காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடான 2005இன் சிறந்த நாவலுக்கான ‘தமிழ் வளர்ச்சித் துறை’யின் பரிசு பெற்ற சோ.தர்மனின் கூகை நாவலிலிருந்து…
இரவில் கூகை கூப்பிட்டால் என்னென்ன நடக்கும்?
ஓருரை உரைக்குமாகில் உற்றதோர் சாவு சொல்லும்.
ஈருரை உரைக்குமாகில் எண்ணிய கருமம் ஈடேறும்.
மூவுரை உரைக்குமாகில் மோகமாய் மங்கை சேர்வாள்.
நாலுரை உரைக்குமாகில் நாழியில் கலகம் வந்திரும்.
அய்யுரை உரைக்குமாகில் ஒரு பயணம் கிட்டும்.
ஆருரை உரைக்குமாகில் அடுத்தவர் வரவு கூறும்
ஏழுரை உரைக்குமாகில் இழந்த பொருள்கள் மீளும்
எண்ணுரை உரைக்குமாகில் திட்டென சாவு நேரும்
ஒன்பதும் பத்தும் உத்தமம் மிகவே நன்று