2018, Actors, சினிமா, சிறந்த, தமிழ்ப்படம், பட்டியல், மோசம், Best, Cinema, Crap, Directors, Films, Kollywood, Movies, Netflix, Rotten, Stars, Tamil, Top, Worst
In Movies, Tamilnadu on திசெம்பர் 26, 2018 at 5:22 பிப
முந்தைய பதிவு: 2018 – Top 10 Tamil Movies | 10 Hot
இந்த ஆண்டின் மோசமான படங்களைப் பார்த்தோம். 2018ன் திராபையான திரைப்படங்கள் எது?
எந்தத் தமிழ்ப்படங்கள், உங்களின் பொறுமையை சோதித்து கர்ண கடூரமாக, சித்திரவதைக்கு உள்ளாக்கியது?
எந்த சினிமாக்களை உங்கள் எதிரிக்கு தண்டனையாக போட்டு காட்டுவீர்கள்?
- வஞ்சகர் உலகம்
- ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்
- இருட்டு அறையில் முரட்டு குத்து
- ஓடு ராஜா ஓடு
- யூ டர்ன்
- டிக் டிக் டிக்
- ப்யார் ப்ரேமா காதல்
- ஜுங்கா
- ராட்சஸன்
- சாமி 2 (ஸ்கொயர்ட்)
சிறந்த படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
Approach, அர்த்தம், இயக்குநர், இலவசக்கொத்தனார், இலவசம், உண்னைப் போல் ஒருவன், உள்ளடி, உள்ளர்த்தம், கதை, கமல், குறை, குற்றம், கொத்ஸ், டைனோ, ட்விட்டர், நடிகர், நுகபிநி, நுண்ணரசியல், பொருள், வசனம், விமர்சனம், Bloggers, Blogs, Borat, Caste, Caution, Community, Crap, Critic, Criticism, Dialogues, Directors, Dyno, Elavasam, hairsplitting, Hate, Ilavasam, Innerworkings, Junk, Kamal, Kamalahassan, Kamalhaasan, KH, Lit, Literary, Love, Meanings, Messages, Michael Moore, Mindsets, Nitpicking, NuKapiNi, Outlook, Religion, reviews, Satire, Screenplays, Suspect, Tamil Web, Theme, Unnai Pol Oruvan, UPO
In Movies, Tamilnadu on செப்ரெம்பர் 21, 2009 at 8:52 பிப
திரைப்பட அனுபவ, விமர்சன, நுண்ணரசியல், கமல் என்னும் நடிகன் vs பிரச்சாரகர், இன்ன பிற தொகுப்பு: உன்னைப் போல் ஒருவன்
- வெள்ளைக் கமல். வெள்ளை லட்சுமி. இருவரும் சேர்ந்து நிறம் மட்டாக இருக்கும் லாலை வதைப்பது – 6 minutes ago
- காய்கறி மட்டுமே வாங்கிச் செல்வதன் இவ்வளவு பெரிய காரியத்தை சாதிப்பதில் மாமிசம் உண்பவர்களை மட்டம் தட்டுவது – 10 minutes ago
- ரம்ஜான் மாதத்தில் வெளியான படத்தில் கமல் மதியம் சாப்பிடுவதைக் காண்பித்து அவர் ஹிந்து எனச் சொல்லாமல் சொல்வது – 11 minutes ago
- நடாஷா என்ற அன்னிய சக்திக்கு அல்லக்கையாக கரிகாலன் என்ற திராவிடன் – 14 minutes ago
- மாரார் என்னும் ஹிந்துவின் கீழ் ஆரிப், சக்காரியா என அனைவரும் அடங்கி இருப்பது – 16 minutes ago
- காந்தியை கரம்சந்த என்றே அழைப்பது. காந்தியைப் பற்றி பேசியவர் ஜின்னாவைப் பற்றிப் பேசாதது. – 16 minutes ago
- போலீஸ் ஸ்டேஷனில் பாம் வைத்துவிட்டு வெளியில் வரும் பொழுது கையைக் கழுவிக்கொண்டு வராத லாஜிக் பிழை – 24 minutes ago
கரிகாலனுக்கு ஒரு வார்த்தை கூட வசனம் கிடையாது, நடாஷா கேள்வி கேட்கும் போது கூட தலைய மட்டுமே ஆட்டுகிறார் வாய் திறக்கமாட்டேன்கிறார் – 15 minutes ago
- கமலின் எல்லா படங்களிலும் நடிக்கும் நாசர் இந்த படத்தில் வராதது,மனுஷ்யபுத்திரனின் பாடலும்இருட்டடிப்பு – கண்டிப்பா -துவா! – less than 10 seconds ago
- மார்கெட்டில் தக்காளி மட்டுமே வாங்கும் சாமானியன் வெங்காயம் வாங்குவதில்லை… பெரியார் கொள்கை சாமனியனுக்கு தேவையில்லையா? – 7 minutes ago
- கமல் மோகன்லாலுடன் பேசும் முக்கிய காட்சியில் அவருக்கு பின்னே இரண்டு கம்பிகள் தெளிவாக இருக்கும் – ட்வின் டவர்ஸ்? – 11 minutes ago
- சாமானியன் கட்டியிருக்கற வாட்ச்ல ‘Made in Switzerland’னு இருக்கு… அப்ப ஜெனிவா ஒப்பந்தத்தை மறுக்கறதைதான் மறைமுகமா சொல்றாரா? – 23 minutes ago
- லென்சு வச்சு பார்த்தா பாமோட வலது மூலை பக்கத்துல“Made in P…”னு இருக்கே, என்ன சொல்லவர்றார்? – 25 minutes ago
- தமிழ்நாட்டு சாமானியன் கோவணம் கட்ட வழியில்லாம எலிக்கறி சாப்பிடறான், இவரு பிஸ்தா மாதிரி பேண்ட் சட்டை, அன்னிய மோகமா? – 27 minutes ago
- ”ராம் ஜானே”ன்னோ, “பீட்டர் ஜானே”ன்னோ பாட்டு வைக்கலையே ஏன்? அந்த சாமிகளுக்கு தெரியாதா? – 28 minutes ago
- முகம்மதுகுட்டி என்ற மம்முட்டியை நடிக்கவைக்காமல், மோகன்லால் என்ற நாயரை தேர்ந்தெடுத்த நுண்ணரசியல்னு :)) – about 1 hour ago
- ஒரு காட்சியில் கமல் கழுத்து சுளுக்கு எடுப்பதைப்போல தலையாட்டுவார், கவனித்தீர்கள்னா அது துஆ செய்யறதைபோலவே இருக்கும்! – 2 minutes ago
- கமல் கையை கோர்த்திருக்கும் ஸ்டைல் ஒரு கிருஸ்துவர் சர்ச்சில் ப்ரே செய்வதைபோலவே இருக்கும்.மற்ற கமல் படங்களில் அது இல்லை! – 19 minutes ago