Snapjudge

Posts Tagged ‘Kollywood’

13 Facebookers about Suzhal – Amazon Prime TV Series: சுழல்

In Lists, Movies, TV on ஜூலை 2, 2022 at 7:53 பிப

0. Suresh Kannan

‘சுழல்’ வெப்சீரிஸின் முதல் எபிஸோட் மட்டும் பார்த்தேன். சில வெளிநாட்டுத் தொடர்களின் தரத்தைப் பார்க்கும் போது ‘நம்மூரில் இது போல் வருவதற்கு பல வருடங்களாகும்’ என்கிற ஏக்கம் எனக்கு எப்போதும் ஏற்படும்.

இதுவரை தமிழில் வந்த பல அரைகுறையான இணையத் தொடர்களும் – நான் பார்த்த வரைக்கும் – அதை மெய்ப்பித்தன. என் எதிர்பார்ப்பை ஓரளவு எட்டிய தொடர் என்று கௌதம் மேனன் இயக்கிய ‘க்வீனை’ சொல்வேன்.

இந்த எதிர்பார்ப்பில் மேலும் சில படிகளை தாண்டிச் சென்றிருக்கிறது ‘சுழல்’. நமக்கு கொலம்பியா போதைப் பொருள் மாஃபியா போன்ற அயல் நாட்டுச் சமாச்சாரங்கள் எல்லாம் தேவையில்லை. நம்முடைய தொன்ம கலாசாரங்களில் இருந்து காட்டவே ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

அந்த வகையில், இந்தத் தொடரில் ‘மசானக் கொள்ளை’யின் பின்னணியை இத்தனை விஸ்தாரமாகவும் நுணுக்கமாகவும், பிரம்மாணடமாகவும் உருவாக்கிக் காட்டிய அந்த மெனக்கெடலுக்காகவே ஒரு பெரிய சபாஷ். ஏறத்தாழ ஒரு திரைப்படத்திற்கு நிகரான உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள்.

இது தவிர தொழிற்சாலை போராட்டம், யூனியன் லீடரின் குடும்ப உறவுகள், சிக்கல்கள், இன்ஸ்பெக்டரின் குடும்பம் என்று முதல் எபிசோடியிலேயே தொடர் களை கட்டி விட்டது.

ஆனால் – மணிரத்னம் திரைப்படங்களைக் கவனித்தால் சில காட்சிக்கோர்வைகளை, உணர்வுகளை அத்தனை ஆழமாக, பிரமிப்பேற்றும் வகையில் உருவாக்கி விடுவார். இதற்கு முரணாக சில காட்சிகள் பிளாஸ்டிக் தன்மையுடன் ஒட்டாத வகையில் செயற்கையாக இருக்கும்.

இதிலும் அந்த வாசனையை சிலபல இடங்களில் உணர்ந்தேன். அந்த வகையில் இந்தத் தொடர் இன்னமும் கூட உயரத்தை எட்டியிருக்கலாம் என்று தோன்றியது. (முதல் எபிசோடை வைத்தே இதை சொல்லக்கூடாது என்றாலும்).

oOo

ஸ்ரேயா ரெட்டியை எனக்கு அவர் SS Music-ல் விஜேவாக இருந்த காலத்தில் இருந்தே அத்தனை பிடிக்கும். அவரின் தோற்றத்தில் ஏதோவொரு தனித்த வசீகரம் இருக்கிறது. இந்தத் தொடரில், போலீஸ் யூனிபார்மிலும் சரி, புடவையிலும் சரி, பார்ப்பதற்கே அத்தனை ரகளையாக இருக்கிறார். நெருங்கிச் சென்று ப்ரபோஸ் செய்து விடலாம் போல தோன்றுகிறது.

‘அழகி’ படத்தில் வரும் சண்முகம் என்கிற பாத்திரப் பெயரை வைத்து விட்டதாலோ என்னமோ, அந்தப் படத்தில் வருவது போலவே அவ்வப்போது கண்ணாடியைக் கழற்றி துடைத்துக் கொள்கிறார், பார்த்திபன். ஆனால் கவனிக்கத்தக்க நடிப்பு. மற்றபடி கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆசிரம மனைவி, பாக்டரி முதலாளி என்று ஒவ்வொரு பாத்திரமுமே தனித்துத் தெரிகிறார்கள். ஒவ்வொரு கேரக்ட்டரை அதன் தனித்தன்மையுடன் உருவாக்கியிருக்கிறார்கள்.

புஷ்கர் காயத்ரி என்கிற பெயரே இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அது வீண் போகவில்லை. முதல் எபிசோடை பிரம்மா சிறப்பாக இயக்கியிருக்கிறார். சாம் சி.எஸ்.-ன் பின்னணி இசையும் சிறப்பு. ஒளிப்பதிவின் நோ்த்தி ரகளையாக இருக்கிறது.

oOo

ஏற்கெனவே சொன்னதுதான். தமிழ் வெப்சீரிஸ்களில் இதுவரை வந்தவற்றின் தரத்தில் ஒரு புதிய மைல்கல்லை இந்தத் தொடர் ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். முழுதும் பார்த்து விட்டுச் சொல்கிறேன்.

Do not Miss it.


1. பொம்மையா முருகன்

நாலு இல்ல அஞ்சி எபிசோடுகளோட கிரிஸ்பா முடிக்க வேண்டியத எட்டு வரைக்கும் இழுவையா இழுத்திருக்காங்க.

பொதுவாக இந்த மாதியான சஸ்பென்ஸ் கதைகளில் முதலில் குற்றம் நடக்கும் கிளைமேக்சில் சஸ்பென்ஸ் உடையும் இடைப்பட்ட காட்சிகளின் டிவிஸ்ட் நம்மை அட போடவைக்கும் ஆனால் இதில் இடைப்பட்ட காட்சிகள் அப்படி அட போட வைக்கவில்லை ஓ… அப்படியா எனத்தான் சொல்லவைக்கிறது

அதனாலோ என்னவோ கிளைமேக்ஸ்சில் இவர்தான் குற்றவாளி என சஸ்பென்ஸ் உடையும் போதும் ஓ.. அப்படியா எனத்தான் கேக்க வைக்கிறது…

நேரடி குற்றவாளி அவர்தான் எனினும் மறைமுக குற்றவாளிகள் பார்த்திபனும் அவர் மனைவியும் இதை அடுத்த சீசனில் எடுத்துச் சொல்லவார்கள் என நினைக்கிறேன்.

பெண் குழந்தைகள் வளரும் வீட்டில் கனவன் மனைவிக்குள் ஈகோ இருக்கக் கூடாது ஈகோ வால் இருவரும் பிரிந்ததால் தான் அந்த குழந்தைகளுக்கு விபரீதம் ஏற்படுகிறது என்பதுதான் இந்த சீசனின் சொல்லப்படாத மையக்கரு.

மற்றபடி இந்த சீசனில் கவர்ந்தவர் ஸ்ரேயா ரெட்டி பாசமான அம்மா, பொறுப்பான காவல் அதிகாரி என ரெண்டுலயுமே ஸ்கோர் செய்கிறார். பார்த்திபனுக்கு கிட்டத்தட்ட இதில் கவுரவ தோற்றம் தான்.

மொத்தத்தில் O2 படத்துக்கு இது எவ்வளவோ பெட்டர்.


2. Ponnambalam Kalidoss Ashok

‘பெற்றோர் பிரிந்து வாழ்ந்தால் குழந்தைகளின் நிலைமை.குறிப்பாக , குழந்தைகள் பெண்களாக இருந்தால்? ‘

என்ற கருவை வைத்து ஒரு கிரைம் திரில்லர்..’சுழல்’

திரைக்கதையோடு மயானக் கொள்ளை என்ற ஒன்பது நாட்கள் நிகழ்வுகளையும் பொருத்தி படம் இயங்குகிறது. அதற்கான பொருத்தமான தலைப்புகள் ! Creation had it’s flavours! Great!

எட்டு எபிசோடுகள். இறுதி வரை படு சஸ்பென்ஸ். ஒவ்வருவரையும் சந்தேகித்து அவர்களை விடுவிக்க அடுத்த சுழல். இறுதியில் முடிச்சு அவிழும் பொழுது நாம் உறைகிறோம்.

இரு இயக்குநர்கள் எபிசோடு இயக்குநர்கள்.

