தமிழ் சினிமாவில் வந்த இரட்டை அர்த்த பாடல்கள் எவ்வளவு இருக்கும்?
இரட்டை அர்த்தம் என்றாலே காமம் மட்டும்தானா?
எந்தப் பாடலை இந்த தலை பத்து டபுள் மீனிங் பட்டியலில் சேர்க்கலாம்?
- ரெண்டு கன்னம் சந்தனக் கின்னம்! தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்!! – வைரமுத்து
- அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல – பேரரசு
- ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ – புலமைப்பித்தன்
- மாடில நிக்குற மான் குட்டி… மேலவா காட்டுறேன் ஊர சுத்தி – கானா பாலா
- எப்படி? எப்படி!? சமைஞ்சது எப்படி – வாலி
- நிலா காயுது நேரம் நல்ல நேரம் – வாலி
- எலந்தப் பழம், செக்கச் சிவந்த பழம், தேனாட்டம் இனிக்கும் பழம் – கண்ணதாசன்
- நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டுமென்றார் – வாலி
- மல மல மல மருத மல மல்லே மருத மலை – வாலி
- வாடி என் கப்பக்கிழங்கே… எங்க அக்கா பெத்த முக்காத்துட்டே – கங்கை அமரன்

“இந்த விளையாட்டுக்கு நான் வரல்லே” என்று கவி காமு ஷெரீப்பை திரையுலகத்தை விட்டே துரத்திய பெருமை #8 பாடலைச் சேரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடலிது. “ஒழுக்கக்கேட்டைப் பறைசாற்றி, சமுதாயத்தை சீர்கெடுக்கும் பாடல்” என்று தன் முழு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து “இனி திரைப்படத்திற்கே பாடல் எழுதவதில்லை” என்ற சபதத்தை மேற்கொண்டார் கவி கா.மு.ஷெரீப்.