‘நல்ல படம்னா…’ என்று மேதாவிலாசத்துடன் படம் பார்ப்பவர்களுக்கென்று பட்டியல் இருக்கிறது. அப்படி தமிழ் இலக்கிய வாசகர்களால், சிறு பத்திரிகையாளர்களால், வலைப்பதிவு பேரறிஞர்களால், சினிமா சஞ்சிகையாளர்களால் முன்னிறுத்தப்படும் படங்களின் பட்டியல்:
தலை பத்து டைரக்டர் பட்டியல் போடும் முன் சில காரணங்கள்:
இரண்டு படங்களாவது இயக்கி இருக்க வேண்டும்
கடந்த பத்தாண்டுகளில் ஒரு சூப்பர்ஹிட்டாவது கொடுத்திருக்க வேண்டும்
படத்திற்கு படம் எதிர்பார்ப்பு கூடுமாறு வித்தியாசம் காட்டுபவர்
ஒரே ஃபார்முலாவில் சிக்காதவர்; அப்படியே அதிலேயே சுழன்றாலும், அதிலும் புத்துருவாக்கம் செய்பவர்
விருதுகளுக்காக மட்டும் படம் எடுக்காதவர்
ஒரேயொரு ஆங்கிலப் படத்தை அப்படியே டிட்டோவாக — அப்பட்டமாக தழுவாதவர்
தனக்கென் ஒரு பாணி கொண்டவர்
திரைப்படம் வெளியான காலகட்டத்தின் ட்ரென்டை மாற்றி, தன் சாயலில் பத்து இன்ஸ்பிரேஷன்களை வரவைத்தவர்
ரஜினி, கமல் போன்ற நட்சத்திரங்கள் இவரின் டேட்ஸுகளுக்காக காத்திருக்கும் நிலை கொண்டிருப்பவர்
சுஜாதா, எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பா ராகவன், இரா முருகன், தமிழ்ச்செல்வன், சுபா என்று எழுத்தாளர்களோடு கூட்டணி கண்டவர்
எந்த வரிசையிலும் இல்லை.
1. மிஷ்கின்
இரண்டு படம்தான் இயக்கி இருக்கிறார். பல படங்களில் பிழிந்தெறிந்த சென்னை அடியாள் வாழ்க்கையை வித்தியாசமாகக் காட்டியவர். டூயட் பாட்டென்றாலே ஆடையுடன் புணர்ச்சி என்பதை குத்துப் பாட்டுக்குக் கூட கொசுறாகத் தூவாதவர். அடுத்தது கமலைக் கட்டியாளப் போகிறாராமே! ஈஸ்வரோ ரஷது.
2. செல்வராகவன்
நேர்காணல் கொடுக்கும் தமிழ் இயக்குநர்கள் என்பது டைனோசார் வகையில் சேர்த்தி. அதிலும் தன் படத்தைத் தவிர பிற விஷயங்களைக் குறித்தும் இயல்பாக, கோர்வையாகப் பேசுபவர். ‘பாய்ஸ்’ வருவதற்கு முன்னோடி காரணகர்த்தா.
3. பாலா
கொஞ்சம் சறுக்குமுகம். ரஜினியின் மேற்கோள் போல் கீழே விழுந்தவுடன் எழுந்திருக்கும் யானையா? குதிரையா?
4. சசி
இவரின் கதாநாயகிகள் மனோலயத்தில் ரீங்கரித்து ஆராதிக்கக் கோருபவர்கள். தமிழுக்கு புதுமுகம் பார்வதி, பழகிய முகமான கௌசல்யா, பாந்தமான பூமிகா, ‘காதல்‘ தவிர வேறு எதுவுமே சரியாகப் போகாத சந்தியா: எல்லோருமே முக்கியமான ஹீரோயின் பாத்திரங்கள். சென்றவரைப் போல் அல்லாமல் ஏறுமுகம்.
5. கௌதம் மேனன்
கவுதமின் பெயர் மனதில் நின்றதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இளைய தளபதி விஜய் படத்தை நிராகரிக்கும் தைரியம் கொண்டவர். சூர்யாவை உண்டாக்கியதில் பாலாவுக்கு பெரும்பங்கு என்றால், பாக்கி பங்கை இவரிடம் கொடுக்க வேண்டும். கமலுடன்தான்…
6. கே எஸ் ரவிக்குமார்
பாரதி-வாசு மாதிரி முதல் படத்தினால் திசை திரும்பினாலும், காற்றடித்த பக்கம் தூற்றிக் கொண்டவர். அந்தக் கால மசாலாவிற்கு ப நீலகண்டன். எஸ் பி முத்துராமன், ஏ பி நாகராஜன் என்றால், இன்றைய அளவில் முதலிடம் பெறுபவர்.