கதிர் படம் முழுக்க படு வேகமாக.. அம்மாவின் மீது பாசமாக..வருங்கால மனைவியிடம் காவலர்களின் சூழலை புரிய வைத்தல்..கோபம் குமுறல் என படம் முழுக்க ரவுண்டு கட்டி அடிக்கிறார்.

அவர் அதிகாரியாக ஸ்ரேயா ரெட்டியும் தொழிலாளத் தலைவராக பார்த்திபனும் ஆஹா. ஹரிஷ் உத்தமன் ..அவரின் தந்தை..சந்தான பாரதி..குழந்தைகள்.. குமாரவேல்..காவல் நிலைய அலுவலர்கள் என ஒவ்வருவரும் படத்தை அற்புதமாக நகர்த்துகின்றனர். ஈஸ்வரனாக வருபவர் மிரள வைக்கிறார்.

திருநங்கையர் பற்றிய கருத்து சிந்திக்க வைக்கிறது. அதே போல் குழந்தைகளின் அவல நிலை.. அதனை மறைக்காது சொல்ல வேண்டும் என்ற பல உணர்வுகளை படம் சொல்வது தேவையான ஒன்று.

குமாரவேலும் ஐஸ்வர்யா ராஜேஷும் பிரமாதம். இசை சரியாக .

ஒளிப்பதிவு குறிப்பாக ஒன்பது நாள் மயானக் கொள்ளையை படத்துடன் நகர்த்த அபாரமாக உதவுகிறது. புரிசைக் குழுவினர் என்று நினைக்கிறேன். ஆஹா!

கதையையும் குறிப்பிட்ட பகுதியின் கலாச்சாரத்தையும் சேர்த்து விறு விறுப்புக் குறையாமல் அதே சமயம் எடுத்துக் கொண்ட கதையை தெளிவாகச் சொல்லிய குழுவிற்கு பேரன்பு!


3. Sivakumar Venkatachalam

சுழல் (ஸ்பாய்லர் இல்லை)

கொஞ்சம் ஏனோதானோ என்று போகும் கதை ஏழாவது எபிஸோடில் எழுந்து உட்கார வைத்து விடுகிறது.

அதுவரையிலும் சற்று அசுவராஸியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பது என்னவோ உண்மை. ஆனால் கடைசி இரண்டு எபிஸோடுகளில் இயக்குநரின் திறமை பளிச்சென்று வெளிப்படுகிறது. குழம்பிக் கொண்டிருந்த கேள்விகளுக்கு போகிற போக்கிலேயே விடைகள் கிடைத்து விடுகின்றன. அந்த நேரத்தில் டைரக்டரைக் கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டு விட்டோமோ என்கிற எண்ணத்தை வரவழைத்து விட்டார்கள்.

இதை மூன்று மணி நேரமாக ட்ரிம் செய்து தியேட்டரில் படமாக விட்டிருந்தாலும் சிறப்பாக ஓடியிருக்கும். மொத்தமாக ஒரு புதிய டீம், வித்தியாசமான காம்போ, ஃப்ரஷ்ஷான முகங்கள், யூகிக்கமுடியாத திருப்பங்கள் என்று பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள்.

அந்த மயானக்கொள்ளையை மிகவும் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். அதற்காக ஒருநாள் செட் போட்டு முடித்துவிட்டு கழற்றி வைத்ததுமாதிரியும் தெரியவில்லை. முன்னும் பின்னுமான காட்சிகளில் அந்த மயானக்கொள்ளையில் கதாபாத்திரங்களை நடக்கவிட்டு கதையோடு கலந்திருக்கிறார்கள். அதற்கான இயக்குநரின் திட்டமிடுதல் மிகவும் பாராட்டத்தக்கது.

ஸ்ரேயா ரெட்டி. திமிரு படத்தையடுத்து இப்போதுதான் அவரைப் பார்க்கிறேன். என்னவொரு ஆளுமையான நடிப்பு! அதுவும் ஆம்பிளைகளை தூக்கி சாப்பிடும் அளவிற்கு. இப்படிப்பட்ட கம்பீரம் கொண்ட பெண்கள் தனி அழகு.

பார்த்திபன் ஆரம்பத்தில் ரொம்பவே சுமாராக ஏதோ ஆர்வமில்லாதவர் போல நடிக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக லைன் பிடித்துவிட்டார்.

கதிர், ஹரீஷ் உத்தமன், அவரது அப்பாவாக வரும் சேட்டு, அந்த இளம் ஜோடி என்று எல்லோருமே இயல்பான நடிப்பு. கேரக்டர்களை பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து கதையோடு மிக அழகாக ஐக்கியமாக்கி இருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் உச்சம் தொடுகிறார். கேரக்டரை உள்வாங்கிக் கொள்வதில் ரொம்பவே கில்லாடி.

சாம் சிஎஸ்ஸின் இசை சினிமாவுக்கு சமமாக இருக்கிறது. சின்ஸியராக வேலை செய்திருக்கிறார். கேமரா வொர்க், குறிப்பாக ட்ரோன் ஷாட்டுகள் பிரமாதம். எட்டு எபிஸோடுகள் கொண்ட கம்ப்ளீட் பேக்கேஜ். சோபாவில் குண்டுக்கட்டாக அமர்ந்தவாறு குட்டித் தலையணையை மடியில் போட்டபடி நகங்கடித்துக்கொண்டே பார்ப்பதற்கு ஒரு

அருமையான கண்டன்ட்


4. Braveenan Sritharan

சுழல்

முதல் 4 episodes இலயே series முடிச்சிருக்கலாமே 😔

சிறுபராயக்காதல் தான். ஆனால் அதன் ஆழத்தை ஒரு வசனத்தில் அழகாக சொல்லியிருப்பார்கள் “Postmortem பண்ணும் போது இரண்டு பேரையும் பிரிக்கவே கஷ்டமாப்போச்சு. நகமும் சதையுமா ஒட்டியே இருந்தாங்க.”

அடுத்த 4 episodes சமூகத்துக்கு இப்போது தேவையான கருத்தை நோக்கிய பகுதிகள். அதை இறுதி episode வரை கொண்டு வந்து தெளிவுபடுத்தியது தான் மொத்த webseries இன் வெற்றி.


5. Syeda Fareeha

தமிழ்ல வந்து இருக்கிற வெப் சீரிஸ்..

முழுமையான சமூக, குடும்ப, தனிமனித உளவியல் சார்ந்த கதை.

ஒவ்வொரு நிகழ்வுக்கும் பிண்ணனியா ஒரு உளவியல் காரணம், குடும்ப அமைப்பு சிதைவுகள், நம்பிக்கைக்கும் நிஜங்களுக்குமான இடைவெளி.. இப்டி பல அடுக்குகள்…

கதையோட கரு பெண் பிள்ளைகளுக்கு வீட்லயே நடக்குற sexual abuse‌ தான்..

So பேரன்ட்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க..

Last வரைக்கும் கொலையாளி யாருனு மண்டைய பிச்சுக்க வைக்குற செம திரில்லர் web series..


6. Sundar

#சுழல் must watch tamik web series #Suzhal

Must watch one, ஏன்?

சிவப்பு கொடி, கறுப்பு சட்டையை காட்டியதற்காக இல்லை,

Communism கடவுள் மறுப்பு கொள்கையை காட்டியதற்காக இல்லை

பெரியாரையும், Marxயும் காட்டியதற்காகவும் இல்லை.. 🙂

பின் எதற்கு என்றால், Gender equality இருக்கும், women charactersஅ மிக அருமையா காட்சி படுத்தியிருப்பாங்க..

