1. மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சாத்தான் சொல்லிவிடுகிறது. இதற்கும் ‘நேர்மையான கொம்பன்’ வசனத்திற்கும் என்ன சம்பந்தம்?
2. நித்தியானந்தா, தினகரன் மாதிரி இடைத்தரகர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதை சாமுவேல் கதாபாத்திரம் எப்படி விளக்குகிறது?
3. விலை மாந்தருக்கு தேவாலயத்தின் பொது கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யும் அனுமதி மறுப்பதை முன் வைப்பதன் மூலம் ஆ. சிவசுப்ரமணியன் எழுதிய காலச்சுவடு பதிப்பகத்தின் “கிறித்துவமும் சாதியும்” புத்தகத்தில் இருந்து அனுமதியின்றி ஜெயமோகன் திருடினாரா?
5. ’ஒரே கடல்’ படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். ஜெயமோகனின் முதல் படத்திலும் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். மணி ரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’விலும் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். இதனால் நீவிர் அறியும் நீதி யாது?
6. இந்தப் படத்திற்கு இன்ஸ்பிரேஷன் சிறில் அலெக்ஸ் என்பது உண்மையா?
7. தாந்தே எழுதிய Divine Comedy மூன்றாகப் பார்க்கிறார்கள்: நரகம் – செமினரி; ஆத்மா சுத்தீகரிக்கும் உலகம் – தேவாலயம்; சொர்க்கம் – சுதந்திரம். [பெர்க்மானும் சாமுவேலும் சந்திப்பது போதகாலயம்; ஃபாதர் பணியாற்றுவது சர்ச்; கடைசியில் சிறையில் இருந்து விடுதலை] – படம் கிறித்துவத்தை இழிக்கிறதா?
8. கிறித்துவப் பாதிரியார்களும் பிஷப்களும் அருட்தந்தைகளும் ஆயர்களும் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் கடத்தல்காரர்களிடமிருந்தும் காணிக்கை பெறும் காட்சி ஏன் இடம் பெற வேண்டும்?
9. தாமஸ் மைலாப்பூர் வந்ததை எந்த Doubting Thomasம் சந்தேகிக்க முடியாது. அப்படியானால் தாம்ஸ் என்பதை திருவள்ளுவர் என்று பெயர் மாற்றம் செய்தது யார்? [பார்க்க – வள்ளுவரின் தங்கை எழுதிய ஆத்திசூடி என்னும் கிறித்தவ ஆக்கம்]
1. மதம்: குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் சீக்கிரமே சொர்க்கம் அனுப்பும் திட்டத்தை அன்னை தெரஸா ஆரம்பித்தார்; சட்டு புட்டென்று சிறார் செத்தால்தானே படுக்கை காலியாகும்!
2. சட்டம்: அன்னை தெரசாவைப் பொறுத்தவரை பிறந்து விட்ட குழந்தையைக் கொல்வது ஒகே; ஆனால், வன்புணர்வினாலோ, பதின்ம வயது பருவக் கோளாறினாலோ, ஏழை வீட்டில் பத்தாவதாக பிறக்கும் மகவையோ கருக்குலைப்பது குற்றம்.
3. அரசியல்: குவாடாமாலா கொலைகளுக்கு முலாம் போட்டதாகட்டும். மத்திய அமெரிக்க சண்டைகளுக்கு ஆசி வழங்கியது ஆகட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்; அதே சமயம் எப்போதுமே கொடுங்கோலரின் கனவு போல் வாடிகனுக்காக போரிட்டவர் மதர் தெரசா.
4. சுயநலம்: பத்தாயிரம் மில்லியன் எல்லாம் எண்பதுகளிலேயே புரண்ட தொண்டு நிறுவனம் மிக மிக சிறப்பான படுக்கைகளையும் மருத்துவ சிகிச்ச்சைகளையும் கவனிப்பாளர்களையும் நோயாளிகளுக்கான வசதிகளையும் செய்து தந்திருக்கலாம். ஆனால், அன்னை தெரசாவோ, தன் பெயரில் நூற்றி ஐந்து நாடுகளில் ஐநூறு கான்வெண்டுகளைத் தன் நிறுவனத்திற்காக திறந்து கன்னியாஸ்திரீகளை சேர்க்க ஆரம்பிக்கும் திருப்பலியை மேற்கொள்கிறார்.
5. குற்றவுணர்ச்சி: மேற்கத்திய உலகிற்கு நாம் மட்டும் நல்ல வாழ்க்கையில் திளைக்கிறோம்; அதே சமயத்தில் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் வறுமையில் வாடுகிறார்கள் என்னும் எண்ணம் நிறைந்த எழுபதுகளில் உதித்தவர். வெள்ளைக்கார பெண்மணியாக சேவை செய்தவர். அமெரிக்க மகளிர் பீச்சில் உல்லாசமாய் இருக்கும்பொழுது எழும் தர்மசங்கடமான வருத்தத்தை சிம்பாலிக்காக கலைத்தவர்.
6. சாதாரணரை வளரவிடாத அடக்குமுறை: சாலையில் செல்லும்போது நாய் அடிபட்டுக் கிடந்தால் என்ன செய்வீர்கள்? மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, காலை சரி பார்த்து நடக்க வைப்பீர்கள். ஏழைகளுக்கு கடன் கொடுத்து, நிமிர்ந்து நடக்க வைப்பது அது போன்றது. நாய் கால் விந்தி விந்தி நடந்தால் கூட முடக்கி மூலையில் உட்கார வைப்பது தெரசாவின் லட்சியம்.
