Snapjudge

Posts Tagged ‘Kumutham’

Lifted Tamil Movies: Adapted screenplay, story from Foreign Films

In Movies, Tamilnadu on ஜூலை 31, 2009 at 5:23 பிப

Source: IdlyVadai – இட்லிவடை: 80% ஹாலிவுட் + 20% மசாலா = 100% கோலிவுட்

Brewster’s Millions – அருணாசலம்

Hardcore – மகாநதி
Planes Trains and Automobiles – அன்பேசிவம்
What bob can do – தெனாலி
Very Bad things – பஞ்சதந்திரம்
Too Much – காதலா காதலா
She Devil – சதிலீலாவதி
Corsican Brothers – அபூர்வ சகோதரர்கள்
Life of David Gale – விருமாண்டி

Barefoot in the park – அலைபாயுதே
Hot bubblegum and American Pie – பாய்ஸ்
Butch Cassidy & The Sundance Kid – திருடா திருடா
Sense and Sensibility – கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Shop around the corner – காதல்கோட்டை
Big – நியூ
Sliding Doors – 12B
Fear – காதல் கொண்டேன்

21 grams – சர்வம்
Bangkok Dangerous – பட்டியல்
Network – வேகம்

முந்தைய பதிவு: Stolen Tamil Films? Thanklessly possibly adapted from Foreign Cinema « 10 Hot

கோவில்களும் காமமும்: தலை 10 பார்வை

In Blogs, India, Lists, Misc, Religions, Tamilnadu on ஜூலை 30, 2009 at 5:01 பிப

முதற்கண் உரிமைதுறப்பு: நான் குமுதம் வாசிக்கும் நிலையில் இல்லை. எனவே கீழ்க்கண்ட உரல்களில் அரைபட்டிருக்கும் மசாலாவை வாசிக்கவில்லை:

1. வினவு :: லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?

2. யுவகிருஷ்ணா :: ஆபாசத்துக்கு எதிரான எதிர்வினை!

3. உடன்பிறப்பு :: லக்கிலுக் – வினவு லடாய் பின்னணி

இப்பொழுது குமுதங்கள் எழுதும் கோவில்களின் தல புராண வர்ணனைகளும், காம இச்சைத் தூண்டுதல்களும் பத்து:

1. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் வேப்பிலையால் நெய்த சேலை அணிபவர்கள்.

2. திருப்பதி திருமலை அங்கப்பிரதட்சணத்தில் புஷ்கரிணி சொட்ட சொட்ட, ஆடை விலகியதை சீர் செய்யத் துணையின்றி மெய்வருத்துபவர்கள்.

3. ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயில் பிரம்ம தீர்த்தத்தில் ஆடி, தை அமாவாசை தினங்களில் புனித நீராடும் பக்தர்கள்.

4. குருவாயூர் கிருஷ்ணன் கோவில் வழக்கப்படி, சட்டையை கழற்றி விட்டு உள்ளே சென்றவர்கள்.

5. வரலட்சுமி நோன்பு பூஜை முடிவில், தங்கள் நண்பர்களுக்கு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட தாம்பூலம் வழங்கும் பெண்கள்.

6. கோவில் கும்பாபிஷேகம்.

7. சிவலிங்கம்.

8. பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கோவணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சியளிப்பவன்.

9. சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஞானப்பால் அருந்திய பசியால் அழுத குழந்தை திருஞானசம்பந்தர்.

10. திருமண மண்டபம்.

கனவுத் தொழிற்சாலை: சுஜாதா

In Lists, Literature, Magazines on ஏப்ரல் 27, 2009 at 10:36 முப

குமுதம் இதழில் தொடர்கதையாக வெளியான சினிமா குறித்த சுஜாதா நாவலின் அத்தியாயங்களுக்கு முன் இடம்பெற்றதில் காணக்கிடைத்த பத்து மேற்கோள்:

1. My days are darker than your nights.
ஹாஸன் பிரதர்ஸ் ராஜ பார்வை‘ அழைப்பிதழ்

2. All those books barely read, those friends barely loved, those cities barely visited, those women barely possessed…
Albert CamusThe Fall.