ஆண்கள் எழுதி direct செ‌ய்‌கிற typical cinemaக்களுக்கு நடுவுல

பெண்கள் பார்வையில் பெண்களை காட்சிபடுத்தினால் எப்படி இருக்கும்னு இதுல சத்தமாசொன்ன மாதிரியான ஒரு கதை.. இன்னும் இது போன்று பல.. ❣️😌

“சுழல்” பற்றி உரையாட நிறைய இருக்கு,.. Must watch one


7. அருண் அலெக்ஸாண்டர்

The Vortex

நாளைக்கு சண்டே லீவு சரி ஒரு வெப்சீரிஸ் பார்க்கலாம்னு டவுன்லோட் பண்ணிட்டு ஒரு மூனு எபிசோட் வரைக்கும் பார்த்துட்டு மீதி நாளைக்கு பார்க்கலாம் தான் உட்கார்ந்தேன், ஆனா மூணாவது எபிசோடு இறுதியில் ஆரம்பிச்சு ஒரு பரபரப்பான திரில்லர் மூவி மேக்கிங்,ஸ்கிரீன்பிளே படத்தோட இறுதி வரைக்கும் விறுவிறுப்பாக கொண்டு போச்சு, கிரைம் நாவல் ரசிகர்களுக்கு நல்ல தீனி இந்த வெப்சீரிஸ். ஒவ்வொரு எபிசோட் முடியும் போதும் நம்ம யூகிக்க முடியாத ட்விஸ்ட் வச்சு பிரில்லியண்ட் மேக்கிங்….. 🙌🙌🙌

ஸ்ரேயா ரெட்டி ,சந்தானபாரதி மற்றும் கதிர் சிறப்பான நடிப்பு….

நல்ல தரமான வெப்சீரிஸ்… ஒரு சில இடங்களில் கெட்ட வார்த்தைகள் வரும், ஆனாலும் அனைவரும் குடும்பத்துடன் கட்டாயமாக பார்க்க வேண்டிய படம்…

மொத்தம் 8 எபிசோட் ஒரு தோராயமாக ஆறு மணி நேரம் தாண்டி வரும்.


8. சசி தரணி

கதிரையும்,திரிலோக்கையும் புடுச்சுது..

கடசி 3 எபிசோட் நல்லாருக்கு..

ரிப்பீட்டு ஆயிட்டே இருக்கற திருவிழா காட்சி ஒரு மாதிரி அயர்ச்சியா இருக்கு..

நைட் ஒரு மணி வரைக்கும் பாத்து முடிச்சேன்.என்னதா நடந்துச்சுனு பாக்க வெக்கற மாதிரிதா இருக்கு..


9. Valli Subbiah

சுழல்..

கடந்த சனி, ஞாயிறு இரு தினங்களில் (ஒரே நாளில் பார்ப்பது கடினம்) அமேசான் பிரைம் வீடியோ வில் பார்த்தது “சுழல்” வெப் சீரீஸ்…6.மணி நேரம் ஓடும் இந்த வெப் சீரீஸ் ஒரு க்ரைம் த்ரில்லர். அடுத்தடுத்து பார்க்கத் தூண்டும் கதையமைப்பு ..

இந்தக் கதையை எழுதியது புஷ்கர்- காயத்ரி ..இயக்கம் பிரம்மா G. அனுசரன் முருகையன்… கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஹரிஷ் உத்தமன், ஸ்ரேயா ரெட்டி என நட்சத்திரப் பட்டாளத்துக்கு குறைவில்லை.

‘சர்க்கரை’ என்று அழைக்கப்படும் சக்கரவர்த்தியாக சப் இன்ஸ்பெக்டர் ரோலில் கதிர் படம் முழுக்க ஆதிக்கத்தை செலுத்துகிறார். உணர்ச்சிகள் நன்றாக முகத்தில் பிரதிபலிக்கிறது.அவருக்கு மேலதிகாரியாக வரும் பெண் கதாபாத்திரம் அருமை.முதல் பாதியிலும், பிற்பாதியிலும் இரு வேறுபட்ட உணர்வுகளை

அருமையாக காட்டியுள்ளார்.

பார்த்திபன் தன் அனுபவ நடிப்பில் முத்திரை பதிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ,அவர் தங்கையாக வரும் பெண் ..இன்ஸ்பெக்டர் மகன் ..ஆலையின் ஓனர், அவர் மகன் என அனைவரும் கொடுத்த பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துவதோடு, இயல்பான நடிப்பால் கவர்கின்றனர் .

கதைக்குள் அதிகமாக போக விரும்பவில்லை, ஏனெனில் பார்க்காதவர்கள்… பார்க்க நினைப்பவர்கள்… நிறைய பேர் இருப்பார்கள் ..நடக்கும் ஒரு குற்றம். ..சந்தேக புள்ளி, ஒவ்வொரு எபிசோட் முடிவிலும் மாறிக்கொண்டே இருக்கிறது ..அந்த சஸ்பென்ஸ் இறுதி எபிசோடில் அவிழ்கிறது ..சுழல் என்ற தலைப்பு இதனாலேயே மிகப் பொருத்தம்.

ஊட்டியின் அழகான இயற்கை காட்சிகள் ஒவ்வொரு பிரேமிலும் மனதை கொள்ளை அடிக்கிறது. சினிமேட்டோகிராபி முகேஷ்வரன் நூறு சதவீத பாராட்டுக்கு தகுதியானவர்.

மெயின் கதையின் இணை கதையாக, அவ்வூர் பெண் தெய்வம் அங்காளம்மன்… 10 நாள் திருவிழாவான “மயான கொள்ளை” ஊரில் கொண்டாடப்படுகிறது .. ஒவ்வொரு நாள் ஒரு சிறப்பு. திருவிழா காட்சிகள் சுவாரசியமாக கதையுடன் சேர்த்து பின்னப் பட்டிருக்கிறது. அங்காளம்மன் திருவிழா காட்சிகள் மிகவும் ரசிக்கும் படியாக படமாக்கப்பட்டிருக்கிறது.. இறுதியில் பத்தாம் நாள் திருவிழாவில் கதையின் முடிச்சு அவிழ்கிறது.

மிக விறுவிறுப்பாக காட்சிகள் நகர்வதால் பார்க்க சலிப்பு தட்டவில்லை…இனிமையான இயற்கை சூழல்.. விறுவிறுப்பான கதை நகர்வு..இயல்பான நடிப்பு..

என நம்மை சுழல் இழுத்துச் செல்கிறது.

விறுவிறுப்பாக கதை சென்றாலும், அடுத்தடுத்த திருப்பங்கள், அடுத்தடுத்த நிகழ்வுகள் என்று இருந்தாலும், மிக அதிகப்படியான திருப்பங்கள் கொண்டதோ என்ற ஒரு சிறு எண்ணம் என் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை …அதனாலேயே சுழல் என்று பெயர் பெயர் பொருந்தும்…மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு பின்னணி கதை அவசியமா என்று தோன்றுகிறது.

போகிற போக்கில் சமூகத்திற்கு ஒரு

அருமையான , அவசியமான, மெசேஜையும் சொல்லிச் செல்கிறது இத்தொடர். சிறுவயது நிகழ்வுகள் குழந்தைகளை எப்படி பாதிக்கும் ..குழந்தைகள் அதனைப் பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாத போது அவர்கள் வாழ்க்கை எப்படி திசை மாறும் என்பது மிக ஆழமாக, அழுத்தமாக ,சொல்லப்பட்டிருக்கும் கருத்து .அதற்கு கதாசிரியருக்கு மிகப்பெரிய பாராட்டைக் கூறலாம்.

மொத்தத்தில் பார்த்து ரசிக்க வேண்டிய

அருமையான தொடர். …நம்மை எழ விடாமல் பார்க்க வைப்பதே இத்தொடரின் வெற்றி என்று கூறலாம்.

தி.வள்ளி.


10.தமிழன் விஷ்ணு

சாம்பலூர் எனும் மலை கிராமத்தில் இயங்கும் சிமெண்ட் தொழில்சாலை க்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்க, போலீஸ்களை வைத்து தொழில்சாலையின் முதலாளி போராட்டத்தை களைக்க….அன்று இரவே சிமெண்ட் தொழில்சாலை தீ பிடித்து எரிய,அதே இரவில் தொழில்சாலையின் யூனியன் லீடர் மகள் காணாமல் போக கிராமத்தில் அங்காளம்மன் திருவிழாவும் நடக்க…சிமெண்ட் தொழில்சாலைக்கு தீ வைத்தது யார்? காணாமல் போன மகள் என்ன ஆனால் என்ன என்பதை 8 பார்ட் ஆக சுழன்று அடிக்குது இந்த சுழல்……

கதிர் மிகவும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.அவர்போலவே ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ்,ரா.பார்த்திபன் அழுத்தமான வேடம் அம்சமாக நடித்துள்ளார்கள்…..மகள்கள் மற்றும் மனைவியை தான் சரியாக புரிந்துகொள்ள வில்லை என்று அவர் உடையும் இடத்தில் நல்ல நடிப்பு பார்த்திபன்…

சாம் C. S பின்னணி இசையும், திரைக்கதையும் சீரிஸின் தரத்தை முன் நகர்த்துகிறது. மேலும் ஒளிப்பதிவாளர் மிரட்டியிருக்கிறார். மயானக்கொல்லை எனப்படும் நிகழ்வை இவ்வளவு நேர்த்தியாக யாரும் எந்த படத்திலும் பதிவு செய்யவில்லை….

ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வோர் முடிச்சு என பயணித்து முடிவில் ஆஹா என பெருமூச்சு விட வைத்து அனுப்பும் இந்த சுழல்….மொத்தம் 8 பார்ட் 4,5 ம்ம்ம்ம் கொஞ்சம் ஸ்லோ ரொம்ப இழுவை மாதிரியும் 6,7,8 அப்டியே ஸ்பீட்ல போகும்.

இந்த சீரிஸில் ஒரு முக்கியமான மெசேஜ் இருக்கிறது.அதற்காக இந்த சீரிஸை அனைவரும் பார்க்கலாம்..

தமிழில் விலங்கு சீரிஸ் க்கு அப்றம் இந்த சுழல் ஹிட் ஏ…..


11. Vidhya M

சுழல் படத்தின் மையக்கருவை இன்னும் வெளிப்படையாக பேசவேண்டிய காலச்சூழலில் இருக்கிறோம்.

ஆனால் இன்ன காரணத்துக்காகத்தான் இந்த கொலைகள் நடந்தது என்றில்லாமல், திரில்லர் சீரிஸில் ஏழு எபிசோட்கள் எடுத்துவிட்டோம் எட்டாவது எபிசோடில் ஏதாவது காரணத்தை சொல்லியே ஆகவேண்டும் என்பதுபோல் மட்டுமே படத்தின் கரு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் கலை / போட்டோக்ராஃபி ரசனை, 43” அல்லது அதுக்கும் கூடுதல் திரை உள்ள டிவி அப்றம் நிறைய நேரமும் அதைவிட கூடுதல் பொறுமையும் இருந்தால் மயானக் கொள்ளை காட்சிகளுடன் சேர்த்து படம் பிடிக்கலாம்.

ஒரு

அருமையான திரில்லர் படத்தை ஏன் மயானக்கொள்ளை டாக்குமெண்ட்ரியுடன் மிக்ஸ் பண்ணி சீரிஸ் ஆக்கிவிட்டார்கள் என்பது மட்டும்தான் புரியவில்லை. 😌

மத்தபடி படம் பார்க்கலாம் 🖤


12. Dhitalkies

பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ படைப்பாளிகள்

‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரின் சுவராசியங்களை வெளியிடவேண்டாம் என்றும், இந்த தொடரின் அனைத்து அம்சங்களையும் ஒவ்வொரு பார்வையாளர்களும் பிரத்யேகமாக பார்த்து ரசிக்க அனுமதிக்க வேண்டும் என இந்த தொடரை உருவாக்கிய படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான புஷ்கர் & காயத்ரி அவர்களின் பட்டறையிலிருந்து தயாராகி, அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 தேதி முதல் வெளியான முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடர் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’. க்ரைம் த்ரில்லர் பாணியிலான புலனாய்வு தொடரான ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ எட்டு அத்தியாயங்களைக் கொண்டது. அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட இந்த தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து, அனைவரது பட்டியலிலும் இது இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சுவராசியமான முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்திருப்பதால் இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனால் இந்த தொடரில் இடம்பெற்ற திடுக்கிட வைக்கும் சுவராசியமான திருப்பங்களை ரசிகர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். ஏனெனில் தொடரின் ஒவ்வொரு திருப்பங்களையும், அவர்களே ஆழமாக உற்றுப்பார்க்கும் போது அவர்களது எதிர்பார்ப்பும், ஊகங்களும் கூட தவறாக போகலாம்.

மேலும் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ தொடரைப் பற்றி தயாரிப்பாளர்கள் பேசுகையில், ” ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் எதிர்பாராத வகையில் திருப்பங்கள் இருக்கிறது. திருப்பத்திற்குரிய தடயங்கள் இருந்தாலும், அவை பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கின்றன. ஆனால் இறுதி அத்தியாயத்திற்கல்ல. நீங்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் திருப்பங்களை ஊகித்திருந்தாலும் அதை வெளிப்படுத்த வேண்டாம். நீங்கள் அனுபவித்த கலை இன்பத்தை மற்றவர்களும் உணர அனுமதிக்கவேண்டும். இந்த தொடர் தரும் ஆச்சரியத்துடன் கூடிய திருப்பங்களை, ஒவ்வொருவரும் பார்க்கும் போது, அவர்களே கண்டுபிடித்து ரசிக்கும் வகையில் மகிழ்ச்சியை பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.” என்றனர்.

Best Tamil Movies of 2018: Top 10 Cinema

In Movies, Tamilnadu on ஜனவரி 1, 2019 at 5:19 பிப

இந்த ஆண்டின் மோசமான படங்களைப் பார்த்தோம்.

2018ன் திராபையான திரைப்படங்களையும் பட்டியலிட்டோம். 

Best Films of 2018 - Tamil Cinema Picks: Must See Movies from South India
  1. மனுசங்கடா – படம் குறித்த பார்வை
  2. மேற்குத் தொடர்ச்சி மலை
  3. காலா – காலா என்னும் ராமர் – ரஜினியாயணம்
  4. பரியேறும் பெருமாள்
  5. கோலமாவு கோகிலா
  6. தமிழ் படம் 2
  7. வட சென்னை
  8. காற்றின் மொழி
  9. சர்கார்
  10. எந்திரன் (ரோபோ) 2.0

2018 – Top 10 Mokkai Tamil Movies

In Movies, Tamilnadu on திசெம்பர் 26, 2018 at 5:22 பிப

முந்தைய பதிவு: 2018 – Top 10 Tamil Movies | 10 Hot

இந்த ஆண்டின் மோசமான படங்களைப் பார்த்தோம். 2018ன் திராபையான திரைப்படங்கள் எது?

எந்தத் தமிழ்ப்படங்கள், உங்களின் பொறுமையை சோதித்து கர்ண கடூரமாக, சித்திரவதைக்கு உள்ளாக்கியது?

எந்த சினிமாக்களை உங்கள் எதிரிக்கு தண்டனையாக போட்டு காட்டுவீர்கள்?

Best Tamil Movies of 2018 - What are the Top picks for Mokkai Cinema
  1. வஞ்சகர் உலகம்
  2. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்
  3. இருட்டு அறையில் முரட்டு குத்து
  4. ஓடு ராஜா ஓடு
  5. யூ டர்ன்
  6. டிக் டிக் டிக்
  7. ப்யார் ப்ரேமா காதல்
  8. ஜுங்கா
  9. ராட்சஸன்
  10. சாமி 2 (ஸ்கொயர்ட்)

சிறந்த படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

Mani Ratnam and Jeyamohan’s Kadal Movie – Review and Viewer Questions

In Movies, Tamilnadu on பிப்ரவரி 1, 2013 at 7:36 பிப

கடல் படம் பார்த்தவர்களுக்கான வினாக்கள்:

1. மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சாத்தான் சொல்லிவிடுகிறது. இதற்கும் ‘நேர்மையான கொம்பன்’ வசனத்திற்கும் என்ன சம்பந்தம்?

2. நித்தியானந்தா, தினகரன் மாதிரி இடைத்தரகர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதை சாமுவேல் கதாபாத்திரம் எப்படி விளக்குகிறது?

3. விலை மாந்தருக்கு தேவாலயத்தின் பொது கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யும் அனுமதி மறுப்பதை முன் வைப்பதன் மூலம் ஆ. சிவசுப்ரமணியன் எழுதிய காலச்சுவடு பதிப்பகத்தின் “கிறித்துவமும் சாதியும்” புத்தகத்தில் இருந்து அனுமதியின்றி ஜெயமோகன் திருடினாரா?

