Snapjudge

Posts Tagged ‘Life’

புரிந்துகொள்ள முடியாத டாப் டென்

In Life, Lists on மார்ச் 3, 2009 at 3:08 பிப

‘ஆறும் அது ஆழமில்ல’ என்பார்கள் சிலர்.
‘உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலியே’ என்று டயலாக் விடுவார்கள் சினிமாவில்.
‘கற்றது கையளவு; கல்லாதது உலகளவு’ என்பார் சரஸ்வதி.

அவ்வாறு விளங்க இயலா தலை பத்து:

  1. காதல் வளர்ப்பது
  2. பின்நவீனத்துவம் படிப்பது
  3. டௌ ஜோன்ஸ் ஏறுவது
  4. பெண் மனதறிவது
  5. சைக்கிள் விடுவது
  6. கவிதை பொருள் புரிவது
  7. கிரிக்கெட்டில் சிக்ஸ் அடிப்பது
  8. மகளுக்கு வாய்க்கு ருசியாக சமைப்பது
  9. நல்ல புத்தகம் எழுதுவது
  10. இறப்பிற்கு பின் என்னாவது

சுஜாதா கேள்விகள்: கற்றதும் பெற்றதும் (ஆனந்த விகடன்)

In Life, Questions on பிப்ரவரி 23, 2009 at 6:32 பிப

இன்றைய தினங்களில் எல்லாமே விழுக்காடு அல்லது எண்ணிக்கைதான். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து ஐ.ஐ.டி. அனுமதித் தேர்வு வரை வாழ்வில் உள்ள இலக்கங்களும் விழுக்காடுகளும் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கேள்விகளின் அருகில் ஒரு பென்சிலால் விடை எழுதிப் பாருங்கள் (பேனாவால் எழுதினால், அப்புறம் மாற்ற முடியாது).

நீங்கள் எத்தனை விழுக்காடு?

1. சம்பளத்தில் தர்ம காரியங்களுக்காக எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?

2. எத்தனைக் கடிதங்களுக்குப் பதில் எழுதுகிறீர்கள்?

3. எத்தனை மணி நேரம் வீட்டை ஒழித்து, சுத்தப்படுத்துகிறீர்கள்?

4. எத்தனை மணி நேரம் குடும்பத்துடன் செலவிடுகிறீர்கள்?

5. எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?

6. எத்தனை முறை ஓட்டுப் போட்டிருக்கிறீர்கள்?

7. அரட்டை அடிக்காமல் எத்தனை மணி நேரம் நிஜமாக வேலை செய்கிறீர்கள்?

8. உங்களுக்கு எத்தனை ஆப்த நண்பர்கள்?

9. தினம் எத்தனை மணி நேரம் வேண்டாத வேலைகளைச் செய்கிறீர்கள்?

10. எத்தனை மணி நேரம் புத்தகம் படிக்கிறீர்கள்?

11. எவ்வளவு நேரம் டி.வி. பார்க்கிறீர்கள்? என்ன பார்க்கிறீர்கள்?

12. பாட்டு மட்டும் எவ்வளவு நேரம் கேட்கிறீர்கள்?

13. போன வருஷம் எத்தனை பேருக்குப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அனுப்பினீர்கள்?

14. தினம் எத்தனை மணி நேரம் செய்திப் பத்திரிகை படிக்கிறீர்கள்?

15. எத்தனை மணி நேரம் ஜஸ்ட் சும்மா இருக்கிறீர்கள்?

16. தினம் எத்தனை மணி நேரம் பஸ், ஸ்கூட்டர் அல்லது காரில் பயணிக்கிறீர்கள்?

17. பள்ளியில் உங்களுக்குப் பிடித்திருந்த பாடம் எது?

18. இப்போது பிடித்த நடிகர், நடிகை யார், யார்?

இந்த 18 கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டு… எனக்கு அனுப்பாதீர்கள்! ஒரு வாரம் கழித்து அவற்றைப் பாருங்கள். உங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள். கீழ்க்கண்டவற்றில் ஒன்றை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.

நான் ஒரு…

1. சோம்பேறி

2. சாதாரண மனிதன்

3. நல்ல குடிமகன்

4. அறிவு ஜீவி

Pro-Eelam Chennai Bandh & Life Experiences: 10 Twits

In Life, Srilanka, Tamilnadu on பிப்ரவரி 6, 2009 at 5:09 முப

1. சென்னையில் பந்த் நடப்பதற்கான எவ்விதமான அறிகுறியும் இல்லை. எல்லாம் சாதாரணமாக இருக்கிறது. தென் தமிழகத்தில் வீச்சு அதிகமாக இருக்கலாம்.4:35 AM Feb 4th
Narain_biggernarain

2. @kg86 Btw, today is Bandh/strike in Chennai (lol and it’s “approved” by Supreme Court). My brother’s college, NIT T, is working. 😦10:36 PM Feb 3rd
Dscn0667_biggerdrgrudge / Ashwin

3. @aryanscourge yeah, what with the Strike and closure of colleges and all.. we wna be heard too.. 😀11:47 AM Feb 4th
Your_image_biggerVetti / Karthik H

4. @just_reva a lot of things happened at leather bar yesterday & the best part was it was empty cuz of the strike and moral policing shit. 🙂about 21 hours ago
Dilip_-_vidu_s_revenge_biggerdilipm / Dilip Muralidaran

5. Chennai Bandh (dont know if it was useful) certainly brought me happiness.I worked from home. I was like on cloud nine 🙂1:57 PM Feb 4th
Kavi__2__biggertkavitha / kavitha