3. “படத்தைத் தாக்கு தாக்கு என்று தாக்கி எழுதினீர்கள். என்னவாயிற்று உங்கள் விமரிசனம்? உங்கள் எழுத்தால் அந்தப் படம் ஓடுவதைத் தடுத்து நிறுத்த முடிந்ததா? பிரமாதமாக ஓடியதே!”
எம். ஏ. காஜா: ‘குங்குமம்‘ இதழில்

4. The writers want to be directors. The producers want to be writers. The actors want to be producers. The wives want to be painters. Nobody is satisfied.
Gottfried Reinhardt

5. வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை. களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் வானகத் தந்தை அவறுக்கும் உணவளிக்கிறார்.
மத்தேயு ஆறாம் அதிகாரம். (6.26)

6. “Include me out.” – Sam Goldwyn

7. துத்திப்பூ மாலை – எனக்குத்
தோளிலிட்ட நாள் முதலா
தும்பம் ஒருபுறமே – இப்போ
துயரம் இருபுறமே
ஒப்பாரிப் பாடல், திருவாட்டி சின்னத்தாய் பாடியது

8. ‘No picture shall be certified for public exhibition which will lower the moral standards of those who see it.’
Ministry of I & B: Directions to the Board of Film Censors

9. பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடி இருக்கலாம். – ஔவையார்

10. இரத்தினங்கள் வைத்து இழைத்து
இராவைப் பகலாக்கும்
சித்திரங்கள் வகை வகையாய்
செய்வேன் மனோன்மணியே
குணங்குடி மஸ்தான் சாஹிப்

கொசுறு: “இதைத் தவிர ‘இந்தியர்கள் நம்மவர்களுள் வீண் சண்டை’, ‘ராட்டினமாம் காந்தி கை பாணம்’ என்ற பாட்டுக்களையும் இனிய குரலுடன் பாடுகிறாள். வார்த்தைகள் தெளிவாக இருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது. மிஸ் ஜான்ஸிபாயும் மிஸ்டர் ஆர்டியும் செய்த கொறத்தி நடனமும் இதில் அடங்கியிருக்கிறது. அவசியம் காணத் தகுந்தது.”
– 29-01-1931 சுதேசமித்திரனில் வெளியான ‘காளிதாஸ்‘ படத்தின் விமரிசனத்திலிருந்து பிலிம் நியூஸ் ஆனந்தன்

குமுதம் ‘நான் தமிழன்’ & தமிழ்நாட்டின் சாதி அபிமானம்

In India, Life, Politics, Religions on ஏப்ரல் 20, 2009 at 7:02 பிப

தமிழகத்திலும் இந்தியாவிலும் சாதி எங்கெல்லாம் ஆக்கிரமித்து முக்கியத்துவம் கொண்டதாக, தெரிந்து கொள்ளப்பட வேண்டியவொன்றாக, அறியாமையை வளர்க்கிறது?

  1. தேர்தல்: வேட்பாளர் நிறுத்தல் – வாக்காளர் பெரும்பான்மை சமூகம்
  2. இட ஒதுக்கீடு: MBC, BC, SC, ST, OBC, FC, OC
  3. மதச் சடங்கு: இந்துமதத்தில் பிறப்பு டு இறப்பு
  4. சிலை, சாலை, வலை: முச்சந்தியில் அம்பேத்கார் இருந்தாலும் பிரச்சினை; தேவர் சிலை நீக்கினால் அதைவிடப் பெரிய கலவரப் போராட்டம்.
  5. கலாச்சாரம்: பல்லி விழும் பலன் பார்த்தல் தொடங்கி புதுமனை புகுதல் வரை.
  6. வறுமை – Rich get richer: பணம் படைத்தவரை ஆதிக்க ஜாதியாக பார்க்காத வரையறை
  7. பள்ளிக்கூடம்: ‘Caste’ வினவும்; புத்தகத்தில் இலைமறைவாக்கும்; வர்க்கப் போராட்டத்தை மொத்தமாக மறைக்கும்.
  8. அடையாளம் – நம்மவர்: தொழிலாளர்களுக்கு யூனியன் இருக்கிறதே? அமைப்பு சாராமல் எப்படி வாய்ஸ் கொடுக்க முடியும்?
  9. திருமணம்: மேற்கத்திய நாடுகளில் வண்ணம் பாராது மணமுடிப்பவர்கள் சாதாரணம்; இந்தியாவில் வர்ணம் பாராதவர்கள் இன்னும் தலைப்புச் செய்தி.
  10. சமூக அந்தஸ்து: ‘எந்த ஜாதி’ என்று கேட்பதை கெட்ட வார்த்தையாக மாற்றிக் கொள்ளாத பெரியோர்.

தொடர்புடைய பதிவுகள்:
1. ஜாதித் தொடரை விலக்கு குமுதம் மீது வழக்கு – வே. மதிமாறன்

2. ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம் – வே. மதிமாறன் (இக்கட்டுரையில் வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளது.)