4. மீசைக்காரன் என்று குறிப்பிடுவது யாரை: அ) வீரப்பன் ஆ) பாரதியார் இ) சண்டியர் ஈ) மேசைக்காரன்

5. ’ஒரே கடல்’ படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். ஜெயமோகனின் முதல் படத்திலும் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். மணி ரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’விலும் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். இதனால் நீவிர் அறியும் நீதி யாது?

6. இந்தப் படத்திற்கு இன்ஸ்பிரேஷன் சிறில் அலெக்ஸ் என்பது உண்மையா?

7. தாந்தே எழுதிய Divine Comedy மூன்றாகப் பார்க்கிறார்கள்: நரகம் – செமினரி; ஆத்மா சுத்தீகரிக்கும் உலகம் – தேவாலயம்; சொர்க்கம் – சுதந்திரம். [பெர்க்மானும் சாமுவேலும் சந்திப்பது போதகாலயம்; ஃபாதர் பணியாற்றுவது சர்ச்; கடைசியில் சிறையில் இருந்து விடுதலை] – படம் கிறித்துவத்தை இழிக்கிறதா?

8. கிறித்துவப் பாதிரியார்களும் பிஷப்களும் அருட்தந்தைகளும் ஆயர்களும் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் கடத்தல்காரர்களிடமிருந்தும் காணிக்கை பெறும் காட்சி ஏன் இடம் பெற வேண்டும்?

9. தாமஸ் மைலாப்பூர் வந்ததை எந்த Doubting Thomasம் சந்தேகிக்க முடியாது. அப்படியானால் தாம்ஸ் என்பதை திருவள்ளுவர் என்று பெயர் மாற்றம் செய்தது யார்? [பார்க்க – வள்ளுவரின் தங்கை எழுதிய ஆத்திசூடி என்னும் கிறித்தவ ஆக்கம்]

10. தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் பற்றி ஜெயமோகனுக்கு காசு கொடுத்தவர் யார்?

Top 10 influential Indian tweeters: Politics, Cinema, MSM Media Stars

In Blogs, India, Internet, Movies, Politics on செப்ரெம்பர் 24, 2012 at 9:15 பிப

According to the Burson-Marsteller study, the ten most influential Twitter accounts in India are (alphabetically):

  1. Kiran Bedi – @thekiranbedi
  2. Anand Mahindra – @anandmahindra
  3. Narendra Modi – @narendramodi
  4. Derek O’Brien – @quizderek
  5. Vir Sanghvi – @virsanghvi
  6. Jonathan Shainin – @jonathanshainin
  7. Digvijaya Singh – @digvijaya_28
  8. Dr. Subramanian Swamy – @Swamy39
  9. Sushma Swaraj – @SushmaSwarajBJP
  10. Shashi Tharoor – @ShashiTharoor

According to the Pinstorm India Influencers list, the most influential Indians are celebrities.

  1. Priyanka Chopra with an aggregated score of 85
  2. Sashi Tharoor
  3. Amitabh Bachchan
  4. Ram Gopal Varma
  5. Hrithik Roshan
  6. Akshay Kumar
  7. Madhuri Dixit
  8. Kiran Bedi
  9. Shahrukh Khan
  10. Actor Siddarth

Indian firm Pinstorm runs a similar ranking system called the ‘India influencers list’ which averages a users Klout score and Peer Index score. Peer Index, is like Klout, a social media analytical tool that measures influence.

Movie Actress List: Sisters in Indian Films

In India, Lists, Movies on ஓகஸ்ட் 8, 2012 at 7:54 பிப

1. அம்பிகா, ராதா

2. இந்திரா, ராசி

3. லலிதா, பத்மினி, ராகினி

4. நக்மா, சிம்ரன், ஜோதிகா, மோனல்

5. பானுப்ரியா, நிஷாந்தி

6. ஜெயசுதா, சுபாஷிணி

7. கரிஷ்மா கபூர், கரீனா கபுர்

8. ஷாலினி, சாம்லி

9. டிஸ்கோ சாந்தி, லலிதகுமாரி

10. ஊர்வசி, கல்பனா

11. ராதிகா, நிரோஷா

Actor Santhanam Punch Dialogues in Saguni

In Movies, Tamilnadu on ஜூன் 25, 2012 at 8:38 பிப

1.  எங்கே போகனும்?

ஒவ்வொரு ஒயின்ஷாப் ஒயின்ஷாப்பா போ.. 
 ஹூம், காலைலயேவா?
2. முதல்ல  ஒரு ஆஃப் சொல்லு..
 எனக்கு அந்த  பழக்கமே இல்லையே?
 ஹலோ, நான் ஆஃப் சொல்லச்சொன்னது எனக்கு…
3. அண்ணே,, கோவிச்சுக்காதீங்க.. இதுவரை 2000 லிட்டர் சாராயம் குடிச்சிருப்பீங்க.. எப்போதான் என் வேலையை முடிச்சுத்தருவீங்க..?
4. கமல் சார்.. உங்க தம்பிங்க யாரு?
ம்.. சாருஹாசன், சந்திர ஹாசன்
5. என்னடா.. ஹீரோ வந்து இவ்ளவ் நேரம் ஆகியும் லவ் போர்ஷன் ஓப்பன் ஆகலையேன்னு பார்த்தேன்..
6.. ஆமா, உனக்குதான் தெலுங்கே தெரியாதே.. எப்படி அவ சொன்னதுக்கு அர்த்தம் தெரிஞ்சது?
 அதுக்கு லேங்குவேஜ் தெரியனும்னு அவசியம் இல்லை, பாடி லேங்குவேஜ் சொல்லிடுமே?
7. மேடம், நீங்க கூட அடுத்தவன் ஒயிஃப் தான்.. விசாரணைங்கற பேர்ல இவ்ளவ் பக்கமா நிக்கறீங்க.. நான் ஏதாவது தப்பு செஞ்சேனா?
8. எங்க ஆச்சி எப்படி மீன் குழம்பு வைப்பாங்க தெரியுமா?
கதைக்குள்ள கதையா? உஷ் அப்பா.. முடியல……
9. கடைசில அவ என்ன சொன்னா தெரியுமா? “ எல்லா பொண்ணுங்களுக்கும் உன்னை பிடிக்கும்.. அப்டினு,,,
இது அவங்களா சொன்னதா? நீயா சும்மா பிட்டு சேர்த்துக்கிட்டியா?என் கிட்டேயே பில்டப்பா?

10. ராஜேஷ்குமார் நாவல்ல கூட 2 வது பக்கத்துலயே ஹீரோயின் அறிமுகப்படுத்திடுவாரு.. நீ ஏண்டா இன்னும் டிலே பண்ணிட்டு இருக்கே?

11. சின்னப்பையனா இருக்க சொல்ல,  சொல்லப்பட்ட கதைல தேவதை 3 கோடாலியை தனித்தனியா கொடுத்தப்போ வேணாம்னு சொன்ன விறகு வெட்டி மாதிரி அனுஷ்கா,  ஆண்ட்ரியா அப்டினு எல்லா ஃபிகர்சையும் மிஸ் பண்ணிட்டே போறியே.. எனி மெகா பிளான்..?
12.  டேய்.. அய்யய்யோ உன் ஆள் யார்னு சீக்கிரம் சொல்லித்தொலைடா.. என் ஆளா இருந்துடப்போகுது.. அதோ அதுவா?
ச்சே ச்சே. அதை எல்லாம் மனுஷன் பார்ப்பானா?
டேய்.. அது என் ஆளு..
13.கடசில  நீ சொன்ன பொண்ணு உன் சொந்த அத்தை பொண்ணுதானா?அதுக்கா இந்த பில்டப் கொடுத்தே..
14. லவ் பண்ற எல்லாரும் தாஜ்மகாலையே கிஃப்டா தர்றீங்களே.. ஒரு வள்ளுவர் கோட்டம், வண்டலூர் ஜூ இப்படி வித்தியாசமா ஏதாவது தரலாமே?
15. நல்ல வேளை.. உன் மாமியாருக்கு தாஜ்மகால் பொம்மை கொடுத்தே.. அல்வாவும் ,மல்லிகைப்பூவும் தர்லை..
தந்திருந்தா?
மாமியார் மாசம் ஆகி இருப்பாங்க .. போடாங்…..
16. .கார் ஓட்டப்போறீயா? உன் ஆளை ஓட்டப்போறியா?
17. என்னை லவ் பண்றியா?ன்னு கேட்டதுக்கு அவ எதுவும் சொல்லலை.. சொல்லி இருந்தா ஆத்துல மீன் பிடிச்சிருப்பேன்..
ம் சொல்லி இருந்தா மீனையாடா பிடிச்சிருப்பே..?
18.. அட போப்பா.. உனக்கு ஆண்ட்ரியா, அனுஷ்கா அப்டி ஏதேதோ பொண்ணுங்க செட் ஆகுது. ஆனா சொந்த அத்தை பொண்ணு செட் ஆக மாட்டெங்குதே?
இந்த அத்தை பொண்ணுங்களே இப்படித்தான் மச்சான் அதுப்பு காட்டுவாளுங்க ( அதுப்பு = அல்டாப்பு )
19. அவளுங்க எல்லாம் பசிக்கு சாப்பிடற ஆள்ங்க இல்லை, பந்தாவுக்கு சாப்பிடறவங்க.. நாம தான் இன்னும் பழசை எல்லாம் மறக்காம சாப்பிட்டுட்டு இருக்கோம்.. அவங்க பர்கர், பீட்சா அப்டினு அசத்திட்டு இருக்காங்க..

