கடல் படம் பார்த்தவர்களுக்கான வினாக்கள்:
1. மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சாத்தான் சொல்லிவிடுகிறது. இதற்கும் ‘நேர்மையான கொம்பன்’ வசனத்திற்கும் என்ன சம்பந்தம்?
2. நித்தியானந்தா, தினகரன் மாதிரி இடைத்தரகர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதை சாமுவேல் கதாபாத்திரம் எப்படி விளக்குகிறது?
3. விலை மாந்தருக்கு தேவாலயத்தின் பொது கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யும் அனுமதி மறுப்பதை முன் வைப்பதன் மூலம் ஆ. சிவசுப்ரமணியன் எழுதிய காலச்சுவடு பதிப்பகத்தின் “கிறித்துவமும் சாதியும்” புத்தகத்தில் இருந்து அனுமதியின்றி ஜெயமோகன் திருடினாரா?
4. மீசைக்காரன் என்று குறிப்பிடுவது யாரை: அ) வீரப்பன் ஆ) பாரதியார் இ) சண்டியர் ஈ) மேசைக்காரன்
5. ’ஒரே கடல்’ படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். ஜெயமோகனின் முதல் படத்திலும் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். மணி ரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’விலும் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். இதனால் நீவிர் அறியும் நீதி யாது?
6. இந்தப் படத்திற்கு இன்ஸ்பிரேஷன் சிறில் அலெக்ஸ் என்பது உண்மையா?
7. தாந்தே எழுதிய Divine Comedy மூன்றாகப் பார்க்கிறார்கள்: நரகம் – செமினரி; ஆத்மா சுத்தீகரிக்கும் உலகம் – தேவாலயம்; சொர்க்கம் – சுதந்திரம். [பெர்க்மானும் சாமுவேலும் சந்திப்பது போதகாலயம்; ஃபாதர் பணியாற்றுவது சர்ச்; கடைசியில் சிறையில் இருந்து விடுதலை] – படம் கிறித்துவத்தை இழிக்கிறதா?
8. கிறித்துவப் பாதிரியார்களும் பிஷப்களும் அருட்தந்தைகளும் ஆயர்களும் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் கடத்தல்காரர்களிடமிருந்தும் காணிக்கை பெறும் காட்சி ஏன் இடம் பெற வேண்டும்?
9. தாமஸ் மைலாப்பூர் வந்ததை எந்த Doubting Thomasம் சந்தேகிக்க முடியாது. அப்படியானால் தாம்ஸ் என்பதை திருவள்ளுவர் என்று பெயர் மாற்றம் செய்தது யார்? [பார்க்க – வள்ளுவரின் தங்கை எழுதிய ஆத்திசூடி என்னும் கிறித்தவ ஆக்கம்]
10. தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் பற்றி ஜெயமோகனுக்கு காசு கொடுத்தவர் யார்?