7. வசந்த்
முன்னவர் மாதிரியே 1990ல் களம் புகுந்தவர். முதல் பட வெற்றியும் விமர்சகர் பாராட்டையும் பரவலான கவனிப்பையும் பெற்றவர். கேயெஸாரோ நாற்பது சொச்சம் இயக்கித் தள்ளிவிட, இவர் பொறுக்கியெடுத்து பத்து கூட இன்னும் போடவில்லை. அப்பு மட்டும் தப்பு?
8. சேரன்
பால்ய கால நினைவுகளை மீட்டும் சொந்த ஊர் காவியம், சாதிக் கலவரம் கிட்டத்தட்ட மூளவைத்த முதல் படம் என்று சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர். நடிப்பில் மயங்கி சுருங்குபவர். படங்களின் மூலம் மெஸேஜ் தருவதை மட்டும் நிறுத்திக் கொண்டானாரேயானால் மேலும் தன்னை வளமாக்கி, நம்மையும் நாட வைக்கலாம்.
9. ஷங்கர்
திறமையான மேலாளருக்கு அடையாளம், சாமர்த்தியசாலிகளிடம் இருந்து தனக்கு வேண்டிய விஷயங்களை கிகாபைட் கிகாபைட்டாக கறப்பது. ஆக்சன் கிங் ஆகட்டும், இசைப் புயல் ஆகட்டும், கவிப்பேரரசு ஆகட்டும், வாத்தியார் ஆகட்டும்… இவருக்கென்று வரும்போது ஏதோ ஸ்பெஷலாய் செய்தார்கள்.
10. மணி ரத்னம்
கடைசியில் வந்த இருவர் பெயரை 786 இட்டுத்தான் இந்தப் பட்டியலே பிள்ளையார் சுழிக்கப்பட்டது.
பட்டியலில் இடம்பிடிக்கக் கூடியவர்கள்:
1. தங்கர் பச்சான்
முதல் ரேங்க் எடுப்பதற்குரிய எல்லாவிதமான முஸ்தீபுகளும் நிறைந்தவர். சோகத்தை ரொப்ப வேண்டும் என்னும் திணித்தலும், உணர்ச்சி என்பது ஏமாற்றம் மட்டும் என்னும் அனுமானத்தினாலும் மனதில் நிலைத்து நிற்காத படங்களோடு நின்றுவிடுகிறார்.
2.விக்கிரமன்
சென்னைக் காதல், மரியாதைக்கு அப்புரம் எல்லாம் இவருக்கு எப்படி இடம்? இருந்தாலும் விஜய்க்கு கூட நல்ல குணச்சித்திரம் அமைக்கும் மனப்பான்மை கொண்டவர். லிங்குசாமி உட்பட பலருக்கும் வானத்தைப் போல வழி காட்டுபவர்.
3. அமீர்
பருத்தி வீரனை விடமௌனம் பேசியதே சுவாரசியமான என்டெர்டெயினர்.
4. எஸ் பி ஜனநாதன்
மசாலா இருக்கும்தான். ஆடலுடன் பாடலும் கிடைக்கும்தான். இருந்தாலும் எது, எப்பொழுது நடக்கும், என்னவாகும் என்று அனுமானிக்க முடியாத திரைக்கதை அமைப்பு தமிழ் சினிமாவிற்கு புதிது. நாயகனோடு நாயகி என்பதேல்லாம் நடவாமல் போவது ரொம்பவே புதிது.
5. பாலாஜி சக்திவேல்
சாமுராய் கூட எனக்கு பிடித்திருந்தது. துள்ளல் கூடிய லட்சணம் கொண்ட ஹீரோயின் சாய்ஸிலேயே தன் ரசனையை நிரூபித்தவர் அல்லவா!
6. தரணி
விஷ்ணு வர்த்தனையோ ஏ ஆர் முருகாதாஸையோத்தான் இங்கே சேர்க்கவில்லை. ஒரு படத்தில் தன் திறமையைக் காட்டியவருக்கான இட ஒதுக்கீடு இங்கே இரு படத்தில் மிளிர்ந்தவருக்கு தரப்படுகிறது.