6. Strange.I had blogged about chennai bandh a year ago.i get flamed for it for todaysi bandh.go figure. http://tinyurl.com/aebga71:02 PM Feb 4th
Face1_biggermadguy000 / Aditya

7. @anandnataraj i don’t think companies in chennai are off on bandh..not sure..life is normal here so far..how abt there in Madurai..1:30 AM Feb 4th
Me_biggerksawme / Swami K

8. Traffic Update >> Took 29 mins from Porur to Cenatoph..Moderate traffic..may be PMK bandh have made some free traffic flow..Just a guess12:07 AM Feb 4th
Me_biggerksawme / Swami K

9. @elavasam Rulingpartysponsored bandh, buses will not operate, but you can go in the road safely. In oppostion spnsred,our head will be brokn11:09 AM Feb 3rd
Blogbruno_biggerspinesurgeon / Bruno Mascarenhas

10. Wish Kerala politicians visited Chennai today to see how the people had thrashed todays bandh – except shops, everyone’s working as usual!1:13 AM Feb 4th
vaartha / Kerala News

‘குத்துங்க எசமான்’: Top 10 வேணுங்கட்டிக்கு வேணும்

In Life, Lists, USA on பிப்ரவரி 4, 2009 at 6:58 பிப

People Who Deserve It பதிவில் நடத்திய கருத்துக்கணிப்பில் இருந்து, முகத்தில் குத்துவிட வேண்டியவர்களின் தலை பத்து:

peopl-who-deserve-it-top-10-punch-face-social-responsible

1. ‘ஆஹா! மெல்ல நட; மெல்ல நட’ பாதசாரி
2. காதில் கடுக்கண் என தனியே பேசித் திரியும் செல்பேசி
3. பத்து சாமானுக்கு மேல் பில் போடும் பரதேசி
4. நெட்டித் தள்ளி முண்டியடிக்கும் பேருந்துவாசி
5. அடுத்தவனுக்கும் அலறலாக ஐ-பாட் போட்டு விடும் பாட்டுக்காரர்
6. பேரணி போல் கூட்டணித் தலவர்களாக ஐந்து பேர் புடைசூழ நடக்கும் சுற்றுலாகாரர்
7. ரெண்டு ரூபா கொடுத்தவரை லுக்கு விட்டு அஞ்சு ரூபா கறக்கும் பிச்சைக்காரர்
8. ‘என் குடைதான்! எனக்கு மட்டும்தான்’ என்று நின்று போன தூறலில் குடை கேடயம் பிடித்து தாக்குபவர்
9. ஆடவரின் இம்சையில் இருந்து தப்ப பெண்மணியின் பல்லவன் backpack என்றால் ஒகே. பனிரெண்டு மாச குழந்தையை முதுகில் சுமப்பது போன்ற பையுடன் உலாவருபவர்
10. ஊரைச் சுற்றி ஆட்டோவிட்டு, போட்டுக் கொடுக்க சொல்லும் தானி ஓட்டுநர்

சுஜாதாவின் பத்து கட்டளைகள்

In Guest, Life, Misc on ஜனவரி 26, 2009 at 7:40 பிப

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

Twitter Philosophy 10: Peyarili

In Blogs, Internet on ஜனவரி 21, 2009 at 2:04 பிப

1. துத்துவம்: வித்தாலும் எழுத்தாளன். விற்பனையாகாவிட்டாலும் எழுத்தாளன். ஆக, தமிழ் எழுத்தாளன் ஒரு குண்டு யானை.

பதிர்: ஒண்ணைக் காப்பியடிச்சா பிளேகரிசசாதா; பத்தைக் காப்பியடிச்சா கட்டுரைஎக்பிரஸோ; நூத்தை காப்பியடிச்சா டெசர்டேசன்கப்புச்சினோ

துத்துவம் 3: எலிக்கு மூக்கு; எழுத்தாளனுக்கு கூகுள்

துத்துவம் 4: வாளால் வெட்டிப்போட்டவன் வெகுவீரன். வார்த்தை வைத்துப் பிழை ப்பவன் வரலாற்றாசிரியன்

துத்துவம் 5: மாமா சுட்டா செத்தான் டெரர்ரிஸ்டு. மாப்ளை சுட்டா மாப்ளே இன் டெரர் லிஸ்டு

துத்துவம் 6: லூசா வந்தா ஸ்லேட் கிளியராகும். கிளியரா வந்தா கிளீன் ஸ்லேட்டாவே கெடக்கும்

தத்துவம் 7: கிளிக் பண்ணாமலே கிளிப் வரும்; ஆனால், கிள்ளுற சுகம் வருமா? @எல்லோருக்கும் 🙂

8. நல்லவனுக்கு நல்லவன் பொல்லாதவனுக்கு பொல்லாதவன் பில்லாக்கு ரங்கா பிசாசுக்கு பேய் என்இனிய எந்திராவுக்கு வல்லான் வால்-ஈ எல்லாம் யாமேகாண்

குணக்கு: ஒரு புத்தக வெளியீட்டுக்கு பத்து பாட்டில் உடைக்கணும்னா, பத்துப்புத்தவெளியீட்டு எத்தனை பாட்டில் உடைக்கணும்? கழிவு எவ்ளோ?

துத்துவம்: “எழுத்தே எனக்கு முழுமூச்சு” என்கிறவன் என்ன சொல்லவர்றான்னு நெனனச்சுப் பாத்தா.