20. அறிவு இருக்கறவன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான். ஆல் அறியாத வயசு.. நம்புப்பா..

21. பீச்சில் – குடைக்குள்ளே குடித்தனம் நடத்திட்டு இருக்கற அண்ணே.. டைம் சொல்லுங்க..
என்ன இவ்ளவ் லேட் பண்றாரு.. ஜஸ்ட் டைம் தானே கேட்டோம்?
அட இருப்பா.. அவர் முதல்ல தன் கை எங்கே இருக்குன்னு தேடி எடுக்கனும் இல்லை.. அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி?
22. அது ஏன் எல்லாரும் யூரின் போக கரண்ட் கம்பத்துக்கு வந்துடறீங்க.. ?
பல்லவர் காலத்துல இருந்தே அது பழக்கம் ஆகிடுச்சு..
சோழர் காலத்துல அது இல்லையே? ( ஆயிரத்தில் ஒருவன் )
23. டேய்,.. அங்கே என்ன எழுதி  வெச்சிருக்கு?
பொறுக்கி நாய்கள் இங்கே யூரின் போகக்கூடாதுன்னு எழுதி  வெச்சிருக்கு சார்.இது கூட படிக்கத்தெரியலயே.. போலீஸா எப்படி காலம் தள்ளறீங்க?.
டேய்..  அப்புறம் என்ன இதுக்கோசரம் யூரின் போனிங்க.?
பொறுக்கி நாய்கள் இங்கே யூரின் போகக்கூடாதுன்னு தானே  எழுதி  வெச்சிருக்கு ? நாங்க  தான் கவுரவமான ஆள்ங்க ஆச்சே?
24. அட.. நீயும், நானும் இங்கே ஒண்ணா ஒண்ணுக்குப்போனதால ஒண்ணுக்குள்ளே ஒண்ணு ஆகிட்டோமா?
25. டேய்.. ஒண்ணு சொல்றேன்.. உலகத்துலயே மூத்திரக்கேஸ்ல முன் ஜாமீன் கேட்டது நீ ஒருத்தன் தாண்டா..
26. கெட்ட நேரம் வந்தா ராஜா கூட தெருவுக்கு வந்தே தான் ஆகனும் ( என் காதுக்கு ஆ ராசாவுக்கு-ன்னு கேட்குது)
27. சேஞ்ச் இல்லை சேஞ்ச் இல்லைன்னு நான் தான் ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டே இருந்தேனே?
டேய்.. உதை வாங்குவே.. சேஞ்ச் இல்லைங்கறது வேற, காசு இல்லைங்கறது வேற.. இரண்டையும் போட்டு குழப்பிக்கக்கூடாது..
28. பிரச்சாரத்தை கோயில்ல இருந்து ஆரம்பின்னு சொன்னாங்க.. பசியைப்போக்கற இடம்தானே கோயில்.. அதுதான் இங்கே வந்தேன்..
29. உன்னை எங்கேயோ பார்த்திருக்கேனே?
இருக்காது சார்… நான் ஆட்டோ ஸ்டேண்ட்ல தான் எப்பவும் இருப்பேன்… அங்கே வேணா பார்த்திருப்பீங்க..
என்னது? ஆட்டோ ஸ்டேண்ட்டா?
பின்னே கொசுவர்த்தி  ஸ்டேண்ட்டா? எதுக்கு இவ்ளவ் ஜெர்க்?
30. கட்சில தன்னைத்தவிர யாரும் சம்பாதிக்கக்கூடாதுன்னு நினைக்கற தலைவர்கள்ல நீங்களும் ஒருத்தர் தலைவரே..

ரொம்ப ஓவரா பேசறே.. வாக்கிங்க் போக முடியாது பார்த்துக்கோ..

31. ரமணிட்ட நான் வேணா வந்து பேசிப்பார்க்கவா?
அவர் என்ன பேச ஆள் இல்லாம உக்காந்து இருக்காரா?
32. அக்கா.. உங்க ஃபேஸ் பவர் ஃபுல் ஃபேஸ்க்கா..
அவன் பாட்டுக்கு நம்மளை போட்டுக்குடுத்துட்டே இருக்கான்..  என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?
33. விரலை வெட்டுனாத்தாண்டா நீ அடங்குவே,,
என்னமோ பர்த் டே கேக்கை வெட்டற மாதிரி சர்வ சாதாரணமா சொல்றீயே..
34. உன் பிரச்சனையே டிப்பர் லாரி அளவு இருக்கு.. நீ ஏன் ஊர்ப்பிரச்சனைக்கெல்லாம் போறே. ? போய் பொழப்பை பாரு..
35. பிரச்சனையை அவுக்கறதுல ஒரு சுவராஸ்யம்னா அவிழ்க்க முடியா முடிச்சை போடறதுல தனிசுவராஸ்யம்..
36. அடப்பாவிகளா? இப்படி அநியாயம் பண்றதுக்குப்பேருதான் பாலிடிக்ஸா? அதான் எங்க தலைவர் ரஜினி அரசியலுக்கு வர பயப்படறாரா?
37. யார்யா இந்த பிச்சைக்காரன்?
யோவ்.. அவர் சாமியார்யா
38. மனசு சரி இல்லைன்னா எல்லாரும் டாஸ்மாக் , அல்லது சாமியார் இருக்கற ஆசிரமம் தேடிப்போவாங்க.. என் கிட்டே  காசு இல்லை, அதனால இங்கே வந்தேன்..
39. என்ன சாமி நீங்க.. நீங்க சொல்றது சரியா போய் ரீச் ஆகலையே?உங்க உபதேசத்தை இந்த கூட்டத்துல எத்த்னை பேரு கேட்பாங்க?
100ல 2 பேர் கேட்டாக்கூட போதுமே?
அதுதான் தப்பு .. நீங்க 100 பேருக்கு சொன்னா  அது 1000 பேருக்கு போய் சேரனும்.. அதுதான் மார்க்கெட்டிங்க்..
40. அம்மா.. எனக்கு டிரைவர் வேலை வேணும்,.. டிரைவர் தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்..
இதுக்கு முன்னால எங்கே கார் ஓட்டிட்டு இருந்தே?
ரோட்ல..

என்னது?

41.. உனக்கு வாய் ஜாஸ்தி மாதிரி தெரியுதே?

