தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டுகள் இருக்கின்றன. அமெரிக்காவில் டிசம்பர் 2024ல் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும். அந்தத் தேர்தலில் அனேகமாக ஜோ பைடன் டெமொகிரட்ஸ் சார்பாக நிற்பார். அவருக்கு எதிராக ரிபப்ளிகன் சார்பில் எவர் நிற்பார்?
எல்லோருக்கும் முன்பு முந்திரிக் கொட்டையாக டானால்ட் ஜே. டிரம்ப் ஆஜராகி விட்டார். சென்ற தடவை போல் மந்தையாக நிறைய பேரை நிற்க வைத்தால் வெறும் 25% வாங்கி வெற்றி பெறும் வழிக்கும் கால்கோள் இட்டுவிட்டார்.
அவரை எதிர்த்து ப்ரைமரியில், முதல் கட்ட உள்கட்சித் தேர்தலில் எவரெல்லாம் நிற்பார்கள்?
- நிக்கி ஹேலி – தெற்கு கரோலினா
- ரான் டிசாண்டிஸ் – ஃப்ளோரிடா
- கவர்னர் லாரி ஹோகன் – மேரிலாந்து
- கவர்னர் கிளென் யங்கின் – வர்ஜினீயா
- கவர்னர் கிறிஸ் சுனுனூ – நியு ஜாம்ப்ஷைர்
- முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்
- முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சார் மைக் பாம்ப்பேயோ
- ஜான் ஆர் போல்ட்டன்
- லிஸ் சேனி – வையோமிங் (முன்னாள் துணை ஜனாதிபதியின் மகள்)
- செனேட்டர் டிம் ஸ்காட் – தெற்கு கரோலினா
ஊர் ரெண்டு பட்டால் டொனால்டிற்கு கொண்டாட்டம்!