3. நான் தமிழன் சாதியத்தின் முகவரி – தமிழன்பன்

4. வ.உ.சி.யிடம் பெரியாரின் தாக்கம் – ராஜாஜியின் பச்சைத் துரோகம் – வே. மதிமாறன்

5. சுதேசிப் போர்க்கப்பல் தளபதி – வே. மதிமாறன் | பகுதி 2

6. ஜெனியூனானவர்கள் என்றால் சுயஜாதி அபிமானம் இல்லாதவர்கள்தான்-ராயலசீமா மகேந்திரன்

7. குமுதத்தின் கயமை « வே.மதிமாறன்

My Favorite Top 10 Tamil Fiction: C Mohan

In Books, Lists, Literature on பிப்ரவரி 11, 2009 at 8:35 பிப

சிறந்த பத்து தமிழ் நாவல்கள்

குமுதம் தீபாவளி இலக்கியச் சிறப்பிதழில் ‘டாப் 10 நாவல்கள்’ என சில ஆளுமைகளைக் கேட்டு பிரசுரித்திருந்தது. அது இங்கே.

சி. மோகன்

1. இடைவெளி – எஸ். சம்பத்
2. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்
3. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
4. நினைவுப் பாதை – நகுலன்
5. நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன்
6. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
7. மோகமுள் – தி. ஜானகிராமன்
8. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன்
9. தண்ணீர் – அசோகமித்திரன்
10. சாயாவனம் – சா. கந்தசாமி

முந்தைய பதிவு: கந்தர்வன்

சிறந்த பத்து தமிழ் நாவல்கள்: கந்தர்வன்

In Books, Lists, Literature on பிப்ரவரி 9, 2009 at 11:05 முப

குமுதம் தீபாவளி இலக்கியச் சிறப்பிதழில் ‘டாப் 10 நாவல்கள்’ என சில ஆளுமைகளைக் கேட்டு பிரசுரித்திருந்தது. அது இங்கே.

1. மோகமுள் – தி. ஜானகிராமன்
2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
3. சாயாவனம் – சா. கந்தசாமி
4. மலரும் சருகும் – டி. செல்வராஜ்
5. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன்
6. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
7. கீரல்கள் – ஐசக் அருமைராஜன்
8. புத்தம் வீடு – ஹெப்சியா ஜேசுதாஸன்
9. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம்
10. கோவேறுக் கழுதைகள் – இமையம்

முந்தைய பதிவு: சா. கந்தசாமி

Top 10 Tamil Novels: Saa Kandasamy

In Books, Lists, Literature on பிப்ரவரி 5, 2009 at 2:21 பிப

சிறந்த பத்து தமிழ் நாவல்கள் – சா. கந்தசாமி

குமுதம் தீபாவளி இலக்கியச் சிறப்பிதழில் ‘டாப் 10 நாவல்கள்’ என சில ஆளுமைகளைக் கேட்டு பிரசுரித்திருந்தது. அது இங்கே.

1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
3. ஒரு நாள் – க.நா. சுப்பிரமணியம்
4. வாசவேஸ்வரம் – கிருத்திகா
5. 18ஆவது அட்சக்கோடு – அசோகமித்திரன்
6. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
7. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன்
8. அவன் ஆனது – சா. கந்தசாமி
9. வானம் வசப்படும் – பிரபஞ்சன்
10. ரப்பர் – ஜெயமோகன்

Dhalavai Sundharam: Kumudam – Top 10 Tamil Blogs

In Blogs, Lists, Magazines on ஜனவரி 19, 2009 at 10:20 பிப

21-01-09    தொடர்கள்
மிழ் எழுத்துலகில் நிகழ்ந்துள்ள சமீபகால புரட்சி பிளாக்குகள்

1. இட்லிவடை
www.idlyvadai.blogspot.com

`பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா, பன்ச் வெச்சா இட்லி தாண்டா’ என பன்ச் டயலாக்குடன் அறிமுகமாகும் இந்த பிளாக்குக்கு சொந்தக்காரர் யார் என்பது தெரியவில்லை. ஆனால், அதுதான் இதன் பலமும்கூட. முகம் தெரியாததால் தைரியமாக கருத்துச் சொல்கிறார்கள்.

2. திணை இசை சமிக்ஞை
www.nagarjunan.blogspot.com

சிறுபத்திரிகை எழுத்தாளர், ஆம்னஸ்டிக் இண்டர்நேஷனல் மனித உரிமை ஆர்வலர் என பன்முகம் கொண்ட நாகார்ஜுனின் பிளாக். இந்த பரந்த அனுபவம் இவரது பலம். அதிகம் சீரியஸான விஷயங்களைத்தான் எழுதுகிறார்.