என்னை மாதிரி ஆளை வெச்சாத்தான் உங்க பொண்ணுக்கு சேஃப்டி.. இல்லைன்னா வர்றவன் உங்க பொண்ணை ஓட்டிட்டு போயிடுவான்.. நான் காரை மட்டும் தான் ஓட்டுவேன்

42. சாமியாரை யார் கிட்டேயும் பேச வேண்டாம்னு சொன்னியே அந்த ஐட்யா உனக்கு எப்படி வந்துச்சு?
இந்த பொண்ணுங்க எல்லாம் நாம போய் போய் பேசறப்போ கண்டுக்கவே மாட்டாளுக.. அப்போதான் எனக்கு இந்த ஐடியா உதயம் ஆச்சு..
43.. சாமி.. நான் சொல்றதை கேளுங்க.. ஒரு நாளுக்கு யாராவது ஒருத்தர் கூட மட்டும் பேசுங்க..  அப்போ எல்லாரும் நீங்க என்ன சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருப்பாங்க
44. அரசியல் ஒரு வியாபாரம் தான்..கோடி கோடியா நாங்க இங்கே கொட்டித்தான் இந்த இடத்துக்கு  வந்திருக்கோம்.. போட்ட காசை எடுக்க வேணாமா?
45. இந்த சி எம் ப்ளெஸ்க்கு நான் ரிப்பன் கட் பண்ணி வர்லை.. பல தலைகளை கட் பண்ணி வந்திருக்கேன்..
46. அறிவுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?
47. ஹாய்.. மச்சி.. என்ன ? ஜாலியா டீ சாப்பிடறே போல..
அடேய்.. டீ சாப்பிடறதுல என்னடா ஜாலி.. ?
48. நான் கண் அசைச்சா என்ன அர்த்தம்? காலை அசைச்சா என்ன அர்த்தம்? இன்னும் எதை எதை அசைச்சா என்ன அர்த்தம்னு டியூஷன் சொல்லித்தர்றேன்
49. குடிக்கறதுக்கு உனக்கு ஒரு காரணம் வேணும்.. அவ்ளவ் தானே?
50. ஜெயில்ல இருக்கற என்னை ஜாமீன்ல எடுக்கவா வந்தே?

பின்னே? ஜாக்கெட் பிட் எடுக்கவா வருவாங்க?

 

51. அய்யய்யோ.. தலைவர் ஜெயிலுக்குள்ளே வரப்போறாரா?
பார்த்தியா? எப்படி ஃபீல் ஆகறான்னு..
பொறு .. என்ன சொல்றான்கறதை கவனி..
அவர் வெளியே இருந்தா எந்த தொந்தரவும் இல்லை.. உள்ளே வந்தா கண்டதை எழுதி படி படின்னு உயிரை வாங்குவார்..
52. மத்தவங்க எப்படியோ அரசியல்ல இருக்கறவங்க ஆல் கரண்ட் மேட்டர் அத்துபடியா இருக்கனும்.. நீ என்னடான்னா கம்ப்யூட்டர் தெரியாது. அது தெரியாதுன்னு கதை சொல்லிட்டு இருக்கே..
53.கட்சியோட  மேல்மட்டக்குழுவே இவ்லவ் கேவலமா இருக்கே? கீழ்மட்டக்குழு எப்படி இருக்குமோ?
54. இந்த தேர்தல்ல பணமும், பிணமும் தான் வெற்றியை நிர்ணயம் செய்யும்..
55. நீங்க ஒருத்தருக்கு குழி பறிச்சா  உங்க பின்னால ஒருத்தன் உங்களுக்கு குழி பறிச்சுட்டு இருப்பான்கறதை மறந்துடாதீங்க..
56. மக்களை முட்டாள்னு தயவு செஞ்சு நினைக்காதிங்க.  நீங்க தான் முட்டாள் ஆவீங்க.. அவங்களூக்கு யாரை எப்போ எங்கே உக்கார வைக்கனும்னு நல்லாத்தெரியும்..

57.. என்னய்யா சிரிப்பு இது? கைக்குழந்தை கக்கா போன மாதிரி?

58. என் குடும்பத்தை தப்பா பேசுனாக்கூட பொறுத்துக்குவேன், ஆனா குடிகாரங்களைத்தப்பா பேசுனா மன்னிக்கவே மாட்டேன்

 

Manushya Puthiran picks his top books for 2012

In Books, Tamilnadu on ஜனவரி 16, 2012 at 5:12 பிப

கவிஞர் மனுஷ்ய புத்திரன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்

1. கரமஸோவ் சகோதரர்கள் – தஸ்தயேவஸ்கி

2. கமல் நம் காலத்து நாயகன்

3. நொறுங்கிய குடியரசு – அருந்ததி ராய்

4. ஒன்றுக்கும் உதவாதவன் – அ. முத்துலிங்கம்

5. பாலற்ற பொற்பால் – ஜெர்மெய்ன்கிரீர் (தமிழில் ராஜ் கௌதமன்)

6. இருத்தலியமும் மார்க்சியமும் – எஸ்.வி.ராஜதுரை

7. கதைக் கருவூலம்

8. விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் `ஆரண்யக்’ – வனவாசி – விபூதி பூஷண்: த.நா. குமாரசாமியால் `வனவாசி’ : 1968ல் சாகித்ய அகாதமியால் பிரசுரிக்கப்பட்டது.

9. கால்கள் – அபிலாஷ்

10. புத்தனாவது சுலபம் – எஸ்.ராமகிருஷ்ணன்

மொக்கை (அ) காமெடி (அ) லொள்ளு தமிழ்ப்பட லிஸ்ட்

In Movies, Tamilnadu on ஓகஸ்ட் 10, 2011 at 6:36 பிப

My Choices for Top Comedy Films in Tamil Cinema

  • தமிழ்ப்படம்
  • மகா நடிகன் (சத்யராஜ்)
  • தில்லுமுல்லு (ரஜினிகாந்த்)
  • புதையல் (அர்விந்த்சாமி – மம்மூட்டி)
  • போட்டா போட்டி 50:50
  • பொய்க்கால் குதிரைகள் (கே பாலச்சந்தர்)
  • இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் (சிம்புதேவன்)
  • இம்சை அரசன் 23ம் புலிகேசி (சிம்புதேவன்)
  • இன்று போய் நாளை வா (பாக்யராஜ்)
  • சிம்லா ஸ்பெஷல் (முக்தா சீனிவாசன்)
  • அண்ணே, அண்ணே (மௌலி)
  • பொய் சொல்லப் போறோம்
  • சம்சாரம் அது மின்சாரம் (விசு)
  • ரெட்டை வால் குருவி (மோகன் – பாலு மகேந்திரா)
  • பலே பாண்டியா (சிவாஜி கணேசன்)
  • உள்ளத்தை அள்ளித்தா (கார்த்திக் – சுந்தர் சி)

Other Picks for Best Fun Movies in Thamil

  • ஆண்பாவம் (பாண்டியராஜன்)
  • ஆதவன்
  • வின்னர்
  • சின்ன மாப்பிளை
  • நடிகன்
  • சதி லீலாவதி
  • சிங்காரவேலன்
  • தாய்மாமன்

2000s: Best Directors in Tamil Cinema

In Lists, Movies, Tamilnadu on செப்ரெம்பர் 11, 2009 at 3:43 முப

தலை பத்து டைரக்டர் பட்டியல் போடும் முன் சில காரணங்கள்:

  1. இரண்டு படங்களாவது இயக்கி இருக்க வேண்டும்
  2. கடந்த பத்தாண்டுகளில் ஒரு சூப்பர்ஹிட்டாவது கொடுத்திருக்க வேண்டும்
  3. படத்திற்கு படம் எதிர்பார்ப்பு கூடுமாறு வித்தியாசம் காட்டுபவர்
  4. ஒரே ஃபார்முலாவில் சிக்காதவர்; அப்படியே அதிலேயே சுழன்றாலும், அதிலும் புத்துருவாக்கம் செய்பவர்
  5. விருதுகளுக்காக மட்டும் படம் எடுக்காதவர்
  6. ஒரேயொரு ஆங்கிலப் படத்தை அப்படியே டிட்டோவாக — அப்பட்டமாக தழுவாதவர்
  7. தனக்கென் ஒரு பாணி கொண்டவர்
  8. திரைப்படம் வெளியான காலகட்டத்தின் ட்ரென்டை மாற்றி, தன் சாயலில் பத்து இன்ஸ்பிரேஷன்களை வரவைத்தவர்
  9. ரஜினி, கமல் போன்ற நட்சத்திரங்கள் இவரின் டேட்ஸுகளுக்காக காத்திருக்கும் நிலை கொண்டிருப்பவர்
  10. சுஜாதா, எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பா ராகவன், இரா முருகன், தமிழ்ச்செல்வன், சுபா என்று எழுத்தாளர்களோடு கூட்டணி கண்டவர்

எந்த வரிசையிலும் இல்லை.

