Posts Tagged ‘Doctor’
1989, Agitation, Alliances, Anbumani, அதிமுக, அன்புமணி, சங்கம், சத்ரியர், சாதி, திமுக, பாட்டாளி, பாமக, ராமதாஸ், வன்னியர், Caste, deforestation, Doctor, Forests, MLA, MP, PMK, Politics, Ramadoss, Reservation, Seats, Sects, Shathriyas, Shatriyar, Thindivanam, TN, Trees, Vanniyar, Votes, Wins
In Lists, Politics, Tamilnadu on திசெம்பர் 30, 2011 at 6:08 பிப
உங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்றவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?
அப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:
- பாபா (படம் ஃப்ளாப்)
- காடுவெட்டி (குரு மட்டும் அல்ல)
- சாதிச்சங்கம் (க்ரீமி லேயர் மட்டும்)
- சவுக்கடி (சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்)
- பேரம் (பணமும் சீட்டும்)
- இளையபெருமாள் (திருமா அல்ல)
- அய்யா (பள்ளியோ படையாச்சியோ அல்ல)
- குழலி (முகமூடி அல்ல)
- சத்திரியன் (சாணார்களும் நாடார்களும் அல்ல)
- பச்சோந்தி (பசுமை தாயகம் அல்ல)
முந்தையவை: என்றவுடன்
Alerts, Allegra, Allergy, Alternate, April, Cat, Claritin, Doc, Doctor, Dogs, Dust, Flowers, Fur, Grass, Honey, May, Medical, Medicine, Netipot, Pets, Pollen, Spring, Tips, Tricks, Warnings, Weed, Zyrtec
In Life, Misc, USA on மே 5, 2009 at 4:34 பிப
நன்றி: வசந்த காலத் துன்பங்கள்
- வசந்த காலச் சுத்தம் (Spring Cleaning): குளிர் காலம் முடிந்ததும், வீட்டின் பல்வேறு இடங்களைச் சுத்தப்படுத்த வேண்டும். ஜன்னல், கதவு, புத்தக அறை, vent ஆகியவற்றை தூசுதட்டிச் சுத்தப்படுத்த வேண்டும்.
- வெளிவேலைகளைக் காலை 10 மணிக்குப் பின்னால் செய்ய முடிந்தால் நல்லது. குறிப்பாக காலை 5 மணிமுதல் 10 மணி வரை மகரந்தத் துகள்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.
- கூடுமானவரை ஜன்னல்களை திறக்காமல் இருப்பது நல்லது.
- வாகனத்தில் போகும்போது ஜன்னல்களை மூடிவைத்து, குளிர் சாதனத்தை உபயோகிப்பது நல்லது.
- புல்வெளியைச் சுத்தப்படுத்தும் போது முகமூடி அணிந்து கொள்ள வேண்டும்.
- துணிகளை வெளியில் உணர்த்தாமல் இருப்பது நல்லது. துணிகளில் மகரந்தம் ஒட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
- படுக்கை உறைகளை வாரம் தோறும் துவைப்பது நல்லது.
- தினமும் இரவில் தலைகுளிப்பதின் மூலம் உடலிலும், தலையிலும் ஒட்டியுள்ள மகரந்தத்தை அகற்றுவது நல்லது.
- வீட்டில் குறிப்பாக மிதியடி, தரைக் கம்பளம் ஆகியவற்றை அடிக்கடி தூசு தட்ட வேண்டும். பழைய மிதியடிகளை மாற்ற வேண்டும். மரத்தரை போடுவது உகந்தது.
- Antihistamine: இந்த மருந்துகள் Zyrtec, Claritin, Allegra வகையைச் சார்ந்தன.
- மூக்கில் செலுத்தப்படும் Steroid spray நல்ல தீர்வு தர வல்லது. இது Flonase, Nasonex என்ற பெயர்களில் கிடைக்கின்றது.
- ஒரு சிலர் வருடம் முழுதும் அவரவர் ஊரில் தயாராகும் தேன் உண்பதின் மூலம் ஒவ்வாமையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
இந்த முறை எல்லாவற்றையும் பின்பற்றியும் இன்னும் ஒவ்வாமை குறைந்தபாடில்லை. மாற்றாக கீழ்க்கண்டவற்றையும் முயலலாம்:
தண்ணீர்: காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 500 மில்லி லிட்டர் குடிநீர் அருந்துவது.
Neti Pot: Really? – The Claim – Nasal Irrigation Can Ease Allergy Symptoms – Question – NYTimes.com: “Nasal irrigator that resembles a small teapot, has become an alternative remedy.”
உடற்பயிற்சி: தினமும் வியர்க்க விறுவிறுக்க அரை மணி நேரமாவது ஓடுவது.
ADMK, Assets, Attorneys, அரசியல், எம்பி, தேர்தல், வாக்காளர், வேட்பாளர், BJP, Congress, Courts, Criminals, Criteria, Daughter, Delhi, DMK, Doctor, Elections, Eligibility, Graduation, Kin, Kith, Lawyers, MLA, MP, Nexus, PMK, Politics, Polls, Relations, Relatives, Responsibility, Son, TN
In India, Lists, Politics on மார்ச் 10, 2009 at 9:09 பிப
- ஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐ.பி.எஸ். / ஐ.எஃஃப்.எஸ் அதிகாரி
- முன்னாள் (அ) இன்னாள் மந்திரியின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகள்
- நாற்பத்திரண்டு ஆண்டு, ஏழு மாதம், நான்கு நாள் முன்பு அம்மா நடிகர்/தொலைக்காட்சி அழுவாச்சி நடிகையாக பதவி உயர்வு பெற்றவர்.
- பதினெட்டு கொலை, 67 கால் நீக்கல், 105 கை வெட்டல் உட்பட கட்டப்பஞ்சாயத்து முதல் கற்பழிப்பு குற்றங்களுக்காக சிறை சென்ற தியாகி.
- ஆளும் எதிர்க்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி ஜாதிக் கட்சி ஆரம்பித்திருப்பவர்.
- சமீபத்தில் மறைந்த எம்.எல்.ஏ/எம்.பி.யின் மனைவி
- மன்னரை போதும் போதும் என்னுமளவு போற்றிப் பாடியுள்ள/படமெடுத்துள்ள, டப்பு கையில் நிறைய சேர்த்துள்ள கவிஞர்/எழுத்தாளர்/இயக்குநர்.
- கட்சித் தலைவருக்காக இலவசமாக வழக்குகளில் ஆஜராகி முன் – ஜாமீன் ஆரம்பித்து சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா வரை வாங்கித் தரும் வக்கீல்.
- ஆட்சிபீடத்தின் அரியணையில் அமர்ந்திருப்பவரின் மகளோ, மகனோ மாட்டிக் கொள்ளாதிருக்க இடைத்தரகராய் லஞ்ச ஊழல் பேரம் நடத்தி, தெஹல்காவாக பூகம்பம் வெடித்தால் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பலிகடா.
- துணைவி (கவனிக்க: மனையில் இருப்பவர் மனைவி; புது தில்லி குளிருக்கு, கதகதப்பாக, காந்தர்வ விவாகம் கூட செய்து கொள்ளாத கம்பெனி)