7. பொருள்முதல்வாத போராளி: போபால் விஷவாயு கசிவினால் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டபோது, யூனியன் கார்பைட் நிறுவனத்தை மன்னித்து சும்மா விட்டு விடுங்கள் என்பார். ஹைதி நாட்டில் அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக பட்டயம் வழங்குவார். கிறித்துவத்திற்கு பணம் கொடுக்கும் எந்த அட்டூழியத்திற்கும் துணை நிற்பார்.
8. பாசிசம் (fascism): முசோலினியும் ஸ்டாலின் ஆதரவாளர்களும் மதர் தெர்சாவினால் ஆனுதாபிகளாகப் கொண்டாடப்பட்டவர்கள். அல்பேனிய சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார விஷயங்கள் தீர்மானிப்பவர்களையும், முதலாளிகளையும் வாழ்த்தி வணங்கியவர் அன்னை தெரசா.
9. ஏழைகளிடமிருந்து திருடியவர்: சென்றதெல்லாம் தனியார் விமானம்; சொகுசு கார்; உலகம் எங்கும் சுற்றுலா; இத்தனை கோடி நிதி திரட்டினாலும் கொல்கத்தா வறியவர்களுக்கு ஆஸ்பிரின் கூட கொடுக்காத கெடுபிடி சிறை. இவருக்கு இத்தனை பணம் ஏற்பாடு செய்து தந்த கீட்டிங் போன்ற பலர், தற்போது திருட்டுக் குற்றங்களுக்காக சட்டப்படி தண்டனை அனுபவிக்கின்றனர். பெற்றுக் கொண்ட அன்னை தெரசா ஞானி ஆகிறார்.
உசாத்துணை: Chatterjee’s book Mother Teresa: The Final Verdict is available on-line. Click here.
அடுத்தவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்காமல், தண்ணீரில் தள்ளிவிட்டு காப்பாற்றிக் கொண்டேயிருந்தவர். தெரசா போன்றவர்கள் இந்தியாவை வறுமையான நாடாக அடையாளம் காட்ட பயன்பட்டார்கள். மேற்கத்திய உலகின் கரிசனையை முழுப்பக்க விளம்பரமாக எடுத்துப் போட உதவினார். அவரின் நிறுவனத்தில் நடந்த அக்கிரமங்களை வெளிச்சம் காட்ட இந்திய ஊடகங்களே தயங்கினதால், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை நிறைவேற்றுவதும் எளிதாகியது.
ஹெச்.ஐ.வி நோய் பரவுவதை தடுக்க ஆணுறை பயன்படுத்துவதில் பயனில்லை என்றும், இது பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் என்றும் எய்ட்ஸ் பிரச்சினையை ஆணுறைகள்தான் அதிகமாக்குகின்றன என்று சென்ற வாரம் கத்தோலிக்க மதகுரு போப்பாண்டவர் 16வது பெனடிக்ட் கூறியிருந்தார்.
ஆன்மிக மற்றும் விழிப்புணர்வு தான் இதற்கு தீர்வு என்றும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே மனிதாபிமானம் மற்றும் நட்புடன் பழகுவதே தீர்வாக இருக்கும் என்றும் போப் கூறியிருந்தார்.
போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் அங்கோலா தலைநகர் லுவாண்டாவில் பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான அரங்கில் 30 ஆயிரம் பேர் சென்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் இறந்தனர்.
ஏன் சொன்னார்?
போகிற போக்கில் பெட்ரோல் தீர்ந்துடும் போலிருக்கு. போப் மொபைலை இழுக்க ஆள் தேவை. மதகுருவை தேர் கட்டி இழுத்தால் எயிட்ஸ் போயிரும்னு சொன்னால் போகிற வழிக்கு பாதகமில்லே.
டாக்டர். கஸ்தூரிரங்கன் ஆராய்ச்சி அப்படித்தான் சொல்லிச்சு. தமிழன் சொன்னதை தரணிக்கு சொன்னார்.
‘முகமது நபியவர்கள் இவ்வுலகத்துக்கு கொண்டுவந்தது தீமை தான்’ என்று சொன்னதைப் போல் பரபரப்பு கொண்டு வரத்தான். இப்படி கவன ஈர்ப்பு செய்யாவிட்டால் எவர் சீந்துவார்?
மக்கள் தொகை எக்க்ச்சக்கம் ஆகிவிட்டது. பிறகு எப்படிக் குறைப்பது!
அமெரிக்க மதகுருமார் – தேவாலயத்தில் தொண்டாற்ற வந்த பச்சிளம் பாலகர்களுடன் உறவு கொண்டபோது போட்டுக் கொள்ளாத ஆணுறை இப்போது மட்டும் எதற்கு?
பெண்ணுக்கு பெண்ணுறை இல்லாத சமச்சீர் கிடைக்காத சமூக அறச்சீற்றம்.
இந்தப் பற்றற்ற லோகத்தில் அனைத்தையும் துறப்பதே கிறித்துவ மதத் தலைவரின் குறிக்கோள். பட்டாடையும் வண்ணமயமான இருப்பிடமும் விட்டபிறகு, காண்டத்திற்கு ஏது இடம்?
இளைஞர்களிடம் ‘செய்யாதே’ என்று சொன்னால் செய்வார்கள். எனவே, எதிர்மறை உபயோகம்.