1. மிஷ்கின்

இரண்டு படம்தான் இயக்கி இருக்கிறார். பல படங்களில் பிழிந்தெறிந்த சென்னை அடியாள் வாழ்க்கையை வித்தியாசமாகக் காட்டியவர். டூயட் பாட்டென்றாலே ஆடையுடன் புணர்ச்சி என்பதை குத்துப் பாட்டுக்குக் கூட கொசுறாகத் தூவாதவர். அடுத்தது கமலைக் கட்டியாளப் போகிறாராமே! ஈஸ்வரோ ரஷது.

2. செல்வராகவன்

நேர்காணல் கொடுக்கும் தமிழ் இயக்குநர்கள் என்பது டைனோசார் வகையில் சேர்த்தி. அதிலும் தன் படத்தைத் தவிர பிற விஷயங்களைக் குறித்தும் இயல்பாக, கோர்வையாகப் பேசுபவர். ‘பாய்ஸ்’ வருவதற்கு முன்னோடி காரணகர்த்தா.

3. பாலா

கொஞ்சம் சறுக்குமுகம். ரஜினியின் மேற்கோள் போல் கீழே விழுந்தவுடன் எழுந்திருக்கும் யானையா? குதிரையா?

4. சசி

இவரின் கதாநாயகிகள் மனோலயத்தில் ரீங்கரித்து ஆராதிக்கக் கோருபவர்கள். தமிழுக்கு புதுமுகம் பார்வதி, பழகிய முகமான கௌசல்யா, பாந்தமான பூமிகா, ‘காதல்‘ தவிர வேறு எதுவுமே சரியாகப் போகாத சந்தியா: எல்லோருமே முக்கியமான ஹீரோயின் பாத்திரங்கள். சென்றவரைப் போல் அல்லாமல் ஏறுமுகம்.

5. கௌதம் மேனன்

கவுதமின் பெயர் மனதில் நின்றதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இளைய தளபதி விஜய் படத்தை நிராகரிக்கும் தைரியம் கொண்டவர். சூர்யாவை உண்டாக்கியதில் பாலாவுக்கு பெரும்பங்கு என்றால், பாக்கி பங்கை இவரிடம் கொடுக்க வேண்டும். கமலுடன்தான்…

6. கே எஸ் ரவிக்குமார்

பாரதி-வாசு மாதிரி முதல் படத்தினால் திசை திரும்பினாலும், காற்றடித்த பக்கம் தூற்றிக் கொண்டவர். அந்தக் கால மசாலாவிற்கு ப நீலகண்டன். எஸ் பி முத்துராமன், ஏ பி நாகராஜன் என்றால், இன்றைய அளவில் முதலிடம் பெறுபவர்.

7. வசந்த்

முன்னவர் மாதிரியே 1990ல் களம் புகுந்தவர். முதல் பட வெற்றியும் விமர்சகர் பாராட்டையும் பரவலான கவனிப்பையும் பெற்றவர். கேயெஸாரோ நாற்பது சொச்சம் இயக்கித் தள்ளிவிட, இவர் பொறுக்கியெடுத்து பத்து கூட இன்னும் போடவில்லை. அப்பு மட்டும் தப்பு?

8. சேரன்

பால்ய கால நினைவுகளை மீட்டும் சொந்த ஊர் காவியம், சாதிக் கலவரம் கிட்டத்தட்ட மூளவைத்த முதல் படம் என்று சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர். நடிப்பில் மயங்கி சுருங்குபவர். படங்களின் மூலம் மெஸேஜ் தருவதை மட்டும் நிறுத்திக் கொண்டானாரேயானால் மேலும் தன்னை வளமாக்கி, நம்மையும் நாட வைக்கலாம்.

9. ஷங்கர்

திறமையான மேலாளருக்கு அடையாளம், சாமர்த்தியசாலிகளிடம் இருந்து தனக்கு வேண்டிய விஷயங்களை கிகாபைட் கிகாபைட்டாக கறப்பது. ஆக்சன் கிங் ஆகட்டும், இசைப் புயல் ஆகட்டும், கவிப்பேரரசு ஆகட்டும், வாத்தியார் ஆகட்டும்… இவருக்கென்று வரும்போது ஏதோ ஸ்பெஷலாய் செய்தார்கள்.

10. மணி ரத்னம்

கடைசியில் வந்த இருவர் பெயரை 786 இட்டுத்தான் இந்தப் பட்டியலே பிள்ளையார் சுழிக்கப்பட்டது.

பட்டியலில் இடம்பிடிக்கக் கூடியவர்கள்:

1. தங்கர் பச்சான்

முதல் ரேங்க் எடுப்பதற்குரிய எல்லாவிதமான முஸ்தீபுகளும் நிறைந்தவர். சோகத்தை ரொப்ப வேண்டும் என்னும் திணித்தலும், உணர்ச்சி என்பது ஏமாற்றம் மட்டும் என்னும் அனுமானத்தினாலும் மனதில் நிலைத்து நிற்காத படங்களோடு நின்றுவிடுகிறார்.

2. விக்கிரமன்

சென்னைக் காதல், மரியாதைக்கு அப்புரம் எல்லாம் இவருக்கு எப்படி இடம்? இருந்தாலும் விஜய்க்கு கூட நல்ல குணச்சித்திரம் அமைக்கும் மனப்பான்மை கொண்டவர். லிங்குசாமி உட்பட பலருக்கும் வானத்தைப் போல வழி காட்டுபவர்.

3. அமீர்

பருத்தி வீரனை விடமௌனம் பேசியதே சுவாரசியமான என்டெர்டெயினர்.

4. எஸ் பி ஜனநாதன்

மசாலா இருக்கும்தான். ஆடலுடன் பாடலும் கிடைக்கும்தான். இருந்தாலும் எது, எப்பொழுது நடக்கும், என்னவாகும் என்று அனுமானிக்க முடியாத திரைக்கதை அமைப்பு தமிழ் சினிமாவிற்கு புதிது. நாயகனோடு நாயகி என்பதேல்லாம் நடவாமல் போவது ரொம்பவே புதிது.

5. பாலாஜி சக்திவேல்

சாமுராய் கூட எனக்கு பிடித்திருந்தது. துள்ளல் கூடிய லட்சணம் கொண்ட ஹீரோயின் சாய்ஸிலேயே தன் ரசனையை நிரூபித்தவர் அல்லவா!

6. தரணி

விஷ்ணு வர்த்தனையோ ஏ ஆர் முருகாதாஸையோத்தான் இங்கே சேர்க்கவில்லை. ஒரு படத்தில் தன் திறமையைக் காட்டியவருக்கான இட ஒதுக்கீடு இங்கே இரு படத்தில் மிளிர்ந்தவருக்கு தரப்படுகிறது.

7. சுந்தர் சி

உள்ளத்தை அள்ளித் தா, அன்பே சிவம், உள்ளம் கொள்ளை போகுதே, மேட்டுக்குடி என்று முழு நேர நடிகராவதற்கு முன்பே முத்திரை இயக்குநர் 😛

8. சுரேஷ் கிருஷ்ணா

ஒரு வார்த்தை போதும்: அண்ணாமலை (மேலே கேட்டால் ஆளவந்தான், பாபா, கஜேந்திரா, சங்கமம்)

9. ஹரி

நான் தாமிரபரணி, வேல் போன்ற சினிமாக்களின் ரசிகன். கடகடவென்று கணக்கு தப்பாத திரைப்படம் கொடுக்கும் கலை அறிந்து வைத்திருக்கிறார்.

10. கே வி ஆனந்த்

‘காதல் தேசம்’ கதிர் போன்றவர்களுக்கு ரெகுலராகக் கிடைத்த ஏ ஆர் ரெஹ்மான் இவருக்குக் கிடைத்தால் எப்படியிருக்கும்?

நம்பிக்கை நட்சத்திரம் (கொசுறு): கரு பழனியப்பன்

ஊர் விட்டு, நாடு விட்டு, கண்டம் விட்டு கண்டம் பாயும் பெண்களின் நிலையை அழகாக சொன்ன விதம். சினேகாவிற்கு ப்ரான்ட் ஐடென்டிடி உருவாக்கிய இரட்டை வேடம். நாட்டுப்புற பாடல், விளிம்பு நிலை என்றெல்லாம் மெயின்ஸ்ட்ரீம் சினிமாவில் உரையாடல். சோனியா அகர்வாலுக்கு விவாகரத்தாமே? இப்பவாது ‘சதுரங்கம்‘ வருமா!