நன்றி: வசந்த காலத் துன்பங்கள்
- வசந்த காலச் சுத்தம் (Spring Cleaning): குளிர் காலம் முடிந்ததும், வீட்டின் பல்வேறு இடங்களைச் சுத்தப்படுத்த வேண்டும். ஜன்னல், கதவு, புத்தக அறை, vent ஆகியவற்றை தூசுதட்டிச் சுத்தப்படுத்த வேண்டும்.
- வெளிவேலைகளைக் காலை 10 மணிக்குப் பின்னால் செய்ய முடிந்தால் நல்லது. குறிப்பாக காலை 5 மணிமுதல் 10 மணி வரை மகரந்தத் துகள்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.
- கூடுமானவரை ஜன்னல்களை திறக்காமல் இருப்பது நல்லது.
- வாகனத்தில் போகும்போது ஜன்னல்களை மூடிவைத்து, குளிர் சாதனத்தை உபயோகிப்பது நல்லது.
- புல்வெளியைச் சுத்தப்படுத்தும் போது முகமூடி அணிந்து கொள்ள வேண்டும்.
- துணிகளை வெளியில் உணர்த்தாமல் இருப்பது நல்லது. துணிகளில் மகரந்தம் ஒட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
- படுக்கை உறைகளை வாரம் தோறும் துவைப்பது நல்லது.
- தினமும் இரவில் தலைகுளிப்பதின் மூலம் உடலிலும், தலையிலும் ஒட்டியுள்ள மகரந்தத்தை அகற்றுவது நல்லது.
- வீட்டில் குறிப்பாக மிதியடி, தரைக் கம்பளம் ஆகியவற்றை அடிக்கடி தூசு தட்ட வேண்டும். பழைய மிதியடிகளை மாற்ற வேண்டும். மரத்தரை போடுவது உகந்தது.
- Antihistamine: இந்த மருந்துகள் Zyrtec, Claritin, Allegra வகையைச் சார்ந்தன.
- மூக்கில் செலுத்தப்படும் Steroid spray நல்ல தீர்வு தர வல்லது. இது Flonase, Nasonex என்ற பெயர்களில் கிடைக்கின்றது.
- ஒரு சிலர் வருடம் முழுதும் அவரவர் ஊரில் தயாராகும் தேன் உண்பதின் மூலம் ஒவ்வாமையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
இந்த முறை எல்லாவற்றையும் பின்பற்றியும் இன்னும் ஒவ்வாமை குறைந்தபாடில்லை. மாற்றாக கீழ்க்கண்டவற்றையும் முயலலாம்:
தண்ணீர்: காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 500 மில்லி லிட்டர் குடிநீர் அருந்துவது.
Neti Pot: Really? – The Claim – Nasal Irrigation Can Ease Allergy Symptoms – Question – NYTimes.com: “Nasal irrigator that resembles a small teapot, has become an alternative remedy.”
உடற்பயிற்சி: தினமும் வியர்க்க விறுவிறுக்க அரை மணி நேரமாவது ஓடுவது.