1. ” அப்போதும் இறைவன் தோன்றாமலிருக்கவே தன்னைத் தானே தேடி, தன்னுள் எஞ்சிய இமையாது தன்னை நோக்கும் தந்தையின் ஈராயிரம் விழிமணிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வீசினாள்.”
2. பத்தாம் தவணையை படிக்கும்போது ஏபி நாகராஜனின் “திருவிளையாடல்” நினைவுக்கு வரும்.
3. “வாரணாசியின் படிக்கட்டுகளில் இறங்கிச்சென்று அசைவிலாததுபோல் அகன்றுகிடந்த கங்கையின் விளிம்பில் மெல்ல கரையை துழாவிக்கொண்டிருந்த நீரின் குளிர்நாக்கில் அந்த தீபங்களை வைத்தனர்.”
4. சித்ரகர்ணி காணாமல் போய்க் கொண்டிருக்கிறதாம்: A looming lion extinction. They now occupy less than one percent of their historic range in West Africa.
5. “சேதிநாட்டரசர் தமகோஷன் அவரது நெருங்கியநண்பர் என்கிறார்கள். அங்கம், வங்கம், கலிங்கம், மாளவம், மாகதம், கேகயம், கோசலம், கொங்கணம், சோழம், பாண்டியம் என்னும் பத்து நாட்டுமன்னர்களும் அவருடன் கைகோர்த்திருக்கிறார்கள். காசியுடன் உறவை உருவாக்கிக் கொண்டபின்பு அஸ்தினபுரியை கைப்பற்றவேண்டுமென்று எண்ணியிருக்கிறார்கள்.”
“அவர்களுக்கு எப்போதும் அந்தக்கணக்குகள்தான்” என்றாள் புராவதி.
6. “ஏக்கங்களுக்கு நிகராக இனியவை என மண்ணில் ஏதுமில்லை என பின்னர் அறிந்து முதிர்வதே வாழ்க்கை என்றாகியிருக்கிறது என அப்போது உணர்ந்துகொண்டாள்.”
7. “அணிசெய்வதை வேகமாகச் செய்யலாமே” என்றார் ஃபால்குனர். “எக்காலத்திலும் அதை ஆண்களுக்கு புரியவைக்க முடியாது” என்றாள் பிரதமை.
8. “இத்தனை வருடங்களுக்குப்பின் அந்த மின்னும் ஆடையணிகளுக்குள் நுழையும்போது குருதிநுனிகள் மின்னும் கூரிய ஆயுதக்குவியலொன்றுக்குள் விழுவதுபோலவே உணர்ந்தாள்.”
9. பாய்கலை:
பாய்ந்து ஓடும் மானின் ஆற்றலோடு அவள் இணைக்கப்பட்டும் மான் கொற்றவையின் ஊர்தியாகவும் விளங்குவது இதில் புலனாகிறது.
வெட்சி வீரர்கள் ஆநிரைகளைக் கவரச் செல்லும்போது அவர்களுக்கு உறுதுணையாகக் கொற்றவை முன்னே செல்லுவாள் எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
“ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலை
கூளி மலிபடைக் கொற்றவை-மீளி
அரண் முருங்க ஆகோள் கருதின் அடையார்
முரண்முருங்கத் தான்முந் துறும்”
என்னும் பாடல் கருத்து இதனை உணர்த்துகிறது.
- திருஞானசம்பந்த சுவாமிகள் – தலம்: திருப் பிரமபுரம் (அல்லது காழி)
ஐயமேற்கச்சென்ற அழகர்
இப்பதிகம் முழுதும் தலைமகள் தலைமகனைத் தன் எதிர்ப்படுத்திப் பேசுதல்போல் அமைந்துள்ளது.
பெருமான் பெண்கள் தரும் பிச்சையேற்கத் தாருகாவனத்துட் செல்கிறார். ஐயமேற்கும் பொழுது அப்பெண்டிர்களின் ஆடை, அணி, வளையல், வாகுவலயம், உள்ளம், பெண்மைஇவைகளைக் கவர்கிறார். அப்பெண்கள் பெருமானை நோக்கி இரங்கிக் கூறும் உரைகள் இவை.
நகல் ஆர் தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டு அயலே
பகலாப்பலி தேர்ந்து ஐயம் வவ்வாய்
பாய்கலை வவ்வுதியே
அகலாது உறையும் மாநிலத்தில்
அயல் இன்மையால்
அமரர் புகலால் மலிந்த பூம்புகலிமேவிய புண்ணியனே
Having placed on one side of the cool matted hair a laughing skull and white crescent
begging alms in the day-time
you do not snatch away the alms.
but snatch away the flowing garment.
in the wide world from which everything dwells without leaving it.
as there is no other place of refuge.
the holy being who is in Pukali where there are many immortals who sought refuge there.
10. மிகப் பெரிய ஊரை, மாபெரும் போரை, பிரும்மாண்டத்தை திரைப்படமாகக் கொணர்வது எளிது. அதுவே, எழுத்தில் கொணர்வது எப்படி என்பதை செயமோகன் மீண்டும் மீண்டும் அருமையாக சொல்கிறார். கூடவே தெரிந்த விஷயங்களை எவ்வளவு சுவாரசியமாக ஆக்குவது என்பதையும் நிரூபிக்கிறார். அதனுடன், பின்னணி நாடகங்களை திரைமறைவில் நடந்திருக்கக் கூடியதை உணர்த்துவது ஆர்வத்தை அதிகரிக்கிறது.