7. சுந்தர் சி
உள்ளத்தை அள்ளித் தா, அன்பே சிவம், உள்ளம் கொள்ளை போகுதே, மேட்டுக்குடி என்று முழு நேர நடிகராவதற்கு முன்பே முத்திரை இயக்குநர் 😛
8. சுரேஷ் கிருஷ்ணா
ஒரு வார்த்தை போதும்: அண்ணாமலை (மேலே கேட்டால் ஆளவந்தான், பாபா, கஜேந்திரா, சங்கமம்)
9. ஹரி
நான் தாமிரபரணி, வேல் போன்ற சினிமாக்களின் ரசிகன். கடகடவென்று கணக்கு தப்பாத திரைப்படம் கொடுக்கும் கலை அறிந்து வைத்திருக்கிறார்.
10. கே வி ஆனந்த்
‘காதல் தேசம்’ கதிர் போன்றவர்களுக்கு ரெகுலராகக் கிடைத்த ஏ ஆர் ரெஹ்மான் இவருக்குக் கிடைத்தால் எப்படியிருக்கும்?
நம்பிக்கை நட்சத்திரம் (கொசுறு): கரு பழனியப்பன்
ஊர் விட்டு, நாடு விட்டு, கண்டம் விட்டு கண்டம் பாயும் பெண்களின் நிலையை அழகாக சொன்ன விதம். சினேகாவிற்கு ப்ரான்ட் ஐடென்டிடி உருவாக்கிய இரட்டை வேடம். நாட்டுப்புற பாடல், விளிம்பு நிலை என்றெல்லாம் மெயின்ஸ்ட்ரீம் சினிமாவில் உரையாடல். சோனியா அகர்வாலுக்கு விவாகரத்தாமே? இப்பவாது ‘சதுரங்கம்‘ வருமா!
Hardcore – மகாநதி
Planes Trains and Automobiles – அன்பேசிவம்
What bob can do – தெனாலி
Very Bad things – பஞ்சதந்திரம்
Too Much – காதலா காதலா
She Devil – சதிலீலாவதி
Corsican Brothers – அபூர்வ சகோதரர்கள்
Life of David Gale – விருமாண்டி
Barefoot in the park – அலைபாயுதே
Hot bubblegum and American Pie – பாய்ஸ்
Butch Cassidy & The Sundance Kid – திருடா திருடா
Sense and Sensibility – கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
Shop around the corner – காதல்கோட்டை
Big – நியூ
Sliding Doors – 12B
Fear – காதல் கொண்டேன்
21 grams – சர்வம்
Bangkok Dangerous – பட்டியல்
Network – வேகம்
அதே கண்கள் – ரோஷோமான் நாயகன் – காட் பாதர் ரோஜா – ஹெல்ட் ஹாஷ்பேஜ் ஆயுத எழுத்து – அமரோஸ் பெரோ கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி போக்கிரி – டோனி ப்ராஸ்கோ குஷி – வென் ஹேரி மெட் சாலி ஜேஜே – செரண்டிபிட்டி காதலர் தினம் – யூ ஹேவ் காட் மெயில் நம்மவர் – டூ சார் வித் லவ் காக்க காக்க – த அன்டச்சபிள் வெயில், ஆட்டோகிராப் – சினிமா பாரடைசோ மே மாதம் – ரோமன் ஹாலிடே குணா – டை மீ அப் டை மீ டவ்ன் சதிலீலாவதி – ஷீ டெவில் புதுப்பேட்டை – சிட்டி ஆப் காட் கஜினி – மெமண்டோ துரை – கிளாடியேட்டர் அந்நியன் – செவென் பட்டியல் – பாங்காக் டேஞ்சரஸ் வேட்டையாடு,விளையாடு – மர்டர் ஆப் மெமரிஸ் அஞ்சாதே – மிஸ்டிக் ரிவர் தாம் தூம் – ரெட் கார்னர் சரோஜா – ஜட்ஜ்மென்ட் நைட் வேகம்,நாயகன்(2008) – செல்லுலர் அலிபாபா – த்ரீ அயர்ன் அவ்வை சண்முகி – மிஸ்டர் டவ்ட் பயர் பச்சைக்கிளி முத்துச்சரம் – டிரைல்டு பொல்லாதவன் – பீஜிங்க் பை சைக்கிள் நந்தலாலா – கிகிஜிரோ யோகி – சோட்சி வாரணம் ஆயிரம் – கிளாசிக்