ஃபிடல் காஸ்ட்ரோ |
அண்ணா ஹஸாரே |
|
1. | 85 வயதிலும் அரசாட்சி நடத்துகிறார் | 74 வயதில் அரசையும் அதிகாரத்தையும் கேள்வி கேட்கிறார் |
2. | ரெண்டு பொண்டாட்டிக்காரர் | கல்யாணம், குழந்தைக்கெல்லாம் நேரம் இல்ல |
3. | நிலச்சுவாந்தாரின் மகன்; சொத்து: $900 மில்லியன் | நிலச்சுவாந்தாரின் மகன்; $1,500 |
4. | கியூபாவை விட்டு குடிமக்கள் நகரமுடியாதபடி அரண் அமைத்திருக்கிறார் | போராட்டத்தை விட்டு கொடுக்காதபடி கொள்கை வைத்திருக்கிறார் |
5. | அமெரிக்காவினால் ஆட்சியைக் கவிழ்க்க முடியவில்லை | ஆளுங்கட்சியினால் உண்ணாநோன்பை நிறுத்த முடியவில்லை |
6. | சி.என்.என். ஆரம்பித்து வெற்றியடைந்த டெட் டர்னர் (Ted Turner), இருத்தலியத்தின் புகழ்பெற்ற படைப்பாளி ழான் பால் சார்தர் (Jean-Paul Sartre) என்று பல துறைகளில் அனுதாபிகளைக் கொண்டிருப்பது, ·காஸ்ட்ரோவின் வரப்பிரசாதம். | சாதாரண பொதுமக்களை அனுதாபியாக ஆக்குகிறார் |
7. | மக்கள் விருப்பம், சுதந்திரம், விடுதலைக்கு எதிரான அரசாட்சி என்று சிலர் கருதுகின்றனர். | சில நூறு எம்.பி.க்களின் மன்றத்திற்கு எதிரானவர் என்று சிலர் கருதுகின்றனர். |
8. | எதிரிகளைக் கொன்றுவிடுவார் | ஊழல் பெருச்சாளிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் |
9. | அரியணையை விட மாட்டேன்கிறார் | அரியணையை (நோக்கி வினாத் தொடுப்பதை) விட மாட்டேன்கிறார் |