3. பிகேபிஇன்
www.pkp.blogspot.com

அமெரிக்கா சாஃப்ட்வேர்காரரான பி.கே.சிவகுமாரின் பிளாக். பிரசித்திப் பெற்ற அலெக்ஸா டாட் காம் சர்வேயில் நிறைய பேர் படிக்கும் தமிழ் பிளாக்காக தேர்வு செய்திருந்தார்கள். பொது அறிவு விஷயங்களைத் தேடித்தேடித் தந்திருக்கிறார்.

4. எண்ணங்கள்
www.thoughtsintamil.blogspot.com

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியின் பிளாக். எல்லாவற்றைப் பற்றியும் தன் எண்ணங்களை எழுதியுள்ளார். எப்படி தமிழிலேயே டைப் செய்வது, ஃபாண்டுகளை மாற்றுவது என்பது உட்பட தமிழ் மென்பொருள்கள் பற்றியும் அறிவியல் விஷயங்களையும் எளிமையாக எழுதியுள்ளார்.

5. யுவகிருஷ்ணா
www.luckylookonline.com

தி.மு.க.வின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத்தான் பிளாக் தொடங்கியுள்ளதாக சொல்கிறார் இவர். படுசீரியஸாகவும் இல்லாமல் மொக்கையாகவும் இல்லாமல் நடுவாந்திரமாக எழுதுவதால் அனைத்து தரப்பினராலும் படிக்கப்படுகிறார்.

6. பரிசல்காரன்
www.parisalkaaran.com

திருப்பூரைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணகுமார் பிளாக். மே 2008ல்தான் தொடங்கியிருக்கிறார். நிறைய எழுதுவதால் குறுகிய காலத்திலேயே ஹிட் ஆகிவிட்டார். யூத் பிளாக்கர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு.

7. அதிஷாவின் எண்ண அலைகள்
www.athishaonline.com

பிளாக்கர்களின் பலமான மொக்கைத்தனமும், சகட்டுமேனிக்கு அடிக்கும் கிண்டலும்தான் இவரது பலமும். எந்த புது சினிமா வெளியானாலும் முதல் காட்சி முடிந்து இரண்டாவது காட்சி ஆரம்பிப்பதற்குள் இவர் விமர்சனம் வெளியாகிவிடும்.

8. மொழிவிளையாட்டு
www.jyovramsundar.blogspot.com

சென்னையைச் சேர்ந்த ஜ்யோவ்ராம் சுந்தர் பிளாக். சிறுபத்திரிகை வட்டாரத்தில் பின்நவீனத்துவம் பேசுபவர்கள் குறைந்துவிட்டாலும், பிளாக்கில் ஒரு பெரிய அணியே இருக்கிறது. அவர்களில் இந்த பிளாக் பிரசித்தமானது.

9. சத்தியக்கடுதாசி
www.satiyakadatasi.com

ஈழத்து எழுத்தாளரான ஷோபாசக்தியின் பிளாக். இலங்கைப் பிரச்னை பற்றி இவர் அபிப்ராயத்தைத் தெரிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அ.மார்க்ஸ், ராஜன்குறை போன்ற சிறுபத்திரிகை பிரபலங்களும் எழுதுகிறார்கள்.

10. ஸ்மைல் பக்கம்
www.livingsmile.blogspot.com

திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் பிளாக். இலக்கியமும் சினிமா-வும்  அதிகம். சினிமாகாரர்கள் திருநங்கைகளை சித்திரிக்கும் விதம் பற்றி காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

– தளவாய் சுந்தரம்

Thalavai Sundaram: Top 10 Books: Year in Review

In Books, Lists, Magazines on ஜனவரி 14, 2009 at 5:39 பிப

31.12.08   தொடர்கள்
நினைவிற்கு எட்டியவரை  ஓர் அரசியல் சுயசரிதை   ஜோதிபாசு; தமிழில்: வீ.பா. கணேசன்

தொடர்ந்து ஐந்து முறை வெற்றிபெற்று 23 ஆண்டுகள் மேற்குவங்கத்தில் முதலமைச்சராக  இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின்  சுயசரிதை.

வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம் பேட்டை, சென்னை-21. விலை ரூ.200.

நான் வித்யா  லிவிங் ஸ்மைல் வித்யா
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய ஒரு திருநங்கையின் பகிரங்க வாக்குமூலம்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை-18. விலை ரூ.100.

