகதம் கிருஷ்ணா – கே. ஜே. ஜேசுதாஸ்

10. கஜினி மற்றும் அந்நியன் – ஹாரிஸ் ஜெயராஜ்

நன்றி: ஆனந்த விகடன் (மார்ச், 26, 2006)