கனவு மெய்ப்பட வேண்டும்    தமிழருவி மணியன்

பாரதி மீது வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களுக்கு தனக்கேயுரிய எளிமையான நடையில் பதில் சொல்கிறார் தமிழருவி மணியன்.

வெளியீடு: தென்திசை பதிப்பகம், 52 தென்மேற்கு போக் ரோடு, தி. நகர், சென்னை-17. விலை ரூ.100.

மேயோ கிளினிக் உடல்நலக் கையேடு – பதிப்பாசிரியர்: சிவசுப்ரமணிய ஜெயசேகர்

கிட்டத்தட்ட எல்லா நோய்களைப் பற்றியும் சுருக்கமான குறிப்புகளைத் தருவதுடன் எப்பொழுது டாக்டரை பார்க்க வேண்டும், என்னென்ன சுய தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் விவரிக்கும் மருத்துவ நூல்.

வெளியீடு: அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தா நத்தம்_ 621310. விலை ரூ.250.

ஒபாமா –  செ.ச. செந்தில்நாதன்

பராக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு. ஒபாமாவின் அரசியல் நிலைப்பாடுகளை விவரிப்பதுடன், உலக அரசியல் குறித்து அவர் எழுதிய நூலில் இருந்து சில பகுதிகள் மொழிபெயர்த்தும் தரப்பட்டுள்ளன.

வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ், 12 முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-24. விலை ரூ.60.

கதை நேரக் கதைகள் –  பாலு மகேந்திரா

பாலுமகேந்திராவின் கதை நேரக் கதைகள் தொடரில் வந்த ஆறு சிறுகதைகள், அதன் திரைக்கதை வடிவங்கள், ஆறு குறும்படங்களின் டி.வி.டி. மூன்றும் கலந்த ஒரு `பேக்’ இந்தப் புத்தகம்.

வெளியீடு: வம்சி புக்ஸ், 19 டி.எம்.சரோன், திருவண்ணாமலை-1. விலை ரூ.150.

நடந்தாய் வாழி காவேரி தி.ஜானகிராமன், சிட்டி

தமிழில் எழுதப்பட்ட பயண அனுபவங்களிலேயே மிகச் சிறந்தது எனக் குறிப்பிடப்படும்  புத்தகம்.  தலைக்காவிரி தொட்டு பூம்புகார் வரைக்கும் காவிரிக் கரையோரமாக பயணம் செய்து எழுத்தாளர்கள் சிட்டியும் தி.ஜாவும்  எழுதியிருக்கிறார்கள்.
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில்.விலை ரூ.225.

யாமம் எஸ். ராமகிருஷ்ணன்

சென்னையின் நூற்றைம்பது வருடத்துக்கு முந்தைய சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று நாவல்.  குறிப்பிடும்படியாக வேறு இலக்கிய நாவல்கள் எதுவும் இந்த வருடம் வராததால் தனிக்காட்டு ராஜாவானது யாமம்.

வெளியீடு: உயிர்மை, 11/29 சுப்ரமணியன் தெரு, அபிராமபுரம், சென்னை-18. விலை ரூ.225.

குற்றமும் தண்டனையும் தஸ்தயேவ்ஸ்கி; தமிழில்: எம்.ஏ. சுசிலா
உலகின் முதல் ஐந்து சிறந்த நாவல்களில் ஒன்றாக குறிப்பிடப்படும் ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி நாவலின் மொழிபெயர்ப்பு. வெளியாகி நூறு வருடங்களைக் கடந்துவிட்ட பிறகும், இன்றும் படிக்க புதிதாக இருப்பதே இதன் சிறப்பம்சம்.

வெளியீடு: பாரதி புக் ஹவுஸ், டி-28 மாநகராட்சி வணிக வளாகம், பெரியார் பேருந்து நிலையம், மதுரை-1. விலை ரூ.500.

சிலப்பதிகாரம்: எல்லோர்க்குமான எளிய உரையுடன் ப. சரவணன்பண்டிதர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் போன்றோரால்தான் படித்து புரிந்துகொள்ள முடியும் என்பதில்லாமல்  சாமான்யர்களும் படித்து ரசிக்கத்தக்க வகையில் எழுதப்பட்ட சிலப்பதிகார உரை.

வெளியீடு: சந்தியா பதிப்பகம், நியூடெக் வைபவ், 57-53வது தெரு, அசோக் நகர், சென்னை-83. விலை ரூ.250.

-தளவாய் சுந்தரம்